Tamil Nadu 8th Standard 3rd Term Samacheer Kalvi Tamil Book Back Questions

8th Std 3rd Term Tamil Book Answers

Here we have given the answers of 8th Tamil 3rd Term for 8th class students. ie., We have given below 1 mark questions with answers for all lessons.

We have already given the answers to the first and second term books. For those who do not see it, go to the following link and come back. Term 1 – Link.

Many of the questions given here are more likely to be asked in the TNPSC exams. So those who are studying for the TNPSC exam should also keep reading the 8th Tamil questions on this page clearly.




8th Standard Tamil 3rd term Answers

இயல் 1: பாருக்குள்ளே நல்லநாடு

1.1. படை வேழம்

I. சொல்லும் பொருளும்

  1. மறலி – காலன்
  2. வழிவர் – நழுவி ஓடுவர்
  3. கரி – யானை
  4. பிலம் – மலைக்குகை
  5. தூறு – புதர்
  6. மண்டுதல் – நெருங்குதல்
  7. அருவர் – தமிழர்
  8. இறைஞ்சினர் – வணங்கினர்
  9. உடன்றன – சினந்து எழுந்தன
  10. முழை – மலைக்குகை

II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. சிங்கம் _____யில் வாழும்.

  1. மாயை
  2. ஊழி
  3. முழை
  4. அலை

2. கலிங்க வீரர்களிடையே தோன்றிய உணர்வு _____.

  1. வீரம்
  2. அச்சம் 
  3. நாணம்
  4. மகிழ்ச்சி

3. ‘வெங்கரி’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

  1. வெம் + கரி
  2. வெம்மை + கரி
  3. வெண் + கரி
  4. வெங் + கரி

4. ‘என்றிருள்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

  1. என் + இருள்
  2. எட்டு + இருள்
  3. என்ற + இருள்
  4. என்று + இருள்

5. போல் + உடன்றன என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

  1. போன்றன
  2. போலன்றன
  3. போலுடன்றன
  4. போல்உடன்றன

1.2. விடுதலைத் திருநாள்

I. சொல்லும் பொருளும்

  1. சீவன் – உயிர்
  2. வையம் – உலகம்
  3. சத்தியம் – உண்மை
  4. சபதம் – சூளுரை
  5. ஆனந்த தரிசனம் – மகிழ்வான காட்சி
  6. மோகித்து – விரும்பு

II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. வானில் முழுநிலவு அழகாகத் ___________ அளித்தது.

  1. தயவு
  2. தரிசனம்
  3. துணிவு
  4. தயக்கம்

2. இந்த _________ முழுவதும் போற்றும்படி வாழ்வதே சிறந்த வாழ்வு.

  1. வையம்
  2. வானம்
  3. ஆழி
  4. கானகம்

3. ‘சீவனில்லாமல்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

  1. சீவ + நில்லாமல்
  2. சீவன் + நில்லாமல்
  3. சீவன் + இல்லாமல்
  4. சீவ + இல்லாமல்

4. ‘விலங்கொடித்து’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

  1. விலம் + கொடித்து
  2. விலம் + ஒடித்து
  3. விலன் + ஒடித்து
  4. விலங்கு + ஒடித்து

5. காட்டை + எரித்து என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

  1. காட்டைஎரித்து
  2. காட்டையெரித்து
  3. காடுஎரித்து
  4. காடுயெரித்து

6. இதம் + தரும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

  1. இதந்தரும்
  2. இதம்தரும்
  3. இதத்தரும்
  4. இதைத்தரும்

1.3. பாரத ரத்னா எம்.ஜி. இராமச்சந்திரன்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. எம்.ஜி.ஆர் _____ என்னும் ஊரில் கல்வி பயின்றார்.

  1. கண்டி
  2. கும்பகோணம்
  3. சென்னை
  4. மதுரை

2. எம்.ஜி.ஆர். படிப்பைத் தொடர முடியாமைக்குக் காரணம் _____ .

  1. நடிப்பு ஆர்வம்
  2. பள்ளி இல்லாமை
  3. குடும்ப வறுமை
  4. படிப்பில் ஆர்வமில்லாமை

3. இந்திய அரசு சிறந்த நடிகருக்கான _____ எனும் பட்டத்தை எம்.ஜி.ஆருக்கு
வழங்கியது.

  1. புரட்சித் தலைவர்
  2. பாரத்
  3. பாரத மாமணி
  4. புரட்சி நடிகர்

4. ஐந்தாம் உலகத் தமிழ்மாநாடு நடைபெற்ற இடம் _____

  1. திருச்சி
  2. சென்னை
  3. மதுரை
  4. கோவை

5. எம்.ஜி.ஆருக்கு அழியாத புகழைத் தேடித் தந்த திட்டம் _____.

  1. மதிய உணவுத்திட்டம் 
  2. வீட்டு வசதித் திட்டம்
  3. மகளிர் நலன் திட்டம்
  4. இலவசக் காலணித் திட்டம்

1.4. வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும்

I. பின்வரும் தொடர்களை வல்லினம் மிகும், மிகா இடங்கள் என வகைப்படுத்துக.

  1. சுட்டுத் திரிபு – வல்லினம் மிகும்
  2. திசைப் பெயர்கள் – வல்லினம் மிகும்
  3. பெயரெச்சம் –வல்லினம் மிகாது
  4. உவமைத் தொகை – வல்லினம் மிகும்
  5. நான்காம் வேற்றுமை விரி – வல்லினம் மிகும்
  6. இரண்டாம் வேற்றுமை தொகை – வல்லினம் மிகாது
  7. வினைத் தொகை – வல்லினம் மிகாது
  8. உருவகம் – வல்லினம் மிகும்
  9. எழுவாய்த் தொடர் – வல்லினம் மிகாது
  10. எதிர்மறைப் பெயரெச்சம் – வல்லினம் மிகாது

II. பின்வரும் தொடர்களில் உள்ள பிழைகளைத் திருத்தி எழுதுக.

1. அதைச் செய்தது நான் அன்று.
விடை – அதைச் செய்தது நான் அல்லேன்

2. பானையை உடைத்தது கண்ணன் அல்ல.
விடை – பானையை உடைத்தது கண்ணன் அல்லேன்

3. மல்லிகை குளத்தில் பூக்கும் மலர் அல்லை.
விடை – மல்லிகை குளத்தில் பூக்கும் மலர் அன்று

4. சித்தர்கள் செயற்கையை விரும்பியவர்கள் அல்லோம்.
விடை – சித்தர்கள் செயற்கையை விரும்பியவர்கள் அல்லர்

5. பகைவர் நீவீர் அல்லர்.
விடை – பகைவர் நீவீர் அல்லீர்

III. சரியான எதிர்மறைச் சொற்களைக் கொண்டு நிரப்புக.

  1. தாங்கள் படிக்க வேண்டிய புத்தகங்கள் இவை அல்ல
  2. உங்களோடு வருவோர் நாம் அல்லோம்.
  3. மணிமேகலை செல்வ வாழ்வை விரும்பியவள் அல்லன்
  4. ஈ மொத்த பண்டங்கள் உடலுக்கு நன்மை செய்வன அல்ல
  5. இந்த நிலத்துக்கு உரிமையாளர் நீ அல்லை.

IV. கலைச்சொல் அறிவோம்.

  1. குதிரையேற்றம் – Equestrian
  2. ஆதரவு – Support
  3. கதாநாயகன் – The Hero
  4. வரி – Tax
  5. முதலமைச்சர் – Chief Minister
  6. வெற்றி – Victory
  7. தலைமைப்பண்பு – Leadership
  8. சட்ட மன்ற உறுப்பினர் – Member of Legislative Assembly




இயல் 2: அறத்தால் வருவதே இன்பம்

2.1. ஒன்றே குலம்

I. சொல்லும் பொருளும்

  1. நமன் – எமன்
  2. நாணாமே – கூசாமல்
  3. சித்தம் – உள்ளம்
  4. உய்ம்மின் – ஈடேறுங்கள்
  5. நம்பர் – அடியார்
  6. ஈயில் – வழங்கினால்
  7. படமாடக்கோயில் – படங்கள் அமைந்த மாடங்களையுடைய கோயில்

II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. அறநெறியில் வாழ்பவர்கள் உயிரைக் கவர வரும் _____ க் கண்டு அஞ்சமாட்டார்கள்.

  1. புலன்
  2. அறனை
  3. நமனை
  4. பலனை

2. ஒன்றே _____ என்று கருதி வாழ்வபதை மனிதைப் பண்பாகும்.

  1. குலம்
  2. குளம்
  3. குணம்
  4. குடம்

3. ‘நமனில்லை‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

  1. நம் + இல்லை
  2. நமது + இல்லை
  3. நமன் + நில்லை
  4. நமன் + இல்லை

4. நம்பர்க்கு + அங்கு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

  1. நம்பரங்கு
  2. நம்மார்க்கு
  3. நம்பர்க்கங்கு
  4. நம்பங்கு

2.2. மெய்ஞ்ஞான ஒளி

I. சொல்லும் பொருளும்

  1. பகராய் – தருவாய்
  2. பராபரம் – மேலான பொருள்
  3. ஆனந்த வெள்ளம் – இன்பப்பெருக்கு
  4. அறுத்தவருக்கு – நீக்கியவர்க்கு

II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. மனிதர்கள் தம் _____ தீய வழியில் செல்ல விடாமல் காக்க வேண்டும்.

  1. ஐந்திணைகளை
  2. அறுசுவைகளை
  3. நாற்றிசைகளை
  4. ஐம்பொறிகளை

2. ஞானியர் சிறந்த கருத்துகளை மக்களிடம் _____.

  1. பகர்ந்தனர்
  2. நுகர்ந்தனர்
  3. சிறந்தனர்
  4. துறந்தனர்

3. ‘ஆனந்தவெள்ளம்‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

  1. ஆனந்த + வெள்ளம்
  2. ஆனந்தன் + வெள்ளம்
  3. ஆனந்தம் + வெள்ளம் 
  4. ஆனந்தர் + வெள்ளம்

4. உள் + இருக்கும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

  1. உள்ளேயிருக்கும்
  2. உள்ளிருக்கும்
  3. உளிருக்கும்
  4. உளருக்கும்

2.3. அயோத்திதாசர் சிந்தனைகள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. அயோத்திதாசர்_____சமூகச்சீர்திருத்தத்தின் தந்தை என்று போற்றப்படுகிறார்.

  1. தமிழக
  2. இந்திய
  3. தென்னிந்திய
  4. ஆசிய

2. அயோத்திதாசர் நடத்திய இதழ்_____.

  1. ஒருபைசாத் தமிழன்
  2. காலணாத் தமிழன்
  3. அரைப்பைசாத் தமிழன்
  4. அரையணாத் தமிழன்

3. கல்வியோடு _____ கற்க வேண்டும் என்பது அயோத்திதாசர் கருத்து.

  1. சிலம்பமும்
  2. கைத்தொழிலும்
  3. கணிப்பொறியும்
  4. போர்த்தொழிலும்

4. அயோத்திதாசரின் புதுமையான சிந்தனைகளுக்கு அடித்தளமாக அமைந்தது அவரது ________.

  1. ஆழ்ந்த படிப்பு
  2. வெளிநாட்டுப்பயணம்
  3. இதழியல் பட்டறிவு
  4. மொழிப்புலமை

5. மக்களின் ஒழுக்கத்துடன் தொடர்புடையது ________.

  1. வானம்
  2. கடல்
  3. மழை
  4. கதிரவன்

2.4. யாப்பு இலக்கணம்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. அசை _____ வகைப்படும்.

  1. இரண்டு
  2. மூன்று
  3. நான்கு
  4. ஐந்து

2. விடும் என்பது_____ சீர்.

  1. நேரசை
  2. நிரையசை
  3. மூவசை
  4. நாலசை

3. அடி _____ வகைப்படும்.

  1. இரண்டு
  2. நான்கு
  3. எட்டு
  4. ஐந்து

4. முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது _____.

  1. எதுகை
  2. இயைபு
  3. அந்தாதி
  4. மோனை

II. பொருத்துக.

  1. வெண்பா – துள்ளல் ஓசை
  2. ஆசிரியப்பா – செப்பலோசை
  3. கலிப்பா – தூங்கலோசை
  4. வஞ்சிப்பா – அகவலோசை

விடை :- 1 – ஆ, 2 – ஈ, 3 – அ, 4 – இ

III. கலைச்சொல் அறிவோம்.

  1. தொண்டு – Charity
  2. நேர்மை – Integrity
  3. ஞானி – Saint
  4. பகுத்தறிவு – Rational
  5. தத்துவம் – Philosophy
  6. சீர்திருத்தம் – Reform

2.5. திருக்குறள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. ஆண்மையின் கூர்மை _____.

  1. வறியவருக்கு உதவுதல்
  2. பகைவருக்கு உதவுதல்
  3. நண்பனுக்கு உதவுதல்
  4. உறவினருக்கு உதவுதல்

2. வறுமை வந்த காலத்தில் _____ குறையாமல் வாழ வேண்டும்.

  1. இன்பம்
  2. தூக்கம்
  3. ஊக்கம்
  4. ஏக்கம்

3. ‘பெருஞ்செல்வம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

  1. பெரிய + செல்வம்
  2. பெருஞ் + செல்வம்
  3. பெரு + செல்வம்
  4. பெருமை + செல்வம்

4. ‘ஊராண்மை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

  1. ஊர் + ஆண்மை
  2. ஊராண் + மை
  3. ஊ + ஆண்மை
  4. ஊரு + ஆண்மை

5. திரிந்து + அற்று என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

  1. திரிந்ததுஅற்று
  2. திரிந்தற்று
  3. திரிந்துற்று
  4. திரிவுற்று

II. பொருத்துக.

  1. இன்பம் தருவது – நற்பண்பில்லாதவன் பெற்ற பெருஞ்செல்வம்
  2. நட்பு என்பது – குன்றிமணியளவு தவறு
  3. பெருமையை அழிப்பது – செல்வம் மிகுந்த காலம்
  4. பணிவு கொள்ளும் காலம் – சிரித்து மகிழ மட்டுமன்று
  5. பயனின்றி அழிவது – பண்புடையவர் நட்பு

விடை :- 1 – உ, 2 – ஈ, 3 – ஆ, 4 – இ, 5 – அ



இயல் 3: குன்றென நிமிர்ந்து நில்

3.1 உயிர்க்குணங்கள்

I. சொல்லும் பொருளும்

  1. நிறை – மேன்மை
  2. அழுக்காறு – பொறாமை
  3. பொறை – பொறுமை
  4. மதம் – கொள்கை
  5. பொச்சாப்பு – சோர்வு
  6. இகல் – பகை
  7. மையல் – விருப்பம்
  8. மன்னும் – நிலைபெற்ற
  9. ஓர்ப்பு – ஆராய்ந்து தெளிதல்

II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. அடுத்தவர் வாழ்வைக் கண்டு _____ கொள்ளக்கூடாது.

  1. உவகை
  2. நிறை
  3. அழுக்காறு
  4. இன்பம்

2. நாம் நீக்கவேண்டியவற்றுள் ஒன்று _____ .

  1. பொச்சாப்பு
  2. துணிவு
  3. மானம்
  4. எளிமை

3. ‘இன்பதுன்பம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _____.

  1. இன்பம் + துன்பு
  2. இன்பம் + துன்பம்
  3. இன்ப + அன்பம்
  4. இன்ப + அன்பு

4. குணங்கள் + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

  1. குணங்கள்எல்லாம்
  2. குணமெல்லாம்
  3. குணங்களில்லாம்
  4. குணங்களெல்லாம்

III. பொருத்துக

  1. நிறை – பொறுமை
  2. பொறை – விருப்பம்
  3. மதம் – மேன்மை
  4. மையல் – கொள்க

விடை :- 1 – இ, 2 – அ, 3 – ஈ, 4 – ஆ

3.2. இளைய தோழனுக்கு

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. உன்னுடன் நீயே_____கொள்.

  1. சேர்நது
  2. பகை
  3. கைகுலுக்கிக்
  4. நட்பு

2. கவலைகள்_____அல்ல

  1. சுமைகள்
  2. சுவைகள்
  3. துன்பங்கள்
  4. கைக்குழந்தைகள்

3. ‘விழித்தெழும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

  1. விழி + எழும்
  2. விழித்து + எழும்
  3. விழி + தெழும்
  4. விழித் + தெழும்

4. ‘போவதில்லை’என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

  1. போவது + இல்லை
  2. போ + இல்லை
  3. போவது + தில்லை
  4. போவது + தில்லை

5. ‘படுக்கையாகிறது’என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

  1. படுக்கை + யாகிறது
  2. படுக்கையா + ஆகிறது
  3. படுக்கையா + கிறது
  4. படுக்கை + ஆகிறது

6. தூக்கி + கொண்டு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

  1. தூக்கிகொண்டு
  2. தூக்குக்கொண்டு
  3. தூக்கிக்கொண்டு
  4. தூக்குகொண்டு

7. விழித்து + எழும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

  1. விழியெழும்
  2. விழித்தெழும்
  3. விழித்தழும்
  4. விழித்துஎழும்

3.3 சட்டமேதை அம்பேத்கர்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் ___________

  1. இராதாகிருட்டிணன்
  2. அம்பேத்கர்
  3. நௌரோஜி
  4. ஜவஹர்லால் நேரு

2. பூனா ஒப்பந்தம் __________ மாற்ற ஏற்படுத்தப்பட்டது.

  1. சொத்துரிமையை
  2. பேச்சுரிமையை
  3. எழுத்துரிமையை
  4. இரட்டை வாக்குரிமையை

3. சமத்துவச் சமுதாயம் அமைய அம்பேத்கர் ஏற்படுத்திய இயக்கம் ________

  1. சமாஜ் சமாத சங்கம்
  2. சமாத சமாஜ பேரவை
  3. தீண்டாமை ஒழிப்புப் பேரவை
  4. மக்கள் நல இயக்கம்

4. அம்பேத்கரின் சமூகப்பணிகளைப் பாராட்டி இந்திய அரசு ______ விருது
வழங்கியது.

  1. பத்மஸ்ரீ
  2. பாரத ரத்னா
  3. பத்மவிபூசண்
  4. பத்மபூசன்

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

  1. புத்த சமயம் தொடர்பாக அம்பேத்கர் எழுதிய நூல் புத்தரும் அவரின் தம்மமும்
  2. அம்பேத்கர் நிறுவிய அரசியல் கட்சியின் பெயர் சுதந்திர தொழிலாளர் கட்சி
  3. பொருளாதாரப் படிப்பிற்காக அம்பேத்கர் இலண்டன் சென்றார்.

3.4 அணி இலக்கணம்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பிறிதுமொழிதல்அணியில்_____ மட்டும் இடம்பெறும்.

  1. உவமை 
  2. உவமேயம்
  3. தொடை
  4. சந்தம்

2. இரண்டு பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையையும் வேற்றுமையையும் கூறுவது _____ அணி.

  1. ஒற்றுமை
  2. வேற்றுமை 
  3. சிலேடை
  4. இரட்டுற மொழிதல்

3. ஒரே செய்யுளை இருபொருள்படும்படி பாடுவது __________ அணி.

  1. பிறிதுமொழிதல்
  2. இரட்டுறமொழிதல்
  3. இயல்பு நவிற்சி
  4. உயர்வு நவிற்சி

4. இரட்டுறமொழிதல் அணியின் வேறு பெயர் _____________ அணி.

  1. பிறிதுமொழிதல்
  2. வேற்றுமை
  3. உவமை
  4. சிலேடை

II. கோடிட்ட இடங்களைப் பொருத்தமான சொற்களால் நிரப்புக.

  1. சிறுமி தனது (தனது/தமது) கையில் மலர்களை வைத்திருந்தாள்.
  2. அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காகத் தனது ( தனது/தமது) உழைப்பை நல்கினார்.
  3. உயர்ந்தோர் தம்மைத்தாமே (தம்மைத்தாமே/தன்னைத்தானே) புகழ்ந்து கொள்ள மாட்டார்கள்.
  4. இவை தான் (தான்/தாம்) எனக்குப் பிடித்த நூல்கள்.
  5. குழந்தைகள் தம்மால் (தன்னால்/தம்மால்) இயன்ற உதவிகளைப் பிறருக்குச் செய்கின்றனர்

கலைச்சொல் அறிவோம்.

  1. குறிக்கோள் – Objective
  2. பல்கலைக்கழகம் – University
  3. நம்பிக்கை – Confidence
  4. ஒப்பந்தம் – Agreement
  5. முனைவர் பட்டம் – Doctorate
  6. அரசியலமைப்பு – Constitution
  7. வட்ட மேசை மாநாடு – Round Table Conference
  8. இரட்டை வாக்குரிமை – Double voting



Leave a Comment