6th Standard Tamil Book 3rd Term Solution 2022
On this page, we have given the answers to the Tamil book for the Sixth Standard 3rd Term. We hope the questions are given here will be of more use to Matriculation and CBSE students than to Tamil students.
இயல் 1: புதுமைகள் செய்யும் தேசமிது
1.1. பாரதம் அன்றைய நாற்றங்கால்
I. சொல்லும் பொருளும்
- மெய் – உண்மை
- தேசம் – நாடு
II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. “தேசம் உடுத்திய நூலாடை” எனக் கவிஞர் குறிப்பிடும் நூல் ______________________
- திருவாசகம்
- திருக்குறள்
- திரிகடுகம்
- திருப்பாவை
விடை : திருக்குறள்
2. காளிதாசனின் தேனிசைப் பாடல்கள் எதிரொலிக்கும் இடம் ______________________
- காவிரிக்கரை
- வைகைக்கரை
- கங்கைக்கரை
- யமுனைக்கரை
விடை : காவிரிக்கரை
3. கலைக்கூடமாகக் காட்சி தருவது ______________________
- சிற்பக்கூடம்
- ஓவியக்கூடம்
- பள்ளிக்கூடம்
- சிறைக்கூடம்
விடை : சிற்பக்கூடம்
4. “நூலாடை” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது ______________________
- நூல் + ஆடை
- நூலா + டை
- நூல் + லாடை
- நூலா + ஆடை
விடை : நூல் + ஆடை
5. “எதிர் + ஒலிக்க” என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ______________________
- எதிரலிக்க
- எதிர்ஒலிக்க
- எதிரொலிக்க
- எதிர்ரொலிக்க
விடை : எதிர்ரொலிக்க
1.2. தமிழ்நாட்டில் காந்தி
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. காந்தியடிகளிடம் உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர்
- கோவை
- மதுரை
- தாஞ்சாவூர்
- சிதம்பரம்
விடை : மதுரை
2. காந்தியடிகைள் எந்தப் பெரியவரின் அடிநிழலில் இருந்து தமிழ கற்க வேண்டும்
என்று விரும்பினார?
- நாமக்கல் கவிஞர்
- திரு.வி.க.
- உ.வே.சா.
- பாரதியார்
விடை : உ.வே.சா.
II. பொருத்துக
- இலக்கிய மாநாடு – பாரதியார்
- தமிழ்நாட்டுக் கவிஞர் – சென்னை
- குற்றாலம் – ஜி.யு.போப்
- தமிழ்க்கையேடு – அருவி
விடை : 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 – இ
III. சொற்றொடரில் அமைத்து எழுதுக
- ஆலோசனை – அரசருக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கிடுவார்
- பாதுகாக்க – படை வீரர்கள் நாட்டை பாதுகாக்க எல்லையில் போராடி வருகின்றன
- மாற்றம் – பச்சோந்தி தன் இடத்திற்கு ஏற்ப நிற மாற்றம் செய்து கொள்ளும்
- ஆடம்பரம் – ஆரம்பர மனித வாழ்க்கையினை அழிக்க வல்லது
1.4. நால்வகைச் சொற்கள்
I. சொல்வகையை அறிந்து பொருந்தாச் சொல்லை கூறுக
1 | படித்தாள் | ஐ | மற்று | கு |
2 | மதுரை | கால் | சித்திரை | ஆல் |
3 | சென்ற | வந்த | சித்திரை | நடந்த |
4 | மாநாடு | ஐ | உம் | மற்று |
II. வினாக்களுக்கு விடை எழுதுக
1. சுதேசி நாவாய்ச் சங்கத்தை நிறுவியவர் யார்?
வ.உ.சிதம்பரனார்
2. வ.உ.சி. சென்னைக்கு செல்லும்போது யாரைச் சந்திப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்?
பாரதியார்
3. வ.உ.சி. யாருடைய பாடல்களை விரும்பி கேட்பார்?
பாரதியார்
4. வ.உ.சி. அவர்களின் பன்முகத்தன்மைகள் யாவை?
வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர்
5. வ.உ.சி. அவர்கள் புலமை பெற்றிருந்த மொழிகள் யாவை?
தமிழ் மற்றும் ஆங்கிலம்
III. பிழைகளை திருத்தி எழுதுக.
1. ஓரு அழகிய சிற்றூரில் ஓர் குளம் இருந்தது.
ஓர் அழகிய சிற்றூரில் ஒரு குளம் இருந்தது.
2. ஒரு இரவும் ஓர் பகலும் சேர்ந்தது ஒரு நாள்
ஓர் இரவும் ஒரு பகலும் சேர்ந்தது ஒருநாள்.
3. அது இல்லாத இடத்தில் எதுவும் நடக்காது.
அஃது இல்லாத இடத்தில் எதுவும் நடக்காது.
4. அஃது நரகத்திற்குச் செல்லும் சாலை
அது நரகத்திற்குச் செல்லும் சாலை
5. அது ஒரு இனிய பாடல்
அஃது ஒர் இனிய பாடல்
IV. அகர வரிசைப்படுத்துக
பெண்கள், பாரதம், புதுமை, பீலி, பேருந்து, பூமி, பழங்கள், பொதுக்கூட்டம், பையன், போக்குவரத்து, பின்னிரவு
விடை:-
பழங்கள், பாரதம், பின்னிரவு, பீலி, புதுமை, பூமி, பெண்கள், பேருந்து, பையன், பொதுக்கூட்டம், போக்குவரத்து
V. இரண்டு சொற்களை இணைத்துப் புதிய சொற்கைள உருவாக்குக.
எனக்கு | உண்டு
இல்லை |
எனக்குண்டு | எனக்கில்லை |
வடக்கு | வடக்குண்டு | வடக்கில்லை | |
பந்து | பந்துண்டு | பந்தில்லை | |
பாட்டு | பாட்டுண்டு | பாட்டில்லை |
VI. கட்டங்களில் உள்ள சொற்களைக் கொண்டு தொடர்கள் உருவாக்குக
பாரி | வீட்டுக்கு | வந்தன |
எழிலி | வந்தான் | |
மாணவர்கள் | வந்தது | |
மாடு | வந்தார்கள் | |
மாடுகள் | வந்தாள் |
விடை
- பாரி வீட்டுக்கு வந்தான்
- எழிலி வீட்டுக்கு வந்தாள்
- மாணவர்கள் வீட்டுக்கு வந்தார்கள்
- மாடு வீட்டுக்கு வந்தது
- மாடுகள் வீட்டுக்கு வந்தன
VII. கட்டங்களில் மறைந்துள்ள நால்வகைச் சொற்களை எழுதுக
பெயர்ச்சொல் :-
குமரன். கரம், மாடு, பேருந்து, சிவன், தாய், வண்டி, செறு, பண், பசி, நகரம்
வினைச்சொல் :-
நடக்கிறாள், செய்தான்
இடைச்சொல் :-
கு, ஐ, உம், மற்று, தான்
உரிச்சொல் :-
உறு, மாநகரம்
VIII. கலைச்சொல் அறிவோம்
- நாட்டுப்பற்று – Patriotism
- கலைக்கூடம் – Art Gallery
- இலக்கியம் – Literature
- மெய்யுணர்வு – Knowledge of Reality
இயல் 2: எல்லாரும் இன்புற
2.1. பராபரக் கண்ணி
I. சொல்லும் பாெருளும்
- தண்டருள் – குளிரந்த கருணை
- கூர் – மிகுதி
- செம்மையருக்கு – சான்றோருக்கு
- ஏவல் – தாெண்டு
- பராபரமே – மேலான பொருள்
- பணி – தாெண்டு
- எய்தும் – கிடைக்கும்
- எல்லாரும் – எல்லா மக்களும்
- அல்லாமல் – அதைத்தவிர
II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. தம் + உயிர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ______________
- தம்முயிர்
- தமதுயிர்
- தம்உயிர்
- தம்முஉயிர்
விடை : தம்முயிர்
2. இன்புற்று + இருக்கை என்பதனைச் சேர்த்து எழுதக் கி்டைக்கும் சொல் ______________-
- இன்புற்றிருக்கை
- இன்புறுறிருக்கை
- இன்புற்றுஇருக்கை
- இன்புறுஇருக்கை
விடை : இன்புற்றிருக்கை
3. தானென்று என்பதனைச் பிரித்து எழுதக் கி்டைக்கும் சொல் ______________
- தானெ + என்று
- தான் + என்று
- தா + னென்று
- தான் + னென்று
விடை : தான் + என்று
4. சோம்பல் என்னும் சொல்லுக்குரிய பொருத்தமான எதிர்ச்சொல் ______________
- அழிவு
- துன்பம்
- சுறுசுறுப்பு
- சோகம்
விடை : சுறுசுறுப்பு
2.2. நீங்கள் நல்லவர்
I. சொல்லும் பாெருளும்
- சுயம் – தனித்தன்மை
- உள்ளீடுகள் – உள்ளே இருப்பவை
II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. பரிசு பெறும்போது நம் மனநிலை ……………… ஆக இருக்கும்
- கவலை
- துன்பம்
- மகிழ்ச்சி
- சோர்வு
விடை : மகிழ்ச்சி
2. வாழ்வில் உயர கடினமாக ……………… வேண்டும்.
- பேச
- சிரிக்க
- நடக்க
- உழைக்க
விடை : உழைக்க
2.3. பசிப்பிணி போக்கிய பாவை
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. மணிமேகலா தெய்வம் மணிமேகலையை அழைத்துச் சென்ற தீவு …………………
- இலங்கைத்தீவு
- இலட்சத்தீவு
- மணிபல்லவத்தீவு
- மாலத்தீவு
விடை : சுறுசுறுப்பு
2. மணிமேகலை கையில் இருந்த அமுதசுரபியில் உணவு இட்ட பெண்
- சித்திரை
- ஆதிரை
- காயசண்டிகை
- தீவதிலகை
விடை : சுறுசுறுப்பு
II. சாெற்றொடரில் அமைத்து எழுதுக.
- செடிகொடிகள் – எங்கள் தோட்டத்தில் செடிகொடிகள் வளர்ந்திருந்தன
- முழுநிலவு நாள் – பெளர்ணமி என்பது முழுநிலவு நாள்
- அமுதசுரபி – மணிமேகலை கையிலிருந்த ஓர் அட்சயபாத்திரம் அமுதசுரபி
- நல்லறம் – மணிமேகலை நல்லறம் போற்றியவள்
2.4. பெயர்ச்சொல்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. இடுகுறிப்பெயரை வட்டமிடுக
- பறவை
- மண்
- முக்காலி
- மரங்கொத்தி
விடை : மண்
2. காரணப்பெயரை வட்டமிடுக
- மரம்
- வளையல்
- சுவர்
- யானை
விடை : வளையல்
3. இடுகுறிசிறப்புப்பெயரை வட்டமிடுக
- வயல்
- வாழை
- மீன்கொத்தி
- பறவை
விடை : வாழை
II. அகராதியை பயன்படுத்தி பொருள் எழுதுக
- கருணை – உயர்களிடத்தில் கொள்ளும் ஒருவகை பரிவு உணர்வு
- அச்சம் – பயம், மனதில் ஏற்படும் ஓர் உணர்வு, தைரியத்தை இழக்கும் நிலைமை
- ஆசை – வேண்டும் பொருள் மீது செல்லும் விருப்பம்
III. கீழ்காணும் பெயர்ச்சாெற்களை அகரவரிசையில் எழுதுக.
பூனை, தையல், தேனி, ஓணான், மான், வௌவால், கிளி, மாணவன், மனிதன், ஆசிரியர், பழம்
விடை :
ஆசிரியர், ஓணான், கிளி, தேனி, தையல், பழம், பூனை, மனிதன், மாணவன், மான், வெளவால்
IV. பின்வரும் வாக்கியங்களில் உள்ள அறுவகைப் பெயர்களை எடுத்து எழுதுகை.
1. கைகள் இரண்டும் பிறர்க்கு உதவவே எனச் சான்றோர்கள் கருதினர்
சினைப்பெயர் | பண்புப்பெயர் | தொழிற்பெயர் |
கைகள் | இரண்டுமே, சான்றோர் | உதவவே, கருதினர் |
2. அறம், பொருள், இன்பம், வீடு அடைதல் நூலின் பயனாகும்.
பொருட்பெயர் | தொழிற்பெயர் |
அறம், பொருள், இன்பம், வீடு, நூல் | அடைதல் |
3. அறிஞர்களுக்கு அழகு கற்றுணரந்து அடங்கல்.
பொருட்பெயர் | பண்புப்பெயர் | தொழிற்பெயர் |
அறிஞர் | அழகு | கற்றுணர்ந்து, அடங்கல் |
4. நீதிநூல் பயில் என்கிறார் பாரதியார்.
பொருட்பெயர் | தொழிற்பெயர் |
நீதிநூல், பாரதியார் | பயில் |
5. மாலை முழுவதும் விளையாட்டு.
காலப்பெயர் | தொழிற்பெயர் |
மாலை | விளையாட்டு |
6. அன்பு நிறைய உடையவர்கள் மேலாேர்
பண்புப்பெயர் | பொருட்பெயர் |
அன்பு, மேலாேர் | உடையவர்கள் |
V. பின்வரும் பாடலைப் படித்து, அடிக்கோடிட்ட சாெல் எவ்வகைப் பெயர் என்பதை எழுதுக.
- விடியலில் துயில் எழுந்தவன் – காலப்பெயர்
- இறைவனைக் கை தாெழுதேன் – சினைப்பெயர்
- புகழ்பூத்த மதுரைக்குச் சென்றேன் – இடப்பெயர்
- புத்தகம் வாங்கி வந்தேன் – பொருட்பெயர்
- கற்றலைத் தாெடர்வாேம் இனி – தொழிற்பெயர்
- நன்மைகள் பெருகும் நனி – பண்புப்பெயர்
VI. கட்டங்களில் உள்ள வார்த்தைகளைக் கொண்டு தொடர்களை அமைக்க
வெல்லும் | கேளிர் | தீதும் |
வாரா | நன்றும் | யாவரும் |
யாதும் ஊரே | பிறர்தர | வாய்மையே |
- வாய்மையே வெல்லும்
- யாதும் ஊரே யாவரும் கேளிர்
- தீதும் நன்றும் பிறர்தர வாரா
VII. சொற்றொடரை முறையாக வரிசைப்படுத்துங்கள்
- சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாக மாற்றுமாறு மன்னனிடம் வேண்டினாள்
- மணிமேகலை மணிபல்லவத் தீவிற்குச் சென்றாள்
- சிறைச்சாலைக்குச் சென்று உணவிட்டாள்
- அமுதசுரபியைப் பெற்றாள்
- ஆதிரையிடம் சென்று முதல் உணவைப் பெற்றாள்
விடை :-
- மணிமேகலை மணிபல்லவத் தீவிற்குச் சென்றாள்
- அமுதசுரபியைப் பெற்றாள்
- ஆதிரையிடம் சென்று முதல் உணவைப் பெற்றாள்
- சிறைச்சாலைக்குச் சென்று உணவிட்டாள்
- சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாக மாற்றுமாறு மன்னனிடம் வேண்டினாள்
VIII. ஒலி வேறுபாடறிந்து வாக்கியத்தில் அமைத்து எழுதுக
அரம் – அறம்
- அரம் – மரத்தை அறுக்க அரம் பயன்பட்டது
- அறம் – உதவி என்று வருபவருக்கு அறம் செய்ய வேண்டும்
மனம் – மணம்
- மனம் – என் தவறினை எண்ணி மனம் நொந்துவிட்டேன்
- மணம் – என் தோட்டத்தில பூக்களின் மணம் வீசியது
IX. இருபொருள் தருக
1. ஆறு -நதி
ஆறு – எண்
2. திங்கள் – சந்திரன்
திங்கள் – வாரத்தின் இரண்டாம் நாள்
3. ஓடு – வீட்டின் மேற்கூரை அமைக்க பயன்படுவது
ஓடு – வேகமாக ஓடுதல்
4. நகை – சிரிப்பு
நகை – அணிகலன் (வளையல்)
X. புதிர்ச்சொல் கண்டுபிடி
இச்சொல் மூன்றெழுத்துச் சொல். உயிர் எழுத்துக்கள் வரிசையில் முதல் எழுத்து இச்சொல்லின் முதல் எழுத்து. வல்லின மெய் எழுத்துகளின் வரிசையில் கடைசி எழுத்து இச்சொல்லின் இரண்டாம் எழுத்து. வாசனை என்னும் பொருள் தரும் வேறு சொல்லின் கடைசி எழுத்து இச்சொலின் மூன்றாம் எழுத்து. அஃது என்ன?
விடை – அறம்
XI. கட்டத்தில் உள்ள சொற்களை கொண்டு தொடர்கள் உருவாக்கும்
மாலையில்
பிறருக்கு உதவி பெரியோரை நூல் பல உடற்பயிற்சி அதிகாலையில் |
கற்போம்
எழுவோம் விளையாடுவோம் செய்வோம் புரிவோம் வணங்குவோம் |
- மாலையில் விளையாடுவோம்
- பிறருக்கு உதவி புரிவோம்
- பெரியோரை வணங்குவோம்
- நூல் பல கற்போம்
- உடற்பயிற்சி செய்வோம்
- அதிகாலையில் எழுவோம்
XII. கலைச்சாெல் அறிவாேம்
- அறக்கட்டளை – Trust
- தன்னார்வலர் – Volunteer
- இளம் செஞ்சிலுவைச் சங்கம் – Junior Red Cross
- சாரண சாரணியர் – Scouts & Guides
- சமூகப்பணியாளர் – Social Worker
2.5. திருக்குறள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. ஏழைகளுக்கு உதவி செய்வதே ………………… ஆகும்.
- பகை
- ஈகை
- வறுமை
- கொடுமை
விடை : ஈகை
2. பிற உயிர்களின் …………………….க் கண்டு வருந்துவேத அறிவின் பயனாகும்.
- மகிழ்வ
- செல்வத்தை
- துன்பத்தை
- பகையை
விடை : துன்பத்தை
3. உள்ளத்தில் ………………… இல்லாமல் இருப்பதே சிறந்த அறமாகும்.
- மகிழ்ச்சி
- மன்னிப்பு
- துணிவு
- குற்றம்
விடை : குற்றம்
II. இடம் மாறியுள்ள சீர்களை முறைப்படுத்தி எழுதுக.
1.வறியார்க்கொன்று ஈகைமற்று ஈவதே எல்லாம்
குறியெதிரப்பை உடைத்து நீரது
விடை :
வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற்று எல்லாம்
குறியெதிரப்பை நீரது உடைத்து
2. எனைத்தானும் யார்க்கும் எஞ்ஞான்றும் மனத்தானாம்
மானாசெய் தலை யாமை
விடை :
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மானாசெய் யாமை தலை
இயல் 3: இன்னுயிர் காப்பாேம்
3.1. ஆசியஜோதி
I. சொல்லும் பொருளும்
- அஞ்சினார் – பயந்தனர்
- கருணை – இரக்கம்
- வீழும் – விழும்
- ஆகாது – முடியாது
- பார் – உலகம்
- நீள்நிலம் – பரந்த உலகம்
- முற்றும் – முழுவதும்
- மாரி – மழை
- கும்பி – வயிறு
- பூதலம் – பூமி
II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. புத்தரின் வரலாற்றை கூறும் நூல்
- ஜீவஜோதி
- ஆசியஜோதி
- நவஜோதி
- ஜீவன்ஜோதி
விடை : ஆசியஜோதி
2. நேர்மையான வாழ்வு வாழ்பவர்
- எல்லா உயிர்களி்டத்தும் இரக்கம் கொண்டவர்
- உயிர்களைத் துன்புறுத்துவர்
- தம்மை மட்டும் காத்துக்கொள்பவர்
- தம் குடும்பத்தையே எண்ணி வாழ்பவர்
விடை : எல்லா உயிர்களி்டத்தும் இரக்கம் கொண்டவர்
3. ஒருவர் செய்யக் கூ்டாதது
- நல்வினை
- தீவினை
- பிறவினை
- தன்வினை
விடை : தீவினை
4. எளிதாகும் என்பதனைச் பிரித்து எழுதக் கி்டைப்பது
- எளிது + தாகும்
- எளி + தாகும்
- எளிது + ஆகும்
- எளிதா + ஆகும்
விடை : எளிது + ஆகும்
5. பாலையெல்லாம் என்பதனைச் பிரித்து எழுதக் கி்டைப்பது
- பாலை+யெல்லாம்
- பாலை+எல்லாம்
- பாலை+எலாம்
- பா+எல்லாம்
விடை : பாலை+எல்லாம்
6. இனிமை + உயிர் என்பதனைச் சேர்த்து எழுதக் கி்டைக்கும் சொல்
- இன்உயிர்
- இனியஉயிர்
- இன்னுயிர்
- இனிமைஉயிர்
விடை : இன்னுயிர்
7. மலை + எலாம் என்பதனைச் சேர்த்து எழுதக் கி்டைக்கும் சொல்
- மலைஎலாம்
- மலையெலாம்
- மலையெல்லாம்
- மலைஎல்லாம்
விடை : மலையெலாம்
3.2. மனிதநேயம்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துதல்
- மனித வாழ்க்கை
- மனித உரிமை
- மனிதநேயம்
- மனித உடைமை
விடை : மனிதநேயம்
2. தம் பொருளை கவர்ந்தவரிடமும் _______________ காட்டியவர் வள்ளலார்.
- கோபம்
- வெறுப்பு
- கவலை
- அன்பு
விடை : மலையெலாம்
3. அன்னை தெராசாவிற்கு _______________ க்கான ‘நோபல் பரிசு கிடைத்தது
- பொருளாதாரம்
- இயற்பியல்
- மருத்துவம்
- அமைதி
விடை : அமைதி
4. கைலாஷ் சத்யார்த்தி தொடங்கிய இயக்கம்
- குழந்தைகளை பாதுகாப்போம்
- குழந்தைகளை நேசிப்போம்
- குழந்தைகள் உதவி மையம்
- குழந்தைகளை வளர்ப்போம்
விடை : குழந்தைகளை பாதுகாப்போம்
II. பொருத்துக
- வள்ளலார் – நோயாளிகளி்டம் அன்பு காட்டியவர்
- கைலாஷ் சத்யார்த்தி – பசிப்பிணி போக்கியவர்
- அன்னை தெராசா – குழந்தைகள் உரிமைக்குப் பாடுபட்டவர்
விடை : 1 – ஆ, 2 – இ, 3 – அ
III. சொற்றொடரில் அமைத்து எழுதுக
- மனிதநேயம் – அனைவரிடம் மனிதமாண்பு மலர வைப்பதே மனிதநேயம்
- உரிமை – சுதந்திரம் அனைவருக்கும் பிறப்பு உரிமை
- அமைதி – அன்னை தெராசாவிற்கு அமைதிக்கான ‘நோபல் பரிசு கிடைத்தது
- அன்பு செய்தல் – வள்ளலார் தம் பொருளை கவர்ந்தவரிடமும் அன்பு செய்தல் வேண்டும் என நினைத்தார்
3.4. அணி இலக்கணம்
I. அகரவரிசைப்படுத்துக.
ஒழுக்கம், உயிரி, ஆடு, எளிமை, அன்பு, இரக்கம், ஓசை, ஐந்து, ஈதல், ஊக்கம், ஏது, ஓளவை
விடை :
அன்பு, ஆடு, இரக்கம், ஈதல், உயிரி, ஊக்கம், எளிமை, ஐந்து, ஏது, ஐந்து, ஒழுக்கம், ஓசை, ஓளவை
II. வினாக்களுக்கு விடையளிக்க
1. அமைதி என்றவுடன் உங்கள் மனதில் தோன்றுவது என்ன?
அசாதாரண நிலையில் சாதரணத்தை தேடுவது
2. இக்கதையில் அமைதி எங்கு இருப்பதாக தோன்றுவது என்ன?
பிரச்சனையும் போராட்டமும் ஆரவாரமும் இல்லாத இடத்தில் இருப்பத அமைதி அன்று. இவை எல்லாம் இருக்கும் இடத்தில் இருந்தும், எதற்கும் கலங்காமலும், தன்னை எதுவும் பாதிக்க விடாமலும் உள்ளுக்குள் அமைதியாக இருப்பது உண்மையான அமைதி
3. நீங்கள் இந்த ஓவியப் போட்டியில் பங்கு பெற்று இருந்தால் என்ன ஓவியம் வரைந்து இருப்பீர்கள்?
போர்களத்தில் போர்களின் மத்தியில் ஒரு குழந்தை உறங்கிக் கொண்டிருப்பது போல் வரைந்திருப்பேன்
4. இக்கதைக்குப் பொருத்தமான தலைப்பு ஒன்று தருக?
அமைதி தேடும் மனங்கள்
III. கட்டங்களில் உள்ள சொற்களைக் கொண்டு தொடர்கள் உருவாக்குக
நேற்று | எங்கள் ஊரில் மழை | பெய்கிறது |
இன்று | பெய்யும் | |
நாளை | பெய்தது |
நேற்று எங்கள் ஊரில் மழை பெய்தது
இன்று எங்கள் ஊரில் மழை பெய்கிறது
நாளை எங்கள் ஊரில் மழை பெய்யும்
இது போன்று மூன்று காலங்களையும் காட்டும் சொற்றொடர்களை அமைக்க
1. நேற்று நான் ஊருக்கு போனேன்
இன்று நான் ஊருக்கு போகிறேன்
நாளை நான் ஊருக்கு போவேன்
2. நேற்று வயலில் ஆடு மேய்ந்தது
இன்று வயலில் ஆடு மேய்கிறது
நாளை வயலில் ஆடு மேயும்
3. நேற்று என் அப்பா வந்தார்
இன்று என் அப்பா வருகிறார்
நாளை என் அப்பா வருவார்
IV. கட்டங்களில் மறைந்துள் அணிகல்களின் பெயர்களை எழுதுக
க | ணி | மாே | பு | வ |
ம் | ம | தி | ம் | ளை |
ம | ளா | ர | ல | ய |
ல் | சூ | ம் | சி | ல் |
க | டு | க் | க | ன் |
கம்மல். சூளாமணி. மோதிரம், சிலம்பு, வளையல், கடுக்கன்
V. கலைச்சாெல் அறிவாேம்
- மனிதநேயம் – Humanity
- கருணை – Mercy
- உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை – Transplantation
- நாேபல் பரிசு – Nobel Prize
- சரக்குந்து – Lorry