6th Standard Tamil Book 2nd Term Solution 2022
On this page, we have given the answers to the Tamil book for the Sixth Standard 2nd Term. We hope the questions are given here will be of more use to Matriculation and CBSE students than to Tamil students.
இயல் 1: கண்ணெனத் தகும்
1.1. மூதுரை
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. மாணவர்கள் நூல்களை _________ க் கற்க வவண்டும்.
- மேலோட்டமாக
- மாசற
- மாசுற
- மயக்கமுற
விடை : மாசற
2. இடமெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது
- இடம் + மெல்லாம்
- இடம் + எல்லாம்
- இட + எல்லாம்
- இட + மெல்லாம்
விடை : இடம் + எல்லாம்
3. மாசற என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது
- மாச + அற
- மாசு + அற
- மாச + உற
- மாசு + உற
விடை : மாசு + அற
4. குற்றம் + இல்லாதவர் என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
- குற்றமில்லாதவர்
- குற்றம்இல்லாதவர்
- குற்றமல்லாதவர்
- குற்றம் அல்லாதவர்
விடை : குற்றமில்லாதவர்
5. சிறப்பு + உடையார் என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
- சிறப்புஉடையார்
- சிறப்புடையார்
- சிறப்படையார்
- சிறப்பிடையார்
விடை : சிறப்புடையார்
1.2. துன்பம் வெல்லும் கல்வி
I.சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. மாணவர் பிறர் _______ நடக்கக் கூடாது.
- போற்றும்படி
- தூற்றும்படி
- பார்க்கும்படி
- வியக்கும்படி
விடை : தூற்றும்படி
2. நாம் _______ சொற்படி நடக்க வவண்டும்.
- இளையோர்
- ஊரார்
- மூத்தோர்
- வழிப்போக்கர்
விடை : மூத்தோர்
3. கைப்பொருள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______
- கையில் + பொருள்
- கைப் + பொருள்
- கை+பொருள்
- கைப்பு + பொருள்
விடை : கை+பொருள்
4. மானம் + இல்லா என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்________
- மானம்இல்லா
- மானமில்லா
- மானமல்லா
- மானம்மில்லா
விடை : மானமில்லா
II. சொற்றொடரில் அமைத்து எழுதுக
- மனமாற்றம் – மனிதன் தீயவழியிலிருந்து நல்வழிக்கு மனமாற்றம் அடைய வேண்டும்.
- ஏட்டுக்கல்வி – மாணவர்கள் ஏட்டுக்கல்வி மட்டுமின்றி அனுபவ கல்வியையும் கற்றுக்கொள்ள வேண்டும்
- நல்லவர்கள் – இந்த உலகில் நல்லவர்கள் என்று யாரும் கிடையாது
- சோம்பல் – சோம்பல் மனித வாழ்க்கைக்கு எதிரி
1.3. கல்விகண் திறந்தவர்
I.சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. பள்ளிக்கூடம் செல்லாததற்கு ஆடு மேய்க்கும் சிறுவர்கள் கூறிய காரணம் _________.
- ஆடு மேய்க்க ஆள் இல்லை
- ஊரில் பள்ளிக்கூடம் இல்லை
- வழி தெரியவில்லை
- பேருந்து வசதியில்லை
விடை : ஊரில் பள்ளிக்கூடம் இல்லை
2. பசியின்றி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______
- பசி + இன்றி
- பசி+யின்றி
- பசு + இன்றி
- பசு + யின்றி
விடை : பசி + இன்றி
3. காடு+ஆறு என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்________
- காட்டாறு
- காடாறு
- காட்டுஆறு
- காடுஆறு
விடை : காட்டாறு
4. படிப்பறிவு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______
- படி + அறிவு
- படிப்பு + அறிவு
- படி + அறிவு
- படிப்பு + வறிவு
விடை : படிப்பு + அறிவு
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
- குழந்தைகள் பள்ளியில் ஏற்றத்தாழ்வின்றிப் படிக்கச் சீரூடைத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்
- காமராசரை ‘கல்விக் கண் திறந்தவர்’ என மனதாரப் பாராட்டியவர் தந்தை பெரியார்
II. சொற்றொடரில் அமைத்து எழுதுக
- வகுப்பு – அருண் பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றான்
- உயர்கல்வி – உயர்கல்வி பயில ராமு சென்னைக்கு சென்றான்
- சீருடை – பள்ளிகளில் ஏற்றத்தாழ்வின்றி பயில பள்ளிக்கு சீருடையில் தான் வரவேண்டும்,
1.5. இன எழுத்துக்கள்
I.சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. மெல்லினத்திற்காக இன எழுத்து இடம்பெறாத நூல் எது?
- மஞ்சள்
- வந்தான்
- கல்வி
- தம்பி
விடை : கல்வி
2. தவறான சொல்லை கண்டறிக.
- கண்டான்
- வென்ரான்
- நண்டு
- வண்டு
விடை : வென்ரான்
II. பின்வரும் சொற்களைத் திருத்தி எழுதுக.
பிழையான சொல் | திருத்தம் |
|
|
III. சிறுவினா
இன எழுத்துகள் என்றால் என்ன?
சில எழுத்துகளுக்கு இடையை ஒலிக்கும் முயற்சி, பிறக்கும் இடம் ஆகியவற்றில் ஒற்றுமை உண்டு. இவ்வாறு ஒற்றுமை உள்ள எழுத்துகள் இன எழுத்துகள் எனப்படும்.
மொழியை ஆள்வோம்
I.தொடர்களை நீட்டித்து புதிய தொடர்களை உருவாக்குங்கள்
பாடம் படித்தான் | மழை பெய்தது |
|
|
II. இரு பொருள் தரக்கூடிய சொற்களைப் பயன்படுத்திச் சொற்றொடர்களை அமையுங்கள்.
(நூல், மாலை, ஆறு, படி)
- நூல் – ஆடை தைக்க உதவுவது நூல் / மூதுரை அற நூல்
- மாலை – இரத்தின மாலை விலைமதிப்பற்றது / சூரியன் மாலை நேரத்தில் மறைகிறது
- ஆறு – ராமு ஆறு மாதம் கழித்த பின் ஊருக்கு வந்தான் / தாமிரபரணி ஆறு வற்றாத ஆறு
- படி – தேர்வில் வெற்றியடைய நன்றாக படி / மாணவர் வாழ்வில் முன்னேற ஆசிரியர் ஒரு ஏணிப்படி போன்று செயல்படுகிறார்கள்
III. பின்வரும் சொற்களை பயன்படுத்திச் சொற்றொடர்களை உருவாக்குங்கள்.
ஆசிரியர் மாணவண் |
கவிதை பாடம் |
எழுதுகிறார் எழுதுகிறான் படிக்கிறார் படிக்கிறான் கற்பிக்கிறார் |
விடை
ஆசிரியர் கவிதை எழுதுகிறார் ஆசிரியர் பாடம் எழுதுகிறார்
ஆசிரியர் கவிதை படிக்கிறார் ஆசிரியர் பாடம் படிக்கிறார்
ஆசிரியர் கவிதை கற்பிக்கிறார் ஆசிரியர் பாடம் கற்பிக்கிறார்
மாணவர் கவிதை எழுதுகிறான் மாணவர் பாடம் எழுதுகிறான்
மாணவர் கவிதை படிக்கிறான் மாணவர் பாடம் படிக்கிறான்
IV. உரையாடலை நிறைவு செய்யுங்கள்
மாணவர் : வணக்கம் ஐயா
தலைமை ஆசிரியர் : வணக்கம் மதி உனக்கு என்ன வேண்டும்?
மாணவர் : எனக்கு மாற்றுச் சான்றிதழ் வேண்டும் ஐயா
தலைமை ஆசிரியர் : எதற்காக மாற்றுச் சான்றிதழ் கேட்கிறாய்?
மாணவர் : என் தந்தைக்குப் பணி மாறுதல் கிடைத்திருக்கிறது ஐயா.
தலைமை ஆசிரியர் : அப்படியா! எந்த ஊருக்கு பணி மாறுதல் கிடைத்திருக்கிறது?
மாணவர் : மதுரைக்கு ஐயா
தலைமை ஆசிரியர் : அங்கு எந்தப்பள்ளியில் சேரப் போகிறார்?
மாணவர் : மதுரை அரசு உயர்நிலைப்பள்ளியில் ஐயா
தலைமை ஆசிரியர் : உன் பெற்றோரை அழைதத்து வந்திருக்கிறாயா?
மாணவர் : என் அப்பாவை அழைத்து வந்திருக்கிறேன் ஐயா.
V. கீழே கொடுக்கப்பட்டுள்ள தலைவர்களின் பிறந்த நாள் எந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது?
(குழந்தைகள் தினம், மாணவர் தினம், ஆசிரியர் தினம், தேசிய இளைஞர் தினம், கல்விவளர்ச்சி நாள்)
- காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாள்.
- டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணன் பிறந்த நாள் ஆசிரியர் தினம்.
- அப்துல்கலாம் பிறந்த நாள் மாணவர் தினம்.
- விவேகானந்தர் பிறந்த நாள் தேசிய இளைஞர் தினம்.
- ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் குழந்தைகள் தினம்
VI. இன எழுத்துக்கள் அமைந்துள்ள சொற்களை கண்டறிக
கங்கை, பக்கம், வண்டு, மண்டபம், மங்கை
வெந்தயம், தந்தம், பஞ்சு, பச்சை, தக்காளி, மஞ்சள்
கம்பளம், குன்று, காக்கை, செங்கடல், தேங்காய்
VII. கீழ்காணும் சொற்களுள் அமைந்துள்ள இன எழுத்துக்களை எடுத்து எழுதுங்கள்
சங்கு, நுங்கு, பிஞ்சு, வஞ்சகம், பட்டணம், சுண்டல், வண்டி, பந்தயம், பந்து, கற்கண்டு, தென்றல், நன்று
- சங்கு / நுங்கு
- பிஞ்சு / வஞ்சகம்
- சுண்டல் / வண்டி
- பந்தயம் / கற்கண்டு
- தென்றல் / நன்று
VIII. பின்வரும் பத்தியைப் படித்து வினாவிற்கேற்ற விடையளிக்கவும்
காமராசரின் வீட்டுக்ள் ஒரு சிறுவனும் அவனுடைய தங்கையும் நுழைய முயன்றனர். ஊழியர் அவர்களை தடுப்பதை காமராசர் கவனித்தார். உடனே அவர்களை உள்ளே அழைத்தார். “யாரைப் பார்க்க வந்தீங்க?” என்று அன்புடன் வினவினார். ” எங்க அண்ணனுக்கு தேர்வுக்கு பணம் கட்ட அம்மாவிடம் வசதியில்லே. உங்களைப் பார்த்தால்,,,,” என்று சிறுமி கூறி முடிப்பதற்குள் “அம்மா அனுப்பி விட்டாரா?” என்று காமராசர் கேட்டார். “இல்லை நாங்களாகத்தான் வந்தோம். அம்மா அப்பளம் போட்டு வீடு வீடாக கொண்டு போய் வித்துட்டு வருவாங்க. அதில் வரும் வருமானத்தை வச்சுதான் எங்களை படிக்க வைக்கிறாங்க” என்று குழந்தைகள் கூறினர். அதனைக் கேட்டதும் மாடியேறிச் சென்று பணத்தைக் கொண்டு வந்து கொடுத்தார்.
மறுநாள் குழந்தைகள் இருவரும் காமராசரைத் தேடி வந்தனர். “ஐயா தேர்வுக்கு பணம் கட்டியாச்சு. இந்த இரசீதை (பற்று சீட்டை) அம்மா உங்களிடம் காட்டிட்டு வரச் சொன்னாங்க” என்றனர். அதனைக் கேட்டுக் காமராசர் மனம் நெகிழ்ந்தார்.
1. காமராசரின் வீட்டிற்குள் நுழைய முயன்றவர்கள்
- பெற்றோர்
- சிறுவன், சிறுமி
- மக்கள்
- ஆசிரியர்கள்
விடை : சிறுவன், சிறுமி
2. இந்நிகழ்வு சிறுவனது குடும்பத்தின் எப்பண்பை விளக்குகிறது
- ஏழ்மை
- நேர்மை
- உழைப்பு
- கல்லாமை
விடை : நேர்மை
3. மறுநாள் குழந்தைகள் வந்ததும் காமராசர் மனம் நெகிழ்ந்தார்
4. சிறுவனும், சிறுமியும் எதற்காக காமராசரின் வீட்டிற்கு வந்தனர்?
சிறுவனின் தேர்வுக்கு பணம் கட்டுவதற்கு காமராசரிடம் உதவி கேட்டு வந்தனர்
5. காமராசர் செய்த உதவி யாது?
சிறுவனின் தேர்வுக்கு பணம் கட்டுவதற்காக காமராசரிடம் பண உதவி செய்தார்
மொழியோடு விளையாடு
I. “கல்விக்கண் திறந்த காமராசர்” இத்தொடரிலுள்ள எழுத்துகளை மட்டும் பயன்படுத்தி புதிய சொற்களை உருவாக்குங்கள்
கல், வில், தில், விண், கண், விண்கல், கல்வி, திறந்தகண், விக்கல், மண், காவி, காண், மதி, சதி, தந்தி, கதி
II. முறை மாறியுள்ள சொற்களைச் சரியான இடமத்தில் பொருத்திச் சொற்றொடரை நிறைவு செய்க.
1. முளையிலே விளையும் தெரியும் பயிர்
விளையும் பயிர் முளையிலே தெரியும்
2. ஆக்குவோம் இல்லாமை கல்லாமையை
கல்லாமையை இல்லாமை ஆக்குவோம்
III. கட்டங்களில் உள்ள இன எழுத்துகளை எழுதுக
ம | ண் | ட | ப | ம் | அ |
ற | தி | க | ந் | கி | ச |
கி | பி | ம் | து | ளி | ங் |
தெ | ன் | ற | ல் | ங் | கு |
ள் | வி | ம | ஞ் | ச | ள் |
- மண்டபம்
- தென்றல்
- சங்கு
- மஞ்சள்
- பந்து
IV. கலைச்சொல் அறிவோம்
- Education – கல்வி
- Mail – அஞ்சல்
- Primary school – ஆரம்ப பள்ளி
- Compact disk(CD) -குறுந்தகடு
- Higher Secondary School – மேல்நிலைப்பள்ளி
- E-Library – மின்
- Library – நூலகம்
- E-Book – மின் புத்தகம்
- Escalator – மின்படிக்கட்டு
- E-Magazine – மின் இதழ்கள்
- Lift – மின்தூக்கி
இயல் 2: பாடறிந்து ஒழுகுதல்
2.1 ஆசாரக்கோவை
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. பிறரிடம் நான் _______ பேசுவவன்.
- கடுஞ்சொல்
- இன்சொல்
- வன்சொல்
- கொடுஞ்சொல்
விடை : இன்சொல்
2. பிறர் நமக்குச் செய்யும் தீங்கைப் பொறுத்துக் கொள்வது _________ ஆகும்.
- வம்பு
- அமைதி
- அடக்கம்
- பொறை
விடை : பொறை
3. அறிவு + உடைமை என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்________
- அறிவுடைமை
- அறிவுஉடைமை
- அறியுடைமை
- அறிஉடைமை
விடை : அறிவுடைமை
4. இவை + எட்டும் என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்________
- இவைஎட்டும்
- இவையெட்டும்
- இவ்வெட்டும்
- இவ்எட்டும்
விடை : இவையெட்டும்
5. நன்றியறிதல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______
- நன்றி + யறிதல்
- நன்றி + அறிதல்
- நன்று + அறிதல்
- நன்று + அறிதல்
விடை : நன்றி + அறிதல்
6. பொறையுடைமை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______
- பொறுமை + உடைமை
- பொறை + யுடைமை
- பொறு + யுடைமை
- பொறை + உடைமை
விடை : பொறை + உடைமை
2.2. கண்மணியே கண்ணுறங்கு
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. பாட்டிசைத்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______
- பாட்டி + சைத்து
- பாட்டி + இசைத்து
- பாட்டு + இசைத்து
- பாட்டு+சைத்து
விடை : பாட்டு + இசைத்து
2. கண்ணுறங்கு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______
- கண் + உறங்கு
- கண்ணு + உறங்கு
- கண் + றங்கு
- கண்ணு + றங்கு
விடை : கண் + உறங்கு
3. வாழை + இலை என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்________
- வாழையிலை
- வாழைஇலை
- வாழலை
- வாழிலை
விடை : வாழையிலை
4. கை + அமர்த்தி என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்________
- கைமர்த்தி
- கைஅமர்த்தி
- கையமர்த்தி
- கையைமர்த்தி
விடை : கையமர்த்தி
5. உதித்த என்ற சொல்லிற்கு எதிர்ச்சொல்________
- மறைந்த
- நிறைந்த
- குறைந்த
- தோன்றிய
விடை : மறைந்த
2.3. தமிழர் பெருவிழா
I.சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. கதிர் முற்றியதும் ________ செய்வர்.
- அறுவடை
- உரமிடுதல்
- நடவு
- களையெடுத்தல்
விடை : அறுவடை
2. விழாக்காலங்களில் வீட்டின் வாயிலில் மாவிலையால் _________ கட்டுவர்.
- செடி
- கொடி
- தோரணம்
- அலங்கார வளைவு
விடை : தோரணம்
3. பொங்கல்+ அன்று என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்________
- பொங்கலன்று
- பொங்கல்அன்று
- பொங்கலென்று
- பொங்கஅன்று
விடை : பொங்கலன்று
4. போகிப்பண்டிகை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______
- போகி + பண்டிகை
- போ+பண்டிகை
- போகு + பண்டிகை
- போகிப்+பண்டிகை
விடை : போகி + பண்டிகை
5. பழயன கழிதலும் ________ புகுதலும்.
- புதியன
- புதுமை
- புதிய
- புதுமையான
விடை : புதியன
6. பச்சைப் பசேல் என்ற வயலைக் காண இன்பம் தரும்
பட்டுப் போன மரத்தைக் காண்பது ________ தரும்.
- அயர்வு
- கனவு
- துன்பம்
- சோர்வு
விடை : துன்பம்
II. சொற்றொடரில் அமைத்து எழுதுக
- பொங்கல் : பொங்கல் விழா-வில் விளைச்சலுக்கு காரணமான கதிரவனை வணங்கி மகிழ்வர்
- செல்வம் : உழவர்களின் செல்வமாக மாட்டினை கருதினர்,
- பண்பாடு : தமிழர் பண்பாடு பாரம்பரியமிக்கது
2.5. மயங்கொலிகள்
I.சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
- சிரம் என்பது தலை (தலை / தளை)
- இலைக்கு வேறு பெயர் தழை (தளை / தழை)
- வண்டி இழுப்பது காளை (காலை / காளை)
- கடலுக்கு வேறு பெயர் பரவை (பரவை / பறவை)
- பறவை வானில் பறந்தது (பரந்தது / பறந்தது)
- கதவை மெல்லத் திறந்தான் (திரந்தான் / திறந்தான்)
- பூ மணம் வீசும். (மணம் / மனம்)
- புலியின் கண் சிவந்து காணப்படும். (கன் / கண்)
- குழந்தைகள் பந்து விளையாடினர். (பந்து / பன்து)
- வீட்டு வாசலில் கோலம் போட்டர். (கோளம் / கோலம்)
II. தொடர்களில் உள்ள மயங்கொலிப் பிழைகளை திருத்தி எழுதுக
1. எண் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மனம் வீசின.
என் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மணம் வீசின.
2. தேர்த் திருவிலாவிற்கு செண்றனர்.
தேர்த் திருவிழாவிற்கு சென்றனர்.
3. வாழைப்பலம் உடலுக்கு மிகவும் நல்ளது.
வாழைப்பழம் உடலுக்கு மிகவும் நல்லது
III. பொருள் வேறுபாடறிந்து எழுதுக
வாசலில் போடுவது காேலம்
பந்தின் வடிவம் கோளம் |
போரில் பயன்படுத்துவது வாள்
பூனைக்கு உள்ளது வால் |
மொழியை ஆள்வோம்
I. பத்தியைப் படித்து வினாக்கள் அமைத்தல்
- முகிலன் எதற்காக தாத்தா வீட்டிற்கு சென்றான்?
- தாத்தா வீட்டில் முகிலனுக்கு மிகவும் பிடித்தது எது?
- தாத்தா வீட்டின் பின்புறம் என்ன இருந்தது?
- முகிலன் தாத்தாவிற்கு என்ன உதவி செய்தான்?
- முகிலன் எவர்களுடன் பொங்கல் விழாவினை கொண்டாடினான்?
II. சரியான தொடர் எது? கண்டறிந்து எழுதுக
- கதிரவன் மறையும் காலையில் உதித்து மாலையில்
- மாலையில் காலையில் உதித்து மறையும் கதிரவன்
- கதிரவன் காலையில் உதித்து மாலையில் மறையும்
- மறையும் காலையில் கதிரவன் உதித்து மாலையில்
விடை : கதிரவன் காலையில் உதித்து மாலையில் மறையும்
III. உரையாடலை நிரப்புக
செல்வன் : வாங்க மாமா, நல்மாக இருக்கின்றீர்களா?
மாமா : நலமாக உள்ளேன். நீ எப்படி இருக்கிறாய்?
செல்வன் : நன்றாக இருக்கிறேன். உட்காருங்கள் மாமா.
மாமா : அப்பா, அம்மா எங்கே சென்றுள்ளார்கள்?
செல்வன் : இருவரும் கடைவீதிக்குச் சென்றுள்ளார்கள் மாமா
மாமா : அப்படியா, நீ எப்படி படிக்கிறாய்?
செல்வன் : நன்றாக படிக்கிறேன் மாமா.
மாமா : நாளை சுதந்திர தின விழா. உங்கள் பள்ளியில் போட்டிகள் நடத்துகிறார்களா?
செல்வன் : ஆம் மாமா. நான் பேச்சுப் போட்டியில் கலந்து கொள்கிறேன்.
மாமா : வெற்றி பெற வாழ்த்துக்கள்
செல்வன் : நன்றி மாமா
IV. நட்பு என்னும் தலைப்பில் கவிதை எழுதுக
இன்பம் கொடுப்பது நட்பு
அன்பை அளிப்பது நட்பு
உறவை வளர்ப்பது நட்பு
உலகில் உயர்ந்தது நட்பு
மொழியோடு விளையாடு
I. கீழே உள்ள சொற்களைச் சேர்த்து புதிய சொற்களை உருவாக்கு
உண்டு | இல்லை |
கல் + ல் + உண்டு = கல்லுண்டு | கல் + ல் + இல்லை = கல்லில்லை |
பல் + ல் + உண்டு = பல்லுண்டு | பல் + ல் + இல்லை = பல்லில்லை |
மின் + ல் + உண்டு = மின்னுண்டு | மின் + ல் + இல்லை = மின்னில்லை |
மண் + ல் + உண்டு =மண்ணுண்டு | மண் + ல் + இல்லை = மண்ணில்லை |
II. கட்டங்களில் மறைந்துள்ள சுற்றுலாத் தலங்களைக் கண்டுபிடித்து எழுதுக
க | த | ஞ் | சா | வூ | ர் | மா |
ன் | மி | டு | கா | ற் | ஏ | ம |
னி | க | ல் | ல | ணை | ல் | ல் |
யா | மை | ளி | ரு | சு | ம் | ல |
கு | ற் | றா | ல | ம் | டி | ப |
ம | து | ரை | க | ரு | ட் | ர |
ரி | சி | ஞ் | செ | அ | ஊ | ம் |
- குற்றாலம்
- ஊட்டி
- செஞ்சி
- கல்லணை
- கன்னியாகுமரி
- மாமல்லபுரம்
- மதுரை
- சுருளி
- ஏற்காடு
- தஞ்சாவூர்
III. தமிழ்ச்சொல் அறிவோம்
- Welcome – நல்வரவு
- Readymade Dress – ரெடிமேட் உடை
- Sculptures – சிற்பங்கள்
- Makeup – ஒப்பனை
- Chips – சில்லுகள்
- Tiffin – சிற்றுண்டி
2.6. திருக்குறள்
I.சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. விருந்தினரின் முகம் எப்போது வாடும்?
- நம் முகம் மாறினால்
- நம் வீடு மாறினால்
- நாம் நன்கு வரவேற்றால்
- நம் முகவரி மாறினால்
விடை : நம் முகம் மாறினால்
2. நிலையான செல்வம் ______
- தங்கம்
- பணம்
- ஊக்கம்
- ஏக்கம்
விடை : ஊக்கம்
3. ஆராயும் அறிவு உடையவர்கள் _______ சொற்களைப் பேச மாட்டார்.
- உயர்வான
- விலையற்ற
- பயன்தராத
- பயன்உடைய
விடை : பயன்தராத
4. பொருளுடைமை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______
- பொருளு+டைமை
- பொரு+ளுடைமை
- பொருள்+உடைமை
- பொருள்+ளுடைமை
விடை : பொருள்+உடைமை
5. உள்ளுவது+எல்லாம் என்பதைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல் _______
- உள்ளுவதுஎல்லாம்
- உள்ளுவதெல்லாம்
- உள்ளுவத்தெல்லாம்
- உள்ளுவதுதெல்லாம்
விடை : உள்ளுவதெல்லாம்
6. பயன்+இலா என்பதைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல் _______
- பயனிலா
- பயன்னில்லா
- பயன்இலா
- பயன்இல்லா
விடை : பயனிலா
II. எதுகை மோனை சொற்களை எடுத்து எழுதுக.
உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து.
எதுகை: உள்ளுவது – தள்ளினும் – தள்ளாமை
மோனை: உள்ளுவது – உயர்வுள்ளல், தள்ளினும்-தள்ளாமை
III. இடம் மாறியுள்ள சீர்களை முறைப்படுத்தி எழுதுக.
1. பணிவுடையன் ஆதல் இன்சொலன் ஒருவற்கு
மற்றுப் பிற அணியல்ல
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.
2. உள்ளுவது உயர்வுள்ளல் எல்லாம் மற்றது
தள்ளாமை தள்ளினும் நீர்த்து.
உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளாமை தள்ளினும் நீர்த்து.
இயல் 3: கூடித்தொழில் செய்க
3.1. நானிலம் படைத்தவன்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. போர்க்களத்தில் வெளிப்படும் குணம் __________
- மகிழ்ச்சி
- துன்பம்
- வீரம்
- அழுகை
விடை : வீரம்
2. கல்லெடுத்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______
- கல் + அடுத்து
- கல் + எடுத்து
- கல் + லடுத்து
- கல் + லெடுத்து
விடை : கல் + எடுத்து
3. நானிலம் என்னும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______
- நா+னிலம்
- நான்கு+நிலம்
- நா+நிலம்
- நான்+நிலம்
விடை : நான்கு+நிலம்
4. நாடு+ என்ற என்பதைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல் _______
- நாடென்ற
- நாடன்ற
- நாடுஎன்ற
- நாடுஅன்ற
விடை : நாடென்ற
5. கலம்+ ஏறி என்பதைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல் _______
- கலம்ஏறி
- கலமறி
- கலன்ஏறி
- கலமேறி
விடை : கலமேறி
II. சொற்றொடரில் அமைத்து எழுதுக
- மாநிலம் – தமிழ்நாடு இந்தியாவில் உள்ள ஒரு மாநிலம் ஆகும்
- கடல் – உலகில் பெருங்கடல்கள் ஏழு
- பண்டங்கள் – இனிப்பு பண்டங்கள் அனைவருக்கும் அதிகமாக பிடிக்கும்
III. நானிலம் படைத்தவன் பாடலில் இடம் பெற்றுள்ள எதுகை சொற்களை எழுதுக
கல்லெடுத்து – மல்லெடுத்த, ஊராக்கி – பேராக்கி, பெருமை – மருதம், முக்குளித்தான் – எக்களிப்பு, பண்டங்கள் – கண்டங்கள், அஞ்சாமை – அஞ்சுவதை
IV. நானிலம் படைத்தவன் பாடலில் இடம் பெற்றுள்ள மோனை சொற்களை எழுதுக
கல்லெடுத்து – கலமேறி, மல்லெடுத்து – மறத்தால், நானிலத்தை – நாகரிக, முக்குளித்தான் – முத்தெடுத்து, பண்டங்கள் – பயன்நல்கும்
3.2 கடலோடு விளையாடு
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. கதிர்ச்சுடர் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______
- கதிர்ச் + சுடர்
- கதிரின் + சுடர்
- கதிரவன் + சுடர்
- கதிர் + சுடர்
விடை : கதிர் + சுடர்
2. மூச்சடக்கி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது ________
- மூச்சு + அடக்கி
- மூச் + அடக்கி
- மூச் + சடக்கி
- மூச்சை + அடக்கி
விடை : மூச்சு + அடக்கி
3. பெருமை+வானம் என்பதைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல் _______
- பெருமைவானம்
- பெருவானம்
- பெருமானம்
- பேர்வானம்
விடை : பெருவானம்
4. அடிக்கும்+அலை என்பதைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல் _______
- அடிக்குமலை
- அடிக்கும் அலை
- அடிக்கிலை
- அடியலை
விடை : அடிக்குமலை
II. பாடல் வரிகளுக்கு ஏற்ப பொருத்துக
- விடிவெள்ளி – பஞ்சுமெத்தை
- மணல் – ஊஞ்சல்
- புயல் – போர்வை
- பனிமூட்டம் – விளக்கு
விடை:- 1 – ஈ, 2 – அ, 3 – ஆ, 4 – இ
3.3. வளரும் வணிகம்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. வீட்டுப் பயன்பாட்டிற்காகப் பாெருள் வாங்குபவர்_______
- நுகர்வோர்
- தொழிலாளி
- முதலீட்டாளர்
- நெசவாளி
விடை: நுகர்வோர்
2. வணிகம் + சாத்து என்பதைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல் _______
- வணிகசாத்து
- வணிகம்சாத்து
- வணிகச்சாத்து
- வணிகத்துசாத்து
விடை: வணிகச்சாத்து
3. பண்டம் + மாற்று என்பதைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல் _______
- பண்டமாற்று
- பண்டம்மாற்று
- பண்மாற்று
- பண்டுமாற்று
விடை: பண்டமாற்று
4. வண்ணப்படங்கள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______
- வண்ணம்+படங்கள்
- வண்ணப்+படங்கள்
- வண்ண+படங்கள்
- வண்ணமான+படங்கள்
விடை: வண்ணம்+படங்கள்
5. விரிவடைந்த என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______
- விரி + வடைந்த
- விரி + அடைந்த
- விரிவு + அடைந்த
- விரிவ் + அடைந்த
விடை: விரிவு + அடைந்த
II. சொற்களை சொற்றொடரில் அமைத்து எழுதுக
- வணிகம் – மனிதர்கள் தம் தேவைகளை எளிதாக நிறைவேற்ற வணிகம் உதவுகிறது.
- ஏற்றுமதி – ஒரு நாட்டில் தேவைகளுக்கு அதிகமாக உற்பத்தி செய்யப்படும் பொருள்களைப் ஏற்றுமதி செய்யப்படுகின்றன
- சில்லறை – சில்லறை கொள்முதல் செய்வது சிறுவணிகம் ஆகும்
- கப்பல் – ஒட்டகம் பாலைவன கப்பல் என அழைக்கப்படுகிறது.
III. ஆங்கிலச் சொல்லுக்கு இணையாக தமிழ்ச் சொல்லை எடுத்து எழுதுக
(மின்னணு வணிகம், காசோலை, இணையத்தள வணிகம், வரவோலை, வங்கி, மின்னணு மயம், பற்று அட்டை, பணத்தாள், கடன் அட்டை)
ஆங்கிலச் சொல் | தமிழ்ச்சொல் |
|
|
3.5. சுட்டெழுத்துக்கள் வினா, எழுத்துகள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
- என் வீடு _______________ உள்ளது. (அது / அங்கே)
- தம்பி _______________ வா. (இவர் / இங்கே)
- நீர் _______________ தேங்கி இருக்கிறது? (அது / எங்கே)
- யார் _______________ தெரியுமா? (அவர் / யாது)
- உன் வீடு _______________ அமைந்துள்ளது? (எங்கே / என்ன)
II. சொற்றொடர்ப் பயிற்சி
1. அந்த, இந்த என்னும் சுட்டு சொற்களை அமைத்து தொடர்களை எழுதுக
- அந்தப் பெண் நன்றாக பேசுவாள்
- அந்த பையன் நன்றாக விளையாடுவான்
- அந்த நாய் குரைக்கும்
- இந்தப் பாெருள் விலை மதிப்பற்றது
- இந்த பையன் அறிவுடையவன்
- இந்த பெண் அழகானவள்
III. எங்கே. ஏன், யார் என்னும் சுட்டுச் சொற்களை அமைத்து தொடர்களை எழுதுக
- எங்கே நீ வந்தாய்?
- எங்கே நீ போனாய்?
- ஏன் நீ வந்தாய்?
- ஏன் நீ போனாய்?
- யார் உன்னுடன் வந்தார்?
- யார் அவனை போக சொன்னார்?
IV. பின்வரும் கட்டங்களில் உள்ள சொற்களைச் கொண்டு சொற்றொடர்கள் அமைக்க
நான் | ஊருக்கு | சென்றாய் |
நீ | சென்றார் | |
அவன் | சென்றேன் | |
அவள் | சென்றான் | |
அவர் | சென்றாள் |
- நான் ஊருக்கு சென்றேன்
- நீ ஊருக்கு சென்றாய்
- அவள் ஊருக்கு சென்றான்
- அவள் ஊருக்கு சென்றாள்
- அவர் ஊருக்கு சென்றார்
V.சொற்களை சேர்த்து சொற்றொடரை நீட்டி எழுதுக
1. நான் பள்ளியில் படிக்கிறேன் (ஆறாம் வகுப்பு, அரசு)
- நான் பள்ளியில் ஆறாம் வகுப்புப் படிக்கிறேன்
- நான் அரசு பள்ளியில் படிக்கிறேன்
- நான் அரசு பள்ளியில் ஆறாம் வகுப்புப் படிக்கிறேன்
2. பொன்னன் முன்னேறினான் (வணிகம் செய்து, பொருளீட்டி, துணி)
- பொன்னன் வணிகம் செய்து முன்னேறினான்
- பொன்னன் வணிகம் செய்து பொருளீட்டிமுன்னேறினான்
- பொன்னன் துணி வணிகம் செய்து முன்னேறினான்
- பொன்னன் துணி வணிகம் செய்து பொருளீட்டி முன்னேறினான்
VI. அடைப்புக்குள் உள்ள சொல்லை தக்க இடத்தில் சேர்த்து எழுதுங்கள்
1.நீங்கள் வரும்போது எனக்குப் புத்தகம் வாங்கி வாருங்கள் (ஒரு)
நீங்கள் வரும்போது எனக்குப் ஒரு புத்தகம் வாங்கி வாருங்கள்
2. நாம் உரங்கள் தயாரித்து உழவர்களுக்கு வழங்க வேண்டும் (இயற்கை)
நாம் இயற்கை உரங்கள் தயாரித்து உழவர்களுக்கு வழங்க வேண்டும்
3. நான் சொன்ன வேலையை அக்கறையுடன் செய்திருக்கிறார்கள் (மிகுந்த)
நான் சொன்ன வேலையை மிகுந்த அக்கறையுடன் செய்திருக்கிறார்கள்
VII. விடுகதைக்கு விடை காணுங்கள்
(கப்பல், ஏற்றுமதி, இறக்குமதி, தராசு , நெல்மணி , குதிரை)
1.தனிஆளாய் இருந்தால் நடுநிலையாய் இருந்திடுவான் யாரும் வந்து அமர்ந்தால் ஏற்றம் இறக்கம் காட்டிடுவான் அவன் யார்?
தராசு
2. தண்ணீரில் கிடப்பான்; தள்ளாடித் தள்ளாடி நடப்பான்; காலில்லாத அவன் யார்?
கப்பல்
3. பேசமுடியாத ஓட்டப்பந்த வீரனுக்கு வாய்க்கு மட்டும் பூட்டு அவன் யார்?
குதிரை
4. இயந்திரத்தால் செய்ய முடியாத மணி; ஊசி நூலில் கோர்க்க முடியாத மணி; பூமியில் விளையும் மணி; பூவுலகத்தார் விரும்பும் மணி. அது எந்த மணி?
நெல்மணி
5. ஒருமதி வெளியே பாேகும்; ஒருமதி உள்ளே வரும்; இருமதியும் சேர்ந்துவிட்டால் பல நதியும் சேர்ந்து வரும். அவை என்ன?
ஏற்றுமதி, இறக்குமதி
VII. பின்வரும் நவமணிகளை அகர வரிசைப்படுத்தி எழுதுக
நீலம், கோமேதகம், மாணிக்கம், வைரம், பவளம், வைடூரியம், முத்து புஷ்பராகம், மரகதம்
கோமேதகம், நீலம், பவளம், புஷ்பராகம், மரகதம், மாணிக்கம், முத்து, வைடூரியம், வைரம்
VIII. குறுக்கெழுத்து புதிர்
இடமிருந்து வலம்
1. நானிலம் படைத்தவன் பாடலை எழுதியவர் முடியரசன்
2. சுட்டிக்காட்டப் பயன்படுவது சுட்டு எழுத்து
வலமிருந்து இடம்
4. அரேபியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது குதிரை
5. ஒரு பொருளைக் கொடுத்து வேறு பொருளைப் பெறும் முறை பண்டமாற்று
மேலிருந்து கீழ்
1. காடும் காடு சார்ந்த இடமும் முல்லை
3. தோட்டத்தைச் சுற்றி வேலி அமைக்க வேண்டும்
கீழிலிருந்து மேல்
4. மீனவருக்கு மேகம் குடை போன்றது
5. உடலுக்குப் போர்வையாக அமைவது பனிமூட்டம்
Related Links