Online Test of TNPSC Current Affairs in Tamil 17th April 2018

Current Affairs in Tamil 17th April 2018

Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 17th April 2018. Take the quiz and improve your knowledge.

TNPSC Group 2 Model Question Papers




1. “உலக ஹீமோபிலியா தினம்” ஆண்டு தோறும் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

  1. ஏப்ரல் 14
  2. ஏப்ரல் 18
  3. ஏப்ரல் 16
  4. ஏப்ரல் 17

[su_spoiler title=”Answer & Explanation” style=”fancy”]Answer: ஏப்ரல் 17

Explanation:

ஹீமோபிலியா(Hemophilia ) என்பது இரத்தம் தொடர்பான ஒருபரம்பரைநோய்.ஹீமோபிலியா என்பது இரத்தம் எளிதில் உறையாத அரிதான ஒரு நோய். ஹீமோபிலியா பொதுவாக பரம்பரை நோயாகும். அதாவது பெற்றோர்களிடமிருந்து குழந்தைகளுக்கு மரபணுக்கள் மூலமாக வருகிறது.ஹீமோபிலியா உள்ள மனிதர்களுக்கு இரத்தம் உறையும் திறன் குறைவாக இருக்கும். அல்லது உறையவே உறையாது.

இந்த ஆண்டிற்கான கருப்பொருள்: Sharing Knowledge Makes us Stronger

[/su_spoiler]

2. GSAT-29 ஆனது எந்த ராக்கெட் மூலம் செலுத்தப்பட உள்ளது?

  1. GSLV Mk III D-2
  2. Ariane 5 ECA VA-231
  3. GSLV Mk.III D1
  4. Ariane 5 ECA VA-238

[su_spoiler title=”Answer & Explanation” style=”fancy”]Answer: GSLV Mk III D-2

Explanation:

அதிவேக இணையத்தள சேவை பயன்பாடுக்காக “GSAT-29” செயற்கைகோள் “GSLV Mk III D-2” ராக்கெட்டிலிருந்து விரைவில் விண்ணில் ஏவப்படும் என ISRO தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

[/su_spoiler]

3. ராஜ் கபூர் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்?

  1. ராஜ்குமார் ஹிரானி
  2. தர்மேந்திரா
  3. விஜய்சவான்
  4. அமிதாப்பச்சன்

[su_spoiler title=”Answer & Explanation” style=”fancy”]Answer: B. தர்மேந்திரா

Explanation:

பாலிவுட் நடிகர் ‘தர்மேந்திரா’ (Dharmendra) ராஜ் கபூர் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் மற்றும் 3 Idiots படத்தை இயக்கிய ‘ராஜ்குமார் ஹிரானி'(Rajkumar Hirani) ராஜ் கபூர் சிறப்பு பங்களிப்பு விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் வீ சாந்தாராம் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு  மராத்திய நடிகர் ‘விஜய்சவான்’ தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

[/su_spoiler]

4. இந்தியாவின் முதல் “LED தெரு விளக்கு மாவட்டம்” என்ற பெருமையை பெறும் மாவட்டம்?

  1. அனந்தபூர்
  2. கிழக்கு கோதாவரி
  3. ஸ்ரீகாகுளம்
  4. YSR கடப்பா

[su_spoiler title=”Answer & Explanation” style=”fancy”]Answer: கிழக்கு கோதாவரி

Explanation:

மாவட்டம் முழுவதும் 3.1 லட்சம் LED விளக்குகளை பொருத்தியதன் மூலம் ஆந்திர மாநிலத்தில் உள்ள ‘கிழக்கு கோதாவரி'(East Godavari) இந்தியாவின் முதல் “LED தெரு விளக்கு மாவட்டம்” (LED Street Light District) என்ற பெருமையை பெற்றுள்ளது.

[/su_spoiler]

5. இந்தியாவின் அதிக மதிப்புள்ள வங்கிகள் பட்டியலில் முதலிடம் வகிக்கும் வங்கி?

  1. SBI
  2. HDFC
  3. கோட்டக் மகேந்திரா
  4. Axis

[su_spoiler title=”Answer & Explanation” style=”fancy”]Answer: HDFC

Explanation:

அதிக மதிப்புள்ள வங்கிகள்(Most Valued bank) பட்டியலில் முதலிடத்தில் HDFC-வங்கியும், தனியார் வங்கியான கோட்டக் மகேந்திரா வங்கி(Kotak Mahindra Bank), முதல் முறையாக SBI வங்கியை முந்தி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

[/su_spoiler]

6. குப்பைகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் மிகப்பெரிய நிலையம் அமைக்கப்பட உள்ள மாநிலம்?

  1. ஹரியானா
  2. தெலுங்கானா
  3. மத்திய பிரதேஷ்
  4. உத்திர பிரதேஷ்

[su_spoiler title=”Answer & Explanation” style=”fancy”]Answer: ஹரியானா

Explanation:

குப்பைகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் மிகப்பெரிய நிலையத்தை(Waste to Energy Plant) ஹரியானா மாநிலம் ‘குருகிராமில்’ அமைக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. ரூபாய் 502 கோடி செலவில் 2019ம் ஆண்டில் இந்த நிலையம் அமைக்கப்பட உள்ளது

[/su_spoiler]

7. சமீபத்தில் “Home Expo India-2018” கண்காட்சியை தொடங்கி வைத்த மத்திய அமைச்சர்?

  1. ஸ்மிருதி இராணி
  2. நிதின் கட்கரி
  3. சத்யபால் சிங்
  4. அருண்ஜெட்லீ

[su_spoiler title=”Answer & Explanation” style=”fancy”]Answer: ஸ்மிருதி இராணி

Explanation:

வீட்டுக்குத் தேவையான உபகரணப் பொருட்கள், ஜவுளிகள் மற்றும் கைவினைப் பொருட்களை ஒரே இடத்தில் வாங்குவதற்கான 7வது “Home Expo India” கண்காட்சி ‘கிரேட்டர் நொய்டாவில்’ மத்திய ஜவுளித்துறை மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணியால் தொடங்கப்பட்டுள்ளது. இது ஏப்ரல் 16 முதல் 18வரை நடைபெறுகிறது.
650 க்கும் மேற்பட்ட இந்திய ஏற்றுமதியாளர்களின் உற்பத்திப் பொருட்கள் இந்த கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது

[/su_spoiler]

8. சமீபத்தில் ‘டி.இ.எஸ்.எஸ்.’ என்ற புதிய விண்கலத்தை விண்ணில் செலுத்திய நாடு?

  1. அமெரிக்கா
  2. சீனா
  3. இஸ்ரேல்
  4. தென் கொரியா

[su_spoiler title=”Answer & Explanation” style=”fancy”]Answer: அமெரிக்கா

Explanation:

பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா, TESS (Transiting Exoplanet Survey Satellite) என்ற புதிய விண்கலதை 16/4/2018  அன்று புளோரிடாவின் கேப்கனவரல் தளத்தில் இருந்து “ஸ்பேஸ் எக்ஸ் பால்கன் 9” என்ற ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தியது.

[/su_spoiler]

9. சர்வதேச டென்னிஸ் சங்கம் வெளியிட்ட தரவரிசைப்பட்டிலியலின் படி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதலிடம் வகிக்கும் வீரர்?

  1. அலெக்சாண்டர் ஸ்ரேவ்
  2. மரின் சிலிச்
  3. ரபெல் நடால்
  4. ரோஜர் பெடரர்

[su_spoiler title=”Answer & Explanation” style=”fancy”]Answer: ரபெல் நடால்

Explanation:

உலக டென்னிஸ் வீரர்-வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் 16/7/2018 அன்று வெளியிட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் (8,770 புள்ளிகள்) முதலிடத்திலும், சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் (8,670 புள்ளிகள்) 2-வது இடத்திலும், குரோஷியா வீரர் மரின் சிலிச் (4,985 புள்ளிகள்) 3-வது இடமும் பெற்றுள்ளனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் (8,140 புள்ளிகள்) முதலிடத்திலும், டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி (6,790 புள்ளிகள்) 2-வது இடத்திலும், ஸ்பெயின் வீராங்கனை கார்பின் முகுருஜா (6,065 புள்ளிகள்) 3-வது இடமும் பெற்றுள்ளனர்.

[/su_spoiler]

< Previous Quiz | Next Quiz >

TNPSC Group 1 Model Question Papers



Content Courtesy: Mr. Jeeva, Mr. PremKarthik, Mr. Rajesh Dujohn

Leave a Comment