Tamil Nadu Class 7th Social Science Term – III Book Back Questions in Tamil 2022

7Standard Social Science Term-3 Solution

Hello students, here you can see the solution of 7th Standard Social Science Term-3. Ie., Here we listed 7th Standard Social Science Term 3 book back questions.

Particularly we covered one mark question. Because these questions are asked not only school exam, it will come on competitive exams like TNPSC, TET and etc…

You can download Tamil Medium 7th std social science book pdf from this link – Click Here


Samacheer Kalvi 7th Std Social Science Book Back Questions

Table of Content

I. வரலாறு

II. புவியியல்

III. குடிமையியல்

IV. பாெருளியல்

வரலாறு

பாடம்.1 புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1. கீழ்க்காண்பவருள் யார் தன்னை தாய் யசோதாவாக பாவித்துக் கொண்டு கிருஷ்ணனின் மேல் பாடல்களைப் புனைந்துள்ளார்?

  1. பொய்கை ஆழ்வார்
  2. பெரியாழ்வார்
  3. நம்மாழ்வார்
  4. ஆண்டாள்

விடை : பெரியாழ்வார்

2. அத்வைதம் எனும் தத்துவத்தை போதித்தவர் யார்?

  1. இராமானுஜர்
  2. இராமாநந்தர்
  3. நம்மாழ்வார்
  4. ஆதி சங்கரர்

விடை : ஆதி சங்கரர்

3. பக்திச் சிந்தனையை ஒரு மக்கள் இயக்கமாக வட இந்தியாவில் பரவச் செய்தவர் யார்?

  1. வல்லபாச்சாரியார்
  2. இராமானுஜர்
  3. இராமாநந்தர்
  4. சூர்தாஸ்

விடை : இராமாநந்தர்

4. சிஸ்டி அமைப்பை இந்தியாவில் பிரபலமாக்கியவர் யார்?

  1. மொய்னுதீன் சிஸ்டி
  2. சுரவார்டி
  3. அமீர் குஸ்ரு
  4. நிஜாமுதின் அவுலியா

விடை : மொய்னுதீன் சிஸ்டி

5. சீக்கியர்கள் தங்களின் முதல் குரு என யாரைக் கருதுகின்றனர்?

  1. லேனா
  2. குரு அமீர் சிங்
  3. குரு நானக்
  4. குரு கோவிந் சிங்

விடை : குரு நானக்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. பெரியாழ்வாரின் தொடக்ககாலப் பெயர் ______________

விடை : விஷ்ணு சித்தர்

2. சீக்கியர்களின் புனிதநூல் ______________ ஆகும்.

விடை : குரு கிரந்தசாகிப்

3. மீராபாய் ______________ என்பாரின் சீடராவார்

விடை : ரவி தாஸ்

4. ______________ என்பாரின் தத்துவம் விசிஷ்டாத்வைதம் என அறியப்படுகிறது

விடை : இராமானுஜர்

5. தர்பார் சாகிப் குருத்வாரா பாகிஸ்தானின் ______________ என்ற இடத்தில் அமைந்துள்ளது.

விடை : கர்தார்பூர்

III. பொருத்துக

1. பாகல் அ. கபீர்
2. இராமசரிதமானஸ் ஆ. இராமானுஜர்
3. ஸ்ரீவைஷ்ணவம் இ. அப்துல் வகித் அபுநஜிப்
4. கிரந்தவளி ஈ. குரு கோவிந் சிங்
5. சுரவார்டி உ. துளசிதாசர்
விடை : 1 – ஈ, 2 – உ, 3 – ஆ, 4 – அ, 5 – இ

IV. சரியான இணையைத் / இணைகளைத் தேர்ந்தெடுக்கவும்

  1. ஆண்டாள் – திருவில்லிபுத்தூர்
  2. துக்காராம் – வங்காளம்
  3. சைதன்யதேவா – மகாராஷ்டிரா
  4. பிரம்ம சூத்திரம் – வல்லபாச்சாரியார்
  5. குருத்வாராக்கள் – சீக்கியர்கள்

விடை : a & e

1. கூற்று : குரு கோவிந் சிங்கிற்குப் பின்னர் புனித நூலான குரு கிரந்த் சாகிப் குருவாகக் கருதப்பட்டது.
காரணம் : குரு கிரந்த் சாகிப் நூலைத் தொகுத்தவர் குரு கோவிந் சிங்.

  1. காரணம், கூற்றின் சரியான விளக்கமல்ல.
  2. காரணம், கூற்றை சரியாக விளக்குகிறது.
  3. கூற்று சரி, காரணம் தவறு.
  4. கூற்று, காரணம் இரண்டும் தவறு.

விடை : கூற்று சரி, கூற்றிற்கான விளக்கமும் சரியானது

3. பொருந்தாததைக் கண்டுபிடி.

  1. பொய்கை ஆழ்வார்
  2. பூதத்தாழ்வார்
  3. பெரியாழ்வார்
  4. ஆண்டாள்
  5. நம்மாழ்வார்

விடை : ஆண்டாள்

V. சரியா? தவறா? காண்

1. இஸ்லாமியப் பண்பாடு பரவ சூபியிஸம் காரணமாயிற்று.

விடை : தவறு

2. இடைக்காலத்தின் தொடக்கத்தில் நன்கறியப்பட்டிருந்த சிஸ்டி அமைப்பைச் சார்ந்த சூபி, நிஜாமுதீன் அவுலியா என்பவராவார்.

விடை : சரி

3. குருநானக், சீக்கியர்களின் முதல் குருவாகக் கருதப்படுகிறார்.

விடை : சரி

4. கடவுளை உய்த்துணர உணர்சிகரமான பக்தியும் தீவிர தியானமுமே சாத்தியம் என சூபிக்கள் நம்பினர்.

விடை : சரி

5. அடிப்படை தமிழ் சைவப் புனித நூல்கள் 12 ஆகும்.

விடை : சரி

பாடம்.2 தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1. தென்னிந்தியாவில் உள்ள மிகப்ழமையான கட்டுமானக் கோவில் எது?

  1. கடற்கரைக் கோவில்
  2. மண்டகப்பட்டு
  3. கைலாசநாதர் கோவில்
  4. வைகுந்தபெருமாள் கோவில்

விடை : கடற்கரைக் கோவில்

2. மாமல்லபுரத்திலுள்ள நினைவுச் சின்னங்களும் கோவில்களும் யுனெஸ்கோவால் எப்போது அங்கீகரிக்கப்பட்டது?

  1. 1964
  2. 1994
  3. 1974
  4. 1984

விடை : 1984

3. முற்காலச் சோழர் கட்டடக்கலையின் சிறப்பம்சம் யாது?

  1. புடைப்புச் சிற்பங்கள்
  2. விமானங்கள்
  3. பிரகாரங்கள்
  4. கோபுரங்கள்

விடை : விமானங்கள்

4. அழகிய நம்பி கோவில் எங்கமைந்துள்ளது?

  1. திருக்குறுங்குடி
  2. மதுரை
  3. திருநெல்வேலி
  4. திருவில்லிபுத்தூர்

விடை : திருக்குறுங்குடி

5. வைகுண்ட பெருமாள் கோயிலைக் கட்டியவர் யார்?

  1. மகேந்திரவர்மன்
  2. இரண்டாம் நந்திவர்மன்
  3. ராஜசிம்மன்
  4. இரண்டாம் ராஜராஜன்

விடை : இரண்டாம் நந்திவர்மன்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. பல்லவ அரசர் மகேந்திரவர்மனால் முதன்முதலாய் கட்டப்பட்ட குடைவரைக் கோவில் ________________ என்ற இடத்தில் உள்ளது.

விடை : மண்டகப்பட்டு

2. முற்கால சோழர் கட்டடக்கலை ________________ பாணியைப் பின்பற்றியது

விடை : செம்பியன் மகாதேவி

3. மீராபாய் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள மிகவும் புகழ்பெற்ற மண்டபம் ________________ ஆகும்

விடை : புதுமண்டபம்

4. பிற்கால சோழர் காலம் பொலிவுமிக்க ________________ பெயர்பெற்றது

விடை : கோபுரங்களுக்கு

5. விஜயநகர கால கட்டடக்கலையின் தனித்துவ அடையாளம் ________________ ஆகும்.

விடை : மண்டபங்கள்

III. பொருத்துக

1. ஏழு கோவில்கள் அ. மதுரை
2. இரதிமண்டபம் ஆ. தாராசுரம்
3. ஐராவதீஸ்வரர்கோவில் இ. திருக்குறுங்குடி
4. ஆதிநாதர் கோவில் ஈ. கடற்கரைக்கோவில்
5. புதுமண்டபம் உ. ஆழ்வார் திருநகரி
விடை : 1 – ஈ, 2 – இ, 3 – ஆ, 4 – உ, 5 – அ

IV. தவறான இணையைக் காண்க 

  1. கிருஷ்ணாபுரம் கோவில் – திருநெல்வேலி
  2. கூடலழகர் கோவில் – ஆழ்வார் திருநகரி
  3. சேதுபதிகள் – மதுரை நாயக்க அரசின் சிற்றரசர்கள்
  4. ஜலகண்டேஸ்வரர் கோவில் – வேலூர

விடை : கூடலழகர் கோவில் – ஆழ்வார் திருநகரி

2. கூற்று : இராமேஸ்வரம் கோவிலின் சிறப்புமிக்க பிரகாரங்கள் நம் கவனத்தை ஈர்ப்பதாய் அமைந்துள்ளன
காரணம் : உலகிலேயே மிக நீளமான கோவில் பிரகாரங்களை இக்கோவில் கொண்டுள்ளது.

  1. காரணம், கூற்றை விளக்கவில்லை
  2. காரணம், கூற்றை விளக்குகின்றது
  3. கூற்று சரி, காரணம் தவறு
  4. கூற்று, காரணம் இரண்டும் தவறு

விடை : காரணம், கூற்றை விளக்குகின்றது

3. பொருந்தாததைக் கண்டுபிடி.

  1. திருவில்லிபுத்தூர் அழகர்கோவில்
  2. ஸ்ரீரங்கம்
  3. காஞ்சிபுரம்
  4. திருவண்ணாமலை

விடை : ஸ்ரீரங்கம்

4. பின்வரும் காலத்திற்குப் பெயரிடுக.

அ) கி.பி. 600 – 850 –

விடை : பல்லவன் காலம்

ஆ) கி.பி. 850 – 1100 –

விடை : முற்கால சோழர்கள் காலம்

இ) கி.பி. 1100 – 1350 –

விடை : பிற்கால சோழர்கள் காலம்

ஈ) கி.பி. 1350 – 1600 –

விடை : விஜய நகர /  நாயக்கர் காலம்

5. சரியான வாக்கியங்களைக் கண்டுபிடி

  1. மிகப்பெரும் கருங்கல் பாறையின் மீது புடைப்புச் சிற்பமாக அர்ச்சுனன் தவமிருக்கும் காட்சி செதுக்கப்பட்டுள்ளது.
  2. பல்லவர்கால கட்டடக்கலைப் பாணியில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது.
  3. பின்ளையார்பட்டியிலுள்ள குகைக் கோவில் பிற்கால பாண்டியரின் பங்களிப்பாகும்.
  4. மதுரை நாயக்க அரசின் சிற்றரசர்களான சேதுபதிகள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சிறந்த பங்களிப்பைச் செய்துள்ளனர்.

விடை : 1 மற்றும் 3

V. சரியா? தவறா? காண்

1. இராஜசிம்மன் காஞ்சி கைலாசநாதர் கோயிலைக் கட்டினார்.

விடை : சரி

2. முற்கால பாண்டியர், பிற்காலச் சோழரின் சமகாலத்தவர் ஆவர்.

விடை : தவறு

3. பாண்டியக் கட்டடக்கலையின் சிறப்பம்சமாய் திகழ்வது குடைவரை மற்றும் கட்டுமானக் கோவில்கள் ஆகும்.

விடை : சரி

4. பிரகதீஸ்வரர் கோவில் இராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது.

விடை : சரி

5. தாதாபுரம் கோவிலில் விஜயநகர மற்றும் நாயக்கர் கால ஓவியங்களைக் காணமுடியும்.

விடை : தவறு

பாடம்.3 தமிழகத்தில் சமணம் பெளத்தம் ஆசீவகத் தத்துவங்கள்

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்

1. சமணப்பேரவை முதன்முதலில் எங்கு கூடி தங்களின் சமய போதனைகளையும் ஒழுக்க விதிகளையும் தொகுக்க முற்பட்டனர்?

  1. பாடலிபுத்திரம்
  2. வல்லபி
  3. மதுரா
  4. காஞ்சிபுரம்

விடை : பாடலிபுத்திரம்

2. ஆகம சூத்திரங்கள் எம் மொழியில் எழுதப்பட்டன?

  1. அர்த்த-மகதி பிராகிருதம்
  2. இந்தி
  3. சமஸ்கிருதம்
  4. பாலி

விடை :  அர்த்த-மகதி பிராகிருதம்

3. கீழ்க்கண்டவற்றுள் எது களப்பிரர்களால் ஆதரிக்கப்பட்டது ?

  1. புத்தமதம்
  2. சமணமதம்
  3. ஆசீவகம்
  4. இந்து மதம்

விடை : சமணமதம்

4. தலையணைப்பகுதி செதுக்கப்படாமல் உள்ள கற்படுக்கைகளை எங்கு காணலாம்?

  1. வேலூர்
  2. காஞ்சிபுரம்
  3. சித்தன்னவாசல்
  4. மதுரை

விடை :  வேலூர்

5. கழுகு மலை குடைவரைக் கோவில் யாரால் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது?

  1. மகேந்திரவர்மன்
  2. பராந்தக நெடுஞ்சடையான்
  3. பராந்தக வீரநாராயண பாண்டியன்
  4. இரண்டாம் ஹரிஹரர்

விடை : பராந்தக நெடுஞ்சடையான்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. தமிழ் நாட்டிலுள்ள சமணச் சிலைகளில் மிக உயரமாகக் கருதப்படும் சிலை ______________

விடை : நேமிநாதர்

2. புத்த சரிதத்தை எழுதியவர் ______________ ஆவார்

விடை : அஸ்வகோஷர்

3. ______________ நூற்றாண்டில் சீனப் பயணி யுவான்சுவாங் பல்லவ நாட்டிற்கு வந்திருந்தார்.

விடை : கி.பி. ஏழாம்

4. பெளத்தம் சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கும் சமயம் என ______________ எடுத்துரைக்கின்றது

விடை : மகேந்திர வர்மனின் மத்த விலாச பிரகாசனம் எழும் நூல்

5. மௌரியப் பேரரசர் அசோகரும் அவருடைய பேரன் தசரதாவும் ______________ ஆதரித்தனர்.

விடை : ஆசீீவர்களை

III. பொருத்துக

1. கல்ப சூத்ரா அ. திருத்தக்கத் தேவர்
2. சீவகசிந்தாமணி ஆ. மதுரை
3. நேமிநாதர் இ. நாகசேனர்
4. மிலிந்தபன்கா ஈ. பத்ரபாகு
5. கீழக் குயில் குடி உ. 22வது தீர்த்தங்கரர்
விடை : 1 – ஈ, 2 – அ, 3 – உ, 4 – இ, 5 – ஆ

IV. கீழ்க் காண்பனவற்றிற்கு விடையளி

1. பொருந்தாததைக் காண்

  1. திருப்பருத்திக் குன்றம்
  2. கீழக் குயில் குடி
  3. கழுகுமலை
  4. நாகப்பட்டினம்
  5. சித்தன்னவாசல்

விடை : நாகப்பட்டினம்

2. கூற்று : பழைய மதங்களின் குருமார்களிடமிருந்து தான் கற்றுக்கொள்வதற்கு எதுவுமில்லை என கௌதமர் தெரிந்து கொண்டார்.
காரணம் : துறவு வாழ்க்கையை மேற்கொள்வதே முக்தி அடைவதற்கான ஒரேவழி என மதங்கள் அறிவித்தன.

  1. கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்
  2. கூற்று சரி , காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
  3. கூற்று, காரணம் இரண்டுமே தவறு.
  4. கூற்று தவறு ஆனால் காரணம் சரி.

விடை : கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்

3. சரியான கூற்றினைக் / கூற்றுகளைக் காண்

i) கி.மு. ஆறாம் நூற்றாண்டில், இந்தியாவில் வெவ்வேறான 62 தத்துவ சமயப்பள்ளிகள் செழிப்புற்று இருந்தன.
ii) ‘பள்ளி’ என்பது புத்தமதத்தாரின் கல்வி மையமாகும்.
iii) அரசர்கள் அளித்த ஆதரவினால் இஸ்லாமிய ஆட்சிக்கு முந்தைய இந்தியா, பல விகாரைகளைக் கொண்ட நாடாக விளங்கியது.
iv) ஆசீவகம் பதினைந்தாம் நூற்றாண்டுவரை தொடர்ந்து செயல்பட்டது.

  1. (i) மற்றும் (iii) சரி
  2. (i, ii) மற்றும் (iv) சரி
  3. (i) மற்றும் (ii) சரி
  4. (ii, iii) மற்றும் (iv) சரி

விடை : (i) மற்றும் (iii) சரி

4. தவறான இணையைக் காண்க

  1. பார்சவநாதர் – 22 வது தீர்த்தங்கரர்
  2. மகாபாஷ்யா – இலங்கையைச் சேர்ந்த வரலாற்றுத் தொகுப்பு
  3. விசுத்திமக்கா – புத்தகோசா
  4. புத்தர் – எண்வகை வழிகள்

விடை : விஜய நகர /  நாயக்கர் காலம்

V. சரியா? தவறா? காண்

1. 12வது ஆகமசூத்திரம் தொலைந்து போனதாகக் கருதப்படுகிறத

விடை : சரி

2.  வரலாறு முழுவதிலும் ஆசீவகர்கள் அனைத்து இடங்களிலும் அடக்கமுறையைச் சந்திக்க நேர்ந்தது.

விடை : சரி

3. சமண நிறுவனங்களில் சமூக, சமய வேறுபாடுகளின்றி அனைவருக்கும் கல்வி கற்பிக்கப்பட்டது.

விடை : சரி

4. நாளந்தா, தட்சசீலம், விக்கிரமசீலா ஆகியன மிகச்சிறந்த புனிதத்தலங்களாயின.

விடை : தவறு

5. தாதாபுரம் சோழர்காலம் முதலாகவே பெளத்தம் சைவ, வைணவ சமயங்களின் சவால்களை எதிர்கொண்டது.

விடை : தவறு

புவியியல்

பாடம்.1 கண்டங்களை ஆராய்தல் – வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்

1. வட அமெரிக்காவையும் ஆசியாவையும் _______________ பிரிக்கிறது.

  1. பேரிங் நீர் சந்தி
  2. பாக் நீர் சந்தி
  3. மலாக்கா நீர் சந்தி
  4. ஜிப்ரால்டர் நீர் சந்தி

விடை : பேரிங் நீர் சந்தி

2. _______ உலகின் சர்க்கரைக் கிண்ணம் என அழைக்கப்படுகிறது.

  1. மெக்ஸிகோ
  2. அமெரிக்கா
  3. கனடா
  4. கியூபா

விடை : கியூபா

3. _________ வட அமெரிக்காவின் நீளமான ஆறுகள் ஆகும்.

  1. மிஸிஸிப்பி மற்றும் மிஸ்சௌரி
  2. மெக்கென்ஸி ஆறு
  3. புனித லாரன்சு ஆறு
  4. கொலரடோ ஆறு

விடை : மிஸிஸிப்பி மற்றும் மிஸ்சௌரி

4. உலகின் மிக நீண்ட மலைத்தொடர் _______________.

  1. ஆன்டிஸ்
  2. ராக்கி
  3. இமயமலை
  4. ஆல்ப்ஸ்

விடை : ஆன்டிஸ்

5. பூமத்திய ரேகை பகுதியில் இருப்பதால் _________ வடிநிலப் படுகை தினந்தோரும் மழை பெறுகிறது.

  1. மெக்கென்ஸி
  2. ஒரினாகோ
  3. அமேசான்
  4. பரானா

விடை : அமேசான்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1.  வட அமெரிக்காவின் தாழ்வான பகுதியான ________ கடல் மட்டத்திலிருந்து 86 மீட்டர் ஆழத்தில் உள்ளது.

விடை : மரண பள்ளதாக்கு

2. உலகின் தலைசிறந்த மீன்பிடித் தளமாக ________ விளங்குகிறது.

விடை : கிரண்ட் பேங்க

3. சிலி அர்ஜென்டினா எல்லையில் அமைந்துள்ள ______ ஆண்டிஸ் மலைத் தொடரின் உயரமான சிகரமாகும்.

விடை : அகான்காகுவா சிகரம்

4. பூமத்திய ரேகைப் பகுதியில் இருக்கும் ____________ உலகின் நுரையீரல் என அழைக்கப்படுகிறது.

விடை : அமேசான் காடுகள்

5. ________ற்கு உலகின் காப்பி பானை என்ற பெயரும் உண்டு.

விடை : பிரேசில்

III. பொருத்துக

1. மெக்கென்லீ சிகரம் அ. வெப்ப மண்டல காடுகள்
2. கிராண்ட் கேன்யான் ஆ. பறக்க இயலாத பறவை
3. எபோனி இ. கொலரடோ ஆறு
4. நான்கு மணி கடிகார மழை ஈ. 6194 மீ
5. ரியா உ. பூமத்திய ரேகை பகுதி
விடை : 1 – ஈ, 2 – இ, 3 – உ, 4 – அ, 5 – ஆ

IV. கீழ்கண்ட வாக்கியங்களில் பொருத்தமானதை டிக் செய்யவும்

1. கூற்று (A) : வட அமெரிக்காவின் தெற்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் பருத்தி நன்றாக வளருகிறது.
காரணம் (R) : மழையுடன் கூடிய வெப்பமான கோடைகாலம் மற்றும் வளமான மண் ஆகியவை பருத்தி விளைவதற்கான ஏற்ற சூழல்களாக உள்ளன.

  1. கூற்றும் காரணமும் சரி.
  2. கூற்று சரி. காரணம் தவறு.
  3. காரணம் தவறு. கூற்று சரி.
  4. காரணம் மற்றும் கூற்று தவறு.

விடை : கூற்றும் காரணமும் சரி.

2. கூற்று : தென் அமெரிக்காவில் உள்ள தொழிற்சாலைகள் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளன.
காரணம் : தொழில்மயமாவதற்கான அடிப்படை வசதிகள் குறிப்பாக போக்குவரத்து வளர்ச்சியில் பின்தங்கியுள்ளது.

  1. கூற்றும் காரணமும் சரி.
  2. கூற்று சரி. காரணம் தவறு.
  3. கூற்று தவறு. காரணம் சரி.
  4. காரணம் மற்றும் கூற்று தவறு.

விடை : கூற்று தவறு. காரணம் சரி.

பாடம்.2 நிலவரைபடத்தை கற்றறிதல்

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1. நிலவரைபடம் உருவாக்குதலின் அறிவியல் பிரிவு என அழைக்கப்படுகிறது________

  1. புவியியல் (ஜியோகிராஃபி)
  2. கார்டோகிராஃப்ட்
  3. பிஸியோகிராபி
  4. பௌதீக புவியியல்

விடை : கார்டோகிராஃப்ட்

2. வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய நான்கும் ___________ திசைகள் ஆகும்.

  1. முக்கியமான
  2. புவியியல்
  3. அட்சரேகை
  4. கோணங்கள்

விடை : முக்கியமான

3. கலாச்சார நிலவரை படங்கள் என்பன ________________ அமைப்புகளைக் காட்டுகின்றன.

அ) இயற்கையான
ஆ) மனிதனால் உருவாக்கப்பட்ட
இ) செயற்கையான
ஈ) சுற்றுச்சூழல்

விடை : மனிதனால் உருவாக்கப்பட்ட

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1.  புவியியலாளர்களின் ஒரு முக்கிய கருவியாக ___________ அமைகிறது.

விடை : நிலவரைபடங்கள்

2. முதன்மை திசைகளுக்கு இடையே உள்ள திசைகள் இடைநிலை ___________ எனப்படும்.

விடை : திசைகள்

3. நிலவரைபடத்தில் உள்ள ___________ வரைபடத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள வண்ணங்கள் மற்றும் சின்னங்களை விளக்குகிறது.

விடை : குறியீடுகள்

4. காடாஸ்ட்ரல் நிலவரைபடங்கள் ___________ என அழைக்கப்படுகின்றன

விடை : கிராமம் மற்றும் நகரங்களின் வரைபடம்

5. சிறிய அளவை நிலவரைபடங்கள் ___________ மற்றும் ___________ போன்ற அதிக பரப்பளவு இடங்களைக் காட்ட உதவுகின்றன.

விடை : கண்டங்கள் / நாடுகள்

III. பொருந்தாதவற்றை வட்டமிட்டுக் காட்டுக.

1. வடகிழக்கு, அளவை, வடமேற்கு மற்றும் கிழக்கு.

விடை : அளவை

2. வெண்மை, பனி, உயர்நிலம் மற்றும் சமவெளி.

விடை : சமவெளி

3. நில அமைப்பு நிலவரைபடம், மண் நிலவரைபடம், இயற்கை அமைப்பு நிலவரைபடம் மற்றும் நிலவரைபட நூல்.

விடை : நிலவரைபட நூல்

4. வானிலை முன்னறிவிப்பு, காலநிலை, மழைவீழ்ச்சி மற்றும் வெப்பநிலை.

விடை : காலநிலை

IV. பொருத்துக

1. மேல் வலது மூலை அ. அடர்த்தி மற்றும் வளர்ச்சி
2. குறிப்பு ஆ. மாவட்டம் அல்லது நகரம்
3. பெரிய அளவை நிலவரைபடம் இ. இயற்கை நில அமைப்பு
4. இயற்கை அமைப்பு வரைபடம் ஈ. வண்ணங்கள் மற்றும் சின்னங்கள்
5. மக்கள் தொகை வரைபடம் உ. ‘N’ எழுத்து
விடை : 1 – உ, 2 – ஈ, 3 – ஆ, 4 – இ, 5 – அ

V. பின்வரும் கூற்றுகளை ஆய்வு செய்க.

i. நிலவரைபட நூல் என்பது பல வகைப்பட்ட நிலவரைபடங்கள் கட்டமைக்கப்பட்ட தொகுதி ஆகும்.
ii. நிலவரைபட நூலின் வரைபடங்கள் சிறிய அளவையில் வரையப்படுகின்றன.
iii. முக்கியமற்ற விவரங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.

  1. i மற்றும் iii சரி
  2. ii மற்றும் iii சரி
  3. i மற்றும் ii சரி
  4. i, ii மற்றும் iii சரி.

விடை : i, ii மற்றும் iii சரி.

2. கூற்று 1 : உலக உருண்டை என்பது புவியின் முப்பரிமாண மாதிரி.
கூற்று 2 : இதனை இது கையாள்வதற்கும், எடுத்துச் செல்வதற்கும் எளிது. சுருட்டியோ அல்லது மடித்தோ கையில் எடுத்துச் செல்வதற்கும் எளிது.

  1. கூற்று 1 சரி, 2 தவறு
  2. கூற்று 1 தவறு, 2 சரி
  3. இரண்டும் சரி
  4. இரண்டும் தவறு

விடை : கூற்று 1 சரி, 2 தவறு

பாடம்.3 இயற்கை இடர்கள் – பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல்

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1. பொருட்சேதம், உயிரிழப்பு மற்றும் சுற்றுச்சூழலில் பெரிய மாற்றத்தை நிகழ்த்தும் ஒரு இயற்கைக் காரணி _____________.

  1. இடர்
  2. பேரிடர்
  3. மீட்பு
  4. அ மற்றும் ஆ

விடை : அ மற்றும் ஆ

2. பேரிடரின் விளைவைக்குறைக்கும் செயல்பாடுகள்.

  1. தயார்நிலை
  2. பதில்
  3. மட்டுப்படுத்தல்
  4. மீட்பு நிலை

விடை : மட்டுப்படுத்தல்

3. ஒரு திடீர் நகர்வு அல்லது புவி மேலோட்டின் திடீர் நடுக்கம் _____________ என அழைக்கப்படுகிறது.

  1. சுனாமி
  2. புவி அதிர்ச்சி
  3. நெருப்பு
  4. சூறாவளி

விடை : புவி அதிர்ச்சி

4. கன மழையினால் திடீரென அதிக நீர் வெளியேறுதல் _____________ என அழைக்கப்படுகிறது.

  1. வெள்ளம்
  2. சூறாவளி
  3. வறட்சி
  4. பருவ காலங்கள்

விடை : வெள்ளம்

5. _____________ வைத்துள்ளோரை வாகனம் ஓட்ட அனுமதித்தால் சாலை விபத்தினைத் தவிர்க்கலாம்.

  1. ரேஷன் அட்டை
  2. ஓட்டுநர் உரிமம்
  3. அனுமதி
  4. ஆவணங்கள்

விடை : ஓட்டுநர் உரிமம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1.  மனிதனுக்கும், அவனுடைய உடமைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நிகழ்வு _______________.

விடை : இடர்

2. பேரிடரின் போது எடுக்கப்படும் நடவடிக்கைகள் ____________என அழைக்கப்படுகிறது.

விடை : பேரிடர் மேலாண்மை

3. மிகப்பெரிய அழிவு ஏற்படுத்தும் அலைகளை ஏற்படுத்தும் நீரின் இடப்பெயர்வு ______________ எனப்படும்.

விடை : சுனாமி

4. தீ விபத்து ஏற்பட்டால் அழைக்க வேண்டிய எண் _____________.

விடை : 101

5. இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கக்கூடிய பேரிடரின் போது மனித வாழ்க்கை மற்றும் உடைமைகளை __________ பேரிடர் மேலாண்மை எனப்படுகிறது.

விடை : பாதுகாப்பது

III.பொருத்துக

1. புவிஅதிர்ச்சி அ. இராட்சத அலைகள்
2. சூறாவளி ஆ. பிளவு
3. சுனாமி இ. சமமற்ற மழை
4. தொழிற்சாலை விபத்து ஈ. புயலின் கண்
5. வறட்சி உ. கவனமின்மை
விடை : 1 – ஆ, 2 – ஈ, 3 – அ, 4 – உ, 5 – இ

IV. பின்வரும் வாக்கியங்களை கருத்திற் கொண்டு சரியான விடையை செய்க.

1. கூற்று (A) : நவீன உலகத்தில் அனுதினமும் மகிழ்ச்சியாக வாழ முடியாது
காரணம் (R) : மாசடைதல் மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவின் காரணமாக இயற்கை இடை மற்றும் பேரிடரை சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

  1. கூற்று மற்றும் காரணம் சரி; கூற்று காரணத்தை விளக்குகிறது.
  2. கூற்று மற்றும் காரணம் சரி; கூற்று காரணத்தை விளக்கவில்லை
  3. கூற்று தவறு; காரணம் சரி.
  4. கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.

விடை : கூற்று மற்றும் காரணம் சரி; கூற்று காரணத்தை விளக்கவில்லை

2. கூற்று (A) : திடீர் நுகர்வு அல்லது பூமியின் மேலேட்டில் ஏற்படும் நடுக்கம் புவி அதிர்ச்சி ஆகும்
கூற்று (R) : டெக்டானிக் தட்டுகளின் நகர்வு, ஜனநெருக்கடி, பிளவு போன்றவை புவி அதிர்ச்சிக்கு வித்திடுகின்றன

  1. கூற்று மற்றும் காரணம் சரி; கூற்று காரணத்தை விளக்குகிறது.
  2. கூற்று மற்றும் காரணம் சரி; கூற்று காரணத்தை விளக்கவில்லை
  3. கூற்று தவறு; காரணம் சரி.
  4. கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.

விடை : கூற்று மற்றும் காரணம் சரி; கூற்று காரணத்தை விளக்கவில்லை

குடிமையியல்

பாடம்.1 பெண்கள் மேம்பாடு

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1. பின்வருவனவற்றில் எது பாலின சமத்துவமின்மை அல்ல?

  1. மோசமான பேறுகால ஆரோக்கியம்
  2. ஆண்களுக்கு அதிக பாதுகாப்பற்ற தன்மை
  3. எச்.ஐ.வி/எய்ட்ஸ் பரவுதல்
  4. பெண்களின் குறைந்த எழுத்தறிவு விகிதம்

விடை : ஆண்களுக்கு அதிக பாதுகாப்பற்ற தன்மை

2. பாலின சமத்துவம் என்பது எது தொடர்புடைய பிரச்சனை

  1. பெண்குழந்தைகள்; பெண்களின் பிரச்சனை
  2. அனைத்து சமூகத்திலும் பெண்களும் ஆண்களும் சமம்,
  3. மூன்றாம் உலக நாடுகள் மட்டும்
  4. வளர்ந்த நாடுகள் மட்டும் மதிப்பீடு

விடை : அனைத்து சமூகத்திலும் பெண்களும் ஆண்களும் சமம்,

3. பெண்கள் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக மேம்பட பின்வரும் எந்த உத்திகள் உதவுகின்றது?

  1. பாகுபாடுகளுக்கு எதிரான சவால்களுக்கு பெண்கள் இணைந்து பணியாற்றுகின்றனர்.
  2. பெண்களுக்கான அதிகமான வருமான ஆதாரங்கள்
  3. மேம்பட்ட கல்விக்கான அணுகுமுறை
  4. மேலே உள்ள அனைத்தும்

விடை : மேலே உள்ள அனைத்தும்

4. வளரும் நாடுகளில் சிறுவர்களைவிட பெண்குழந்தைகள் இடைநிலைக் கல்வியை தவற விடுவது ஏன்?

  1. பள்ளிக் கல்வி கட்டணம் உயர்வு காரணமாக, சிறுவர்கள் மட்டும் பள்ளிக்கு அனுப்பப்படுகிறார்கள்
  2. பெண்குழந்தைகள் வீட்டுவேலை செய்ய எதிர்பார்க்கப்படுகிறது
  3. குழந்தைத் திருமணம் அவர்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துகிறது
  4. மேலே உள்ள அனைத்தும்

விடை : பெண்குழந்தைகள் வீட்டுவேலை செய்ய எதிர்பார்க்கப்படுகிறது

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1.  இந்தியாவில் பெண்கள் கல்வியை செயல்வடிவாக்கிய ஜோதிராவ் புலே நினைவில் வைக்கப்படுகிறார் அவர், தனது மனைவியுடன் _______________ 1848 இல் சிறுமிகளுக்கான முதல் பள்ளியைத் தொடங்கினார்

விடை : சாவித்திரிபாய் பூலே

2. மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பதவி வகித்த முதல் பெண் ____________

விடை : சுஷ்மன் ஸ்வராஜ்

3. முதல் பெண் காவல்துறை இயக்குநர் (DGP) ______________ ஆவார்

விடை : காஞ்சன் செளத்ரி பட்டாச்சாரியா

4. புக்கர் பரிசை வென்ற முதல் இந்திய பெண் _____________.

விடை : அருந்ததி ராய்

III. பொருத்துக

1. சிரிமாவோ பண்டாரநாயக அ. இங்கிலாந்து
2. வாலென்டினா தெரோஷ்கோவா ஆ. ஜப்பான்
3. ஜன்கோ தபே இ. இலங்கை
4. சார்லோட் கூப்பர் ஈ. சோவியத் ஒன்றியம்
விடை : 1 – இ, 2 – ஈ, 3 – ஆ, 4 – அ

IV. பின்வரும் அறிக்கைகளை ஆராய்க.

1. கூற்று : இப்போது அனைத்து மனிதாபிமான நடவடிக்கைகள் அனைத்திலும் பெண்கள் ஒருங்கிணைகிறார்கள்.
காரணம் : சமூகத்தின் அனைத்து மோதல்களிலும் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றார்கள்.

  1. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும்
  2. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல.
  3. கூற்று சரி ஆனால் காரணம் தவறு
  4. கூற்று தவறானது ஆனால் காரணம் சரி

விடை : கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும்

2. கூற்று : பெண்களுக்கு எதிரான வன்முறை சாதி, மதம், வர்க்கம், வயது மற்றும் கல்வியை கடந்து நடைபெறுகிறது
கூற்று : வீட்டு வன்முறைகள், கருக்கலைப்பு, பெண்சிசுக் கொலை, வரதட்சணை கொலை, திருமணம் மூலம் கொடுமை, சிறுவருக்கு நிகழும் கொடுமைகள் என வெளிப்படுகிறது

  1. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும்
  2. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல.
  3. கூற்று சரி ஆனால் காரணம் தவறு
  4. கூற்று தவறானது ஆனால் காரணம் சரி

விடை : கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல.

பாடம்.2 சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1. எந்தவொரு சந்தர்ப்பத்தில் ஒரு நுகர்வோர் குறைபாடுள்ள தயாரிப்புக்காக உற்பத்தியாளருக்கு எதிராக புகார் செய்ய முடியாது?

  1. காலாவதியாகும் தரவு குறிப்பிடப்படாதது
  2. பொருட்களின் விலை
  3. பொருட்களின் தொகுதி எண்
  4. உற்பத்தியாளரின் முகவரி

விடை : பொருட்களின் தொகுதி எண்

2. உற்பத்தியாளரின் முடிவில் இருந்து நுகர்வோர் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்?

  1. நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள்
  2. பரந்த அளவிலான பொருட்கள்
  3. நிலையான தரமான பொருட்கள்
  4. உற்பத்தியின் அளவு

விடை : நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள்

3. நுகர்வோருக்கு ஒரு பொருட்கள் தயாரிப்பு பற்றிய போதுமான தகவல்கள் வழங்கப்பட வேண்டும்

  1. உற்பத்தியின் முதலீடு
  2. பொருட்கள் விற்பனையில் முடிவு
  3. கடனில் பொருட்கள் வாங்குதல்
  4. பொருட்கள் வாங்குவதில் முடிவு

விடை : பொருட்கள் வாங்குவதில் முடிவு

4. தேசிய, மாநில மற்றும் மாவட்டங்களில் உள்ள நுகர்வோர் நீதிமன்றங்களின் அமைப்பு, வணிகர்களின் நியாயமானதை வர்த்தக நடைமுறைகளுக்கு எதிரான நுகர்வோர் குறைகளை ஆராய்வது என அழைக்கப்படுகிறது

  1. மூன்று அடுக்கு அமைப்பு
  2. ஒரு அடுக்கு அமைப்பு
  3. இரு அடுக்கு அமைப்பு
  4. நான்கு அடுக்கு அமைப்பு

விடை : மூன்று அடுக்கு அமைப்பு

5. தரம் குறைவான பிற வெளிப்புற பொருள்களை ஒரு உயர்ந்த தரமான பொருளுடன் கலப்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

  1. தூய்மையாக்கல்
  2. கலப்படம்
  3. சுத்திகரிப்பு
  4. மாற்றம்

விடை : கலப்படம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட _______ பொருட்கள் சேவைகள் மற்றும் தகவல்களின் ஈடுபடும் ஒரு சந்தை என்று அழைக்கப்படுகிறது.

விடை : அமைப்புகள்

2. ஒழுங்குப்படுத்தப்பட்ட சந்தைகளில், பொருத்தமான __________ அதிகாரிகளால் சில மேற்பார்வை உள்ளது.

விடை : அரசாங்க

3. _____________ என்பது ஒரு சந்தை கட்டமைப்பைக் குறிக்கிறது, அதில் முழு உற்பத்தியிலும் ஒரு கட்டுப்பாட்டைக் கொண்ட ஒரு ஒற்றைதயாரிப்பு அல்லது விற்பனையாளராக இருக்கிறார்.

விடை : முற்றுரிமை

4. _____________ நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை சரிபார்க்க நுகர்வோர் பாதுகாப்பு துறையின். மகா சாசனம் என்று கருதப்படுகிறது.

விடை : நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்

III. பொருத்துக

1. நுகர்வோர் உற்பத்தி சட்டம் அ. 1955
2. சட்ட பூர்வமான அளவீட்டு சட்டம் ஆ. 1986
3. இந்திய தர நிர்ணய பணியகம் இ. 2009
4. அத்தியாவசிய பொருட்கள் சட்டம் ஈ. 1986
விடை : 1 – ஆ, 2 – இ, 3 – ஈ, 4 – அ

IV. பின்வரும் அறிக்கைகளை ஆராய்க.

1. கூற்று : உள்ளூர் சந்தைகளில் வாங்குபவர்களும் விற்பவர்களும் உள்ளூர் பகுதி பகுதியை சேர்ந்தோர் அல்லது மட்டுமே.
காரணம் : ஒரு சந்தை இயற்க்கை இடம் அல்லது புவியியல் இருப்பிடத்திற்கு கட்டுப்படுத்தப்படவில்லை

  1. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும்
  2. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல.
  3. கூற்று சரி ஆனால் காரணம் தவறு
  4. கூற்று தவறானது ஆனால் காரணம் சரி

விடை : கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல.

பாடம்.3 சாலைப் பாதுகாப்பு

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1. சாலைப்பாதுகாப்பு என்பது இவர்களுக்கானது

  1. வழிப்போக்கர்கள்
  2. ஓட்டுநர்கள்
  3. பொதுமக்கள்
  4. சாலையைப் பயன்படுத்துவோர் அனைவருக்கும்

விடை : சாலையைப் பயன்படுத்துவோர் அனைவருக்கும்

2. சாலை விபத்துகள் ஒரு நாட்டின் ________________ பாதிக்கின்றன

  1. முன்னேற்றத்தை
  2. வாழ்வை
  3. பொருளாதாரத்தை
  4. மேற்கூறிய அனைத்தையும்

விடை : மேற்கூறிய அனைத்தையும்

3. அனுமதி என்பது

  1. இயக்குவதற்கு அனுமதி
  2. பொருள்களை எடுத்துச் செல்ல அனுமதி
  3. ஓட்டுநருக்கு சான்றிதழ்
  4. வாகனத்தை பதிவு செய்த சான்றிதழ்

விடை : இயக்குவதற்கு அனுமதி

4. ரக்ஷா பாதுகாப்பு

  1. பாதசாரிகள்
  2. மோட்டார் வாகன ஓட்டிகள்
  3. கார் இயக்குபவர்கள்
  4. பயணிகள்

விடை : கார் இயக்குபவர்கள்

5. இந்தியாவில் சாலைப் பாதுகாப்பு வாரம் முதன்முதலாகக் கொண்டாடப்பட்ட வருடம்

  1. 1947
  2. 1990
  3. 1989
  4. 2019

விடை : 1989

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. போக்குவரத்தில் மனிதனின் மிக பயனுள்ள கண்டுபிடிப்பு ___________ ஆகும்.

விடை : சக்கரம்

2. நமது வாழ்க்கைப் பயணத்தில் ___________ யைப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாததாகும்.

விடை : வாகனங்களை

3. சாலைகளில் அதிகமான வாகனங்களால் ___________ மற்றும் ___________ மாசுபாடும் ஏற்படுகின்றன.

விடை : போக்குவரத்து நெரிசலும் மற்றும் காற்று

4. ___________ குடும்பத்திற்கு வருமானம் ஈட்டித் தருபவர் ஆவார்

விடை : குடும்பத்தலைவன்

5. மருத்துவ உதவியின் அவசர தேவைக்கு ___________ எண்ணை அழைக்கலாம்.

விடை : 108

III. பொருத்துக

1. தகவல் குறியீடுகள் அ. போக்குவரத்து விளக்குகள்
2. வரிக்குதிரை கடப்பு ஆ. குறுகிய வளைவு குறியீடு
3. கட்டாயக் குறியீடுகள் இ. பெட்ரோல் பங்க் குறியீடு
4. எச்சரிக்கைக் குறியீடுகள் ஈ. ஓட்டுநர் உரிமம்
5. வாகனம் ஓட்டும் உரிமை உ. பாதசாரிகள்
விடை : 1 – இ, 2 – உ, 3 – அ, 4 – ஆ, 5 – ஈ

IV. பின்வரும் அறிக்கைகளை ஆராய்க. 

1. கூற்று : கார் பூலிங் என்பது ஒரே தடத்திலிருந்து பலர் ஒன்றுகூடி ஒரே வாகனத்தைப் பயன்படுத்துவது.
காரணம் : அது எரிபொருள், நேரம் மற்றும் பணத்தை மிச்சப்படுத்துகிறது

  1. கூற்று சரி, காரணம் தவறு
  2. கூற்று சரி, காரணமும் சரி
  3. கூற்று தவறு, காரணம் சரி
  4. இரண்டுமே தவறு

விடை : கூற்று சரி, காரணமும் சரி

V. பொருத்தமில்லாத ஒன்றைக் கண்டுபிடி.

  1. கார்
  2. டிரக்
  3. டெம்போ
  4. ஏரோப்ளேன்

விடை : ஏரோப்ளேன்

VI. கூற்றுகளில் சரியானவற்றை கண்டுபிடி.

அ) பள்ளிப் பாடத்திட்டத்தில், சாலைப் பாதுகாப்புக் கல்வியை இணைப்பது மாணவர்களுக்கு மேலும் சுமையை அதிகரிப்பதே ஆகும்.
ஆ) சாலைகளில் மண் குவிப்பதைத் தடை செய்ய வேண்டும்.
இ) குழந்தைப்பருவத்திலிருந்தே சாலைப் பாதுகாப்பு விதிகளைக் கடைப்பிடித்தல், பிற்காலத்தில் அவர்களது பழக்க வழக்கமாகிவிடும்.

விடை : அ மற்றும் இ

பொருளியியல்

பாடம்.10 வரி மற்றும் அதன் முக்கியத்துவம்

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1. வரிகள் என்பவை ___________ செலுத்தப்பட வேண்டும்.

  1. விருப்பத்துடன்
  2. கட்டாயமாக
  3. அ மற்றும் ஆ
  4. இவற்றில் எதுவுமில்லை

விடை : கட்டாயமாக

2. வசூலிக்கப்படும் வரியிலிருந்து குறைந்த அளவிலேயே தொகை செலவழிக்கப்படுவது ___________ 

  1. சமத்துவ விதி
  2. உறுதிப்பாட்டு விதி
  3. சிக்கன விதி
  4. வசதி விதி

விடை : சிக்கன விதி

3. வளர்வீத வரிக்கு எதிராக அமைந்துள்ள வரி ___________

  1. விகிதச்சாரா வரி
  2. தேய்வுவீத வரி
  3. அ மற்றும் ஆ
  4. இவற்றில் எதுவுமில்லை

விடை : தேய்வுவீத வரி

4. வருமான வரி என்பது ___________

  1. நேர்முக வரி
  2. மறைமுக வரி
  3. அ மற்றும் ஆ
  4. இவற்றில் எதுவுமில்லை

விடை : நேர்முக வரி

5. சேவை வழங்குவதன் அடிப்படையில் விதிக்கப்படுவது ___________ 

  1. செல்வ வரி
  2. நிறுவன வரி
  3. விற்பனை வரி
  4. சேவை வரி

விடை : சேவை வரி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. வழக்கமாக, அரசால் விதிக்கப்படும் வரியையே ——–என்னும் சொல்லால் குறிக்கிறோம்.

விடை : வரி விதிப்பு

2. வருமான அளவைப் பொருட்படுத்தாமல் ஒரே மாதிரியாக வரி விதிப்பது ———.

விடை : விகிதாச்சார வரி

3. ___________ வரி என்பது, அன்பளிப்பின் மதிப்பைப் பொருத்து, அன்பளிப்பு பெறுபவர் அரசுக்குச் செலுத்துவதாகும்.

விடை : அன்பளிப்பு

4.  ___________ வரிச்சுமையை வரி செலுத்துவோர் மாற்ற முடியாது.

விடை : நேரடியாக

5.  மறைமுக வரி என்பது ___________ நெகிழ்ச்சி உடையது.

விடை : அதிக

III. பொருத்துக

1. வரி விதிப்புக் கொள்கை அ. நேர்முக வரி
2. சொத்து வரி ஆ. சரக்கு மற்றும் சேவை வரி
3. சுங்கவரி இ. ஆடம்ஸ்மித்
4. 01.07.2017 ஈ. குறைந்த நெகிழ்ச்சி உடையது
5. நேர்முக வரி உ. மறைமுக வரி
விடை : 1 – இ, 2 – அ, 3 – உ, 4 – ஆ, 5 – ஈ

IV. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.

1. பின்வருவனவற்றில் எது மறைமுக வரி அல்ல?

  1. சேவை வரி
  2. மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT)
  3. சொத்துவரி
  4. சுங்கவரி

விடை : சொத்துவரி

V. சரியான ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.

1. பின்வரும் வரியில் எது நேர்முக வரி?

  1. சேவை வரி
  2. செல்வ வரி
  3. விற்பனை வரி
  4. வளர் விகித வரி

விடை : செல்வ வரி

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment