Tamil Nadu 8th Standard 2nd Term Samacheer Kalvi Tamil Book Back Questions

8th Std 2nd Term Tamil Book Answers

Hello Students, You can get the 8th Standard 2nd Term Tamil Book Solution from here.

8th Std 2nd Term Tamil Book Solution

Table of content

1. கல்வி கரையில

2. குழலினிது யாழினிது

3.வையம்புகழ் வணிகம்




1. கல்வி கரையில

1.1 கல்வி அழகே அழகு

I. சொல்லும் பொருளும்

  • கலன் – அணிகலன்
  • முற்றை – ஒளிர

II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. கற்றவருக்கு அழகு தருவது ________.

  1. தங்கம்
  2. வெள்ளி
  3. வைரம்
  4. கல்வி

2. ‘கலனல்லால்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________.

  1. கலன் + லல்லால்
  2. கலம் + அல்லால்
  3. கலன் + அல்லால்
  4. கலன் + னல்லால்

III. சொற்றொடரில் அமைத்து எழுதுக.

  1. அழகு : அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
  2. கற்றவர் : கல்வி கற்றவர்கள் உலகில் சிறந்தவராய் விளங்குவார்கள்.
  3. அணிகலன் : மனிதனுக்கு கல்விதான் சிறந்த அணிகலன்

1.2. புத்தியைத் தீட்டு

I. சொல்லும் பொருளும்

  • தடம் – அடையாளம்
  • அகம்பாவம் – செருக்கு

II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. என் நண்பர் பெரும் புலவராக இருந்தபோதும் _____ இன்றி வாழ்ந்தார்.

  1. சோம்பல்
  2. அகம்பாவம்
  3. வருத்தம்
  4. வெகுளி

2. ‘கோயிலப்பா ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

  1. கோ + அப்பா
  2. கோயில் + லப்பா
  3. கோயில் + அப்பா
  4. கோ + இல்லப்பா

3. பகைவன் + என்றாலும் என்பதனைச் சேர்த்தெழுதக் கி்டைக்கும் சொல் _____.

  1. பகைவென்றாலும்
  2. பகைவனென்றாலும்
  3. பகைவன்வென்றாலும்
  4. பகைவனின்றாலும்

1.3. பல்துறைக் கல்வி

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. அறியாமையை நீக்கி அறிவை விளக்குவது _____.

  1. விளக்கு
  2. கல்வி
  3. விளையாட்டு
  4. பாட்டு

2. கல்விப் பயிற்சிக்குரிய பருவம் ______.

  1. இளமை
  2. முதுமை
  3. நேர்மை
  4. வாய்மை

3. இன்றைய கல்வி _____ நுழைவதற்குக் கருவியாகக் கொள்ளப்பட்டு வருகிறது.

  1. வீட்டில்
  2. நாட்டில்
  3. பள்ளியில்
  4. தொழிலில்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

  1. கலப்பில் வளர்ச்சி  உண்டென்பது இயற்கை நுட்பம்.
  2. புற உலக ஆராய்ச்சிக்கு அறிவியல் கொழுகொம்பு போன்றது.
  3. வாழ்விற்குரிய இன்பத்துறைகளில் தலையாயது காவிய இன்பம் ஆகும்.

III. பொருத்துக.

  1. இயற்கை ஓவியம் – சிந்தாமணி
  2. இயற்கை தவம் – பெரியபுராணம்
  3. இயற்கைப் பரிணாமம் – பத்துப்பாட்டு
  4. இயற்கை அன்பு – கம்பராமாயணம்

விடை : 1 – இ, 2 – அ, 3 – ஈ, 4 – ஆ 

1.4. வேற்றுமை

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவது _________ ஆகும்.

  1. எழுவாய்
  2. செயப்படுபொருள்
  3. பயனிலை
  4. வேற்றுமை

2. எட்டாம் வேற்றுமை ___________ வேற்றுமை என்று அழைக்கப்படுகிறது.

  1. எழுவாய்
  2. செயப்படுபொருள்
  3. விளி
  4. பயனிலை

3. உடனிகழ்ச்சிப் பொருளில் _____________ வேற்றுமை வரும்.

  1. மூன்றாம் 
  2. நான்காம்
  3. ஐந்தாம்
  4. ஆறாம்

4. ‘அறத்தான் வருவதே இன்பம்’ – இத்தொடரில் ________ வேற்றுமை பயின்று
வந்துள்ளது.

  1. இரண்டாம்
  2. மூன்றாம் 
  3. ஆறாம்
  4. ஏழாம்

5. ‘மலர் பானையை வனைந்தாள்’ – இத்தொடர் ________ பொருளைக் குறிக்கிறது.

  1. ஆக்கல் 
  2. அழித்தல்
  3. கொடை
  4. அடைதல்

II. பொருத்துக.

  1. மூன்றாம் வேற்றுமை – இராமனுக்குத் தம்பி இலக்குவன்.
  2. நான்காம் வேற்றுமை – பாரியினது தேர்.
  3. ஐந்தாம் வேற்றுமை – மண்ணால் குதிரை செய்தான்.
  4. ஆறாம் வேற்றுமை – ஏவுதல் கலையில் சிறந்தவன் ஏகலைவன்.

விடை : 1 – இ, 2 – அ, 3 – ஈ, 4 – ஆ 

III. கலைச்சொல் அறிவோம்.

  1. நிறுத்தக்குறி – Punctuation
  2. மொழிபெயர்ப்பு – Translation
  3. அணிகலன் – Ornament
  4. விழிப்புணர்வு – Awareness
  5. திறமை – Talent
  6. சீர்திருத்தம் – Reform




2. குழலினிது யாழினிது

2.1. திருக்கேதாரம்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. கொட்டிலிருந்து வந்த _____ கரும்பைத் தின்றன.

  1. முகில்கள்
  2. முழவுகள்
  3. வேழங்கள்
  4. வேய்கள்

2. ‘கனகச்சுனை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

  1. கனகச் + சுனை
  2. கனக + சுனை
  3. கனகம் + சுனை
  4. கனம் + சுனை

3. முழவு + அதிர என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைப்பது _____.

  1. முழவுதிர
  2. முழவுதிரை
  3. முழவதிர
  4. முழவுஅதிர

2.2. பாடறிந்து ஒழுகுதல்

I. சொல்லும் பொருளும்

  1. அலந்தவர் – வறியவர்
  2. கிளை – உறவினர்
  3. செறாஅமை – வெறுக்காமை
  4. பேதையார் – அறிவற்றவர்
  5. நோன்றல் – பொறுத்தல்
  6. மறாஅமை – மறவாமை
  7. போற்றார் – பகைவர்
  8. பொறை – பொறுமை

II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பசியால் வாடும் _____ உணவளித்தல் நமது கடமை.

  1. பிரிந்தவர்க்கு
  2. அலந்தவர்க்கு
  3. சிறந்தவர்க்கு
  4. உயர்ந்தவர்க்கு

2. நம்மை _____ப் மபொறுத்துக் கொள்ள வேண்டும்.

  1. இகழ்வாரை
  2. அகழ்வாரை
  3. புகழ்வாரை
  4. மகிழ்வாரை

3. மறைபொருளைக் காத்தல் _____ எனப்படும்.

  1. சிறை
  2. அறை
  3. கறை
  4. நிறை

4. ‘பாடறிந்து’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

  1. பாட் + அறிந்து
  2. பா + அறிந்து
  3. பாடு + அறிந்து
  4. பாட்டு + அறிந்து

5. முறை + எனப்படுவது என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

  1. முறையப்படுவது
  2. முறையெனப்படுவது
  3. முறைஎனப்படுவது
  4. முறைப்படுவது

2.3. நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பழந்தமிழ் இலக்கியங்களைப் பாதுகாத்து வைத்தவை ______.

  1. கல்வெட்டுகள்
  2. செப்பேடுகள்
  3. பனையோலைகள்
  4. மண்பாண்டங்கள்

2. பானை______ ஒரு சிறந்த கலையாகும்.

  1. செய்தல்
  2. வனைதல்
  3. முடைதல்
  4. சுடுதல்

3. ‘மட்டுமல்ல’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.

  1. மட்டு + மல்ல
  2. மட்டம் + அல்ல
  3. மட்டு + அல்ல
  4. மட்டும் + அல்ல

4. கயிறு + கட்டில் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

  1. கயிற்றுக்கட்டில்
  2. கயிர்க்கட்டில்
  3. கயிறுக்கட்டில்
  4. கயிற்றுகட்டில்

II. பின்வரும் சொற்களைச் சொற்றொடரில் அமைத்து எழுதுக.

1. முழுவதும்

விடை : பாடநூல் முழுவதும் வாசித்தால் தான் தெளிவு கிடைக்கும்

2. மட்டுமல்லாமல்

விடை : ஏட்டுக்கல்வி மட்டுமல்லாமல் தொழில் கல்வியும் கற்க வேண்டும்

3. அழகுக்காக

விடை : பூச்செடிகளை அழகுக்காக வீட்டின் முன் வளர்த்தேன்

4. முன்பெல்லாம்

விடை :  முன்பெல்லாம் விவசாயத்திற்கு காளை மாடுகளை அதிகமாக பயன்படுத்தினர்

2.4. தொகைநிலை, தொகாநிலைத் தொடர்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. சொற்களுக்கு இடையே வேற்றுமை உருபு மறைந்து வருவது _____.

  1. வேற்றுமைத்தொகை
  2. உம்மைத்தொகை
  3. உவமைத்தொகை
  4. அன்மொழித்தொகை

2. ‘செம்மரம்’ என்னும் சொல் _____த்தொகை.

  1. வினை
  2. பண்பு
  3. அன்மொழி
  4. உம்மை

3. ‘கண்ணா வா!’- என்பது _____த் தொடர்.

  1. எழுவாய்
  2. விளி
  3. வினைமுற்று
  4. வேற்றுமை

II. பொருத்துக.

  1. பெயரெச்சத் தொடர் – கார்குழலி படித்தாள்.
  2. வினையெச்சத் தொடர் – புலவரே வருக.
  3. வினைமுற்றுத் தொடர் – பாடி முடித்தான்.
  4. எழுவாய்த் தொடர் – எழுதிய பாடல்.
  5. விளித் தொடர் – வென்றான் சோழன்.

விடை : 1 – ஈ, 2 – இ, 3 – உ, 4 – அ, 5 – ஆ 

III. கோடிட்ட இடங்களில் பொருத்தமான சொல்லுருபுகளை இட்டு நிரப்புக.

( கொண்டு, இருந்து, உடைய, காட்டிலும், ஆக, நின்று, உடன், விட, பொருட்டு )

1. இடி உடன் மழை வந்தது.
2. மலர்விழி தேர்வின் பொருட்டு ஆயத்தமானாள்.
3. அருவி மலையில் இருந்து வீழ்ந்தது.
4. தமிழைக் காட்டிலும் சுவையான மொழியுண்டோ!
5. யாழ், தமிழர் உடைய இசைக்கருவிகளுள் ஒன்று

IV. பின்வரும் இசைக்கருவிகளின் பெயர்களை அகரவரிசைப்படுத்துக.

படகம், தவில், கணப்பறை, பேரியாழ், உறுமி, உடுக்கை, தவண்டை, பிடில், நாகசுரம்,
மகுடி

விடை : உடுக்கை, உறுமி, கணப்பறை, தவண்டை, தவில், நாகசுரம், படகம், பிடில், பேரியாழ், மகுடி

V. பின்வரும் இணைச்சொற்களை வகைப்படுத்துக.

உற்றார்உறவினர், விருப்புவெறுப்பு, காலைமாலை, கன்னங்கரேல், ஆடல்பாடல், வாடிவதங்கி, பட்டிதொட்டி, உள்ளும்புறமும், மேடுபள்ளம், நட்டநடுவில்.

நேரிணை

உற்றார்உறவினர், வாடிவதங்கி, நட்டநடுவில், பட்டிதொட்டி

எதிரிணை

விருப்புவெறுப்பு, காலைமாலை, உள்ளும்புறமும், மேடுபள்ளம், ஆடல்பாடல்

செறியிணை

கன்னங்கரேல்

VI. சரியான இணைச்சொற்களை இட்டு நிரப்புக.

( மேடுபள்ளம், ஈடுஇணை, கல்விகேள்வி, போற்றிப்புகழப்பட, வாழ்வுதாழ்வு, ஆடிஅசைந்து )

  1. சான்றோர் எனப்படுபவர் கல்விகேள்விகளில் சிறந்தவர் ஆவர்.
  2. ஆற்று வெள்ளம் மேடுபள்ளம் பாராமல் ஓடியது.
  3. இசைக்கலைஞர்கள் போற்றிப்புகழப்பட வேண்டியவர்கள்.
  4. தமிழ் இலக்கியங்களின் பெருமைக்கு ஈடுஇணை இல்லை
  5. திருவிழாவில் யானை ஆடிஅசைந்து வந்தது.

VII. கலைச்சொல் அறிவோம்.

  1. கைவினைப் பொருள்கள் – Crafts
  2. பின்னுதல் – Knitting
  3. புல்லாங்குழல் – Flute
  4. கொம்பு – Horn
  5. முரசு – Drum
  6. கைவினைஞர் – Artisan
  7. கூடைமுடைதல் – Basketry
  8. சடங்கு – Rite





2.5. திருக்குறள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. அரசரை அவரது _____ காப்பாற்றும்.

  1. செங்கோல்
  2. வெண்கொற்றக்குடை
  3. குற்றமற்ற ஆட்சி
  4. படை வலிமை

2. சொல்வளமும் நற்பண்பும் உடையவர்கள் தாம் பேசும் _____ தகுதி அறிந்து பேச
வேண்டும்.

  1. சொல்லின்
  2. அவையின்
  3. பொருளின்
  4. பாடலின்

3. ‘கண்ணோடாது’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

  1. கண் + ஓடாது
  2. கண் + ணோடாது
  3. க + ஓடாது
  4. கண்ணோ + ஆடாது

4. ‘கசடற’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

  1. கச + டற
  2. கசட + அற
  3. கசடு + உற
  4. கசடு + அற

5. என்று + ஆய்ந்து என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

  1. என்றாய்ந்து
  2. என்றுஆய்ந்து
  3. என்றய்ந்து
  4. என்ஆய்ந்த

3.வையம்புகழ் வணிகம் 

3.1. வளம் பெருகுக

I. சொல்லும் பொருளும்

  1. வாரி – வருவாய்
  2. எஞ்சாமை – குறைவின்றி
  3. முட்டாது – தட்டுப்பாடின்றி
  4. ஒட்டாது – வாட்டம்இன்ற
  5. வைகுக – தங்குக
  6. ஓதை – ஓசை
  7. வெரீஇ – அஞ்சி
  8. யாணர் – புதுவருவா

II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. தோட்டத்தில் தம்பி ஊன்றிய __________ எல்லொம் முளைத்தன.

  1. சத்துகள்
  2. பித்துகள்
  3. முத்துகள்
  4. வித்துகள்

2. என் நண்பன் செய்த தொழிலில் அவனுக்கு ___________ பெருகிற்று.

  1. காரி
  2. ஓரி
  3. வாரி
  4. பாரி

3. ‘அக்களத்து‘ என்றை மைொல்்லப் பிரிதது எழுதக் கிடடிப்பது ____________.

  1. அ + களத்து
  2. அக் + களத்து
  3. அக்க + அளத்து
  4. அம் + களத்து

4. கதிர் + ஈன என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ____________.

  1. கதிரென
  2. கதியீன
  3. கதிரீன
  4. கதிரின்ன

3.2. மழைச்சோறு

I. சரியான விடையைத் தேர்தெடுத்து எழுதுக.

1. கனத்த மழை என்னும் சொல்லின் பொருள் _____.

  1. பெருமழை
  2. சிறு மழை
  3. எடைமிகுந்த மழை
  4. எடை குறைந்த மழை

2. ‘வாசலெல்லாம்‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

  1. வாசல் + எல்லாம்
  2. வாசல் + எலாம்
  3. வாசம் + எல்லாம்
  4. வாசு + எல்லாம்

3. ‘பெற்றெடுத்தோம்‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

  1. பெறு+ எடுத்தோம்
  2. பேறு + எடுத்தோம்
  3. பெற்ற + எடுத்தோம்
  4. பெற்று + எடுத்தோம்

4. கால் + இறங்கி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

  1. கால்லிறங்கி
  2. காலிறங்கி
  3. கால் இறங்கி
  4. கால்றங்க




3.3. கொங்குநாட்டு வணிகம்

II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. ‘வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு’ என்று குறிப்பிடும் நூல் _____.

  1. தொல்காப்பியம்
  2. அகநானூறு
  3. புறநானூறு
  4. சிலப்பதிகாரம்

2. சேரர்களின் தலைநகரம் _____.

  1. காஞ்சி
  2. வஞ்சி
  3. தொண்டி
  4. முசிறி

3. பழங்காலத்தில் விலையைக் கணக்கிட அடிப்படையாக அமைந்தது _____.

  1. புல்
  2. நெல்
  3. உப்பு
  4. மிளகு

4. ஆன்பொருநை என்று அழைக்கப்படும் ஆறு _____.

  1. காவிரி
  2. பவானி
  3. நொய்யல்
  4. அமராவதி

5. வீட்டுஉபயோகப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம்
_____.

  1. நீலகிரி
  2. கரூர்
  3. கோயம்புத்தூர்
  4. திண்டுக்கல்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

  1. ‘மாங்கனி நகரம்’ என்று அழைக்கப்படும் நகரம் சேலம்.
  2. சுங்குடிச் சேலைகளுக்குப் புகழ்பெற்ற ஊர் சின்னாளப்பட்டி (திண்டுக்கல்).
  3. சேரர்களின் நாடு குடநாடு எனப்பட்டது.
  4. பின்னலாடை நகரமாக திருப்பூர் விளங்குகிறது.

3.4. புணர்ச்சி

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. விகாரப் புணர்ச்சி _____ வகைப்படும்.

  1. ஐந்து
  2. நான்கு
  3. மூன்று
  4. இரண்டு

2. ‘பாலாடை’ – இச்சொல்லுக்குரிய புணர்ச்சி _____

  1. இயல்பு
  2. தோன்றல்
  3. திரிதல்
  4. கெடுதல்

II. பொருத்துக

  1. மட்பாண்டம் – தோன்றல் விகாரம்
  2. மரவேர் – இயல்புப் புணர்ச்சி
  3. மணிமுடி – கெடுதல் விகாரம்
  4. கடைத்தெரு – திரிதல் விகாரம்

விடை : 1 – ஈ, 2 – இ, 3 – ஆ, 4 – அ

III. பின்வரும் மரபுத்தொடர்களைப் பொருளோடு பொருத்துக.

  1. ஆயிரங்காலத்துப் பயிர் – இயலாத செயல்.
  2. கல்லில் நார் உரித்தல் – ஆராய்ந்து பாராமல்.
  3. கம்பி நீட்டுதல் – இருப்பதுபோல் தோன்றும்; ஆனால் இருக்காது.
  4. கானல்நீர் – நீண்டகாலமாக இருப்பது.
  5. கண்ணை மூடிக்கொண்டு – விரைந்து வெளியேறுதல்

விடை : 1 – ஈ, 2 – அ, 3 – உ, 4 – இ, 5 –  ஆ

IV. பின்வரும் மரபுத்தொடர்களைத் தொடரில் அமைத்து எழுதுக

1. வாழையடி வாழையாக

வாழையடி வாழையாக நம் முன்னோர்கள் விவசாயம் செய்து வந்தனர்.

2. முதலைக்கண்ணீர்

காவலரிடம் மாட்டிக்கொண்ட திருடன் தான் திருடவில்லை என்று முதலைக்கண்ணீர் வடித்தான்.

3. எடுப்பார் கைப்பிள்ளை -______________________________

நாம் சுயமாக யோசிக்காமல் எடுப்பார் கைப்பிள்ளை போலச் செயல்படடக்கூடாது.

V. கலைச்சொல் அறிவோம்.

  1. நூல் – Thread
  2. தையல் – Stitch
  3. தறி – Loom
  4. ஆலை – Factory
  5. பால்பண்ணை – Dairy farm
  6. சாயம் ஏற்றுதல் – Dyeing
  7. தோல் பதனிடுதல் – Tanning
  8. ஆயத்த ஆடை – Readymade Dress

Related Links



Leave a Comment