6th Standard Social Science Term-1 Solution
Hello students, here you can see the solution of 6th Standard Social Science Term-1. Ie., Here we listed 6th Standard Social Science Term 1 book back questions.
Particularly we covered one mark question. Because these questions are asked not only school exam, it will come on competitive exams like TNPSC, TET and etc…
You can download Tamil Medium 6th std social science book pdf from this link – Click Here
Table of Content
I. வரலாறு
II. புவியியல் III. குடிமையியல் |
பகுதி 1: வரலாறு
1. வரலாறு என்றால் என்ன?
சரியான விடையைத் தேர்ந்தெடு
1. பழங்கால மனிதன் தனது உணவைச் சேரிக்க மேற்கொண்ட நடவடிக்கை
- வணிகம்
- வேட்டையாடுதல்
- ஓவியம் வரைதல்
- விலங்குககள் வளர்த்தல்
விடை : வேட்டையாடுதல்
கூற்றையும் காரணத்தையும் பொருத்துக.
1 கூற்று : பழைய கற்கால மனிதர்கள் வேட்டையாடச் செல்லும்போது நாய்களை உடன் அழைத்துச் சென்றனர்.
காரணம் : குகைகளில் பழைய கற்கால மனிதன் தங்கியிருந்தபோது, விலங்குகள் வருவதை நாய்கள் தமது மோப்ப சக்தியினால் அறிந்து அவனுக்கு உணர்த்தும்.
- கூற்று சரி , காரணம் தவறு
- கூற்று சரி , கூற்றுக்கான காரணமும் சரி
- கூற்ற்று தவறு , காரணம் சரி
விடை : கூற்று சரி , கூற்றுக்கான காரணமும் சரி
2. பண்டைய காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் பயன்படுத்திய பொருட்கள் அகழாய்வுகள் மூலமாக தோண்டியெடுக்கப்பட்டுள்ளன. அப்பொருட்கள் அக்கால மக்களின் வாழ்க்கை முறை பற்றி அறிந்து கொள்ளப் பாதுகாக்கப்படுகின்றன. இக்கூற்றுடன் தொடர்புடையது எது?
- அருங்காட்சியகங்கள்
- புதைபொருள்படிமங்கள்
- கற்கருவிகள்
- எலும்புகள்
விடை : அருங்காட்சியகங்கள்
தவறான வாக்கிய இணையைக் கண்டுபிடி
- பழைய கற்காலம் – கற்கருவிகள்
- பாறை ஓவியங்கள் – குகைச் சுவர்கள்
- செப்புத்தகடுகள் – ஒரு வரலாற்று ஆதாரம்
- பூனைகள் – முதலில் பழக்கப்படுத்தப்பட்ட விலங்கு
விடை : பூனைகள் – முதலில் பழக்கப்படுத்தப்பட்ட விலங்கு
தவறான வாக்கிய இணையைக் கண்டுபிடி
- பாறைகள் மற்றும் குகைகளில் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன.
- வேட்டையாடுதல் குறிப்பதாக ஓவியங்கள் இருந்தன.
- பழங்கால மனிதன் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு வேட்டையாடுதல் எடுத்துரைப்பதற்காக வரைந்திருக்கலாம்.
- பல வண்ணங்களில் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன
விடை : பல வண்ணங்களில் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன
கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. பழைய கற்கால மனிதன் பெரும்பாலும் வாழ்ந்த இடங்கள் __________
விடை : குகைகள்
2. வரலாற்றின் தந்தை __________
விடை : ஹெரோடோஸ்
3. பழைய கற்கால மனிதன் பழக்கிய முதல் விலங்கு _______
விடை : நாய்
4. கல்வெட்டுகள் ___________ ஆதாரங்கள் ஆகும்.
விடை : தொல்பொருள்
5. அசோகச் சக்கரத்தில் ______ ஆரக்கால்கள் உள்ளன.
விடை : 24
சரியா? தவறா?
1. பழைய கற்காலத்தைச் சார்ந்த கற்கருவிகள் சென்னைக்கு அருகில் உள்ள அத்திரம்பாக்கத்தில் கிடைத்துள்ளன.
விடை : சரி
2. பழங்கால மனிதர்கள் பயன்படுத்திய பொருட்கள் தொல்லியல் துறையினரால் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்றன
விடை : சரி
3. அசோகரது காலத்தில் புத்த சமயம் நாடு முழுவதும் பரவியது
விடை : சரி
பொருத்துக.
1. பாறை | அ. செப்புத்தகடுகள் ஓவியங்கள் |
2. எழுதப்பட்ட பதிவுகள் | ஆ. மிகவும் புகழ்பெற்ற அரசர் பதிவுகள் |
3. அசோகர் | இ. தேவாரம் |
4. மத சார்புள்ள இலக்கியம் | ஈ. வாழ்க்கை முறையைப் புரிந்து கொள்வதற்கு உதவுகிறது |
விடை:- 1 – ஈ, 2 அ, 3 – ஆ, 4 – இ |
கட்டக வினாக்கள்
அன்று மனிதர்கள் என் மீது கிறுக்கினார்கள்; வண்ண மை கொண்டு ஓவியம் வரைந்தனர். இன்று என்னை உடைத்து வீடுகள், சாலைகள் அமைக்கின்றனர். நான் யார்?
விடை: பாறைகள் |
ஏதேனும் இரு தொல்பொருள் ஆதாரங்களை கூறு.
விடை : நாணயங்கள், கல்வெட்டுகள் |
இலக்கியச் சான்றுகளின் வகைகளைக் கூறு.
விடை : சமயம் சார்ந்த , சமயம் சாரா, இலக்கியங்கள். |
பாெ.ஆ.மு – இதன் விரிவாக்கம் என்ன?
விடை: பாெது ஆண்டுக்கு முன் |
‘இஸ்டாேரியா’ என்னும் கிரேக்கச் சாெல்லுக்கு என்ன பாெருள்?
விடை: விசாரித்துக் கற்றல் |
பாெ.ஆ – இதன் விரிவாக்கம் என்ன?
விடை: பாெது ஆண்டுக்கு |
கல்வெட்டுக்கு குறிப்புகளை ஆராயும் துறை?
விடை : கல்வெட்டியல் |
நாணயங்களை ஆராயும் முறை?
விடை: நாணயவியல் |
நீங்கள் பேச, பார்க்க, கேட்க, எழுத, படிக்க உதவுபவன். நானின்றி இவ்வுலகம் இல்லை. நான் யார்?
விடை: ஆசிரியர் |
2. மனிதர்களின் பரிணாம வளர்ச்சி
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1 . பரிணாமத்தின் வழிமுறை __________________________ .
- நேரடியானது
- மறைமுகமானது
- படிப்படியான
- விரைவானது
விடை : நேரடியானது
2. தான்சானியா _________________ கண்டத்தில் உள்ளது.
- ஆசியா
- ஆப்பிரிக்கா
- அமெரிக்கா
- ஐரோப்பா
விடை : ஆப்பிரிக்கா
கூற்றையும் காரணத்தையும் பொருத்துக.
1. கூற்று :- உலகின் வெவ்வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்த மனிதர்களின் உடலமைப்பிலும் நிறத்திலும் காலப்போக்கில் மாற்றங்கள் ஏற்பட்டன.
காரணம் :- தட்பவெப்பநிலை மாற்றமே
- கூற்று சரி
- கூற்றுக்குப் பொருத்தமான காரணம் தரப்பட்டுள்ளது
- கூற்றும் காரணமும் சரி. ஆனால் பொருத்தமான காரணம் அல்ல.
- கூற்றும் காரணமும் தவறானவை.
விடை : கூற்றும் காரணமும் சரி. ஆனால் பொருத்தமான காரணம் அல்ல.
தவறான இணையைக் கண்டுபிடி.
- ஆஸ்ட்ரலோபிதிகஸ் – இரு கால்களால் நடப்பது
- ஹேமோ ஹபிலிஸ் – நிமிர்ந்து நின்ற மனிதன்
- ஹேமே எரல்டஸ் – சிந்திக்கும் மனிதன்
- ஹேமோ சேப்பியன்ஸ் – முகத்தின் முன்பக்க நீட்சி குறைந்து காணப்படுவது.
விடை: ஆ, இ, ஈ
கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. தான்சானியாவில் காணப்பட்ட தொடக்ககால மனிதர்களின் காலடித்தடங்களை _________ உலகின் பார்வைக்குக் கொண்டு வந்தார்கள்.
விடை: மானிடயியலாளர்கள்
2. பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால், நம் முன்னோர்கள் _________ வாழ்க்கை வாழ்ந்தார்கள்.
விடை: நாடோடி
3. பழங்கால மனிதர்களின் முதன்மையான தொழில்கள் _________ ஆகும்.
விடை: வேட்டையாடுதல் மற்றும் உணவு சேகரித்தல்
4. _________ கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வு விவசாயத்தை எளிதாக்கியது.
விடை: (ஏர்) கலப்பை
5. பாறை ஓவியங்கள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள _________ என்னுமிடத்தில் காணப்படுகின்றன.
விடை: பொரிவரை – கரிக்கையூர்
6. _________ கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வு பானை செய்வதை எளிதாக்கியது.
விடை: சக்கரம்
7. _________ தொல்லியல் துறையுடன் தொடர்புடையது.
விடை: மானிடவியல்
8. நகரங்களும் பெரு நகரங்களும் _________ ஆகியவற்றால் தோன்றின.
விடை: வர்த்தகம் மற்றும் வணிகம்
சரியா, தவறா?
1. நாணயங்களை ஆராய்வதற்கான துறை மானுடவியல் ஆகும்.
விடை : தவறு
2. ஹோமோ எரக்டஸ் மனிதர்களுக்கு நெருப்பு குறித்த அறிவு இருந்தது.
விடை : சரி
3. மனிதர்களின் முதல் அறிவியல் கண்டுபிடிப்பு சக்கரம் ஆகும்.
விடை : சரி
4. மனிதர்களால் பழக்கப்படுத்தப்பட்ட முதல் விலங்கு ஆடு.
விடை : சரி
3. சிந்து சமவெளி நாகரிகம்
சரியான விடையைத் தேர்ந்தெடு
1. சிந்து சமவெளி மக்கள் எந்த உலோகங்களைப் பற்றி அறிந்திருந்தனர் _________________
- செம்பு, வெண்கலம், வெள்ளி, தங்கம்
- செம்பு, வெள்ளி, இரும்பு, வெண்கலம்
- தங்கம், இரும்பு, வெள்ளி
- செம்பு,, வெள்ளி, இரும்பு, தங்கம்
விடை: செம்பு, வெண்கலம், வெள்ளி, தங்கம்
2. சிந்து சமவெளி நாகரிகம் எக்காலத்தைச் சார்ந்தது.
- பழைய கற்காலம்
- இடைக்கற்காலம்
- புதிய கற்காலம்
- உலோக காலம்
விடை: உலோக காலம்
3. ஆற்றங்கரைகள் ‘நாகரிகத் தொட்டில்கள்’ என அழைக்கப்படக் காரணம்
- மண் மிகவும் வளமானதால்
- சீரான கால நிலை நிலவுவதால்
- போக்குவரத்திற்குப் பயனுள்ளதாக இருப்பதால்
- பெரும்பாலான நாகரிகங்கள் ஆற்றின் கரைகளில் தோன்றியதால்
விடை: பெரும்பாலான நாகரிகங்கள் ஆற்றின் கரைகளில் தோன்றியதால்
கூற்றையும் காரணத்தையும் பொருத்துக.
1. கூற்று :- ஹரப்பா நாகரிகம் ஒரு நகர நாகரிகம் எனலாம்.
காரணம் :- திட்டமிடப்பட்ட நகர அமைப்பு மேம்பட்ட கழிவு நீர் அமைப்பு
- கூற்றும் காரணமும் சரி.
- கூற்று தவறு, காரணம் சரி.
- கூற்று சரி, காரணம் தவறு
- கூற்றும் காரணமும் தவறு.
விடை: கூற்றும் காரணமும் சரி.
2. கூற்று :- ஹரப்பா நாகரிகம் வெண்கல காலத்தைச் சார்ந்தது.
காரணம் :- ஹரப்பா மக்களுக்கு இரும்பின் பயன் தெரியாது.
- கூற்று தவறானது. காரணம் சரி.
- கூற்றும் காரணமும் சரி.
- கூற்று சரியானது. ஆனால் அதற்கான காரணம் தவறானது.
- கூற்றும் மற்றும் காரணம் தவறானவை.
விடை: கூற்று சரியானது. ஆனால் அதற்கான காரணம் தவறானது.
3. கூற்று :- ஹரப்பா மக்களின் பொறியியல் திறன் குறிப்பிடத்தக்கது.
காரணம் :- கடலின் அலைகள், ஓதங்கள் நீரோட்டத்தைக் கணித்த கப்பல் கட்டும் தளத்தைக் கட்டியிருப்பது.
- கூற்றும் காரணமும் சரி.
- கூற்று தவறானது. காரணம் சரி.
- கூற்று சரியானது. ஆனால் அதற்கான காரணம் தவறானது.
- கூற்றும் மற்றும் காரணம் தவறானவை.
விடை: கூற்றும் காரணமும் சரி.
4. கீழே கூறப்பட்டுள்ள மொஹஞ்ச-தாரோவை பற்றி கூற்றுகளில் எவை சரியானவை?
- தங்க ஆபரணங்கள் பற்றித் தெரியவில்லை
- வீடுகள் கட்ட செங்கற்களால் கட்டப்பட்டன.
- கருவிகள் இரும்பினால் செய்யப்பட்டன.
- பெருங்குளம் நீர் கசியாமல் இருப்பதற்காக பல அடுக்குகளால் இயற்கை தார் கொண்டு பூசப்பட்டன.
விடை: வீடுகள் கட்ட செங்கற்களால் கட்டப்பட்டன.
கீழ்க்காணும் கூற்றை ஆராய்க.
1. நகரங்கள், தெருக்களின் வடிவமைப்பு மற்றும் செங்கல் அளவுகள் ஆகியவற்றின் சீரான தன்மை
2. ஒரு விரிவான மற்றும் நன்கு வடிவமைக்கப்பட்ட வடிகால் அமைப்பு.
3. தானியக் களஞ்சியம் ஹரப்பா நகரங்களில் முக்கியமான பகுதியாக விளங்கியது.
மேலே கூறப்பட்ட கூற்றுகளில் எது/எவை சரியானவை?
- அ & ஆ
- அ & இ
- ஆ & இ
- அனைத்தும் சரி
விடை : அனைத்தும் சரி
பொருந்தாததை வட்டமிடுக.
காளைகள், ஆடுகள், எருதுகள், பன்றிகள், குதிரைகள்.
விடை : குதிரைகள்
தவறான இணையைத் தேர்ந்தெடு
- ASI – ஜான் மார்ஷல்
- கோட்டை – தானியக் களஞ்சியம்
- லோத்தல் – கப்பல் கட்டும் தளம்
- ஹரப்பா நாகரிகம் – காவிரி ஆறு
விடை : ஹரப்பா நாகரிகம் – காவிரி ஆறு
கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. ___________ மிகப் பழமையான நாகரிகம்.
விடை : (சுமேரிய) மெசபொட்டாமிய நாகரிகம்
2. இந்தியாவின் தொல்லியல் ஆய்வுத் துறை ____________ என்ற நில அளவையாளர் உதவியுடன் தொடங்கப்பட்டது.
விடை : அலெக்சாண்டர் கன்னிங்ஹாம்
3. _________ தானியங்கள் சேகரித்து வைக்கப் பயன்பட்டது.
விடை : தானியக்களஞ்சியங்கள்
4. மக்கள் குழுக்களாகச் சேர்ந்து _________ உருவாக்குகிறார்கள்.
விடை : சமூகத்தை (Communities)
சரியா? தவறா?
1. மொஹர்கர் புதிய கற்காலம் மக்கள் வாழ்ந்த ஓர் இடமாகும்.
விடை : சரி
2. இந்தியாவின் தொல்பொருள் ஆய்வியல் துறை தொல்பொருள் ஆராய்ச்சிக்கும், நாட்டின் கலாச்சார நினைவுச் சின்னங்களின் பாதுகாப்பிற்கும் பொறுப்பானது.
விடை : சரி
3. தானியக் களஞ்சியம் தானியங்களைச் சேகரித்து வைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டது.
விடை : சரி
4. முதல் எழுத்துவடிவம் சீனர்களால் உருவாக்கப்பட்டது.
விடை : தவறு
பொருத்துக.
1. மொஹஞ்சதாரா | அ. மேடான பகுதி |
2. வெண்கலம் | ஆ. சிவப்பு மணிக்கல் |
3. கோட்டை | இ. உலோகக் கலவை |
4. கார்னிலியன் | ஈ. இறந்தோர் மேடு |
விடை:- 1 – ஈ, 2 – இ, 3- அ, 3 – ஆ |
4. தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. 6500 ஆண்டுகளுக்கு பழமையான நாகரிகத்தின் நகரம்?
- ஈராக்
- சிந்துவளி
- தமிழகம்
- தொண்டமண்டலம்
விடை : ஈராக்
2. இவற்றுள் எது தமிழக நகரம்?
- ஈராக்
- ஹரப்பா
- மொகஞ்சதாரோ
- காஞ்சிபுரம்
விடை : காஞ்சிபுரம்
3. வங்காள விரிகுடாவுடன் தொடர்பில்லாத நகரம்
- பூம்புகார்
- மதுரை
- கொற்கை
- காஞ்சிபுரம்
விடை : மதுரை
4. தமிழர்களின் நீர்மேலாண்மையை விளக்குவது
- கல்லணை
- காஞ்சிபுர ஏரிகள்
- பராக்கிரம பாண்டியன் ஏரி
- காவிரி ஏரி
விடை : கல்லணை
5. பின்வருவனவற்றுள் எது தொன்மையான நகரமல்ல?
- மதுரை
- காஞ்சிபுரம்
- பூம்புகார்
- சென்னை
விடை : சென்னை
6. கீழடி அகழாய்வுகளுடன் எது தொடர்புடைய நகரம்
- மதுரை
- காஞ்சிபுரம்
- பூம்புகார்
- சென்னை
விடை : மதுரை
கூற்றுக்கான காரணத்தைப் பொருத்துக.
1. கூற்று :- பூம்புகார் நகரத்திலிருந்து அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதியும், இறக்குமதியும் பெற்றது.
காரணம் :- வங்காளவிரிகுடா கடல் போக்குவரத்திற்கு ஏதுவாக அமைந்ததால் அண்டைய நாடுகளுடன் வணிகம் சிறப்புற்றிருந்தது.
- கூற்று சரி; காரணம் தவறு.
- கூற்று சரி; கூற்றுக்கான காரணமும் சரி.
- கூற்று தவறு; காரணம் சரி.
- கூற்று தவறு; காரணம் தவறு.
விடை : கூற்று சரி; கூற்றுக்கான காரணமும் சரி
2.
அ. திருநாவுக்கரசர், “கல்வியில் கரையில” எனக்குறிப்பிட்ட நகரம் காஞ்சிபுரம்.
ஆ. இந்தியாவின் ஏழு புனிதத் தலங்களுள் ஒன்று என யுவான்சுவாங் குறிப்பிட்டது காஞ்சிபுரம்.
இ. நகரங்களுள் சிறந்தது காஞ்சிபுரம் என காளிதாசர் குறிப்பிட்டுள்ளார்.
- அ மட்டும் சரி
- ஆ மட்டும் சரி
- இ மட்டும் சரி
- அனைத்தும் சரி
விடை : அனைத்தும் சரி
சரியான தொடரைக் கண்டறிக.
- நாளங்காடி என்பது இரவு நேர கடை.
- அல்லங்காடி என்பது பகல் நேர கடை.
- ரோமானிய நாட்டு நாணயம் தயாரித்த தொழிற்சாலை கிடைத்தது பூம்புகார்.
- கொற்கை அருகில் உள்ள உவரியில் இருந்து முத்து ஏற்றுமதி செய்யப்பட்டது.
விடை : கொற்கை அருகில் உள்ள உவரியில் இருந்து முத்து ஏற்றுமதி செய்யப்பட்டது.
தவறான தொடரைக் கண்டறிக.
- மெகஸ்தனிஸ் தன்னுடடிய பயணக் குறிப்புகளில் மதுரையைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
- யுவான் சுவாங் தமிழ்நாட்டு நகரான காஞ்சிபுரத்திற்கு வந்தார்.
- கோவலனும், கண்ணகியும் காஞ்சிபுரத்தில் வாழ்ந்தனர்.
- ஈராக் நகரம் பட்டினப்பாலையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விடை : கோவலனும், கண்ணகியும் காஞ்சிபுரத்தில் வாழ்ந்தனர்.
சரியான இணையைக் கண்டறிக.
- கூடல் நகர் – பூம்புகார்
- தூங்கா நகரம் – ஹரப்பா
- கல்வி நகரம் – மதுரை
- கோயில் நகரம் – காஞ்சிபுரம்
விடை : கோயில் நகரம் – காஞ்சிபுரம்
தவறான இணையைக் கண்டறிக.
- வட மலை – தங்கம்
- மேற்கு மலை – சந்தனம்
- தென் கடல் – முத்து
- கீழ்கடல் – அகில்
விடை : கீழ்கடல் – அகில்
கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. கைலாசநாதர் ஆலயத்தைக் கட்டியவர் _______
விடை : இராஜசிம்மன் என்ற பல்லவ மன்னன்
2. கோயில் நகரம் என அழைக்கப்படுவது _______
விடை : காஞ்சிபுரம்
3. மாசாத்துவன் எனும் பெயர் தரும் பொருள் _______
விடை : பெரு வணிகர்
சரியா? தவறா?
1. பூம்புகாரில் நடைபெற்ற அண்டைநாட்டு வணிகத்தின் மூலமாக பண்பாட்டு பரிமாற்றம் நடைபெற்றது.
விடை : சரி
2. மதுரையில் அல்லங்காடியில் பெண்கள் பயமின்றி இரவு நேரங்களில் பொருட்கள் வாங்கிச் சென்றனர்.
விடை : சரி
3. பல்லவர்கள் காலத்தில் எண்ணற்ற குடைவரைக் கோயில்கள் அமைக்கப்பட்டன.
விடை : சரி
4. போதிதர்மர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர்.
விடை : சரி
பகுதி 2: புவியியல்
1. பேரண்டம் மற்றும் சூரியக் குடும்பம்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. புவி தன் அச்சில் சுழல்வதை இவ்வாறு அழைக்கிறோம்?
- சுற்றுதல்
- பருவகாலங்கள்
- சுழல்தல்
- ஓட்டம்
விடை : சுழல்தல்
2. மகரரேகையில் சூரியக் கதிர்கள் செங்குத்தாக விழும் நாள்
- மார்ச் 21
- ஜூன் 21
- செப்டம்பர்
- ஈ. டிசம்பர் 22
விடை : ஜூன் 21
3. சூரியக் குடும்பம் அடங்கியுள்ள விண்மீன் திரள் மண்டலம்
- ஆண்டிரோமெடா
- மெகலனிக்கிளவுட்
- பால்வெளி
- ஸ்டார்பர்ஸ்ட்
விடை : பால்வெளி
4. மனிதன் தன் காலடியைப் பதித்துள்ள ஒரே விண்பொருள்
- செவ்வாய்
- சந்திரன்
- புதன்
- வெள்ளி
விடை : சந்திரன்
5. எந்த கோளால் தண்ணீரில் மிதக்க இயலும்?
- வியாழன்
- சனி
- யுரேனஸ்
- நெப்டியூன்
விடை : சனி
கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. பேரண்டம் உருவாகக் காரணமான நிகழ்வு __________
விடை : பெரும் வெடிப்பு
2. இரு வான்பொருட்களுக்கு இடையிலான தொலைவை அளக்க உதவும் அளவு __________ ஆகும்.
விடை : ஒளி ஆண்டு
3. சூரியக் குடும்பத்தின் மையம் __________
விடை : சூரியன்
4. கோள் என்ற வார்த்தையின் பொருள் __________
விடை : சுற்றி வருபவர்
5. அதிக துணைக்கோள்களைக் கொண்ட கோள் __________
விடை : வியாழன்
6. நிலவிற்கு அனுப்பப்பட்ட முதல் இந்திய விண்கலம் __________
விடை : சந்திராயன் – 1(2008)
7. புவியின் சாய்வுக் கோணம் __________
விடை : 23 ½o
8. நிலநடுக்கோடு சூரியனை நேராகச் சந்திக்கும் நாட்கள் __________ மற்றும் __________
விடை : மார்ச்-21 மற்றும் செப்டம்பர் 23
9. சூரிய அண்மை நிகழ்வின் போது புவி சூரியனுக்கு __________ காணப்படும்.
விடை : மிக அருகில்
10. புவியின் மேற்பரப்பின் மீது ஒளிபடும் பகுதியையும், ஒளிபடாத பகுதியையும் பிரிக்கும் _________ என்று பெயர்.
விடை : ஒளிர்வு வட்டம் (Terminator Line)
சரியா அல்லது தவறா எனக்கூறு
1. அழகிற்காக வளர்க்கப்படும் தாவரங்கள் மென்கட்டைகள் என அழைக்கப்படுகின்றன.
விடை : தவறு
2. பட்டுப்புழுக்கள் மல்பெரி இலையை உணவாக உட்கொள்கின்றேன்.
விடை : சரி
3. அலங்காரத் தாவரமாகக் காலிபிளவர் தாவரம் பயன்படுகிறது.
விடை : தவறு
4. கோடை காலத்திற்குப் பருத்தி உடைகள் ஏற்றதன்று.
விடை : தவறு
5. கரும்புத் தாவரம் உயிரி எரிபொருளாகப் பயன்படுகி்றது.
விடை : சரி
IV. பொருந்தாததை வட்டமிடுக.
1. வெள்ளி, வியாழன், நெப்டியூன், சனி
விடை : வெள்ளி
2. சிரியஸ், ஆண்டிரோமெடா, பால்வெளி, மெகலனிக்கிளவுட்
விடை : சிரியஸ்
3. புளூட்டோ, ஏரிஸ், செரஸ், அயோ
விடை : அயோ
4. வால்விண்மீன், சிறுகோள், விண்வீழ்தல், குறுவளைக் கோள்கள்
விடை : சிறுகோள்
5. தரை ஊர்தி, சுற்றுக்கலம், வானூர்தி, விண்கலம்
விடை : தரை ஊர்தி
பொருத்துக
1. வெப்பமாக கோள் | அ. செவ்வாய் |
2. வளையம் உள்ள கோள் | ஆ. நெப்டியூன் |
3. செந்நிறக் கோள் | இ. வெள்ளி |
4. உருளும் கோள் | ஈ. சனி |
5. குளிர்ந்த கோள் | உ. யுரேனஸ் |
விடை:- 1 – இ, 2 – ஈ, 3 – அ, 4 – உ, 5 – ஆ |
2. நிலப்பரப்பும் பெருங்கடல்களும்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. மிகச் சிறிய பெருங்கடல்?
- பசிபிக் பெருங்கடல்
- இந்தியப் பெருங்கடல்
- அட்லாண்டிக் பெருங்கடல்
- ஆர்க்டிக் பெருங்கடல்
விடை : ஆர்க்டிக் பெருங்கடல்
2. மலாக்கா நீர்ச்சந்தியை இணைப்பது
- பசிபிக் பெருங்கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்
- தென் பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடல்
- பசிபிக் பெருங்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல்
- அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் ஆர்க்டிக் பெருங்கடல்
விடை : பசிபிக் பெருங்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல்
3. அதிகமான கப்பல் போக்குவரத்து நடைபெறும் பெருங்கடல்
- பசிபிக் பெருங்கடல்
- அட்லாண்டிக் பெருங்கடல்
- இந்தியப் பெருங்கடல்
- ஆர்க்டிக் பெருங்கடல்
விடை : அட்லாண்டிக் பெருங்கடல்
4. உறைந்த கண்டம்
- வட அமெரிக்கா
- ஆஸ்திரேலியா
- அண்டார்டிகா
- ஆசியா
விடை : அண்டார்டிகா
5. இரண்டு நீர்ப் பகுதிகளை இணைக்கும் குறுகிய நீர்ப் பகுதி
- நீர்சந்தி
- சிறுகுடல்
- தீவு
- தீபகற்பம்
விடை : நீர்சந்தி
கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. உலகின் மிகப்பெரிய கண்டம் _________
விடை : ஆசியா
2. இந்தியாவில் கனிமவளம் நிறைந்த பீடபூமி _________
விடை : சோட்டா நாக்பூர்
3. பெருங்கடல்களில் மிகப்பெரியது _________
விடை : பசிபிக்பெருங்கடல்
4. டெல்டா _________ நிலத்தோற்றம்.
விடை : மூன்றாம் நிலை
5. தீவுக் கண்டம் என அழைக்கப்படுவது _________
விடை : ஆஸ்திரேலியா
பொருந்தாதைத் தேர்ந்தெடு.
1. ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, இலங்கை
விடை : இலங்கை
2. ஆர்க்டிக் பெருங்கடல், மத்திய தரைக்கடல், இந்தியப் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல்
விடை : மத்திய தரைக்கடல்
3. பீடபூமி, பள்ளத்தாக்கு, சமவெளி, மலை
விடை : பள்ளத்தாக்கு
4. வங்காள விரிகுடா, பேரிங் கடல், சீனாக் கடல், தாஸ்மானியா கடல்
விடை : வங்காள விரிகுடா
5. ஆண்டிஸ், ராக்கி, எவரெஸ்ட், இமயமலை
விடை : எவரெஸ்ட்
பொருத்துக
1. தென்சாண்ட்விச் அகழி | அ. அட்லாண்டிக் பெருங்கடல் |
2. மில்வாக்கி அகழி | ஆ. தென் பெருங்கடல் |
3. மரியானா அகழி | இ. இந்தியப் பெருங்கடல் |
4. யுரேஷியன் படுகை | ஈ. பசிபிக் பெருங்கடல் |
5. ஜாவாஅகழி | உ. ஆர்சிக் பெருங்கடல் |
விடை:- 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 – உ, 5 – இ |
பகுதி 3: குடிமையியல்
1. பன்முகத்தன்மையினை அறிவோம்
I. சரியான விடையை தேர்வு செய்க.
1. இந்தியாவில் ________________ மாநிலங்களும், ______________ யூனியன் பிரரதைங்களும் உள்ளன.
- 27, 9
- 29, 7
- 28, 7
- 28, 9
விடை : 29.7
2. இந்தியா ஒரு ______________________ என்று அழைக்கப்படுகிறது.
- கண்டம்
- துணைக்கண்டம்
- தீவு
- இவற்றில் எதுமில்லை
விடை : துணைக்கண்டம்
3. மிக அதிக மழைப்பொழிவுள்ள மெளசின்ராம் __________________ மாநிலத்தில் உள்ளது.
- மணிப்பூர்
- சிக்கிம்
- நாகலாந்து
- மேகாலயா
விடை : மேகாலயா
4. கீழ்கண்டவற்றில் எந்த மதம் இந்தியாவில் நடைமுறையில் இல்லை?
- சீக்கிய மதம்
- இஸ்லாமிய மதம்
- ஜொராஸ்ட்ரியமதம்
- கன்ஃபூசியமதம்
விடை : கன்ஃபூசியமதம்
5. இந்திய அரசியலமைப்புச்சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் அங்கீகரிக்கப்பட்டுள்ள அலுவலக மொழிகளின் எண்ணிக்கை ______
- 25
- 23
- 22
- 26
விடை : 22
6. _______________ மாநிலத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
- கேரளா
- தமிழ்நாடு
- பஞ்சாப்
- கர்நாடகா
விடை : கேரளா
7. மோகினியாட்டம் ______________ மாநிலத்தில் செவ்வியல் நடனம் ஆகும்.
- கேரளா
- தமிழ்நாடு
- மணிப்பூர்
- கர்நாடகா
விடை : கேரளா
8. “டிஸ்கவரி ஆஃப் இந்தியா” என்ற நூலினை எழுதியவர் __________________ .
- இராஜாஜி
- வ.உ..சி
- நேதாஜி
- ஜவகர்லால் நேரு
விடை : ஜவகர்லால் நேரு
9. ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற சொற்றொடரை உருவாக்கியவர் _____________ .
- ஜவகர்லால் நேரு
- மகாத்மா காந்தி
- அம்பேத்கார்
- இராஜாஜி
விடை : ஜவகர்லால் நேரு
10 . வி.ஏ.ஸ்மித் இந்தியாவை ________________ என்று அழைத்தார்.
- பெரிய ஜனநாயகம்
- தனித்துவமான பன்முகத்தன்மை கொண்ட நிலம்
- இனங்களின் அருங்காட்சியகம்
- மதச்சார்பற்ற நாடு
விடை : இனங்களின் அருங்காட்சியகம்
கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. ஒரு பகுதியின் ____________ நடவடிக்கைகளை அப்பகுதியின் நிலவியல் கூறுகளும் கால நிலைகளும் பெரிதும் தீர்மானிக்கின்றன.
விடை : பொருளாதார
2. மிகவும் குறைந்த மழைப்பொழிவுள்ள ஜெய்சால்மர் ____________ மாநிலத்தில் உள்ளது.
விடை : இராஜஸ்தான்
3. தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட ஆண்டு _________
விடை : 2004
4. பிஹு திருவிழா ____________ மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது.
விடை : அஸ்ஸாம்
பொருத்துக
1. நீக்ரிட்டோக்கள் | அ. மதம் |
2. கடற்கரை பகுதிகள் | ஆ. இந்தியா |
3. ஜொராஸ்ற்றியம் | இ. மீன்பிடித்தொழில் |
4. வேற்றுமையில் ஒற்றுமை | ஈ. இந்திய இனம். |
விடை:- 1 – ஈ, 2 – இ, 3 – அ, 4 – ஆ |
2. சமத்துவம் பெறுதல்
சரியான விடையை தேர்வு செய்க.
1. பின்வருவனவற்றுல் எது பாரபட்சத்திற்கான காரணம் அல்ல
- சமூகமயமாக்கல்
- பொருளாதார நன்மைகள்
- அதிகாரத்துவ ஆளுமை
- புவியியல்
விடை : புவியியல்
2. பாலின அடிப்படையில் நடத்தப்படும் பாகுபாடு குறிப்பிடுவது
- பாலின பாகுபாடு
- சாதி பாகுபாடு
- மத பாகுபாடு
- சமத்துவமின்மை
விடை : பாலின பாகுபாடு
3. பாலின அடிப்படையிலான ஒத்தக் கருத்து உருவாதல் பெரும்பாலும் சித்தரிக்கப்படுவது.
- திரைப்படங்கள்
- விளம்பரங்கள்
- தொலைகாட்சி தொடர்கள்
- இவை அனைத்தும்
விடை : இவை அனைத்தும்
4. ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்கள் எழுதிய புத்தகங்கள்
- இந்தியா 2020
- அக்கினிச்சிறகுகள்
- எழுச்சி தீபங்கள்
- இவை அனைத்தும்
விடை : இவை அனைத்தும்
5. ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட ஆண்டு
- 1997
- 1996
- 1995
- 1994
விடை : 1997
6. விஸ்வநாத் ஆனந்த் முதன்முதலில் கிராண்ட் மாஸ்டரான ஆண்டு
- 1995
- 1986
- 1987
- 1998
விடை : 1998
7. இளவழகி சிறந்து விளங்கிய விளையாட்டு
- செஸ்
- மல்யுத்தம்
- கேரம்
- டென்னிஸ்
விடை : கேரம்
8. அரசியலமைப்பின் எந்தப் பிரிவின் கீழ், எந்தவொரு குடிமகனுக்கும் எதிராக மதம், இனம், சாதி, பாலினம், பிறந்த இடம் ஆகிய அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது எனக் கூறுகிறது?
- 14(1)
- 15(1)
- 16(1)
- 17(1)
விடை: 15(1)
9. பி.ஆர். அம்பேத்கார் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட ஆண்டு
- 1990
- 1989
- 1986
- 1987
விடை : 1990
10. 2011-ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் அதிகமான கல்வியறிவு பெற்றுள்ள மாவட்டம்
- நாமக்கல்
- சேலம்
- கன்னியாகுமரி
- சிவகங்கை
விடை : கன்னியாகுமரி
பொருத்துக
1. பாரபட்சம் | அ. தீண்டாமை ஒழிப்பு |
2. ஒத்தக் கருத்து உருவாதல் | ஆ. மற்றவர்களை காட்டிலும் சிலரைதாழ்வாக நடத்துவது |
3. பாகுபாடு | இ. சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் |
4. பிரிவு 14 | ஈ. தவறான பார்வை அல்லது தவறான கருத்து |
5. பிரிவு 17 | உ. பிறரை பற்றி எதிமறையாக மதிப்பிடுதல் |
விடை:- 1 – உ, 2 – ஈ, 3 – ஆ, 4 – இ, 5 – அ |
கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. ___________ என்பது மற்றவர்களைப்பற்றி எதிமறையாக அல்லது தாழ்வான முறையில் கருதுவதாகும்.
விடை : ஒத்தகருத்து
2. ___________ ஆம் ஆண்டு ஏ.பி.ஜே. அப்துல்கலாம் பிறந்தார்.
விடை : இராமேஸ்வரத்தில், 1931
3. இந்தியாவில் மிக உயர்ந்த விளையாட்டு விருதான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதினை முதன் முதலில் பெற்றவர் ______________
விடை : விஸ்வநாதன் ஆனந்த்
4. சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் _____________
விடை : டாக்டர் B.R. அம்பேத்கர்
5. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி குறைந்த பாலின விகிதம் உள்ள மாவட்டம் _____________
விடை : தர்மபுரி