குரூப் 4 தேர்வு 2020: புதிய பாடத்திட்டம்? பழைய பாடத்திட்டம்?

TNPSC குரூப் 4 பாடத்திட்டம்

குரூப் 4 தேர்வுக்கு இரண்டு தேர்வுகளை நடத்த தேர்வர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் புதிய டி.என்.பி.எஸ்.சி தலைவர் பொறுப்பேற்கும் போதே இது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது

அதில் முதன்மை தேர்வை ரத்து செய்வது என முடிவெடுக்கப்பட்டதாக நம்பத் தகுந்த டி.என்.பி.எஸ்.சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மொழிப்பாடத்தை நீக்கவோ, மதிப்பெண்களை குறைக்கவோ கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருவதால் பழைய முறையில் குரூப் 4 தேர்வை நடத்த தேர்வாணையம் முடிவெடுத்துள்ளது.

TNPSC குரூப் 4 பாடத்திட்டம்

பொதுத்தமிழ் இருக்குமா?

மொழிப்பாடத்தில் 100 கேள்விகள் இடம் பெறுவதால் குரூப் 2 தேர்வில் பொது அறிவு பகுதியில் புதிதாக சேர்க்கப்பட்ட தமிழ்நாட்டின் வரலாறு, மரபு பண்பாடு மற்றும் தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம் என்ற இரண்டு அலகுகளை குரூப் 4 தேர்வில் சேர்க்கப்பட்ட வேண்டிய அவசியம் இல்லை என தேர்வாணையம் கருதுகிறது.

நடப்பாண்டில் குரூப் 4 தேர்வின் பாடத்திட்டம் மாற்றப்பட்டாது என்றும் மொழிப்பாத்தில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த மூன்று பகுதிகளே தொடரும் என்றும் மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்றும் சொல்லப்படுகிறது.


TNPSC Group 4 Syllabus – Download

படிப்பதற்கு பாடத்திட்டம் முக்கியம் தான் அதைவிட படிப்பது மிகமுக்கியம். பழையதோ, புதியதோ அதைப்பற்றி குழம்பாமல் படிக்க தொடங்குங்கள். அதாவது Group-2 தேர்வின் பாடத்திட்டத்தை அடிப்படியாக கொண்டு படிக்க தொடங்குங்கள்…

Some Important LinksLeave a Comment