9th Standard Tamil Book 1st Term Answers 2022
Hello my dear students, on this page we covered 9th Standard Tamil Book 1st Term questions. You can find the 9th std New Tamil Book Solution here. This page would be more helpful for school students as well as TNPSC aspirants.
The 9th 1st Term Tamil Samacheer Book has Four chapters. we have given a solution for all those four-chapter below.
1. அமுதென்று பேர்
I. தொடர்களை மாற்றி உருவாக்குக.
அ) பதவியை விட்டு நீக்கினான் – இத்தொடரைத் தன்வினைத் தொடராக மாற்றுக.
விடை : பதவியை விட்டு நீக்குவித்தான்.
ஆ) மொழியியல் அறிஞர்கள் திராவிட மொழிகளை ஆய்வு செய்தனர்– இத்தொடரைப் பிறவினைத் தொடராக மாற்றுக.
விடை : மொழியியல் அறிஞர்கள் திராவிட மொழிகளை ஆய்வு செய்வித்தனர்
இ) உண்ணப்படும் தமிழ்த்தேனே – இத்தொடரை செய்வினைத் தொடராக மாற்றுக.
விடை : உண்ணும் தமிழ்த்தேனே
ஈ) திராவிட மொழிகளை மூன்று மொழிக் குடும்பங்களாகப் பகுத்துள்ளனர் – இத்தொடரை செயப்பாட்டுவினைத் தொடராக மாற்றுக.
விடை : திராவிட மொழிகளை மூன்று மொழிக் குடும்பங்களாகப் பகுப்பட்டுள்ளன
உ) நிலவன் சிறந்த பள்ளியில் படித்தார் – இத்தொடரைக் காரணவினைத் தொடராக மாற்றுக.
விடை : நிலவன் சிறந்த பள்ளியில் படிபித்தான்.
9th Standard All Books – Download
II. சொற்களைத் தொடர்களாக மாற்றுக.
அ) மொழிபெயர் – தன்வினை, பிறவினைத் தொடர்களாக.
- மொழி பெயர்த்தாள் – தன்வினை
- மொழி பெயர்ப்பித்தாள் – பிறவினை
ஆ) பதிவுசெய் – செய்வினை, செயப்பாட்டுவினைத் தொடர்களாக.
- பதிவு செய்தான் – செய்வினை
- பதிவு செய்யப்பட்டது – செயப்பாட்டு வினை
இ) பயன்படுத்து – பிறவினை, காரணவினைத் தொடர்களாக.
- பயன்படுத்துவித்தாள் – பிறவினை
- பயன்படுத்தினாளா – காரணவினை
ஈ) இயங்கு – செய்வினை, செயப்பாட்டுவினைத் தொடர்களாக.
- இயங்கினாள் – செய்வினை
- இயக்கப்பட்டாள் – செயப்பாட்டுவினை
II. பொருத்தமான செயப்படுபொருள் சொற்களை எழுதுக.
(தமிழிலக்கிய நூல்களை, செவ்விலக்கியங்களை , நம்மை, வாழ்வியல் அறிவை)
அ) தமிழ் …………………………. கொண்டுள்ளது.
விடை : செவ்விலக்கியங்களை
ஆ) நாம் ___________ வாங்கவேண்டும்.
விடை : செவ்விலக்கியங்களை
இ) புத்தகங்கள் _____________ கொடுக்கின்றன.
விடை : வாழ்வியல் அறிவை
ஈ) நல்ல நூல்கள் _________ நல்வழிப்படுத்துகின்றன.
விடை : நம்மை
IV. பொருத்தமான பெயரடைகளை எழுதுக.
(நல்ல, பெரிய, இனிய, கொடிய)
அ) எல்லோருக்கும் _______________ வணக்கம்.
விடை : இனிய
ஆ) அவன் ____________நண்பனாக இருக்கிறான்.
விடை : நல்ல
இ) _____________ ஓவியமாக வரைந்து வா.
விடை : பெரிய
ஈ) ______ விலங்கிடம் பழகாதே.
விடை : கொடிய
V. பொருத்தமான வினையடைகளைத் தேர்வுசெய்க.
(அழகாக, பொதுவாக, வேகமாக, மெதுவாக)
அ) ஊர்தி _____________ சென்றது.
விடை : மெதுவாக
ஆ) காலம் ____________ ஓடுகிறது.
விடை : வேகமாக
இ) சங்க இலக்கியம் வாழ்க்கையை _________ காட்டுகிறது.
விடை : அழகாக
ஈ) இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டதை அனைவருக்கும்____ காட்டு.
விடை : பொதுவாக
VI. அடைப்புக் குறிக்குள் கேட்டுள்ளவாறு தொடர்களை மாற்றி எழுதுக.
அ) நம் முன்னோர் இயற்கையோடு இயைந்த வாழ்வு நடத்தினர். (வினாத்தொடராக)
விடை : நம் முன்னோர் இயற்கையோடு இயைந்த வாழ்வு நடத்தினரா?
ஆ) பாடினான். (எழுவாய்த் தொடராக)
விடை : அவன் பாடினான்
இ) இசையின்றி அமையாது பாடல். (உடன்பாட்டுத் தொடராக)
விடை : இசையோடு அமையும் பாடல்
ஈ) நீ இதைச் செய் எனக் கூறினேன் அல்லவா? (கட்டளைத் தொடராக)
விடை : நீ இதைச் செய்
VII. வேர்ச்சொற்களை வைத்துச் சொற்றொடர்களை உருவாக்குக.
அ) தா (அடுக்குத் தொடர், உடன்பாட்டுவினைத் தொடர், பிறவினைத் தொடர்)
- தா தா – அடுக்குத் தொடர்
- தந்தேன் – உடன்பாட்டுவினைத் தொடர்
- தருவித்தேன் – பிறவினைத் தொடர்
ஆ) கேள் (எழுவாய்த் தொடர், வினைமுற்றுத் தொடர், வினாத் தொடர்)
- மாணவன் கேட்டான் – எழுவாய்த் தொடர்
- கேட்டர் ஆரிசியர் – வினைமுற்றுத் தொடர்
- யார் கேட்பவர்? – வினாத் தொடர்
இ) கொடு (செய்தித் தொடர், கட்டளைத் தொடர், தெரிநிலை வினையெச்சத் தொடர்)
- பாரி நெல்லிக்கனி கொடுத்தான் – செய்தித் தொடர்
- ஏழைக்குப் பொருளைக் கொடு – கட்டளைத் தொடர்
- மன்னர் நிறைய கொடுத்தார் – தெரிநிலை வினையெச்சத் தொடர்
ஈ) பார் (செய்வினைத் தொடர், செயப்பாட்டுவினைத் தொடர், பிறவினைத் தொடர்)
- பார்த்தான் – செய்வினைத் தொடர்
- பார்க்கப்பட்டான் – செயப்பாட்டுவினைத் தொடர்
- பார்க்கச் செய்தான் – பிறவினைத் தொடர்
VIII. சிந்தனை வினா
- அவை யாவும் இருக்கின்றன. – தவறு
- அவை யாவையும் இருக்கின்றன. – சரி
- அவை யாவும் எடுங்கள். – தவறு
- அவை யாவையும் எடுங்கள். – தவறு
- அவை யாவற்றையும் எடுங்கள். – சரி
IX. தமிழ் எண்கள் அறிவோம்.
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
க | உ | ௩ | ௪ | ௫ | ௬ | ௭ | ௮ | ௯ | ௧௦/ ௰ |
தமிழ் எண்களில் எழுதுக.
- பன்னிரண்டு – கஉ
- பதின்மூன்று – க௩
- நாற்பத்து மூன்று – ௪௩
- எழுபத்தெட்டு – ௭௮
- தொண்ணூறு – ௯௦
X. கலைச்சொல் அறிவோம்
- உருபன் – Morpheme
- ஒலியன் – Phoneme
- ஒப்பிலக்கணம் – Comparative Grammar
- பேரகராதி – Lexicon
XI. பலவுள் தெரிக.
1. குழுவில் விடுபட்ட வரிசையைத் தேர்ந்தெடுக்க.
குழு – 1 | குழு – 2 | குழு – 3 | குழு – 4 |
நாவாய் | மரம் | துறை | தன்வினை |
……………. | ……………. | ……………. | ……………. |
தோணி | மர | விருத்தம் | காரணவினை |
- 1- வங்கம், 2- மானு, 3- தாழிசை, 4- பிறவினை
- 1- தாழிசை, 2- மானு, 3- பிறவினை, 4- வங்கம்
- 1- பிறவினை, 2- தாழிசை, 3- மானு, 4- வங்கம்
- 1- மானு, 2- பிறவினை, 3- வங்கம், 4- தாழிசை
விடை : 1- வங்கம், 2- மானு, 3- தாழிசை, 4- பிறவினை
2. தமிழ் விடு தூது ……………. என்னும் இலக்கிய வகையைச் சேர்ந்தது.
- தொடர்நிலைச் செய்யுள்
- புதுக்கவிதை
- சிற்றிலக்கியம்
- தனிப்பாடல்
விடை : சிற்றிலக்கியம்
3. விடுபட்ட இடத்திற்குப் பொருத்தமான விடை வரிசையைக் குறிப்பிடுக.
- …………….இனம்
- வண்ணம் …………….
- …………….குணம்
- வனப்பு …………….
-
- மூன்று, நூறு, பத்து, எட்டு
- எட்டு, நூறு, பத்து, மூன்று
- பத்து, நூறு, எட்டு, மூன்று
- நூறு, பத்து, எட்டு, மூன்று
விடை : மூன்று, நூறு, பத்து, எட்டு
4. காலம் பிறக்கும்முன் பிறந்தது தமிழே!
காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே!……….. இவ்வடிகளில் பயின்று வரும் நயங்கள்-
- முரண், எதுகை, இரட்டைத் தொடை
- இயைபு, அளபெடை, செந்தொடை
- எதுகை, மோனை, இயைபு
- மோனை, முரண், அந்தாதி
விடை : எதுகை, மோனை, இயைபு
5. அழியா வனப்பு, ஒழியா வனப்பு, சிந்தா மணி – அடிக்கோடிட்ட சொற்களுக்கான
இலக்கணக்குறிப்பு –
- வேற்றுமைத்தொகை
- ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
- பண்புத்தொகை
- வினைத்தொகை
விடை : ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
XII. மொழிபெயர்க்க.
- Linguistics – மொழி ஆராய்ச்சி
- Literature – இலக்கியம்
- Philologist – மொழியியற் புலமை
- Polyglot – பன்மொழியாரளர்கள்
- Phonologist – ஒலிச்சின்ன வல்லுநர்
- Phonetics – ஒலிப்பியல்
XIII. அடைப்புக்குள் உள்ள சொற்களைக் கொண்டு கோடிட்ட இடங்களில் பொருத்தமான வினைமுற்றாக மாற்றி எழுதுக.
1. இந்திய மொழிகளின் மூலமும் வேருமாகத் தமிழ் ……………… (திகழ்)
விடை : திகழ்கிறது
2. வைதேகி நாளை நடைபெறும் கவியரங்கில் …………….. (கலந்துகொள்)
விடை : கொள்வாள்
3. உலகில் மூவாயிரம் மொழிகள் ………………………… (பேசு)
விடை : பேசப்படுகின்றன
4. குழந்தைகள் அனைவரும் சுற்றுலா ……………… (செல்)
விடை : சென்றனர்
5. தவறுகளைத் ………… (திருத்து)
விடை : திருத்துவேன்
XIV. தொடரைப் பழமொழிகொண்டு நிறைவு செய்க.
- இளமையில் கல்வி சிலைமேல் எழுத்து
- சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
- கல்லாடம் படித்தவரோடு சொல்லாடாதே
- கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு
XV. அகராதியில் காண்க.
- நயவாமை – விரும்பாமை
- கிளத்தல் – சிறப்பித்து கூறுதல், புலப்படக் கூறுதல்
- கேழ்பு – உவமை, ஒளி, நிறம்
- செம்மல் – தலைவன், தலைமை, இறைவன், சிவன்
- புரிசை – மதில், அரண், அரணம், இஞ்சி
XVI. கொடுக்கப்பட்ட வேர்ச்சொற்களைப் பயன்படுத்தி விடுபட்ட கட்டங்களில் காலத்திற்கேற்ற வினைமுற்றுகளை நிறைவு செய்க
வா | |||
இறந்த காலம் | நிகழ்காலம் | எதிர்காலம் | |
நான் | வந்தேன் | வருகிறேன் | வருவேன் |
நாங்கள் | வந்தோம் | வருகிறோம் | வருவோம் |
நீ | வந்தாய் | வருகிறாய் | வருவாய் |
நீங்கள் | வந்தீர்கள் | வருகிறீர்கள் | வருவீர்கள் |
அவன் | வந்தான் | வருகிறான் | வருவான் |
அவள் | வந்தாள் | வருகிறாள் | வருவாள் |
அவர் | வந்தார் | வருகிறார் | வருவார் |
அவர்கள் | வந்தார்கள் | வருகிறார்கள் | வருவார்கள் |
அது | வந்தத | வருகிறது | வரும் |
அவை | வந்தன | வருகின்றன | வரும் |
XVII. தா, காண், பெறு, நீந்து, பாடு, கொடு போன்ற வேர்ச்சொற்களைப் பயன்படுத்தி மேற்கண்ட கட்டத்தினைப் போன்று காலத்திற்கேற்ற வினைமுற்றுகளை அமைத்து எழுதுக.
இறந்த காலம் | நிகழ்காலம் | எதிர்காலம் | |
தா | தந்தான் | தருகிறான் | தருவான் |
காண் | கண்டான் | காண்கிறான் | காண்பான் |
பெறு | பெற்றேன் | பெறுகிறேன் | பெறுவேன் |
நீந்து | நீந்தினாள் | நீந்துகிறாள் | நீந்துவாள் |
பாடு | பாடினாள் | பாடுகிறாள் | பாடுவாள் |
கொடு | கொடுத்தார் | கொடுக்கிறார் | கொடுப்பார் |
XVIII. அடைப்புக்குள் உள்ள சொற்களைக் கொண்டு எழுவாய், வினை அடி, வினைக்குப் பொருத்தமான தொடர் அமைக்க.
(திடலில், போட்டியில், மழையில், வேகமாக, மண்ணை)
திடலில்
- நான் திடலில் ஓடினேன் (தன்வினை).
- திடலில் மிதிவண்டியை ஓட்டினேன் (பிறவினை)
எழுவாய்/பெயர் | வினை அடி | தன்வினை | பிறவினை |
கவிதை | நனை | ||
இலை | அசை | ||
மழை | சேர் |
காவியா – வரை
காவியா போட்டியில் வரைந்தாள் (தன்வினை)
காவியா போட்டியில் ஓவியத்தை வரைவித்தாள் (பிறவினை)
கவிதை – நனை
கவிதை மழையில் நனைந்தேன் (தன்வினை)
ரகு கவிதை மழையில் நனைவித்தான் (பிறவினை)
இலை – அசை
இலை வேகமாக அசைந்தது (தன்வினை)
காற்று இலையை வேகமாக அசைவித்தது (பிறவினை)
2. உயிருக்கு வேர்
I. பொருத்தமான துணைவினைகளைப் பயன்படுத்துக.
அ) மனிதனையும் விலங்குகளையும் (வேறு) ______________ மொழியாகும்.
விடை : வேறுபடுத்துவது
ஆ) திராவிட மொழிகள் சில, பொதுப் பண்புகளைப் (பெறு) _____________ .
விடை : பெற்றிருக்கின்றன
இ காலந்தோறும் தன்னைப் (புதுப்பித்து) _____________ மொழி தமிழ்.
விடை : புதுபித்துக் கொள்ளும்
ஈ) என் ஐயத்தைக் கேட்பதற்கு எவரேனும் கிடைக்கமாட்டார்களா என்று (தேடு) ___________.
விடை : தேடிக் கொண்டிருக்கிறேன்
II. கீழ்க்காணும் துணைவினைகளைப் பயன்படுத்திப் புதிய தொடர்களை எழுதுக.
- வேண்டும் – சான்றோர் காட்டிய பாதையில் நடக்க வேண்டும்
- பார் – படத்தை உற்றுப் பார்
- உள் – கடல் நீரினை உள்வாங்கியது
- வா – நாளை என் வீட்டுக்கு வா
- விடு – நான் நாளை பள்ளிக்கு வந்து விடுவேன்
III. பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்துகையில் துணைவினைகளைச் சேர்க்கிறோம். பிறமொழிச் சொற்களைத் தமிழ்ச் சொற்களாக மாற்றி, ஏற்ற துணைவினைகளை இட்டு எழுதுக
மார்னிங் எழுந்து -காலையில் எழுந்து
பிரஷ் பண்ணி- பல்துலக்கி
யூனிஃபார்ம் போட்டு ஸ்கூலுக்குப் போனாள் – சீருடை அணிந்து பள்ளிக்கு போனாள்
IV. பலவுள் தெரிக.
1. “மிசை” – என்பதன் எதிர்ச்சொல் என்ன ?
- கீழே
- மேலே
- இசை
- வசை
விடை : கீழே
2. நீர் நிலைகளோடு தொடர்பில்லாதது எது ?
- அகழி
- ஆறு
- இலஞ்சி
- புலரி
விடை : புலரி
3. பொருத்தமான விடையைத் தேர்க.
அ. நீரின்று அமையாது உலகு – திருவள்ளுவர்
ஆ. நீரின்று அமையாது யாக்கை – ஔவையார்
இ. மாமழை போற்றுதும் – இளங்கோவடிகள்
- அ, இ
- ஆ, இ
- அ, ஆ
- அ, ஆ, இ
விடை : அ, இ
4. பொருத்தமான வினையை எடுத்து எழுதுக.
கதிர் அலுவலகத்திலிருந்து விரைவாக —————. அவன் பையன் பள்ளியிலிருந்து இன்னும் ————–.
- வந்தான் , வருகிறான்
- வந்துவிட்டான், வரவில்லை
- வந்தான் , வருவான்
- வருவான், வரமாட்டான்
விடை : வந்துவிட்டான், வரவில்லை
5. மல்லல் மூதூர் வயவேந்தே- கோடிட்ட சொல்லின் பொருள் என்ன?
- மறுமை
- பூவரசு மரம்
- வளம்
- பெரிய
விடை : வளம்
V. இணையான தமிழ்ப் பழமொழிகளை எழுதுக.
1. Every flower is a soul blossoming in nature – Gerard De Nerval
மொழி பெயர்க்க : எல்லா பூக்களும் இயற்கையில் உயிருடன் இருக்கிறது
பழமொழி : மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு
2. Sunset is still my favourite colour, and rainbow is second – Mattie Stepanek
மொழி பெயர்க்க : சூரிய அஸ்தமனேம் முதலில் எனக்கு பிடித்த வண்ணம், வானவில்லின் வண்ணம் அடுத்த நிலை தான்
பழமொழி : தோல்வியே வெற்றிக்கு அடிப்படை (அ) ஒன்றன் மறைவில் இருந்தே புதியன தோன்றும்
3. An early morning walk is a blessing for the whole day – Henry David Thoreau
மொழி பெயர்க்க : அதிகாலையில் நடைப்பயிற்சி அந்நாளுக்கே ஒரு வரமாகும்
பழமொழி : நன்றாய் தொடங்கும் செயல் நன்றாகவே முடியம் (அ) சிறந்த தொடக்கமே வெற்றிக்கு அடிப்படை
4. Just living is not enough… One must have sunshine, freedom, and a little flower – Hans Christian Anderson
மொழி பெயர்க்க : வெறுமையான வாழ்வு மட்டும் போதாது, ஒவ்வொருவருக்குள்ளும் ஒளி, ஆற்றல், விடுதலை மலர் என இருத்தல் வேண்டும்.
பழமொழி : இலட்சியமுள்ள வாழ்வே சிறந்த வாழ்வாகும். வெறும் வாழ்வு வீணாகும்
VI. பிழை நீக்கி எழுதுக.
1. சர் ஆர்தர் காட்டன் கல்லணையின் கட்டுமான உத்திகொண்டுதான் தௌலீஸ்வரம் அணையைக் கட்டியது.
விடை : சர் ஆர்தர் காட்டன் கல்லணையின் கட்டுமான உத்திகொண்டுதான் தௌலீஸ்வரம் அணையைக் கட்டினார்.
2. மதியழகன் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உடனடியாகத் தண்ணீர் கொண்டு குளிர வைத்தாள்.
விடை : மதியழகன் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உடனடியாகத் தண்ணீர் கொண்டு குளிர வைத்தான்.
3. மழையே பயிர்க்கூட்டமும் உயிர்க்கூட்டமும் வாழப் பெருந்துணை புரிகின்றன.
விடை : மழையே பயிர்க்கூட்டமும் உயிர்க்கூட்டமும் வாழப் பெருந்துணை புரிகின்றது.
4. நீலனும் மாலனும் அவசரகாலத் தொடர்புக்கான தொலைப்பேசி எண்களின் பட்டியலை வைத்திருக்கிறோம்.
விடை : நீலனும் மாலனும் அவசரகாலத் தொடர்புக்கான தொலைப்பேசி எண்களின் பட்டியலை வைத்திருக்கின்றனர்.
5. சூறாவளியின் போது மேல்மாடியில் தங்காமல் தரைத்தளத்திலேயே தங்கியதால் தப்பிப்பான்.
விடை : சூறாவளியின் போது மேல்மாடியில் தங்காமல் தரைத்தளத்திலேயே தங்கியதால் தப்பித்தான்.
VII. பழமொழிகளைப் பயன்படுத்திச் சொற்றொடர் அமைக்க.
1. நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்குப் பாய்வது போல.
விடை : நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்குப் பாய்வது போல படிக்கும் நல்லார் சொன்ன அறிவுரை தீயவருக்கும் போய் சேர்ந்தது.
2. தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும்.
விடை : தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும் போலப் பிறர் கூறும் அறிவுரை கடினமானாலும் அது நம்மை நல்வழிப்படுத்தும்.
3. மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் கரைக்கும்.
விடை : மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் கரைக்கும் போல கடினமான செயலையும் விடாமுயற்சியுடன் செய்தால் வெற்றி பெற முடியும்
4. கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டு போகாது
விடை : கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டு போகாது போல பிறருக்கு நாம் சொல்லிக் கொடுப்பதால் நம்முடைய அறிவானது குறைபடாது.
VIII. சொல்லுக்குள் சொல் தேடுக.
எ.கா. ஆற்றங்கரையோரம் – ஆறு, கரை, ஓரம்
- கடையெழுவள்ளல்கள் – கடை, ஏழு, வள்ளல்கள்
- எடுப்பார்கைப்பிள்ளை – எடு, பார், கை, பிள்ளை
- தமிழ்விடுதூது – தமிழ், விடு, தூது
- பாய்மரக்கப்பல் – பாய், மரம், கப்பல்
- எட்டுக்கால்பூச்சி – எட்டு, கால், பூச்சி
IX. அகராதியில் காண்க.
- கந்தி – கழுகு, வாசம், கந்தகம், தவப்பெண்
- நெடில் – நீளம், மூங்கில், நெட்டெழுத்து
- பாலி – ஆலமரம், அணை, எல்லை, ஒரு பாஷை, பாற்பசு, செம்பருத்தி, கரை
- மகி – பூமி, பசு
- கம்புள் – சங்கு, கம்பங்கோழி, வானம்பாடி
- கைச்சாத்து – கையொப்பம், பொருள்பட்டி
X. வேறுபட்ட வினையெச்சங்களைப் பயன்படுத்தி, முதல்வினைகளைத் துணைவினைகளாக மாற்றுக.
முதல்வினைகள் – பார்த்தேன், கொடுத்தார், நடந்தான், சேர்ந்தார், அமைத்தோம்.
(எ.கா.) பார்த்தேன்
- எழுதிப் பார்த்தான்
- தடுக்கப் பார்த்தான்
- கொடுத்துப் பார்த்தான்
- ஓடப் பார்த்தான்
1. கொடுத்தார்
- எழுதிக் கொடுத்தார்
- படிக்கக் கொடுத்தார்
- வாங்கிக் கொடுத்தார்
- பார்த்துக் கொடுத்தார்
2. நடந்தான்
- பார்த்து நடந்தான்
- கேட்டு நடந்தான்
- வாங்கி நடந்தான்
- சிரித்து நடந்தான்
3. சேர்ந்தான்
- வந்து சேர்ந்தார்
- போய்ச் சேர்ந்தார்
- நடந்து சேர்ந்தார்
- ஓய்ந்து சேர்ந்தார்
4. அமைத்தாேம்
- பார்த்து அமைத்தோம்
- கண்டு அமைத்தோம்
- கேட்டு அமைத்தோம்
- ஓய்ந்து அமைத்தோம்
XI. வினையடிகளை முதல்வினையாகவும் துணைவினையாகவும் அமைந்த தொடர்களாக உருவாக்குக.
வினையடி – வா, போ, செய், மாற்று, இரு, கொடு, கொள், எழுது, விடு, போடு.
(எ.கா.) வினையடி – வை
முதல்வினை | துணைவினை |
மூட்டையைத் தலையில் வைத்தான். இலையில் இனிப்பை வைத்தனர். | அம்மா குழந்தையைத் தூங்க வைத்தார். நான் உனக்கு ஒரு நூல் வாங்கி வைத்தேன். எதற்கும் சொல்லி வை. |
வினையடி | முதல்வினை | துணைவினை |
வா | நீ நாளை வீட்டுக்கு வா | ஆங்கிலேயர் நம்மை ஆண்டு வந்தனர் |
போ | நான் நூலகத்துக்குப் போனேன் | நான் பயந்து போனேன் |
செய் | அவன் அதைச் செய்தான் | அவன் அதைச் செய்ய வைத்தான் |
மாற்று | அவன் கடையை மாற்றினான் | அவன் கடையை மாற்றச் செய்தான் |
இரு | நான் தனியாக இருந்தேன் | அவனை தனியாக இருக்கச் செய்தேன் |
கொடு | அவள் கொடுத்தாள் | அவளுக்குக் கொடுக்க செய்தான் |
XII. கலைச்சொல் அறிவோம்
- குமிழிக் கல் – Conical Stone
- நீர் மேலாண்மை – Water Management
- பாசனத் தொழில்நுட்பம் – Irrigation Technology
- வெப்ப மண்டலம் – Tropical Zone
3. உள்ளத்தின் சீர்
I. பலவுள் தெரிக.
1. பொருந்தாத இணை எது?
- ஏறுகோள் – எருதுகட்டி
- திருவாரூர் – கரிக்கையூர்
- ஆதிச்சநல்லூர் – அரிக்கமேடு
- பட்டிமன்றம் – பட்டிமண்டபம்
விடை : திருவாரூர் – கரிக்கையூர்
2. முறையான தொடர் அமைப்பினைக் குறிப்பிடுக.
- தமிழர்களின் வீரவிளையாட்டு தொன்மையான ஏறுதழுவுதல்.
- தமிழர்களின் வீரவிளையாட்டு ஏறுதழுவுதல் தொன்மையான.
- தொன்மையான வீரவிளையாட்டு தமிழர்களின் ஏறுதழுவுதல்.
- தமிழர்களின் தொன்மையான வீரவிளையாட்டு ஏறுதழுவுதல்.
விடை : தமிழர்களின் தொன்மையான வீரவிளையாட்டு ஏறுதழுவுதல்.
3. பின்வருவனவற்றுள் தவறான செய்தியைத் தரும் கூற்று –
- அரிக்கமேடு அகழாய்வில் ரோமானிய நாணயங்கள் கிடைத்தன.
- புறப்பொருள் வெண்பாமாலை என்னும் இலக்கண நூலிலும் ஏறுகோள் குறித்துக் கூறப்பட்டுள்ளது.
- எட்டு, பத்து ஆகிய எண்ணுப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது.
- பட்டிமண்டபம் பற்றிய குறிப்பு மணிமேகலையில் காணப்படுகிறது.
விடை : தமிழர்களின் தொன்மையான வீரவிளையாட்டு ஏறுதழுவுதல்.
4. ஐம்பெருங்குழு, எண்பேராயம் – சொற்றொடர்கள் உணர்த்தும் இலக்கணம்
- திசைச்சொற்கள்
- வடசொற்கள்
- உரிச்சொற்கள்
- தொகைச்சொற்கள்
விடை : தொகைச்சொற்கள்.
5. சொற்றொடர்களை முறைப்படுத்துக.
அ) ஏறுதழுவுதல் என்பதை ஆ) தமிழ் அகராதி இ) தழுவிப் பிடித்தல் என்கிறது
- ஆ – அ – இ
- ஆ – இ – அ
- இ – ஆ – அ
- இ – அ – ஆ
விடை : ஆ – அ – இ
II. வல்லினம் மிகலாமா?
- பெட்டிச்செய்தி
- விழாக்குழு
- கிளிப்பேச்சு
- தமிழ்த்தேன்
- தைப்பூசம்
- கூடக்கொடு
- கத்தியை விடக்கூர்மை
- கார்ப்பருவம்
III. தொடர் தரும் பொருளைக் கூறுக.
1. சின்னக்கொடி – சின்னம் வரையப்பட்ட கொடி
சின்ன கொடி – சிறிய கொடி
2. தோப்புக்கள் – தோப்பிலிருந்து இறக்கிவரப்பட்ட கள்
தோப்புகள் – பல மரங்கள் சேர்ந்தது தோப்புகள்
3. கடைப்பிடி – கொள்கையைக் கடைபிடிப்பது
கடைபிடி – வாணிகம் தொடங்கக் கடை பிடிப்பது
4. நடுக்கல் – அடையாளமாக நடுவது நடுக்கல்
நடுகல் – நினைவுச்சின்னம்
5. கைம்மாறு – உதவி செய்தல்
கைமாறு – கையில் உள்ள மாறு (விளக்குமாறு)
6. பொய்ச்சொல் – நீ சொன்னது பொய்ச்சொல்
பொய் சொல் – பொய் சொல்வது தவறு
IV. பொன்மொழிகளை மொழிபெயர்க்க.
1. A nation’s culture resides in the hearts and in the soul of its people – Mahatma Gandhi
விடை: ஒரு நாட்டின் பண்பாடானது மக்களின் இதயங்களிலும், ஆன்மாவிலும் தங்கியுள்ளது
2. The art of people is a true mirror to their minds – Jawaharlal Nehru
விடை: மக்களின் கலை உணர்வே அவர்களின் உள்ளத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகும் – ஜவஹர்லால் நேரு
3. The biggest problem is the lack of love and charity – Mother Teresa
விடை: அன்புக் குறைவும், தொண்டுப் பற்றாக்குறையும் தான் இன்றைய மிகப்பெரிய பிரச்சனை – அன்னைதெராசா
4. You have to dream before your dreams can come true – A.P.J. Abdul Kalam
விடை: உங்கள் கனவுகள் நனவாகும் வரை கனவு காணுங்கள் – ஏ.பி.ஜே.அப்துல் கலாம்
5. Winners don’t do different things; they do things differently – Shiv Khera
விடை: வெற்றியாளர்கள் வேறுபட்ட செயல்களைச் செயவதில்லை, அவர்கள் செயல்களை வித்தியாசமாகச் செய்கிறார்கள் – ஷிவ் கேரா
V. வடிவம் மாற்றுக.
பின்வரும் கருத்துகளை உள்வாங்கிக் கொண்டு, வரிசைப்படுத்தி முறையான பத்தியாக்குக.
1. உலகின் மிகப்பெரிய கல்மரப் படிமமும் இங்கேதான் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
2. டைனோசர்கள் உலாவித் திரிந்த தமிழ்மண் என்று அரியலூர் பெரம்பலூர் மாவட்டங்கள் அறியப்படுகின்றன. பெரம்பலூர் மாவட்டத்தில் கடல்பகுதி இருந்துள்ளது என்பதை அங்குக் கிடைத்துள்ள ஆதாரங்கள் உறுதி செய்கின்றன.
3. இங்குக் கல்லாகிப் போன டைனோசர் முட்டைகள், பாறைப் படிமமாகக் கிடைத்த கடல் நத்தை, டைனோசரின் வால்பகுதி, கடல் கிளிஞ்சல்களின் பாறைப் படிமங்கள் போன்றவை கிடைத்துள்ளன.
4. தமிழ்மக்களின் தொன்மையை மீட்டெடுப்பதுடன் நாம் வாழ்கின்ற நிலப்பகுதியின் வரலாற்றையும் தெரிந்துகொள்ள அரியலூரும் பெரம்பலூரும் அரிய ஊர்களாய்த் திகழ்கின்றன.
விடை :
தமிழ்மக்களின் தொன்மையை மீட்டெடுப்பதுடன் நாம் வாழ்கின்ற நிலப்பகுதியின் வரலாற்றையும் தெரிந்துகொள்ள அரியலூரும் பெரம்பலூரும் அரிய ஊர்களாய்த் திகழ்கின்றன. டைனோசர்கள் உலாவித் திரிந்த தமிழ்மண் என்று அரியலூர் பெரம்பலூர் மாவட்டங்கள் அறியப்படுகின்றன. பெரம்பலூர் மாவட்டத்தில் கடல்பகுதி இருந்துள்ளது என்பதை அங்குக் கிடைத்துள்ள ஆதாரங்கள் உறுதி செய்கின்றன. இங்குக் கல்லாகிப் போன டைனோசர் முட்டைகள், பாறைப் படிமமாகக் கிடைத்த கடல் நத்தை, டைனோசரின் வால்பகுதி, கடல் கிளிஞ்சல்களின் பாறைப் படிமங்கள் போன்றவை கிடைத்துள்ளன. உலகின் மிகப்பெரிய கல்மரப் படிமமும் இங்கேதான் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
VI. மரபு இணைச் சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.
1. மேடும் பள்ளமும் – மனித மேடும் பள்ளுமும் நிறைந்தது
2. நகமும் சதையும் – நண்பர்கள் எப்போதும் நகையும் சதையும் போல இருக்கின்றனர்.
3. முதலும் முடிவும் – இறைவன் கையில் தான் முதலும் முடிவும் உள்ளது
4. கேளிக்கையும் வேடிக்கையும் – திரைப்படங்கள் கேளிக்கையும் வேடிக்கையும் நிறைந்தது
5. கண்ணும் கருத்தும் – நம் செயலில் கண்ணும் கருத்துமாய் இருக்க வேண்டும்
VII. பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.
தென்னிந்தியாவின் அடையாளச் சின்னமாகக் காங்கேயம் மாடுகள் போற்றப்படுகின்றன. தமிழக மாட்டினங்களின் தாய் இனம் என்று ‘காங்கேயம்’ கருதப்படுகிறது. பிறக்கும்போது சிவப்பு நிறத்தில் இருக்கும் காங்கேயம் மாடுகள், ஆறு மாதம் வளர்ந்த பிறகு சாம்பல் நிறத்துக்கு மாறிவிடுகின்றன. பசுக்கள் சாம்பல் அல்லது வெள்ளை நிறத்தில் இருக்கின்றன. மிடுக்கான தோற்றத்துக்குப் பெயர்பெற்ற காங்கேயம் இனக் காளைகள் ஏறுதழுவுதல் நிகழ்விற்கும் பெயர் பெற்றுள்ளன. அத்துடன், ஏர் உழுவதற்கும் வண்டி இழுப்பதற்கும் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. கடுமையாக உழைக்கக்கூடிய காங்கேயம் மாடுகள் கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலத்தவரால் விரும்பி வாங்கிச் செல்லப்படுகின்றன. இலங்கை, பிரேசில், பிலிப்பைன்ஸ், மலேசியா ஆகிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கரூர் அமராவதி ஆற்றுத் துறையில் காங்கேய மாடுகளின் உருவம் பொறித்த கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த சேரர் கால நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
1. பின்வரும் நான்கு வினாக்களுக்கும் பொருந்தும் ஒரு விடையைத் தருக.
அ) மிடுக்குத் தோற்றத்திற்கும் ஏறுதழுவுதலுக்கும் பெயர் பெற்றவை எவை?
விடை : காங்கேயம் இனக்காளைகள்
ஆ) தமிழக மாட்டினங்களின் தாய் இனம் என்று கருதப்படுவது யாது?
விடை : காங்கேயம் இனக்காளைகள்
இ) பிற மாநிலத்தவர் விரும்பி வாங்கிச் செல்கின்ற காளை இனம் எது?
விடை : காங்கேயம் இனக்காளைகள்
ஈ) மேற்கண்ட பத்தி எதைக் குறிப்பிடுகிறது?
விடை : காங்கேயம் இனக்காளைகள்
2. பொருந்தாத சொல்லைக் கண்டறிக.
- கர்நாடகம்
- கேரளா
- இலங்கை
- ஆந்திரா
விடை : இலங்கை
3. பிரித்து எழுதுக: கண்டெடுக்கப்பட்டுள்ளன.
- கண்டு + எடுக்கப்பட்டு + உள்ளன
- கண்டு + எடுக்கப் + பட்டுள்ளன
- கண்டெடுக்க + பட்டு + உள்ளன
- கண் + டெடுக்க + பட்டு + உள்ளன
விடை : கண்டு + எடுக்கப்பட்டு + உள்ளன
4. தென்னிந்தியாவின் அடையாளச் சின்னமாகக் காங்கேயம் மாடுகள்
போற்றப்படுகின்றன – இது எவ்வகைத் தொடர்?
- வினாத்தொடர்
- கட்டளைத்தொடர்
- செய்தித்தொடர்
- உணர்ச்சித்தொடர்
விடை : செய்தித்தொடர்
VIII. பொருள் எழுதித் தொடரமைக்க.
கரை, கறை; குளவி, குழவி; வாளை, வாழை; பரவை, பறவை; மரை, மறை;
அலை | கடலலை | இன்று கடலலையின் வேகம் மிக அதிகமாகவுள்ளது. |
அழை | வரவழைத்தல் | என் நண்பர்களை வரவழைத்துள்ளேன் |
கரை | ஆற்றின் ஓரம் | ஆற்றங்கரையை பலபடுத்த பனைமரங்கள் வளர்க்ப்படுகின்றன |
கறை | படிவது கறை | துணியில் கறை படிந்துள்ளது |
குளவி | பூச்சி வகைகளுள் ஒன்று | குளவி வீட்டின் நிலைப்படியில் கூடுகட்டுகிறது |
குழவி | குழந்தை | குழவி மருங்கினும் கிழவதாகும் (பிள்ளைத்தமிழ்) |
வாளை | மீன் வகைகளில் ஒன்று | ஆற்றில் வாளை மீன் துள்ளிக் குதித்தது |
வாழை | வாழைப்பழம் | முக்கனிகளுள் ஒன்று வாழைப்பழம் |
பரவை | பரந்துள்ள கடல் | மதுரைக்குப் பக்கத்திலுள்ள சிற்றார் பரவை |
பறவை | பறப்பவை | பறவைகள் பறந்து சென்றன |
மரை | தாமரை | தாமரை நீர் நிலையில் மலரும் |
மறை | வேதம் | வேதபாட சாலையில் நான்மறை ஓதப்பட்டன |
IX. பொருள்தரும் வகையில் சொற்றொடர் உருவாக்குக.
கொடுக்கப்பட்டுள்ள சொற்களைக் கொண்டு பொருள்தரும் வகையில் ஒரு சொல்லில் தொடரைத் தொடங்குக. அத்துடன் அடுத்தடுத்துச் சொற்களைச் சேர்த்து, புதிய புதிய சொற்றொடர்களை உருவாக்குக. இறுதித் தொடர் அனைத்துச் சொற்களையும் சேர்த்ததாக அமைய வேண்டும்.
காலங்களில் தெருவில் வைக்காதீர்கள் காப்புக் கம்பிகள் கவனக் குறைவுடன் ஆகியவற்றின் மீது காலை அறுந்த மழைக் மின்கம்பிகள்.
- வைக்காதீர்கள்
- மலைக்காலங்களில் அறுந்த மின்கம்பிகள் காப்புக் கம்பிகள் மீது காலை வைக்காதீர்கள்
- மலைக்காலங்களில் தெருவில் அறுந்த மின்கம்பிகள் காப்புக் கம்பிகள் மீது காலை வைக்காதீர்கள்
- மலைக்காலங்களில் தெருவில் அறுந்த மின்கம்பிகள் காப்புக் கம்பிகள் மீது கவனக்குறைவுடன் காலை வைக்காதீர்கள்
X. குறுக்கெழுத்துப் புதிர்
இடமிருந்து வலம்
2. விழாவறை காதை குறிப்பிடும் விழா (6) இந்திரவிழா
5. சரி என்பதற்கான எதிர்ச்சொல் தரும் எழுத்துகள் இடம் மாறியுள்ளது (3) தவறு
7. பொங்கல் விழாவையொட்டி நடத்தப்படும் சிறுவர்களுக்கான போட்டிகளில் ஒன்று (7) தவளை ஓட்டம்
10. ஊழ் என்பதற்குத் தற்காலப் பயன்பாட்டில் உள்ள சொல் (2) விதி
13. மா + அடி – இதன் புணர்ந்த வடிவம் (3) மாவடி
19. கொள்ளுதல் என்பதன் முதல்நிலை திரிந்த சொல் (2) கோள்
வலமிருந்து இடம்
9. தூய்மை யற்ற குருதியை எடுத்துச் செல்லும் இரத்தக் குழாய் (2) சிரை
11. ஆராய்ச்சி என்பதன் சொற்சுருக்கம் (3) ஆய்வு
12. மணிமேகலை காப்பியத்தின் ஆசிரியர் (5) சாத்தனார்
18. தனி + ஆள் -சேர்த்து எழுதுக. (4) தனியாள்
மேலிருந்து கீழ்
1. தமிழர்களின் வீர விளையாட்டு (7) ஏறு தழுவுதல்
2. இவள் + ஐ – சேர்ந்தால் கிடைப்பது (3) இவளை
3. மரத்தில் காய்கள் … … . . ஆகக் காய்த்திருந்தன (4) திரட்சி
5. உரிச்சொற்களுள் ஒன்று (2) தவ
6. …………..சிறந்தது (2) சால
8. நேரத்தைக் குறிப்பிடும் வானியல் சொல் (2) ஓரை
12. அகழாய்வில் கிடைத்த கொள்கலன்களுள் ஒருவகை (4)
15. காய் பழுத்தால் ………(2) கனி
கீழிருந்து மேல்
14. ஒருவர் பற்றி ஒருவர் பிறரிடம் இதை வைக்கக் கூடாது (3) வத்தி
17. யா முதல் வரும் வினாப்பெயர் (2) யார்
18. தகவிலர் என்பதற்கு எதிர்ச்சொல்லாகத் திருவள்ளுவர் குறிப்பிடுவது (4) தக்கார்
திருக்குறள்
I. படத்திற்கேற்ற குறளைத் தேர்வு செய்க.
அ) நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்.
ஆ) விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்
கேளாது நட்டார் செயின்.
இ) செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாந் தலை
விடை :-
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாந் தலை
II. பாடலின் பொருளுக்குப் பொருத்தமான திருக்குறளைக் கண்டறிக.
பாடல்
ஆண்டில் இளையவனென்று அந்தோ அகந்தையினால்
ஈண்டிங்கு இகழ்ந்தென்னை ஏளனம்செய் – மாண்பற்ற
காரிருள்போல் உள்ளத்தான் காந்திமதி நாதனைப்
பாரதி சின்னப் பயல்.
(1893 – ல் பாரதியாரின் பதினோராவது வயதில் எட்டையபுரம் மன்னர் சமஸ்தானப் புலவர்கள் அவையில், அவரது கவித்திறனைப் புகழந்து “பாரதி” என்ற பட்டத்தை சூட்டினார்,)
குறள்
அ) செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்.
ஆ) மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்று விடல்.
இ) குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.
விடை :-
ஆ) மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்று விடல்.
பொருள்:-
நமக்கு நல்ல வசதியும் வாய்ப்பும் இருக்கிறது என்றெண்ணி ” இவருக்கு இத்தீங்கை செய்தால் எவர் நம்மை என்ன செய்ய முடியும்?” என்ற இறுமாப்புக் கொண்டு தீங்கிழைத்தவர்களையும் பொறுமைப் பண்பால் வெற்றி கொள்ள வேண்டும். (பொறையுடைமை – 8வது குறள்
III. பொருளுக்கேற்ற அடியைக் கண்டுபிடித்துப் பொருத்துக.
- பசுமண் கலத்துநீர் பெய்திரீஇ யற்று – ஒருவனின் செயல்பாடுகளே உரசி அறியும் உரைகல்
- தத்தம் கருமமே கட்டளைக்கல் – அவ்வளவிற்குப் பெருமை உண்டாக்கும்
- அனைத்தானும் ஆன்ற பெருமை தரும் – சுடாத மண்கலத்தில் நீரூற்றி வைப்பதை ப் போல
விடை : 1 -இ, 2 – அ, 3 – ஆ
4. தீரா இடும்பை தருவது எது?
- ஆராயாமை, ஐயப்படுதல்
- குணம், குற்றம்
- பெருமை, சிறுமை
- நாடாமை, பேணாமை
விடை : ஆராயாமை, ஐயப்படுதல்
5. சொல்லுக்கான பொருளைத் தொடரில் அமைத்து எழுதுக.
அ. நுணங்கிய கேள்வியர் – நுட்பமான கேள்வியறிவு உடையவர்
ராமு நுணங்கிய கேள்வியராக விளங்கினான்
ஆ. பேணாமை – பாதுகாக்காமை
உழவனால் பேணாத பயிர் வீணாகும்
இ. செவிச் செல்வம் – கேட்பதால் பெறும் அறிவு
செவிச்செல்வம் பெற்றவர் சாதனையாளராக உருவாகின்றனர்
ஈ. அறனல்ல செய்யாமை – அறம் அல்லாத செயல்களைச் செய்யாதிருத்தல்
காந்தியடிகள் அறனல்ல செய்கைகளைச் செய்யாதவர்
4. எட்டுத்திக்கும் சென்றிடுவீர்
I. கீழ்க்காணும் மூன்று தொடர்களுள் –
அ. இருந்த இடத்திலிருந்தே பயணச்சீட்டு எடுப்பதை எளிதாக்கிய மிகப் பெரிய இந்திய நிறுவனம் இந்தியத் தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் ஆகும்.
ஆ. வங்கி அட்டை இல்லை என்றால் அலைபேசி எண், வங்கிக் கணக்கு எண் ஆகியவற்றைக் கொண்டு பணம் செலுத்துதல் இயலாது.
இ. திறன் அட்டைகள் என்பவை குடும்ப அட்டைகளுக்கு மாற்றாக வழங்கப்பட்டனவாகும்.
- அ, ஆ ஆகியன சரி; இ தவறு
- அ, இ ஆகியன சரி; ஆ தவறு
- அ தவறு; ஆ, இ ஆகியன சரி
- மூன்றும் சரி
விடை : அ, இ ஆகியன சரி; ஆ தவறு
2. தமிழ்நாடு அரசு கிராமப்புற மாணவர்களுக்கு நடத்தும் திறனாய்வுத் தேர்வு எது?
- தேசியத் திறனாய்வுத் தேர்வு
- ஊரகத் திறனாய்வுத் தேர்வு
- தேசியத் திறனாய்வு மற்றும் கல்வி உதவித் தொகைத் தேர்வு
- மூன்றும் சரி
விடை : ஊரகத் திறனாய்வுத் தேர்வு
3. ஒன்றறிவதுவே உற்றறிவதுவே
இரண்டறிவதுவே அதனொடு நாவே
இவ்வடிகளில் அதனொடு என்பது எதைக் குறிக்கிறது?
- நுகர்தல்
- தொடு உணர்வு
- கேட்டல்
- காணல்
விடை : தொடு உணர்வு
4. பின்வரும் தொடர்களைப் படித்து ‘நான்’ யார் என்று கண்டுபிடிக்க.
அறிவியல் வாகனத்தில் நிறுத்தப்படுவேன்
எல்லாக் கோளிலும் ஏற்றப்படுவேன்
இளையவர் கூட்டம் என்னை ஏந்தி நடப்பர்
- இணையம்
- தமிழ்
- கணினி
- ஏவுகணை
விடை : தமிழ்
5. விடை வரிசையைத் தேர்க.
அ) இது செயற்கைக்கோள் ஏவு ஊர்தியின் செயல்பாட்டை முன்கூட்டியே கணிக்கும்.
ஆ) இது கடல்பயணத்துக்காக உருவாக்கப்ப ட்ட செயலி.
- நேவிக், சித்தாரா
- நேவிக், வானூர்தி
- வானூர்தி, சித்தாரா
- சித்தாரா, நேவிக்
விடை : சித்தாரா, நேவிக்
II. பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்கள்
சொற்கள் | தமிழாக்கம் |
ரொம்ப வீக்கு | நிரம்ப சபலம் |
ஆதார ருசிகள் | அடிப்படைச் சுவைகள் |
காபி | குழம்பி, கோப்பி, கொட்டை வடி நீர் |
ஸேவரி | காரசுவையுண்டி |
டேஸ்ட் | சுவை |
ருசிகள் | சுவைகள் |
சராசரி | ஏறத்தாழ |
அலட்டல் | அளத்தல் |
எக்ஸ்பிரஷன் | விளைவுகள் |
வாசனை | நறுமணம் |
பாதாம் அல்வா | பாதாம இன்களி |
ஐஸ்க்ரீம் | பனிக்குழைவு |
ரசிக்க | களிக்க |
ஜில்லென்று | குளிர்ச்சி என்று |
கற்பூர வாசனை | சூடம் நறுமணம் |
பெப்பர்மிண்ட் வாசனை | புதினாச்சுவையுள்ள மிட்டாய்கள் |
மஸ்க் அரபுசேக் செண்ட் | ஆண்மானிலிருந்து எடுக்கப் பெற்ற வாசனைத் திரவியம் |
ஈத்தர் | தீப்பற்றக் கூடிய பொருள் |
பெட்ரோல் வாசனை | கலெநல் (கன்னெய்) |
அமில வாசனை | காடிப்புளியம் |
III. அகராதியில் காண்க.
- இமிழ்தல் – இனிதாதல், ஒலித்தல், கக்குதல்
- இசைவு – இணக்கம், சம்மதி, பொருத்து, தகுதி, ஏற்றது, உடன்பாடு, ஓட்டம்
- துவனம் – அக்னி, நெருப்பு
- சபலை – இலக்குமி, திப்பிலி, நா, மின்னல், வேசி
- துகலம் – பங்கு
IV. ஒரு சொல்லால் தொடரின் இரு இடங்களை நிரப்புக.
(விலங்கு, எழுதி, அகல், கால், அலை)
- எண்ணெய் ஊற்றி அகல் விளக்கு ஏற்றியவுடன், இடத்தைவிட்டு அகல்
- எனக்கு கால் பங்கு பிரித்துக் கொடுக்க வா! கீழே ஈரம்; பார்த்து உன் கால் ஐ வை.
- கைப்பொருளைக் கடல் அலையில் தொலைத்துவிட்டு, கரையில் தேடி அலைந்தால் கிடைக்குமா?
- வீட்டு விலங்கு ஆன நாயுடன் விளையாடுவது மகிழ்ச்சி தரும்; வெளியில் அதனைக் கழுத்து விலங்கு உடன் மட்டுமே பிடித்துச் செல்ல வேண்டும்.
- எழுத்தாணி கொண்டு எழுதிய தமிழை, ஏவுகணையில் எழுதி எல்லாக் கோளிலும் ஏற்றுங்கள்.
V. ஒரு தொடரில் இருவினைகளை அமைத்து எழுதுக.
(குவிந்து – குவித்து; சேர்ந்து – சேர்த்து; பணிந்து – பணித்து; பொருந்து – பொருத்து; மாறு – மாற்று)
1. விரிந்தது – விரித்தது
மழைக்காற்று வீசியதால், பூவின் இதழ்கள் விரிந்தன; மயில் தோகையை விரித்தது.
2. குவிந்து – குவித்து;
காட்டாற்று வெள்ளம் அடித்து வந்த மணல் குவிந்தது ;வாங்கிய மணலை குவித்து வைத்தோம்
3. சேர்ந்து – சேர்த்து;
காசு சேர்ந்தது; அதனால் சேர்த்து வைத்தோம்
4. பணிந்து – பணித்து;
தலைவர் சொல்லுக்கு தொண்டர்கள் பணிந்து நடந்தனர்; மக்கள் பணியில் சேவை செய்யுமாறு பணித்து இருக்கிறார்
5. பொருந்து – பொருத்து;
மேடைப் பேச்சுக்குப் பொருந்துமாறு, உவமைகளை பொருத்திப் பேச வேண்டும்
6. மாறு – மாற்று
கைம்மாறு எதிர்பார்க்காமல் செய்யும் வேலை அனைவரையும் உன் பக்கம் மாற்றும்
VI. கலைச்சொல் அறிவோம்
- ஏவு ஊர்தி – Launch Vehicle
- ஏவுகணை – Missile
- கடல்மைல் – Nautical Mile
- காணொலிக் கூட்டம் – Video Conference
- பதிவிறக்கம் – Download
- பயணியர் பெயர்ப் பதிவு – Passenger Name Record (PNR)
- மின்னணுக் கருவிகள் – Electronic devices
மா + அடி-இதன் புணர்ந்த வடிவம்
மா + அடி = மாவடி
உலக தாய் மொழி தினத்தை கொண்டாடும் விதமாக நிகழ்ச்சி நிரல் வடிவமைக்க