TNPSC Current Affairs Question and Answer in Tamil 6th April 2018

Current Affairs in Tamil 6th April 2018

Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 6th April 2018. Take the quiz and improve your knowledge.

TNPSC Group 2 Model Question Papers




1. சஞ்சிதா சானு பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?

  1. பளுதூக்குதல்
  2. டேபிள் டென்னிஸ்
  3. துப்பாக்கி சுடுதல்
  4. குத்துச்சண்டை

[su_spoiler title=”Answer & Explanation” style=”fancy”]Answer: A

Explanation:

ஆஸ்திரேலியாவின் கோல்ட்கோஸ்ட் நகரில் நடைபெறும் காமன்வெல்த் கேம்ஸ் போட்டிகளின், 53kg பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவின் “சஞ்சிதா சானு” (Sanjita Chanu) தங்கம் பதக்கம் வென்றுள்ளார்

[/su_spoiler]

2. சமீபத்தில் அம்மா wifi திட்டம் எத்தனை இடங்களில் தொடங்கப்பட்டது?

  1. 7
  2. 10
  3. 5
  4. 12

[su_spoiler title=”Answer & Explanation” style=”fancy”]Answer: C

Explanation:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கடைசி அறிவிப்பான வைஃபை திட்டம் சோதனை அடிப்படையில் சென்னை, திருச்சி, கோவை, சேலம், மதுரை உள்ளிட்ட 5 இடங்களில் தொடங்கியது. கேபிள் டிவி நிறுவனத்தால் இந்த சேவை நிர்வகிக்கப்படுகிறது. முதல் 20 நிமிடங்களுக்கு வைஃபை சேவை இலவசமாக வழங்கப்படுகிறது

[/su_spoiler]

3. சமீபத்தில் சிறை தண்டனைக்கு உள்ளான “பார்க் குன்-ஹேவு” எந்த நாட்டின் முன்னாள் அதிபர்?

  1. சீனா
  2. ஜப்பான்
  3. வடகொரியா
  4. தென்கொரியா

[su_spoiler title=”Answer & Explanation” style=”fancy”]Answer: D

Explanation:

தனது பதவிக் காலத்தின் போது அதிகார துஷ்பிரயோகம் செய்து ஊழல் செய்ததாக தென் கொரிய அதிபர் பார்க் குன் ஹேவுக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

[/su_spoiler]

4. இணைய பாதுகாப்பு அச்சுறுத்தல் அறிக்கையின்படி,  இணைய தாக்குதல் அதிகம் நடைபெறும் நாடுகளில் இந்தியா வகிக்கும் இடம்?

  1. 1st
  2. 2nd
  3. 3rd
  4. 4th

[su_spoiler title=”Answer & Explanation” style=”fancy”]Answer: C

Explanation:

இணைய பாதுகாப்பு அச்சுறுத்தல் அறிக்கையின்படி, மால்வேர்,ரான்சம்வேர் போன்ற இணைய தாக்குதல் அதிகம் நடைபெறும் நாடுகளில் இந்தியா 3வது இடம் பிடித்துள்ளது. மேலும்
1. USA
2. China

[/su_spoiler]

5. செர்பியா நாட்டிற்கான அடுத்த இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளவர்?

  1. சுப்ரதா பட்டாச்சாரி
  2. சிபி ஜார்ஜ்
  3. சுப்பிரமணியம் ஜெய்சங்கர்
  4. அசோக் காந்தா

[su_spoiler title=”Answer & Explanation” style=”fancy”]Answer: A (Subrata Battacharee)

வெளியுறவு அமைச்சகத்தின் கூட்டு செயலாளராக உள்ள சுப்ரதா பட்டாச்சாரி செர்பியா நாட்டிற்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். செர்பியாவின்  தலைநகரம் பெல்கிரேடு (Belgrade) மற்றும் நாணயம் சேர்பிய தினார் (Serbian dinar) ஆகும்.

[/su_spoiler]

6. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளவர்?

  1. தாண்டவன்
  2. எம்.கே.சூரப்பா
  3. சூரிய நாராயண சாஸ்திரி
  4. வர்ஷனேயா

[su_spoiler title=”Answer & Explanation” style=”fancy”]Answer: B

Explanation:

சமீபத்தில் புதிய துணை வேந்தராக கர்நாடகாவை சேர்ந்த சூரப்பாவை கவர்னர் நியமித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

[/su_spoiler]

7. சமீபத்தில் “Khadi Store Locator” என்ற மொபைல் செயலியை வெளியிட்ட அமைச்சர்?

  1. அருண் ஜெட்லீ
  2. ரவி ஷங்கர் பிரசாத்
  3. கிரிராஜ் சிங்
  4. நித்தின் கட்கரி

[su_spoiler title=”Answer & Explanation” style=”fancy”]Answer: C

Explanation:

நாட்டில் உள்ள 4000க்கும் மேற்பட்ட காதி விற்பனை மையங்கள் எங்கு உள்ளது என்பதை கண்டறிய உதவும் “Khadi Store Locator” என்ற மொபைல் செயலியை “காதி மற்றும் கிராமத் தொழில் வாரியம் (KVIC) அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான அமைச்சர் கிரிராஜ் சிங் வெளியிட்டு வைத்துள்ளார்.

[/su_spoiler]

8. எந்த மாநில தேர்தலில், முழுவதும் பெண்களால் நிர்வகிக்கப்படும் Pink வாக்குச்சாவடிகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன?

  1. கர்நாடகா
  2. சத்தீஸ்கர்
  3. மத்தியப் பிரதேசம்
  4. மேகாலயா

[su_spoiler title=”Answer & Explanation” style=”fancy”]Answer: A

Explanation:

இந்தியாவின் முதல் இளஞ்சிவப்பு(Pink) வாக்குச்சாவடி மையங்கள், மே மாதம் நடைபெற உள்ள “கர்நாடகா” சட்டமன்ற தேர்தலில் உபயோகப்படுத்தப்பட உள்ளன. இந்த பிங்க நிற வாக்குச்சாவடிகள் முழுவதும் பெண்களால் நிர்வகிக்கப்படும் வாக்குச்சாவடிகள் ஆகும்.

[/su_spoiler]

9. ஆசிய உள்கட்டமைப்பிற்கான முதலீட்டு வங்கியின்”(AIIB) 3வது வருடாந்திர கூட்டம் நடைபெறும் இடம்?

  1. கொச்சி
  2. சென்னை
  3. கொல்கத்தா
  4. விசாகப்பட்டினம்

[su_spoiler title=”Answer & Explanation” style=”fancy”]Answer: D

Explanation:

துறைமுக விரிவாக்கம் மற்றும் கடலோர உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் தொடர்பான “ஆசிய உள்கட்டமைப்பிற்கான முதலீட்டு வங்கியின்”(AIIB) 3வது வருடாந்திர கூட்டம் ஆந்திர மாநிலம் “விசாகப்பட்டினத்தில்” தொடங்கியுள்ளது

[/su_spoiler]

10. “ககன்சக்தி 2018” என்பது பின்வரும் எதனுடன் தொடர்புடையது?

  1. விமானபடை பயிற்சி
  2. கப்பல்படை பயிற்சி
  3. அறிவியல் கண்காட்சி
  4. விவசாய கண்காட்சி

[su_spoiler title=”Answer & Explanation” style=”fancy”]Answer: A

Explanation:

நாடு முழுவதும் உள்ள விமானப்படை தளங்களில், விமானப்படையின்(IAF) பலத்தை வெளிகாட்டும் வகையில் “ககன்சக்தி 2018″(GAGANSAKTHI 2018) என்ற பெயரில் போர்பயிற்சி, ஏப்ரல் 8 முதல் 22 வரை நடைபெற உள்ளது.

[/su_spoiler]

< Previous Quiz | Next Quiz >

TNPSC Group 1 Model Question Papers



Content Courtesy: Mr. Jeeva, Mr. PremKarthik, Mr. Rajesh Dujohn

Leave a Comment