Tamil Nadu 6th Std Tamil 1st Term Book Back Questions with Answers 2022

6th Standard Tamil Book 1st Term Solution 2022

On this page, we have given the answers to the Tamil book for the Sixth Standard 1st Term. We hope the questions are given here will be of more use to Matriculation and CBSE students than to Tamil students.

ஆறாம் வகுப்பு தமிழ் புத்தகத்தின் முதல் பருவதிற்கான விடைகளை இந்த பக்கத்தில் குறிப்பிட்டுள்ளோம்.

இதை பற்றிய உங்களது கருத்துக்களை பின்வரும் Comment Box -இல் தெரிவிக்கவும்.




New 6th Standard Tamil 1st Term Book Back Questions

இயல் 1: தமிழ்த்தேன்

1.1. இன்பத்தமிழ்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. ஏற்றத் தாழ்வற்ற _________________ அமைய வேண்டும்

  1. சமூகம்
  2. நாடு
  3. வீடு
  4. தெரு

விடை : சமூகம்

2. நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவருக்கு ____________________ ஆக இருக்கும்

  1. மகிழ்ச்சி
  2. கோபம்
  3. வருத்தம்
  4. அசதி

விடை : அசதி

3. நிலவு + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ____________________

  1. நிலயென்று
  2. நிலவென்று
  3. நிலவன்று
  4. நிலவுஎன்று

விடை : நிலவென்று

4. தமிழ் + எங்கள் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _________________

  1. தமிழங்கள்
  2. தமிழெங்கள்
  3. தமிழுங்கள்
  4. தமிழ்எங்கள்

விடை : தமிழெங்கள்

5. அமுதென்று என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

  1. அமுது + தென்று
  2. அமுது + என்று
  3. அமது + ஒன்று
  4. அமு + தென்று

விடை : அமுது + என்று

6. செம்பயிர் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

  1. செம்மை + பயிர்
  2. செம் + பயிர்
  3. செமை + பயிர்
  4. செம்பு + பயிர்

விடை : செம்மை + பயிர்

II. இன்பத்தமிழ் பாடலின் கருத்துக்கு ஏற்றபடி பொருத்துக.

  1. விளைவுக்கு – பால்
  2. அறிவுக்கு – வேல்
  3. இளமைக்கு – நீர்
  4. புலவர்க்கு – தோள்

விடை : 1-இ, 2-ஈ, 3-அ, 4-ஆ

1.2. தமிழ்க்கும்மி

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. தாய் மொழியில் படித்தால் _________________ அடையலாம்

  1. பன்மை
  2. மேன்மை
  3. பொறுமை
  4. சிறுமை

விடை : மேன்மை

2. தகவல் தொடர்பு முன்னேற்றத்தால் _________________ சுருங்கிவிட்டது

  1. மேதினி
  2. நிலா
  3. வானம்
  4. காற்று

விடை : மேதினி

3. செந்தமிழ் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________________

  1. செந் + தமிழ்
  2. செம் + தமிழ்
  3. சென்மை + தமிழ்
  4. செம்மை + தமிழ்

விடை : செம்மை + தமிழ்

4. பொய்யகற்றும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________________

  1. பொய் + அகற்றும்
  2. பொய் + கற்றும்
  3. பொய்ய + கற்றும்
  4. பொய் + யகற்றும்

விடை : பொய் + அகற்றும்

5. பாட்டு+ இருக்கும் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைப்பது _________________

  1. பாட்டிருக்கும்
  2. பாட்டுருக்கும்
  3. பாடிருக்கும்
  4. பாடியிருக்கும்

விடை : பாட்டிருக்கும்

6. எட்டு + திசை என்பதைச் சேர்த்து எழுதக் கிடைப்பது _________________

  1. எட்டுத்திசை
  2. எட்டிதிசை
  3. எட்டுதிசை
  4. எட்டிஇசை

விடை : எட்டுத்திசை

1.3. வளர் தமிழ்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. ‘தொன்மை’ என்னும் சொல்லின் பொருள் _________________

  1. புதுமை
  2. பழமை
  3. பெருமை
  4. சீர்மை

விடை : பழமை

2. ‘இடப்புறம்’ எனற சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல் _________________

  1. இடன் + புறம்
  2. இடது + புறம்
  3. இட + புற
  4. இடப் + புறம்

விடை : இடது + புறம்

3. ‘சீரிளமை’ என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல் _________________

  1. சீர் + இளமை
  2. சீர்மை + இளமை
  3. சீரி + இளமை
  4. சீற் + இளமை

விடை : சீர் + இளமை

4. சிலம்பு + அதிகாரம் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _________________

  1. சிலம்பதிகாரம்
  2. சிலப்பதிகாரம்
  3. சிலம்புதிகாரம்
  4. சிலபதிகாரம்

விடை : சிலப்பதிகாரம்

5. கணினி + தமிழ் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ________

  1. கணினிதமிழ்
  2. கணினித்தமிழ்
  3. கணிணிதமிழ்
  4. கனினிதமிழ்

விடை : கணினித்தமிழ்

6. “தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பாடியவர் ________

  1. கண்ணதாசன்
  2. பாரதியார்
  3. பாரதிதாசன்
  4. வாணிதாசன்

விடை : பாரதியார்

7. ‘மா’ என்னும் சொல்லின் பொருள்________

  1. மாடம்
  2. வானம்
  3. விலங்கு
  4. அம்மா

விடை :

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

  1. நாம் சிந்திக்கவும் சிந்தித்ததை வெளிப்படுத்தவும் உதவுவது மொழி
  2. தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் தொல்காப்பியம்
  3. மொழியைக் கணினியில் பயன்படுத்த வேண்டும் எனில் அது எண்களின் அடிப்படையில் வடிவமைக்கப்பட வேண்டும்.

III. சொற்களைத் சொந்தத் தொடரில் அமைத்து எழுதுக

  1. தனிச்சிறப்பு : உலக மொழிகளுள் தனிச்சிறப்பு உடையது தமிழ்
  2. நாள் தோறும் : நாம் நாள்தோறும் திருக்குறள் படிப்பது நல்லது.

1.5 தமிழ் எழுத்துகளின் வகை தொகை

I. கீழ்க்காணும் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.

1. பழமொழியின் சிறப்பு சொல்வது

  1. விரிவாகச்
  2. சுருங்கச்
  3. பழமையைச்
  4. பல மொழிகளில்

விடை : சுருங்கச்

2. நோயற்ற வாழ்வை த் தருவது சுத்தம்

3. உடல் ஆரோக்கியமே அடிப்படை உழைப்பு

4. உழைத்துத் தேடிய பொருளால் நாம் பெறுவன யாவை? (உணவு, உடை, உறைவிடம்)

5. பத்திக்குப் பொருத்தமான தலைப்புத் தருக. (சுத்தம்)

II. பிறமொழிக் கலப்பின்றிப் பேசுக.

1. எங்க ஸ்கூல்லே சுற்றுலா கூட்டிட்டுப் போறாங்க.

எங்க பள்ளியில் சுற்றுலா கூட்டிட்டிப் போறாங்க,

2. பெற்றோரிடம் பர்மிசன் லெட்டர் வாங்கி வரச் சொன்னாங்க

பெற்றோரிடம் அனுமதி கடிதம் வாங்கி வரச் சொன்னாங்க

III. கீழ்க்காணும் சொற்களில் உள்ள எழுத்துகளைக் கொண்டு புதிய சொற்களை உருவாக்குக.

(எ.கா) கரும்பு – கரு, கம்பு

  1. கவிதை – கவி, விதை, கதை
  2. பதிற்றுப்பத்து – பதி,  பத்து, பற்று துதி
  3. பரிபாடல் – பரி, பாடல், பாரி, பல், பால்

IV. இரண்டு சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக.

(நூல், மொழி, கோல், மீன், நீதி, எழுது, கண், வெளி, தமிழ், மணி, மாலை, விண்)

(எ.கா.) விண்மீன்

  1. மணிமாலை
  2. நீதிநூல்
  3. விண்வெளி
  4. தமிழ்மாலை
  5. கண்மணி
  6. எழுதுகோல்
  7. தமிழ்மொழி
  8. தமிழ்நூல்
  9. நீதிமொழி
  10. விண்மீன்
  11. நீதிமணி
  12. மணிமொழி
  13. மீன்கண்
  14. நீதிமாலை
  15. தமிழ்வெளி

V. பொருத்தமான சொற்களைக் கொண்டு தொடர்களை நிரப்புக.

அழகு, ஏற்றம், இன்பம், ஊக்கம், இனிமை, ஆற்றல், ஈடு, இசை, உணர்வு, ஏடுகள்,
உரிமை, என்றும், எளிதாய், உவகை, , அன்பு

  1. அன்பு தருவது தமிழ்
  2. ஏற்றம் தருவது தமிழ்
  3. இன்பம் தருவது தமிழ்
  4. ஈடு இல்லாதது தமிழ்
  5. ஆற்றல் தருவது தமிழ்
  6. ஊக்கம் தருவது தமிழ்
  7. என்றும் வேண்டும் தமிழ்
  8. உணர்வு தருவது தமிழ்

VI. கட்டங்களில் மறைந்துள்ள பெயர்களைக் கண்டுபிடிக்க.

  1. பாரதிதாசன்
  2. பாரதியார்
  3. திருவள்ளளுவர்
  4. ஒளவையார்
  5. வாணிதாசன்
  6. கம்பர்

இயல் 2: இயற்கை

2.1. சிலப்பதிகாரம்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. கழுத்தில் சூடுவது ______________

  1. தார்
  2. கணையாழி
  3. தண்டை
  4. மேகலை

விடை : தார்

2. கதிரவனின் மற்றொரு பெயர் ——

  1. புதன்
  2. ஞாயிறு
  3. சந்திரன்
  4. செவ்வாய்

விடை : ஞாயிறு

3. வெண்குடை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

  1. வெண் + குடை
  2. வெண்மை + குடை
  3. வெம் +குடை
  4. வெம்மை + குடை

விடை : வெண்மை + குடை

4. பொற்கோட்டு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

  1. பொன் + கோட்டு
  2. பொற் + கோட்டு
  3. பொண் + கோட்டு
  4. பொற்கோ + இட்டு

விடை : பொன் + கோட்டு

5. கொங்கு + அலர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

  1. கொங்குஅலர்
  2. கொங்அலர்
  3. கொங்கலர்
  4. கொங்குலர்

விடை : கொங்கலர்

6. அவன் + அளிபோல் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

  1. அவன்அளிபோல்
  2. அவனளிபோல்
  3. அவன்வளிபோல்
  4. அவனாளிபோல்

விடை : அவனளிபோல்

2.2. காணி நிலம்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. கிணறு என்பதைக் குறிக்கும் சொல் __________________

  1. ஏரி
  2. கேணி
  3. குளம்
  4. ஆறு

விடை : கேணி

2. சித்தம் என்பதன் பொருள் _____________________

  1. உள்ளம்
  2. மணம்
  3. குணம்
  4. வனம்

விடை : உள்ளம்

3. மாடங்கள் என்பதன் பொருள் மாளிகையின் _________________

  1. அடுக்குகள்
  2. கூரை
  3. சாளரம்
  4. வாயில்

விடை : அடுக்குகள்

4. நன்மாடங்கள் என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல் ___________________

  1. நன் + மாடங்கள்
  2. நற் + மாடங்கள்
  3. நன்மை + மாடங்கள்
  4. நல் + மாடங்கள்

விடை : நன்மை + மாடங்கள்

5. நிலத்தினிடையே என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல் ___________________

  1. நிலம் + இடையே
  2. நிலத்தின் + இடையே
  3. நிலத்து + இடையே
  4. நிலத் + திடையே

விடை : நிலத்து + இடையே

6. முத்து + சுடர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _______________

  1. முத்துசுடர்
  2. முச்சுடர்
  3. முத்துடர்
  4. முத்துச்சுடர்

விடை : முத்துச்சுடர்

7. நிலா + ஒளி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _______

  1. நிலாஒளி
  2. நிலஒளி
  3. நிலாவொளி
  4. நிலவுஒளி

விடை : நிலாவொளி

II. பொருத்துக.

  1. முத்துச்சுடர்போல – மாடங்கள்
  2. தூய நிறத்தில் – தென்றல்
  3. சித்தம் மகிழ்ந்திட – நிலாஒளி

விடை : 1- இ, 1- அ, 2 – ஆ.

2.3. சிறகின் ஓசை

I. உரிய சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. தட்பவெப்பம் என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல் ______.

  1. தட்பம் + வெப்பம்
  2. தட்ப + வெப்பம்
  3. தட் + வெப்பம்
  4. தட்பு + வெப்பம்

விடை : தட்பம் + வெப்பம்

2. வேதியுரங்கள் என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல் _______

  1. வேதி + யுரங்கள்
  2. வேதி + உரங்கள்
  3. வேத் + உரங்கள்
  4. வேதியு + ரங்கள்

விடை : வேதி + உரங்கள்

3. தரை + இறங்கும் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _______

  1. தரையிறங்கும்
  2. தரைஇறங்கும்
  3. தரையுறங்கும்
  4. தரைய்றங்கும்

விடை : தரையிறங்கும்

4. வழி + தடம் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _______.

  1. வழிதடம்
  2. வழித்தடம்
  3. வழிதிடம்
  4. வழித்திடம்

விடை : வழித்தடம்

5. சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி_______

  1. துருவப்பகுதி
  2. இமயமலை
  3. இந்தியா
  4. தமிழ்நாடு

விடை : துருவப்பகுதி

II.கோடிட்ட இடங்களை நிரப்புக

  1. மிக நீண்டதொலைவு பறக்கும் பறவை ஆர்டிக் ஆலா
  2. பறவைகள் வலசை போவதைப் பற்றிப் பாடிய தமிழ்ப்புலவர் சத்திமுத்தப் புலவர்
  3. பறவைகள் இடம்பெயர்வதற்கு வலசைபோதல் என்று பெயர்.
  4. இந்தியாவின் பறவை மனிதர் டாக்டர் சலீம் அலி
  5. பறவைகள் வலசை போகக் காரணங்களுள் ஒன்று தட்ப வெப்பநிலை மாற்றம்

III. சொற்றொடர் அமைத்து எழுதுக.

  1. வெளிநாடு : ராமு வேலைக்காக வெளிநாடு சென்றான்.
  2. வாழ்நாள் : சிட்டுக்குருவியின் வாழ்நாள் 10 முதல் 15 ஆண்டுகள்
  3. செயற்கை : செயற்கை உரங்களால் பறைவகள் அழிகின்றன

IV. பொருத்தமான சொல்லைக் கொண்டு நிரப்புக.

  1. மரங்களை வளர்த்து இயற்கையைக் காப்போம். செயற்கை உரங்களைத் தவிர்த்து நிலவளம் காப்போம். (செயற்கை / இயற்கை)
  2. வலசைப் பறவைகள் வருகை தமிழகத்தில் மிகுந்துள்ளது. தற்போது சிட்டுக்குருவிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது (குறைந்துள்ளது / மிகுந்துள்ளது)

2.6. திருக்குறள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. மக்களுக்கு மகிழ்ச்சி தருவது ——————–

  1. ஊக்கமின்மை
  2. அறிவுடைய மக்கட்பேறு
  3. வன்சொல்
  4. சிறிய செயல்

விடை : அறிவுடைய மக்கட்பேறு

2. ஒருவர்க்குச் சிறந்த அணி ——————

  1. மாலை
  2. காதணி
  3. இன்சொல்
  4. வன்சொல்

விடை : இன்சொல்

II. பொருத்தமான சொற்களைக் கொண்டு நிரப்புக.

1. இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று

2. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

என்பும் உரியர் பிறர்க்கு

III. பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

  1. பரந்து விரிந்து இருப்பதால் கடலுக்குப் பரவை என்று பெயர். (பறவை / பரவை)
  2. இலக்கிய மன்ற விழாவில் முகிலன் சிறப்பாக உரை ஆற்றினார். (உரை / உறை)
  3. முத்து தம் பணி காரணமாக ஊருக்குச் சென்றார். (பனி / பணி)
  4. கலைமகள் தன் வீட்டுத் தோட்டத்தைப் பார்க்க வருமாறு தோழியை அழைத்தாள் (அலைத்தாள் /அழைத்தாள்).

IV. திரட்டுக.

கடல் என்னும் பொருள் தரும் வேறு சொற்களைத் திரட்டுக.

பரவை, வேலம், ஆர்கலி, அத்தி, திரை, நரலை, சமுத்திரம்

V. தொடர்களைப் பிரித்து இரண்டு தொடர்களாக எழுதுக.

(எ. கா.) பல நாள்களாக மழை பெய்யாததால் பயிர்கள் வாடின.
விடை: பல நாள்களாக மழை பெய்யவில்லை. பயிர்கள் வாடின.

1. கபிலன் வேலை செய்ததால் களைப்பாக இருக்கிறார்.

விடை: கபிலன் வேலை செய்தார். களைப்பாக இருக்கிறார்.

2. இலக்கியா இனிமையாகப் பாடியதால் பரிசு பெற்றாள்.

விடை: இலக்கியா இனிமையாகப் பாடினாள். பரிசு பெற்றாள்.

VI. பொருத்தமான சொற்களால் கட்டங்களை நிரப்புக.

  1. புள் என்பதன் வேறு பெயர் – பறவை
  2. பறவைகள் இடம்பெயர்தல் – வலசைபோதல்
  3. சரணாலயம் என்பதன் வேறு பெயர் – புகலிடம்

VII. வரிசை மாறியுள்ள சொற்களைச் சரியான வரிசையில் அமைத்து எழுதுக.

1. இளங்கோவடிகள் காப்பியத்தை என்னும் இயற்றியவர் சிலப்பதிகாரம்.

   சிலப்பதிகாரம் என்றும் காப்பியத்தை இயற்றியவர் இளங்கோவடிகள்

2. மனிதன் உலகில் இல்லாத பறவை வாழ முடியாது.

    பறவை இல்லாத உலகில் மனிதன் வாழ முடியாது

3. மிகப்பெரிய சாண்டியாகோ மீனைப் பிடித்தார்

   சாண்டியாகோ மிகப் பெரிய மீனைப் பிடித்தார்

4. மனிதர் இந்தியாவின் டாக்டர் சலீம் அலி பறவை

இந்தியாவின் பறவை மனிதர் டாக்டர் சலீம் அலி

VIII. கட்டங்களில் சில சொற்கள் மறைந்துள்ளன. குறிப்புகளைக் கொண்டு அவற்றைக்
கண்டுபிடித்து எழுதுக.

  1. இரட்டைக் காப்பியங்களில் ஒன்று மணிமேகலை
  2. முதலெழுத்துகளின் எண்ணிக்கை முப்பது
  3. திங்கள் என்பதன் பொருள் நிலவு
  4. சத்திமுத்தப் புலவரால் பாடப்பட்ட பறவை செங்கல் நாரை
  5. பாரதியார் காணி நிலம் வேண்டும் என்று பாடுகிறார்.
  6. ஆய்த எழுத்தின் வேறு பெயர் தனிநிலை

இயல் 3: அறிவியல் தொழில்நுட்பம்

3.1. அறிவியல் ஆத்திசூடி

I. சரியான விடையை த் தேர்ந்தெடுத்து எழுதுக

1. உடல் நோய்க்கு ____________ தேவை.

  1. ஔடதம்
  2. இனிப்பு
  3. உணவு
  4. உடை

விடை : உணவு

2. நண்பர்களுடன் _____________ விளையாடு

  1. ஒருமித்து
  2. மாறுபட்டு
  3. தனித்து
  4. பகைத்து

விடை : ஒருமித்து

3. கண்டறி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது______

  1. கண் + அறி
  2. கண்டு + அறி
  3. கண்ட + அறி
  4. கண் + டற

விடை : கண்டு + அறி

4. ஓய்வற என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______

  1. ஓய்வு + அற
  2. ஓய் + அற
  3. ஓய் + வற
  4. ஓய்வு + வற

விடை : ஓய்வு + அற

5. ஏன் + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ________

  1. ஏன்என்று
  2. ஏனென்று
  3. ஏன்னென்று
  4. ஏனன்று

விடை : ஏனென்று

6. ஔடதம் + ஆம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது _________

  1. ஔடதமாம்
  2. ஔடதம்ஆம்
  3. ஔடதாம்
  4. ஔடதஆம்

விடை : ஔடதமாம்

II. எதிர்ச்சொற்களைப் பொருத்துக

  1. அணுகு – தெளிவு
  2. ஐயம் – சோர்வு
  3. ஊக்கம் – பொய்மை
  4. உண்மை – விலக

விடை : 1-ஈ, 2 – அ, 3 – ஆ, 4 – இ

III. பாடல் வரிகளுக்கேற்றவாறு முறைப்படுத்துக.

1. சிந்தனை கொள் அறிவியல்

   அறிவியல் சிந்தனை கொள்

2. சொல் தெளிந்து ஐயம்

   ஐயம் தெளிந்து சொல்

3. கேள் ஏன் என்று

ஏன் என்று கேள் 

4. வெல்லும் என்றும் அறிவியல்

என்றும் அறிவியல் வெல்லும்

3.2. அறிவியலால் ஆள்வோம்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. அவன் எப்போதும் உண்மையையே __________________

  1. உரைக்கின்றான்
  2. உழைக்கின்றான்
  3. உறைகின்றான்
  4. உரைகின்றான்

விடை : உரைக்கின்றான்

2. ஆழக்கடல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

  1. ஆழமான + கடல்
  2. ஆழ் + கடல்
  3. ஆழ + கடல்
  4. ஆழம் + கடல்

விடை : ஆழம் + கடல்

3. விண்வெளி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

  1. விண் + வளி
  2. விண் + வெளி
  3. வின் + ஒளி
  4. விண் + வொளி

விடை : விண் + வெளி

4. நீலம் + வான் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது

  1. நீலம்வான்
  2. நீளம்வான்
  3. நீலவான்
  4. நீலவ்வான்

விடை : நீலவான்

5. இல்லாது + இயங்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது

  1. இல்லாதுஇயங்கும்
  2. இல்லாஇயங்கும்
  3. இல்லாதியங்கும்
  4. இல்லதியங்கும்

விடை : இல்லாதியங்கும்

3.3. கணியனின் நண்பன்

I. சரியான விடையை த் தேர்ந்தெடுத்து எழுதுக

1. நுட்பமாகச் சிந்தித்து அறிவது _________________

  1. நூலறிவு
  2. நுண்ணறிவு
  3. சிற்றறிவு
  4. பட்டறிவு

விடை : நுண்ணறிவு

2. தானே இயங்கும் இயந்திரம் _______________.

  1. கணினி
  2. தானியங்கி
  3. அலைபேசி
  4. தொலைக்காட்சி

விடை : தானியங்கி

3. நின்றிருந்த என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________

  1. நின் + றிருந்த
  2. நின்று + இருந்த
  3. நின்றி + இருந்த
  4. நின்றி + ருந்த

விடை : நின்று + இருந்த

4. அவ்வுருவம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________

  1. அவ்வு + ருவம்
  2. அ + உருவம்
  3. அவ் + வுருவம்
  4. அ + வுருவம்

விடை : அ + உருவம்

5. மருத்துவம் + துறை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது _________

  1. மருத்துவம்துறை
  2. மருத்துவதுறை
  3. மருந்துதுறை
  4. மருத்துவத்துறை

விடை : மருத்துவத்துறை

6. செயல் + இழக்க என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது__________

  1. செயலிழக்க
  2. செயல்இழக்க
  3. செயஇழக்க
  4. செயலிலக்க

விடை : செயலிழக்க

7. நீக்குதல் என்னும் சொல்லின் எதிர்ச்சொல் _______________________

  1. போக்குதல்
  2. தள்ளுதல்
  3. அழித்தல்
  4. சேர்த்தல்

விடை : சேர்த்தல்

8. எளிது என்னும் சொல்லின் எதிர்ச்சொல் _______________________

  1. அரிது
  2. சிறிது
  3. பெரிது
  4. வறிது

விடை : அரிது

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

  1. மனிதன் தன் வேலைகளை எளிதாக்கக் கண்டுபிடித்தவை எந்திரங்கள்
  2. தானியங்கிகளுக்கும், எந்திரமனிதர்களுக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடு செயற்கை
    நுண்ணறிவு.
  3. உலக சதுரங்க வீரரை வெற்றிகொண்ட மீத்திறன் கணினியின் பெயர் டீப் புளூ.
  4. ‘சோபியா’ ரோபோவுக்கு குடியுரிமை வழங்கிய நாடு சவுதி அரேபியா

III. சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.

  1. தொழிற்சாலை : தொழிற்சாலை என்பது மூலப்பொருட்களை உற்பத்தி செய்வதாகும்
  2. உற்பத்தி : சோப்பு உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் எங்கள் ஊரில் உள்ளது
  3. ஆய்வு : ஆய்வு என்பது ஒரு தேடல் வகை
  4. செயற்கை : மனிதர்கள் விசாயத்தில் செயற்கை உரங்களை பயன்படுத்துகின்றன
  5. நுண்ணறிவு : மனிதர்கள் நுண்ணறிவால் சிந்திக்கின்றனர்

3.5. மொழி முதல், இறுதி எழுத்துகள்

I. பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக.

1. இராமன் விளைவைக் கண்டறிந்தவர் யார்? சர். சி. வி. இராமன்

2. இராமன் அவர்களுக்கு நோபல் பரிசைப் பெற்றுத் தந்த கேள்வி எது?

  1. கடல்நீர் ஏன் கறுப்பாகக் காட்சியளிக்கிறது?
  2. கடல்நீர் ஏன் நீல நிறமாக இல்லை?
  3. கடல்நீர் ஏன் நீல நிறமாகக் காட்சியளிக்கிறது?
  4. கடல்நீர் ஏன் உப்பாக இருக்கிறது?

3. தேசிய அறிவியல் நாள் என்றைக்குக் கொண்டாடப்படுகிறது ? ஏன்?

 “இராமன் விளைவு” கண்டுபிடிப்பை வெளியிட்ட பிப்ரவரி 28 ஆம் நாளை நாம் ஆண்டு தோறும் “ தேசிய அறிவியல் நாள்” எனக் கொண்டாடி மகிழ்கிறோம்

4. இப்பத்திக்குப் பொருத்தமான தலைப்பிடுக.

தேசிய அறிவியல் நாள்

II. பின்வரும் தொடர்களில் அடிக்கோடிட்ட சொற்களுக்கு இணையான தமிழ்ச்
சொற்களை எழுதுக.

  1. கம்ப்யூட்டர் துறையில் உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். (கணினி)
  2. காலிங்பெல்லை அழுத்தினான் கணியன். (அழைப்பு மணி)
  3. மனிதர்கள் தங்கள் வேலைகளை எளிதாக்க மிஷின் களைக் கண்டுபிடித்தனர். (எந்திரம்)
  4. இன்று பல்வேறு துறைகளிலும் ரோபோ பயன்பாட்டிற்கு வந்துள்ளது (அடிமை)

III. கலைந்துள்ள எழுத்துகளை முறைப்படுத்துக.

  1. விகண்லம் – விண்கலம்
  2. மத்ருதும்வ – மருத்துவம்
  3. அவிறில்ய – றிவியில்
  4. ணினிக – ணினி
  5. எலால்ம் – எல்லாம்
  6. அப்ழைபு – அழைப்பு

IV. வட்டத்தில் சிக்கிய எழுத்துகளை எடுத்து எழுதுக

எழுத்துகளை வரிசைப்படுத்தி தமிழக அறிவியல் அறிஞரைக் கண்டுபிடியுங்கள் அப்துல்கலாம்

V. வாக்கியத்தை நீட்டி எழுதுக.

(எ.கா.) நான் படிப்பேன். (அறிவியல், பாடம், நன்றாக)

  1. நான் பாடம் படிப்பேன்.
  2. நான்_அறிவியல் பாடம் படிப்பேன்.
  3. நான் அறிவியல் பாடம் நன்றாகப் படிப்பேன்.

1. அறிந்து கொள்ள விரும்பு. (எதையும், காரணத்துடன், தெளிவாக)

  1. எதையும் அறிந்து கொள்ள விரும்பு
  2. காரணத்துடன் அறிந்து கொள்ள விரும்பு
  3. தெளிவாக அறிந்து கொள்ள விரும்பு

2. நான் சென்றேன். (ஊருக்கு, நேற்று, பேருந்தில்)

  1. நான் ஊருக்கு சென்றேன்
  2. நான்_நேற்று சென்றேன்
  3. நான் பேருந்தில் சென்றேன்

VI. அடிச்சொல்லுடன் எழுத்துகளைச் சேர்த்துப் புதிய சொற்களை உருவாக்குக.

(எ.கா.) அறி – அறிக, அறிந்து, அறிஞர், அறிவியல், அறிவிப்பு

  1. பார் – பார்க்க, பார்த்தல், பார்வை, பார்த்து
  2. செய் – செய்தல், செய்தி, செய்வினை, செய்யும்
  3. தெளி  – தெளிதல், தெளிவு, தெளித்தல், தெளியும்
  4. படி – படித்தல், படிப்பு, படியேறுதல், படியேறு

VII. மெய் எழுத்து நடுவில் அமையுமாறு சொற்களை உருவாக்க

கம்பு, வம்பு, நம்பு,

நம்பி, கம்பி, தம்பி

VIII. குறுக்கெழுத்துப் புதிர்.

இடமிருந்து வலம்:-

1. அப்துல்கலாமின் சுயசரிதை அக்னிசிறகுகள்

3. சிந்தித்துச் செயல்படும் தானியங்கி எந்திரமனிதன்

10. எந்திரமனிதனுக்கு குடியுரிமை வழங்கிய முதல் நாடு சவுதி அரேபியா

வலமிருந்து இடம்:-

2. ஆராய்ச்சி என்பதைக் குறிக்கும் சொல். ஆய்வு

6. சதுரங்கப் போட்டியில் டீப்புளூ வெற்றி பெற்றது.

8. மருந்து என்னும் பொருள் தரும் சொல். ஒளடதம்

மேலிருந்து கீழ்:-

1. ‘ரோபோ ’ என்னும் சொல்லின் பொருள் எந்திரமனிதன்

2. அகர வரிசையில் அமையும் இலக்கியம் ஆத்திச்சூடி

7. ‘புதுமைகளின் வெற்றியாளர்’ என்னும் பட்டம் பெற்ற ரோபோ சோபியா

கீழிருந்து மேல்:-

4. இந்தியா செலுத்திய ஏவுகணை. அக்னி

5. தானாகச் செயல்படும் எந்திரம். தானியங்கி

9. அப்துல்கலாம் வகித்த பதவி குடியரசுத் தலைவர்

Related Links



5 thoughts on “Tamil Nadu 6th Std Tamil 1st Term Book Back Questions with Answers 2022”

Leave a Comment