8th Standard Tamil Book 1st Term Solution 2022
Hello my dear students, on this page we covered 8th Standard Tamil Book 1st Term questions. You can find the 8th std New Book Solution here. This page would be more helpful for school students as well as TNPSC aspirants.
The 8th 1st Term Tamil has three chapters. we have given a solution for all those three-chapter below.
Table of content
1. தமிழ் இன்பம்
2. ஈடில்லா இயற்கை
3. உடலை ஓம்புமின்
1.தமிழ் இன்பம்
1.1 தமிழ்மொழி வாழ்த்து
சொல்லும் பொருளும்
- நிரந்தரம் – காலம் முழுமையும்
- வண்மொழி – வளமிக்கமொழி
- வைப்பு – நிலப்பகுதி
- இசை – புகழ்
- சூழ்கலி – சூழ்ந்துள்ள அறியாமை இருள்
- தொல்லை – பழமை, துன்பம்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல் _____.
- வைப்பு
- கடல்
- பரவை
- ஆழி
2. என்றென்றும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______ ( என்றென்றும் பிரித்து எழுதுக )
- என் + றென்றும்
- என்று + என்றும்
- என்றும் + என்றும்
- என் + என்றும்
3. ‘வானமளந்தது’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______.
- வான + மளந்தது
- வான் + அளந்தது
- வானம் + அளந்தது
- வான் + மளந்தது
4. அறிந்தது + அனைத்தும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.
- அறிந்ததுஅனைத்தும்
- அறிந்தனைத்தும்
- அறிந்ததனைத்தும்
- அறிந்துனைத்தும்
5. வானம் + அறிந்த என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.
- வானம்அறிந்து
- வான்அறிந்த
- வானமறிந்த
- வான்மறிந்
தமிழ்மொழி வாழ்த்து – இப்பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எடுத்தெழுதுக.
- வாழ்க –வாழிய
- எங்கள் –என்றென்றும்
- வண்மொழி –வளர்மொழி
- அகன்று –அறிந்த
1.2 தமிழ்மொழி மரபு
சொல்லும் பொருளும்
- விசும்பு – வானம்
- மரபு – வழக்கம்
- மயக்கம் – கலவை
- திரிதல் – மாறுபடுதல்
- இருதிணை – உயர்திணை, அஃறிணை
- செய்யுள் – பாட்டு
- வழாஅமை – தவறாமை
- தழாஅல் – தழுவுதல் (பயன்படுத்துதல்)
- ஐம்பால் – ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. பறவைகள் _________ பறந்து செல்கின்றன.
- நிலத்தில்
- விசும்பில்
- மரத்தில்
- நீரில்
2. இயற்கையைப் போற்றுதல் தமிழர் __________.
- மரபு
- பொழுது
- வரவு
- தகவு
3. ‘இருதிணை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________.
- இரண்டு + திணை
- இரு + திணை
- இருவர் + திணை
- இருந்து + திணை
4. ‘ஐம்பால்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________.
- ஐம் + பால்
- ஐந்து + பால்
- ஐம்பது + பால்
- ஐ + பால்
இளமைப் பெயர்கள்
- புலி -பறழ்
- சிங்கம் -குருளை
- யானை -கன்று
- பசு -கன்று
- கரடி -குட்டி
ஒலி மரபு
- புலி -உறுமும்
- சிங்கம் -முழங்கும்
- யானை -பிளிறும்
- பசு -கதறும்
- கரடி -கத்தும்
1.3 தமிழ் வரிவடிவ வளர்ச்சி
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக?
1. தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற _____ காரணமாக அமைந்தது?
- ஓவியக்கலை
- இசைக்கலை
- அச்சுக்கலை
- நுண்கலை
2. வளைந்த கோடுகளால் அமைந்த மிகப்பழைய தமிழ் எழுத்து ______ என அழைக்கப்படுகிறது?
- கோட்டெழுத்து
- வட்டெழுத்து
- சித்திர எழுத்து
- ஓவிய எழுத்து
3. தமிழ் எழுத்துச் சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டவர் _____.
- பாரதிதாசன்
- தந்தை பெரியார்
- வ.உ. சிதம்பரனார்
- பெருஞ்சித்திரனார்
கோடிட்ட இடத்தை நிரப்புக.
1. கடைச்சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழ் எழுத்துகள் கண்ணெழுத்துக்கள் என
அழைக்கப்பட்டன.
2. எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களைக் களைந்தவர் விரமாமுனிவர்
1.4 எழுத்துகளின் பிறப்பு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. இதழ்களைக் குவிப்பதால் பிறக்கும் எழுத்துகள் _____
- இ, ஈ
- உ, ஊ
- எ, ஏ
- அ, ஆ
2. ஆய்த எழுத்து பிறக்கும் இடம் ______
- மார்பு
- கழுத்து
- தலை
- மூக்கு
3. வல்லின எழுத்துகள் பிறக்கும் இடம் _____
- தலை
- மார்பு
- மூக்கு
- கழுத்து
4. நாவின் நுனி அண்ணத்தின் நுனியைப் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள் _____
- க், ங்
- ச், ஞ்
- ட், ண்
- ப், ம்
5. கீழ்இதழும் மேல்வாய்ப்பல்லும் இணைவதால் பிறக்கும் எழுத்து _____
- ம்
- ப்
- ய்
- வ்
பொருத்துக
- க், ங் – நாவின் முதல், அண்ணத்தின் அடி
- ச், ஞ் –நாவின் இடை, அண்ணத்தின் இடை
- ட், ண் –நாவின் நுனி,அண்ணத்தின் நுனி
- த், ந் – நாவின் நுனி, மேல்வாய்ப்பல்லின் அடி
மரபுத் தொடர்கள்: பறவைகளின் ஒலிமரபு
- ஆந்தை அலறும்
- குயில் கூவும்
- மயில் அகவும்
- காகம் கரையும்
- கோழி கொக்கரிக்கும்
- கிளி பேசும்
- சேவல் கூவும்
- புறா குனுகும்
- கூகை குழறும்
- தொகை மரபு
- மக்கள் கூட்டம்
- ஆநிரை
- ஆட்டு மந்தை
வினைமரபு
- சோறு உண்
- தண்ணீர் குடி
- பூக் கொய்
- முறுக்குத் தின்
- பால் பருகு
- இலை பறி
- சுவர் எழுப்பு
- கூடை முடை
- பானை வனை
ஒரு சொல் ஒரே தொடரில் பல பொருள் தருமாறு எழுதுக
(எ.கா.) அணி – பல அணிகளை அணிந்த வீரர்கள், அணிஅணியாய்ச் சென்றனர்.
- படி _என் அம்மா ,படத்தை புரியும்படி படிக்க சொன்னதால் நான் படிக்கட்டில் அமர்ந்து படம் படித்தேன்
- திங்கள் __ஒரு திங்களுக்கு ஒரு முறை தான் வானத்தில் முழு வடிவில் திங்கள் பௌர்ணமியாக காட்சி தரும் .இன்று திங்கள் கிழமை ஆகும்
- ஆறு _இன்று காலை ஆறு மணிக்கு என் தந்தை எனக்கு இட்ட ஆறு பணிகளை செய்திடப் புறப்பட்டேன் ஊருக்கு வெளிய காவிரி ஆறு ஓடியது
சொற்களை ஒழுங்குபடுத்தி முறையான தொடராக்குக.
1. வட்டெழுத்து எனப்படும் தமிழ் கோடுகளால் வளைந்த அமைந்த எழுத்து
விடை: வளைந்த கோடுகளால் அமைந்த எழுத்து தமிழ் வட்டெழுத்து எனப்படும்
2. உலகம் தமிழ்மொழி வாழட்டும் உள்ளவரையிலும்.
விடை: உலகம் உள்ளவரையிலும் தமிழ்மொழி வாழட்டும்
3. வென்றதை பரணி பகைவரை ஆகும் பாடும் இலக்கியம்.
விடை: பகைவரை வென்றதை பாடும் இலக்கியம்பரணி ஆகும்.
4.கழுத்து பிறக்கும் இடம் உயிரெழுத்து ஆகும்.
விடை: உயிரெழுத்து பிறக்கும் இடம் கழுத்து ஆகும்.
5. ஏகலை கலையை அம்புவிடும் தமிழ் என்றது.
விடை: அம்புவிடும் கலையை தமிழ் ஏகலை என்றது.
கலைச்சொல் அறிவோம்.
- ஒலிப்பிறப்பியல் – Articulatory phonetics
- உயிரொலி – Vowel
- மெய்யொலி – Consonant
- அகராதியியல் – Lexicography
- மூக்கொலி – Nasal consonant sound
- ஒலியன் – Phoneme
- கல்வெட்டு – Epigraph
- சித்திர எழுத்து – Pictograph
இயல் – 2: ஈடில்லா இயற்கை
2.1 ஓடை
சொல்லும் பொருளும்
- தூண்டுதல் – ஆர்வம்கொள்ளுதல்
- பயிலுதல் – படித்தல்
- ஈரம் – இரக்கம்
- நாணம் – வெட்கம்
- முழவு – இசைக்கருவி
- செஞ்சொல் – திருந்தியசொல்
- நன்செய் – நி்றைந்தை நீர்வளத்தோடு பயிர்கள் விளையும் நிலம்
- புன்செய் – கு்றைந்தை நீரொல் பயிர்கள் விளையும் நிலம்
- வள்ளைப்பாட்டு -நெல்குத்தும் போது பாடப்படும் பாடல்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. பள்ளிக்குச் சென்று கல்வி __________ சிறப்பு.
- பயிலுதல்
- பார்த்தல்
- கேட்டல்
- பாடுதல்
2. செஞ்சொல் மாதரின் வள்ளைப்பாட்டிற்கேற்ப முழவை மீட்டுவது ________.
- கடல்
- ஓடை
- குளம்
- கிணறு
3. ‘நன்செய்’ – என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________.
- நன் + செய்
- நன்று + செய்
- நன்மை + செய்
- நல் + செய்
4. ‘நீளுழைப்பு’ – என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________.
- நீளு + உழைப்பு
- நீண் + உழைப்பு
- நீள் + அழைப்பு
- நீள் + உழைப்பு
5. சீருக்கு + ஏற்ப – என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் __________.
- சீருக்குஏற்ப
- சீருக்கேற்ப
- சீர்க்கேற்ப
- சீருகேற்ப
6. ஓடை + ஆட – என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _________.
- ஓடைஆட
- ஓடையாட
- ஓடையோட
- ஓடைவாட
2.2 கோணக்காத்துப் பாட்டு
சொல்லும் பொருளும்
- முகில் – மேகம்
- வின்னம் – சேதம்
- கெடிகலங்கி – மிக வருந்தி
- வாகு – சரியாக
- சம்பிரமுடன் – முறையாக
- காலன் – எமன்
- சேகரம் – கூட்டம்
- மெத்த – மிகவும்
- காங்கேய நாடு – கொங்குமண்டலத்தின் 24 நாடுகளுள் ஒன்று
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. வானில் கரு _____ தோன்றினால் மழை பொழியும் என்பர்.
- முகில்
- துகில்
- வெயில்
- கயல்
2. முறையான உடற்பயிற்சியும் சரிவிகித உணவும் _____யும் ஓட்டிவிடும்.
- பாலனை
- காலனை
- ஆற்றலை
- நலத்தை
3. ‘விழுந்ததங்கே’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.
- விழுந்த + அங்கே
- விழுந்த + ஆங்கே
- விழுந்தது + அங்கே
- விழுந்தது + ஆங்கே
4. ‘செத்திறந்த’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.
- செ + திறந்த
- செத்து + திறந்த
- செ + இறந்த
- செத்து + இறந்த
5. பருத்தி + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.
- பருத்திஎல்லாம்
- பருத்தியெல்லாம்
- பருத்தெல்லாம்
- பருத்திதெல்லாம்
2.3 நிலம் பொது
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. செவ்விந்தியர்கள் நிலத்தைத் _____ மதிக்கின்றனர்.
- தாயாக
- தந்தையாக
- தெய்வமாக
- தூய்மையாக
2. ‘இன்னோசை ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.
- இன் + ஓசை
- இனி + ஓசை
- இனிமை + ஓசை
- இன் + னோசை
3. பால் + ஊறும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.
- பால்ஊறும்
- பாலூறும்
- பால்லூறும்
- பாஊறும்
தொடரில் அமைத்து எழுதுக.
1. வேடிக்கை: குழந்தை விளையாடுவதை தந்தை வேடிக்கையாக பார்த்துக்கொண்டிருந்தார்
2. உடன்பிறந்தார்: தர்மன் தன் உடன்பிறந்தார் உடன் மிகுந்த அன்புவைத்திருந்தான்
2.4 வினைமுற்று
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. மாடு வயலில் புல்லை மேய்ந்தது. – இத்தொடரிலுள்ள வினைமுற்று _____.
- மாடு
- வயல்
- புல்
- மேய்ந்தது
2. பின்வருவனவற்றுள் இறந்தகால வினைமுற்று _____.
- படித்தான்
- நடக்கிறான்
- உண்பான்
- ஓடாது
3. பின்வருவனவற்றுள் ஏவல் வினைமுற்றுச் சொல் _____.
- செல்க
- ஓடு
- வாழ்க
- வாழிய
வண்ணமிடப்பட்டுள்ள எண்களுக்குரிய தமிழ் எண்களை எழுதுக
- உலக ஈர நில நாள் பிப்ரவரி 2. உ
- உலக ஓசோன் நாள் செப்டம்பர் 16. க௬
- உலக இயற்கை நாள் அக்டோபர் 3. ௩
- உலக வனவிலங்கு நாள் அக்டோபர் 6. ௬
- உலக இயற்கைச் சீரழிவுத் தடுப்பு தினம் அக்டோபர் 5. ௫
கொடுக்கப்பட்டுள்ள தொடர்களின் வகையைக் கண்டறிந்து எழுதுக.
- முக்காலமும் உணர்ந்தவர்கள் நம் முன்னோர்கள். செய்தி தொடர்
- கடமையைச் செய். விழைவுத் தொடர்
- பாரதியார் பாடல்களின் இனிமைதான் என்னே!உணர்ச்சித் தொடர்
- நீ எத்தனை புத்தகங்களைப் படித்திருக்கிறாய்?வினாத்தொடர்
தொடர்களை மாற்றுக.
(எ.கா.) நேற்று நம் ஊரில் மழை பெய்தது. (வினாத்தொடராக மாற்றுக.)
நேற்று நம் ஊரில் மழை பெய்ததா?
1. காடு மிகவும் அழகானது. (உணர்ச்சித் தொடராக மாற்றுக.)
விடை : என்னே! காட்டின் அழகு!
2. ஆ! பூனையின் காலில் அடிபட்டுவிட்டதே! (செய்தித்தொடராக மாற்றுக.)
விடை : பூனை காலில் அடிபட்டுவிட்டது
3. அதிகாலையில் துயில் எழுவது நல்லது. (விழைவுத் தொடராக மாற்றுக.)
விடை : அதிகாலையில் துயில் எழு
4. முகில்கள் திரண்டால் மழை பெய்யும் அல்லவா? (செய்தித்தொடராக மாற்றுக.)
விடை : முகில்கள் திரண்டால் மழை பெய்யும்
5. காட்டில் புலி நடமாட்டம் உள்ளது. (வினாத்தொடராக மாற்றுக.)
விடை : காட்டில் புலி நடமாட்டம் உள்ளதோ ?
2.5 திருக்குறள்
சரியானதை தேர்ந்தெடுத்து எழுதுக.
1. புகழொலும் பழியொலும் அறியப்படுவது _____.
- அடக்கமுடைமை
- நாணுடைமை
- நடுவு நிலைமை
- பொருளுடைமை
2. பயனில்லாத களர்நிலத்திற்கு ஒப்பானவர்கள் _____.
- வலிமையற்றவர்
- கல்லாதவர்
- ஒழுக்கமற்றவர்
- அன்பில்லாதவர்
3.‘வல்லுருவம்’ என்னும் சொல்லை பிரித்து எழுதக் கி்டப்பது _____.
- வல் + உருவம்
- வன்மை + உருவம்
- வல்ல + உருவம்
- வல்லு + உருவம்
4. நெடுமை + தேர் என்பதை்சேர்த்து எழுத கி்டக்கும் சொல் _____.
- நெடுதேர்
- நெடுத்தேர்
- நெடுந்தேர்
- நெடுமைதேர்
5. ‘வருமுன்னர்’ எனத் தொடங்கும் குறளில் பயின்று வந்துள்ள அணி _____.
- எடுத்துக்காட்டு உவமை அணி
- தற்குறிப்பேற்று அணி
- உவமை அணி
- உருவக அணி
கோடிட்ட இடத்தை நிரப்புக.
1. வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்த மேய்ந் தற்று.
2. விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்
இயல் – 3: உடலை ஓம்புமின்
3.1 நோயும் மருந்தும்
சொல்லும் பொருளும்
- தீர்வன – நீங்குபவை
- திறத்தன – தன்மையுடையன
- உவசமம் – அடங்கி இருத்தல்
- கூற்றவா – பிரிவுகளாக
- நிழல்இகழும் – ஒளிபொருந்திய
- பூணாய் – அணிகலன்களை அணிந்தவளே
- பேர்தற்கு – அகற்றுவதற்கு
- பிணி – துன்பம்
- திரியோகமருந்து – மூன்று யோகமருந்து
- ஓர்தல் – நல்லறிவு
- தெளிவு – நற்காட்சி
- பிறவார் – பிறக்கமாட்டார்
சரியானதை தேர்ந்தெடுத்து எழுதுக
1. உடல் நலம் என்பது _______ இல்லாமல் வாழ்தல் ஆகும்.
- அணி
- பணி
- பிணி
- மணி
2. நீலகேசி கூறும் நோயின் வகைகள் ______.
- இரண்டு
- மூன்று
- நான்கு
- ஐந்து
3. ‘இவையுண்டார் ‘ என்னும் சொல்லை பிரித் து எழுதக் கி்டைப்பது _______.
- இ + யுணடொர்
- இவ் + உணடொர்
- இவை + உணடொர்
- இவை + யுணடொர்
4. தாம் + இனி என்பதை்சேர்த்து எழுத கி்டக்கும் சொல் _______.
- தாம் இனி
- தாம்மினி
- தாமினி
- தாமனி
3.2 வருமுன் காப்போம்
சொல்லும் பொருளும்
- நித்தம் நித்தம் -நாள்தோறும்
- வையம் – உலகம்
- மட்டு – அ்ளவு
- பேணுவயல் -பாதுகாத்தல்
- சுண்ட -நன்கு
- திட்டுமுட்டு -தடுமாற்றம்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. காந்தியடிகள் _____ போற்ற வாழ்ந்தார்.
- நிலம்
- வையம்
- களம்
- வானம்
2. ’நலமெல்லாம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.
- நலம் + எல்லாம்
- நலன் + எல்லாம்
- நலம் + எலாம்
- நலன் + எலாம்
3. இடம் + எங்கும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்_____.
- இடவெங்கும்
- இடம்எங்கும்
- இடமெங்கும்
- இடம்மெங்கும்
வருமுன்காப்போம் – இப்பாடலில் இடம்பெற்றுள்ள மோனை, எதுகை, இயைபுச் சொற்களை
எடுத்து எழுதுக.
மோனை
- உடலின் – உலகில்
- காலை – காற்று
- இடமும் – இனிய
- சுத்தமுள்ள – சுகமும்
- அருமை – அடையும்
- திட்டு – தினமும்
எதுகை
- உடலின் – இடமும்
- கூழை – ஏழை
- சுத்தமுள்ள – நித்தம்
- திட்டு – மட்டு
- அருமை – வருமுன்
- பட்டிடுவாய் – ஓட்டிவிடும்
இயைபு
- தினமும் – இடமும்
- கூழை – ஏழை
- ஓட்டிவிடும் – நித்தம்
- திட்டு – மட்டு
- குடியப்பா – உறங்கப்பா
- உணணாமல் – தின்பாயேல்
3.3 தமிழர் மருத்துவம்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. தொடக்க காலத்தில் மனிதர்கள் மருத்துவத்திற்கு _____ பயன்படுத்தினர்.
- தாவரங்களை
- விலங்குகளை
- உலோகங்களை
- மருந்துகளை
2. தமிழர் மருத்துவத்தில் மருந்து என்பது _____ நீட்சியாகவே உள்ளது.
- மருந்தின்
- உடற்பயிற்சியின்
- உணவின்
- வாழ்வின்
3. உடல் எடை அதிகரிப்பதால் ஏற்படும் நோய்களுள் ஒன்று _____.
- தலைவலி
- காய்ச்சல்
- புற்றுநோய்
- இரத்தக்கொதிப்பு
4. சமையலறையில் செலவிடும் நேரம் _____ செலவிடும் நேரமாகும்.
- சுவைக்காக
- சிக்கனத்திற்காக
- நல்வாழ்வுக்காக
- உணவுக்காக
3.4 தலைக்குள் ஓர் உலகம்
- சுஜாதாவின் இயற்பெயர்: ரங்கராஜன்
சுஜாதாவின் நூல்கள்
- என் இனிய எந்திரா
- மீண்டும் ஜீனோ
- ஸ்ரீரங்கத்து தேவதைகள்
- தூண்டில் கதைகள்
- தலைமைச்செயலகம்
3.5 இலக்கணம்: எச்சம்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் _____ எனப்படும்.
- முற்று
- எச்சம்
- முற்றெச்சம்
- வினையெச்சம்
2. கீழ்க்காணும் சொற்களில் பெயரெச்சம் _____.
- படித்து
- எழுதி
- வந்து
- பார்த்த
3. குறிப்பு வினையெச்சம் _____ வெளிப்படையாகக் காட்டாது.
- காலத்தை
- வினையை
- பண்பினை
- பெயரை
பொருத்துக
- நடந்து – முற்றெச்சம்
- பேசிய – குறிப்புப் பெயரெச்சம்
- எடுத்தனன் உண்டான் – பெயரெச்சம்
- பெரிய – வினையெச்சம்
விடை: 1.ஈ, 2.இ, 3.அ, 4.ஆ
கீழ்க்காணும் சொற்களைப் பெயரெச்சம், வினையெச்சம் என வகைப்படுத்துக.
நல்ல, படுத்து, பாய்ந்து, எறிந்த, கடந்து, வீழ்ந்த, மாட்டிய, பிடித்து, அழைத்த, பார்த்து.
பெயரெச்சம் : நல்ல, எறிந்த, வீழ்ந்த, மாட்டிய, அழைத்த
வினையெச்சம் : படுத்து, பாய்ந்து, கடந்து, பிடித்து, பார்த்து.
மொழியை ஆள்வோம்
பொருத்துக
- காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல – ஒற்றுமையின்மை
- கிணறு வெட்டப் பூதம் கிளம்பியது போல – பயனற்ற செயல்
- பசு மரத்து ஆணி போல – தற்செயல் நிகழ்வு
- விழலுக்கு இறைத்த நீர் போல – எதிர்பாரா நிகழ்வு
- நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினாற் போல – எளிதில் மனத்தில் பதிதல்
(விடை : 1.இ, 2.ஈ, 3.உ , 4.ஆ, 5.அ)
உவமைத் தொடர்களைப் பயன்படுத்தித் தொடர் அமைக்க.
1. குன்றின் மேலிட்ட விளக்கைப் போல
விடை: குன்றின் மேலிட்ட விளக்கைப் போல திருக்குறளின் புகழ் உலகமெங்கும் பரவியுள்ளது.
2. வேலியே பயிரை மேய்ந்தது போல
விடை: வேலியே பயிரை மேய்ந்தது போல நாட்டை காப்பாற்ற வேண்டிய தலைவர்களே மக்களை துன்புறுத்துகின்றன.
3. பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல
விடை: பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல பரிசுத் தொகையாக இலட்சம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தவனுக்குக் கோடி கிடைத்தது.
4. உடலும் உயிரும் போல
விடை: உடலும் உயிரும் போல கணவனும் மனைவியும் அன்போடு வாழ்ந்தன.
5. கிணற்றுத் தவளை போல
விடை: கிணற்றுத் தவளை போல மூடர்கள் தம் பேச்சினாலே தம் அறியாமையை வெளிப்படுத்தி விடுவர்.
கலைச்சொல் அறிவோம்.
- நோய் – Disease
- பக்கவிளைவு – Side Effect
- மூலிகை – Herbs
- நுண்ணுயிர் முறி – Antibiotic
- சிறுதானியங்கள் – Millets
- மரபணு – Gene
- பட்டயக் கணக்கர் – Auditor
- ஒவ்வாமை – Allergy
Related Links
Science
Very useful
Super very use ful
அறிந்தது+ அனைத்தும்
த்+உ வருமொழி முதலில் உயிர்வரின் உக்குறில் உயிர் விட்டு ஓடும் அறிந்ததனைத்தும் என்று தானே வரும் ஐயத்தை தெளிவுபடுத்தவும்
அறிந்ததனைத்தும் என்பதே சரியான விடை… நன்றி…
very nice!