9th Standard Tamil Book 2nd Term Answers 2022
கசடற மொழிதல்
I. சொல்லும் பொருளும்:
- களர்நிலம் – உவர்நிலம்,
- நவிலல் – சொல்
- வையம் – உலகம்
- மாக்கடல் – பெரிய கடல்
- இயற்றுக – செய்க
- மின்னாளை – மின்னலைப் போன்றவளை
- மின்னாள் – ஒளிரமாட்டாள்
- தணல் – நெருப்பு
- தாழி – சமைக்கும் கலன்
- அணித்து – அருகில்
- தவிர்க்கஒணா – தவிர்க்க இயலாத
- யாண்டும் – எப்பொழுதும்
- மூவாது – முதுமை அடையாமல்
- நாறுவ – முளைப்ப
- தாவா – கெடாதிருத்தல்
I. பத்திகளில் இடம்பெற்றுள்ள இடைச்சொற்களைக் கண்டறிந்து எழுதுக.
அ) பெண்ணடிமை போக வேண்டும்; பெண், கல்வி பெற வேண்டும். பெண்கள் படித்தால் தான் தம் சொந்தக் காலில் நிற்கலாம். பெண், கல்வி கற்றால் வீடும் நாடும் முன்னேறும். சமுதாயத்தின் சரிபாதியான பெண்களுக்கும் எல்லா உரிமைகளும் உண்டு.
ஆ) நமது முன் சந்ததியார்களுக்கு இருந்ததை விட, அதிகமான வசதிகள் நமக்கு உள்ளன. அவர்களின் காலம், அடவியில் ஆற்றோரத்தில் பர்ணசாலைக்குப் பக்கத்தில் ஆலமரத்தடியில் சிறுவர்கள் அமர்ந்திருக்க, குரு காலைக் கடன்களை முடித்துக் கொண்டு வந்து, பாடங்களைச் சொல்லித் தரும் முறை இருந்த காலம், ஏடும் எழுத்தாணியும் இருந்த காலம். இப்போதுள்ளது உலகை நமது வீட்டுக்கு அழைத்து வந்து காட்டக்கூடிய காலம். பாமர மக்கள் பாராளும் காலம். மனவளத்தை அதிகப்படுத்தும் வழிகள் முன்பு இருந்ததைவிட அதிகம் உள்ள காலம்.
இடைச்சொற்கள் | |
பழத்தான் தான் – (தான்) | இருந்ததை விட – (விட) |
வீடும் நாடும் – (உம்) | வசதிகள் – (கள்) |
சமுதாயத்தின் – (இன்) | அவர்களின் – (இன்) |
பெண்களுக்கும் – (உம்) | பாடசாலைக்கு – (கு) |
உரிமைகளும் – (உம்) | வீட்டுக்கு – (கு) |
ஆடவியில், ஆற்றோரத்தில் – (இல்) |
II. உம், ஓ, ஏ, தான், மட்டும், ஆவது, கூட, ஆ, ஆம், ஆகிய இடைச்சொற்களைப் பயன்படுத்திச் சொற்றொடர்களை உருவாக்குக.
- உம் – தலைவர்களும் போற்றும் தலைவர் காமராஜர்
- ஓ – அவனோ இவனோ இதைச் செய்தது
- ஏ – அவன் படித்தே முன்னேறினான்
- தான் – அவன் தான் பார்த்தான்
- மட்டும் – உங்களில் ஒருவர் மட்டும் முன்னால் வாருங்கள்
- ஆவது – என்றைக்காவது நூலகம் போயிருக்கிறாயா?
- கூட – ஒருவர் கூட சாட்சி சொல்லவில்லை
- ஆ – அவன் படித்தானா?
- ஆம் – தலைமை ஆசிரியர் உள்ளே வரலாம் என்றார்
- ஆகிய – தேனாகிய அமுது மொழி தமிழ்
III. பொருத்தமான இடைச்சொற்களைப் பயன்படுத்துக.
- மணற்கேணியைப்போல் விளங்கும் நூல்தான் உறுதுணை என இருக்கிறது.
- பெண்களைப் படிக்க வைக்காத காலத்திலும் பெண் இனத்திற்கும் பெருமை சேர்க்கும்படிக்கு நம் முத்துலட்சுமி அம்மையார் முதல் பெண் மருத்துவராக வந்தார்கள் .
- மக்களின் மனங்களில் உலக அறிவு புக வழி செய்ய வேண்டும்.
IV. இணைத்து எழுதிப் பாருங்கள்.
அவன் | தான்
உம் ஏ ஆ |
மனிதன் |
இயற்கை | அழகு |
- அவன் தான் மனிதன்
- அவனும் மனிதன்
- அவனே மனிதன்
- அவனா மனிதன்
- இயற்கை தான் அழகு
- இயற்கையும் அழகு
- இயற்கையே அழகு
- இயற்கையா அழகு
உனக்கு | மட்டும்
கூட ஆவது |
தெரியுமா? |
தெரியும் |
- உனக்கு மட்டும் தெரியுமா?
- உனக்கு கூட தெரியுமா?
- உனக்காவது தெரியுமா?
- உனக்கு மட்டும் தெரியும்
- உனக்குக் கூட தெரியும்
- உனக்காவது தெரியும்
வீடு. நாடு | உம்
ஓ |
நமேத |
காற்று, வெளிச்சம் | தேவை | |
அன்பு, அமைதி | வேண்டும் | |
வான்மதி, பானு | வாருங்கள் |
- வீடும், நாடும் நமதே
- வீடோ, நாடோ நமதே
- காற்றும், வெளிச்சமும் தேவை
- காற்றொ, வெளிச்சமோ தேவை
- அன்பும், அமைதியும் வேண்டும்
- அன்போ, அமைதியோ வேண்டம்
- வான்மதியும், பானுவும் வாருங்கள்
- வான்மதியோ, பானுவோ வாருங்கள்
III. பொருத்தமான உரிச்சொற்களை எழுதுக.
அ) _________ பெரும் பொதுக் கூட்டம் (கடி, மா)
விடை : மா
ஆ) ________ விடுதும் (உறு, கடி)
விடை : கடி
இ) ________ நுதல் (வாள் , தவ )
விடை : வாள்
ஈ) _________ சிறந்தது ( சால , மழ)
விடை : சால
உ) _________ மனை ( கடி, தட )
விடை : கடி
IV. அவர்களுக்குப் பரிசு தருவேன் – இத்தொட ரில் “ஆ” என்னும் இடைச்சொல்லைச் சேர்த்து வினாக்களை அமைக்க.
- அவர்களுக்கா பரிசு தருவேன்?
- அவர்களுக்குப் பரிசு தருவேனா?
V. இடைச் சொற்களைப் பயன்படுத்திக் கீழ்க் காணும் சொற்றொடர்களை மாற்றியமைத்துக் காண்க.
அ) வீட்டுக்குச் செல்லத்தான் இவ்வளவு பீடிகையா?
விடை : வீட்டிற்குச் செல்வதற்குத்தான் இவ்வளவு பீடிகையாம்.
ஆ) இந்தச் சூழ்நிலை மாறியாக வேண்டும்.
விடை : இந்தச் சூழ்நிலையை மாற்றிதான் ஆகவேண்டும்.
இ) வானூர்தியைச் செலுத்துதல், உலகையும் கடலையும் அளத்தல் போன்ற எந்தச் செயலும் ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவானவை.
விடை : வானூர்தியைச் செலுத்துதல், உலகையும் கடலையும் அளத்தல் ஆகிய செயல்கள் கூட ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவாம்.
ஈ) சமைப்பது தாழ்வென எண்ணலாமா?
விடை : சமைப்பது மட்டும் தாழ்வென எண்ணலாமா?
உ) பூக்காமலே சில மரங்களில் காய்ப்பதுண்டு.
விடை : பூக்காமலும் சில மரங்கள் காய்க்கும்.
ஊ) வாளால் வெட்டினான்.
விடை : வாளால் தான் வெட்டினான்.
VI. பலவுள் தெரிக.
I. பொருத்தமான விடையைத் தேர்க .
- சிறுபஞ்சமூலம் – காப்பிய இலக்கியம்
- குடும்ப விளக்கு – சங்க இலக்கியம்
- சீவகசிந்தா மணி – அற இலக்கியம்
- குறுந்தொகை – தற்கால இலக்கியம்.
விடை : 1 – இ, 2 – ஈ, 3 – அ, 4 – ஆ
II. மாறுபட்டுள்ள குழுவினைக் கண்டறிக.
- கலைக்கூடம், திரையரங்கம், ஆடுகளம், அருங்காட்சியகம்
- கடி, உறு, கூர், கழி
- வினவினான், செப்பினான், உரைத்தான், பகன்றான்
- இன், கூட, கிறு, அம்பு
விடை : இன், கூட, கிறு, அம்பு
III. கீழ்க்காண்பவற்றுள் உணர்ச்சித் தொடர் எது?
- சிறுபஞ்ச மூலத்தில் உள்ள பாடல்கள் பெரும்பாலும் மகடூஉ முன்னிலையில் அமைந்துள்ளன.
- இந்திய நூலகவியலின் தந்தையென அறியப்படுபவர் யார்?
- என்னண்ணே! நீங்கள் சொல்வதை நம்பவே முடியவில்லை!
- வாழ்க்கையில் அடிப்படைத் தேவைக ளுக்கு அடுத்த இடத்தைப் புத்தகசாலைக்குத் தருக.
விடை : என்னண்ணே! நீங்கள் சொல்வதை நம்பவே முடியவில்லை!
IV. சரியான கூற்றினைத் தெரிவு செய்க.
அ) ‘ஆ’ என்பது எதிர்மறை இடைநிலை.
ஆ) வீட்டிற்கோர் புத்தகசாலை என்பது அண்ணாவின் மேடைப்பேச்சு.
இ) வில்லுப்பாட்டு ஓர் இலக்கிய வடிவம்.
- ஆ, இ சரி; அ தவறு
- அ, இ, சரி; ஆ தவறு
- மூன்றும் சரி
- மூன்றும் தவறு
விடை : மூன்றும் சரி
V. பூவாது காய்க்கும், மலர்க்கை – அடிக்கோடிட்ட சொற்களுக்குரிய இலக்கணம் யாது?
- பெயரெச்சம், உவமைத்தொகை
- எதிர்மறைப் பெயரெச்சம், உருவகம்
- வினையெச்சம், உவமை
- எதிர்மறை வினையெச்சம், உவமைத்தொகை
விடை : எதிர்மறை வினையெச்சம், உவமைத்தொகை
VI. பிழை நீக்கி எழுதுக.
1. மதீனா சிறந்த இசை வல்லுநர் வேண்டும்.
விடை : மதீனா சிறந்த இசை வல்லுநராக வேண்டும்
2. நல்ல தமிழுக்கு எழுதுவோம்
விடை : நல்ல தமிழில் எழுதுவோம்
3. பவளவிழிதான் பரிசு உரியவள் .
விடை : பவளவிழிதான் பரிசுக்கு உரியவள்
4. துன்பத்தால் பொறுத்துக்கொள்பவனே வெற்றி பெறுவான்.
விடை : துன்பத்தைப் பொறுத்துக்கொள்பவனே வெற்றி பெறுவான்
5. குழலியும் பாடத் தெரியும்.
விடை : குழலிக்கும் பாடத் தெரியும்
VII. இடைச் சொற்களைக் கொண்டு தொடர்களை இணைக்க.
1. பெரும் மழை பெய்தது. வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
விடை : பெரும் மழை பெய்ததால் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
2. அலுவலர் வந்தார்; அனைவரும் பதற்றம் அடைந்தனர்.
விடை : அலுவலர் வந்ததும் அனைவரும் பதற்றம் அடைந்தனர்
3. சுடர்க்கொடி பாடினாள்; மாலன் பாடினான்.
விடை : சுடர்க்கொடி பாடியதால் மாலனும் பாடினான்
4. பழனிமலை பெரியது; இமயமலை மிகப் பெரியது.
விடை : பழனிமலை பெரியது; இமயமலையோ மிகப் பெரியது
5. கவலையற்ற எதிர்காலத்திறகுக் கல்வியே நிகழ் காலம்.
விடை : கவலையற்ற எதிர்காலத்திற்கு கல்வியே நிகழ்காலம்
VIII. விளம்பரத்தைச் செய்தித்தாள் செய்தியாக மாற்றி அமைக்க.
தஞ்சையில் புத்தகத் திருவிழா
செப்டம்பர் 19 முதல் 28 வரை தஞ்சாவூர் சரசுவதி மஹால் நூலகத்தில் அறிவுக் களஞ்சியமான புத்தகங்களின் சங்கமமாம் புத்தகத் திருவிழா நடைபெறுகின்றது. முதல் நாள் காலை 9 மணிக்குத் தமிழகக் கல்வி அமைச்சர் புத்தகத் திருவிழாவினைத் தொடங்கி வைக்கிறார். நாள்தோறும் கால 8 மணி முதல் 6 மணி வரை அறிவுப் புதையலை அள்ளிச் செல்லலாம். சிந்தைக்குப் பெருவிருந்தாய் மாலை 6 மணிக்குப் புதிய நூல் வெளியீடும். தலை சிறந்தப் பேச்சாளர்களின் பேச்சும் இடம்பெறும்
IX. நிகழ்வினைப் படித்து, வினாக்களுக்கு விடையளிக்க.
அண்ணாவின் வாழ்க்கையில்…
தமிழக முதலமைச்சராக அண்ணா பொறுப்பேற்ற காலகட்டத்தில், அரிசி வெளிமாநிலங்களுக்குச் செல்லக் கூடாது என்ற கட்டுப்பாடு இருந்தது. ஒரு நாள் அண்ணா விருத்தாசலம் கூட்டத்தை முடித்து விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தார்.
வழியில் சோதனைச் சாவடியில் அவரது வண்டி நிறுத்தப்பட்டது. அங்கிருந்த வருவாய் அலுவலர், முதலமைச்சரின் மகிழுந்து என்று அறியாமலே திறந்துகாட்டச் செய்தார். மகிழுந்தின் பின்பக்கம் முழுவதும் மாலைகள், கைத்தறி ஆடைகள், வாழ்த்துமடல்கள் இருந்தன. அவற்றைப் பார்த்த பிறகுதான் அந்த அலுவலருக்கு வந்திருப்பது யார் என்பது புரிந்தது. உடனே அவர் அண்ணாவின் அருகில் சென்று,” தெரியாமல் நடந்து விட்டது பொறுத்துக் கொள்ளுங்கள் ” என்றார். ஆனால், அண்ணா அவர் உதவியாளரிடம், “இந்த அலுவலரின் பெயரைக் குறித்துக் கொள்ளுங்கள் “என்றார். அந்த அலுவலர் தனக்கு ஏதோ நடந்து விடப்போகிறது என அச்சப்பட்டு அழாத குறையாக கெஞ்சினார். உடனே, அண்ணா, “ நாங்கள் போடும் சட்டங்களைச் சரியான முறையில் நிறைவேற்றும் பொறுப்பு உங்களைப்போன்ற அலுவலரின் கையில்தான் இருக்கிறது. இன்று நேரில் உங்கள் செயலைப் பார்த்தேன். உங்களைப் போன்றவர்கள்தாம் உயர் பதவிக்கு வரவேண்டும் . அதற்காகத்தான் உங்கள் பெயரைக் கேட்டேன்” என்றார். |
1. மகிழுந்தில் வந்திருப்பது அண்ணா என்பதை வருவாய் அலுவலர் எப்படி அறிந்தார்?
மகிழுந்தின் பின்பக்கம் முழுவதும் மாலைகள், கைத்தறி ஆடைகள், வாழ்த்து மடல்கள் இருந்தன. அவற்றைப் பார்த்த பிறகுதான் வந்திருப்பது அண்ணா என அந்த அலுவலர் தெரிந்து கொண்டார்
2. அண்ணாவிடம் ஏன் வருவாய் அலுவலர் பொறுத்துக் கொள்ளச் சொன்னார்?
முதலமைச்சர் என்று தெரியாமல் சோதனைச்சாவடியில் மகிழுந்தைத் திறந்து காட்டச் சொன்னதால், என்ன நடக்குமோ என்று அச்சப்பட்டு, தெரியாமல் நடந்து விட்டது பொறுத்துக் கொள்ளுங்கள் என்றார்
3. அண்ணா, வருவாய் அலுவலரின் செயலை எவ்வாறு பாராட்டினார்?
“ சட்டங்களைச் சரியான முறையில் நிறைவேற்றும் பொறுப்பு உங்களைப் போன்றவர்கள் கையில் தான் இருக்கிறது. உங்களைப் போன்றவர்கள்தாம் உயர் பதவிக்கு வரவேண்டும் என்று பாராட்டினார்.
4. பத்தியில் இடம்பெ றும் இடைச் சொற்களைக் கொண்டு இரு புதிய சொற்றொடர்களை உருவாக்குக.
- தான் – தான் முன்னேற்ற கன்னிமாரோ நூலகேம காரணம் என்றார் பேரறிஞர் அண்ணா
- இன் – ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை
5. நிகழ்வுக்குப் பொருத்தமான தலைப்பு இடுக.
நேர்மை (அல்லது) துணி
மொழியோடு விளையாடு
I. சொற்களைப் பயன்படுத்தித் தொடர்களை உருவாக்குக
மாணவர்கள் | ஆசிரியர் | பாடவேளை | கரும்பலகை |
புத்தகம் | எழுதுகோல் | அழிப்பான் | வழிபாட்டுக் கூட்டம் |
அறை | கல்லூரி | உயர்நிலை | சீருடை |
மடிக்கணினி |
- வழிபாட்டுக் கூட்டத்தில் மாணவர்கள் சீருடையுடன் நின்றனர்.
- மாணவர்கள் உயர்நிலை அடைய வேண்டும் என்றார் ஆசிரியர்
- “மாணவர்களே! எழுதுகோலும், அழிப்பானும் கொண்டு வாருங்கள்” என்றார் ஆசிரியர்,
- பாடவேளையின் பொழுது ஆசிரியர் கரும்பலகையில் எழுதினார்
- மாணவர்கள் பாடவேளைக்குரிய புத்தகங்களைக் கொண்டு வரவில்லை
- வழிபாட்டுக் கூட்டத்தில் மடிக்கணினி வழஙகப்பட்டது
II. அகராதியில் காண்க.
- அரங்கு – அரங்கம், உள்வீடு, நாடகசபை மன்றம், போர்க்களம்
- ஒட்பம் – அறிவு, அழகு, நன்மை, மேன்மை
- கான் – காடு, மனம், வாய்க்கால், இசை, மணம், பூ, வீட்டறை, நெசவு
- நசை – ஆசை, குற்றம், எள்ளல், ஈரம், அன்பு, ஒழுக்கம், பரிகாசம், விருப்பம்
- பொருநர் – படைவீரன், தலைவன், அரசர், நாடகர், புகழ்வோர்
III. படங்களை இணைத்தால் கிடைக்கும் நூல்களின் பெயர்களைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
(ஒரு கிராமத்து நதி, கிழவனும் கடலும், கருப்பு மலர்கள் , சாக்ரட்டீஸின் சிவப்பு நூலகம், தண்ணீர் தண்ணீர்)
- நா. காமராசனின் கவிதை நூல் கருப்பு மலர்கள்
- திரைப்படமாக வெளிவந்த கோ மல் சுவா மிநாதனின் நாடக நூல் தண்ணீர் தண்ணீர்
- நோபல் பரிசு பெற்ற எர்ன ஸ்ட் ஹெமிங்வேவின் குறுநாவல் கிழவனும் கடலும்
- சாகித்திய அகாதெமி பரிசுபெற்ற சிற்பியின் கவிதை நூல் ஒரு கிராமத்து நதி
- எஸ். ரா மகிருஷ்ணனின் சிறார் நாவல் சாக்ரட்டீஸின் சிவப்பு நூலகம்
IV. கலைச்சொல் அறிவோம்
- சமூக சீர்திருத்தவாதி – Social Reformer
- தன்னார்வலர் – Volunteer
- களர்நிலம் – Saline Soil
- சொற்றொடர் – Sentence
தொழில் பல முனைதல்
சொல்லும் பொருளும்
- புரிசை – மதில்
- அணங்கு – தெய்வம்
- சில்காற்று – தென்றல்
- புழை – சாளரம்
- மாகால் – பெருங்காற்று
- முந்நீர் – கடல்
- பணை – முரசு
- கயம் – நீர்நிலை
- ஓவு – ஓவியம்
- நியமம் – அங்காடி.
கற்பவை கற்றபின்…
I. ஆகுபெயரைக் கண்டறிக.
அ. தமிழரசி வள்ளுவரை ஓவியமாக வரைந்தாள். – தொழிலாகு பெயர்
தமிழரசி வள்ளுவரைப் படித்தாள் – கருத்தாவாகு பெயர்
ஆ. மாமாவின் வருகைக்கு வீடே மகிழ்கிறது – இடவாகு பெயர்
நாடும் வீடும் நமது இரு கண்கள் – சினையாகு பெயர்
இ. கலைச்செல் வி பச்சை நிற ஆடையை உடுத்தினாள் – தொழிலாகு பெயர்
கலைச்செல்வி பச்சை உடுத்தினாள் – பொருளாகுபெயர் (முதலாகு பெயர்)
ஈ. நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி – எண்ணலளவையாகு பெயர்
நாலடி நானூறும் இரண்டடித் திருக்குறளும் வா ழ்வுக்கு உறுதி தரும். – காரியவாகு பெயர்
உ. ஞாயிற்றை உலகம் சுற்றி வருகிறது – தொழிலாகு பெயர்
நீங்கள் கூறுவதை உலகம் ஏற்குமா? – இடவாகு பெயர்
II. ஆகுபெயர் அமையுமாறு தொடர்களை மாற்றி எழுதுக.
அ. மதுரை மக்கள் இரவிலும் வணிகம் செய்கின்றனர்.
விடை : மதுரையில் இரவு வணிகம் உண்டு
ஆ. இந்தியா வீரர்கள் எளிதில் வென்றனர்.
விடை : இந்தியா எளிதில் வென்றது.
இ. நகைச்சுவை நிகழ்வைப் பார்த்து அரங்கத்தில் உள்ளவர்கள் சிரித்தனர்.
விடை : நகைச்சுவை நிகழ்வைப் பார்த்து அரங்கமே சிரித்தது
ஈ. நீரின்றி இவ்வுலக மக்களால் இயங்க முடியாது
விடை : நீரின்றி உலகு இயங்காது
பலவுள் தெரிக.
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. அஃகசாலை என்பது ……………………. த்தைக் குறிக்கும்.
- அங்காடிகள் அமைந்துள்ள இடம்
- யவனர்கள் இருக்கின்ற இடம்
- நாணயங்கள் அச்சடிக்கும் இடம்
- அரேபியர்க ளின் பந்தர் இடம்
விடை : நாணயங்கள் அச்சடிக்கும் இடம்
2. கூற்று 1 – காவிரிப்பூம்பட்டினம் சோழ நாட்டின் துறைமுகமாகும்.
கூற்று 2– வண்டியூர் என்னும் ஊர் காஞ்சி மாநகரத்தில் அமைந்துள்ளது.
- கூற்று 1, 2 சரி
- கூற்று 1, 2 தவறு
- கூற்று 2 சரி, 1 தவறு
- கூற்று 1 சரி, 2 தவறு
விடை : கூற்று 1 சரி, 2 தவ று
3. ‘ யவனப்பிரியா’ என்பது எதனைக் குறிக்கும்?
- மிளகு
- முத்து
- சங்கு
- தந்தம்
விடை : மிளகு
4. ஏற்றுமதி, இறக்குமதி குறித்துக் கூறும் சங்க நூல்கள்
- பட்டினப்பாலை, குறிஞ்சிப்பாட்டு
- குறிஞ்சிப்பாட்டு, பதிற்றுப்பத்து
- மதுரைக்காஞ்சி, முல்லைப்பாட்டு
- மதுரைக்காஞ்சி, பட்டினப்பாலை
விடை : மதுரைக்காஞ்சி, முல்லைப்பாட்டு
5. விடைக்கேற்ற வினாவைத் தெரிவு செய்க.
- காவிரியாற்றின் கழிமுகம் ஆழமாகவும், அகலமாகவும் இருந்தது.
- பகலில் இயங்கும் கடகள் நாளங்காடிகள் .
- காவிரியாற்றின் கழிமுகம் எதற்காக அமைந்திருந்தது? – பகலில் இயங்கும் கடைகள் எவ்விதம் அழைக்கப்பட்டன?
- காவிரியாற்றின் கழிமுகம் எவ்வாறு அமைந்திருந்தது? – பகலில் இயங்கும் கடைகள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
- காவிரியாற்றின் கழிமுகம் எங்கு அமைந்திருந்தது? – பகலில் கடைகள் எவ்வாறு இயங்கின?
- காவிரியாற்றின் கழிமுகம் எதனால் அமைந்திருந்தது? – பகலில் இயங்கும் கடைகள் எப்படி அழைக்கப்பட்டன?
விடை : காவிரியாற்றின் கழிமுகம் எவ்வாறு அமைந்திருந்தது? – பகலில் இயங்கும் கடைகள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
II. தொடரில் உள்ள பிழைகளைக் கண்டறிந்து நீக்குக.
1. மலையேறிய மக்கள் மாலையின் வேகவேகமாய்க் கீழிறங்கின.
விடை : மலையேறி மக்கள் மாலையில் வேகவேகமாய்க் கீழிறங்கின
2. எங்கள் ஊர் சந்தையில் காய்க்க றிகள் கிடைக்கும்.
விடை : எங்கள் ஊர் சந்தையில் காய்கறிகள் கிடைக்கும்.
3. பண்டைத் துறைமுகங்களில் ஏற்றுமதிச் செய்யப்பட்டது.
விடை : பண்டைத் துறைமுகங்களில் ஏற்றுமதி செய்யப்பட்டது.
4. சிட்டுக்கு சிறகுகள் முளைத்தது.
விடை : சிட்டுக்கு சிறகுகள் முளைத்தன
III. ஆகுபெயர்களைச் சொற்றொடரில் அமைத்து எழுதுக.
(விளைச்சல் , பால், முழம், மதுரை, வெள்ளை, பள்ளி.
எ.கா.) இந்த ஆண்டில் நல்ல விளைச்சல் பெற்றான்.
- விளைச்சல் : வெள்ளத்தினால் நெல் விளைச்சல் பாதித்தது
- பால் : பசும்பால் உடம்புக்கு நல்லது
- முழம் : ஒரு முழம் மல்லிகைப்பூ வாங்கி வந்தேன்
- மதுரை : வைகை ஆறு மதுரை மாவட்டத்தில் ஓடுகிறது
- வெள்ளை : பாலும், கள்ளுமும் வெள்ளை நிறத்தில் காணப்படும்
- பள்ளி : அறிவுக்கண் தருவது பள்ளி
VI. சொற்றொடரில் ஒளிந்துள்ள தமிழ்நாட்டின் துறைமுகங்களைக் கண்டறிந்து எழுதுக.
- கல்வியில் தடம் பதித்தவர் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் – கடலூர்
- பூம்பொழில் புகும் கார் கால மேகம் – பூம்புகார்
- தூக்கத்தில் துள்ளிக் குதிக்கும் கரடி – தூத்துக்குடி
- எட்டும் தொண்ணூறும் எண்ணுப்பெயர்கள் – எண்ணூர்
VII. அகராதியில் காண்க.
- தரங்கம் – அலை
- தொள்ளை – துளை
- நியமம் – தெரு
- பாடிலம் – நாடு
- மாறன் – பாண்டியன்
VIII. ஆகுபெயர்களை அட்டவணைப்படுத்துக
டிசம்பரைத் தலையில் சூடிக்கொண்டாள் | டிசம்பர் என்னும் காலப்பெயர் பூவுக்கு ஆகி வந்ததால் (காலவாகு பெயர்) |
பாலை இறக்கினாள் | பால் கொதித்த பாத்திரத்தை இறக்கினாள், கருவி பாலுக்கு அகி வந்தது (கருவியாகு பெயர்) |
தலைக்கு இருநூறு | ஒவ்வொருவருகு்கும் என்பதைத் தலை என்னும் சினைப்பெயரால் உணர்த்துகிறது (சினையாகு பெயர்) |
சாப்பாட்டிற்கு ஐந்து கிலோ வாங்க வேண்டும். |
5 கிலோ அரிசியை குறிக்க… எடுத்து அளந்து தருவது (நிறுத்து) (எடுத்தலளவை ஆகு பெயர்) |
தாளிப்பதற்கு மூன்று லிட்டர் வாங்க வேண்டும். | முகந்து அளக்கும் எண்ணெய் (முகத்தலளவையாகு பெயர்) |
துணி உலர்த்துவதற்கு நான்கு மீட்டர் |
நீட்டி அளக்கும் துணி உலர்த்தும் கொடியை குறிக்கும் (நீட்டலளவையாகு பெயர்) |
சிவசங்கரியைப் படித்து முடிக்க வேண்டும் | சிவசங்கரி நூலைக் குறிக்கும் (கருத்தாவாகு பெயர்) |
IX. வட்டத்திற்குள் உள்ள எழுத்துகளைக்கொண்டு சொற்களை உருவாக்குக.
கால், காலை, கான், புத்தகம், புல், புத்தி, அகல், அவல், கல், அதிகம், கறி, தறி, புதன், வலை, அறிவன், கலை, கத்தி, கவலை, காவல், அலை, தில்லை, தலை
X. வினைமுற்றை வினையாலணையும் பெயராக்கித் தொடர்களை இணைக்க.
(எ.கா.)
மதுரையில் தமிழ் வளர்க்கச் சங்கம் அமைத்தார்கள் ; அவர்கள் பாண்டிய மன்னர்கள் .
மதுரையில் தமிழ் வளர்க்கச் சங்கம் அமைத்தவர்கள் பாண்டிய மன்னர்கள் .
1. நேற்று ஒருவன் வந்தான்; அவன் என் தம்பி.
விடை : நேற்று வந்தவன் என் தம்பி
2. அவர் மகிழுந்தை நிறுத்தினார்; வீட்டிற்குள் நுழைந்தார்.
விடை : மகிழ்வதை நிறுத்தியவர் வீட்டிற்குள் நுழைந்தார்
3. கூண்டுக்குள் கிளியைக் கண்டார்; அதை வானில் பறக்கவிட்டார்.
விடை : கூண்டுக்குள் கிளியை கண்டவர் அதை வானில் பறக்கவிட்டார்
4. எனக்குக் கவிதை நூலைத் தருவார்; அவரே அதன் பதிப்பாளர்.
விடை : எனக்கு கவிதை நூலைத் தந்தவர் அதன் பதிப்பாளர்
கலைச்சொல் அறிவோம்
- கழிமுகங்கள் – Estuaries
- கலங்கரைவிளக்கம் – Lighthouse
- துறைமுகங்கள் – Ports
- பண்டமாற்றுமுறை – Commodity Exchange
- இளநீர் – Tender Coconut, அகழி – Moat
- கரும்புச் சா று – Sugarcane Juice
- காய்கறி வடிசாறு – Vegetable Soup
2.1 திருக்குறள்
I. படத்திற்கு ஏற்ற குறளைத் தேர்வு செய்
அ. இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்.
ஆ. ஏவவும் செய்கலான் தான்தே றான் அவ்வுயிர்
போஒம் அளவும்ஓர் நோய்.
இ. சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை
விடை
இ. சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை
II பொருளுக்கேற்ற அடியைக் கண் டுபிடித்துப் பொருத்துக.
கண்டானாம் தான்கண்ட வாறு | பகைவரையும் நட்பாக்கும் கருவி |
அறம்நாணத் தக்கது உடைத்து | தெரிந்த அளவில் அறிவுடையவனாகத் தோன்றுவான் |
மாற்றாரை மாற்றும் படை | அறம் வெட்கப்பட்டு அவனை விட்டு விலகிப்போகும் |
விடை : 1 – ஆ, 2 – இ, 1 -அ
3. ஐந்து சால்புகளில் இரண் டு
- வானமும் நாணமும்
- நாணமும் இணக்கமும்
- இணக்கமும் சுணக்கமும்
- இணக்கமும் பிணக்கமும்
விடை : நாணமும் இணக்கமும்
III. கோடிட்ட இடங்களுக்கான விடையைக் கட்டத்துள் கண்டறிந்து வட்ட மிடுக.
அ. அனைவரிடமும் இணக்கம் என்பதன் பொருள்
விடை : ஒப்புரவு
ஆ. உலகத்துக்கு அச்சாணி போன்றவர் ……
விடை : உழவர்
இ. தான் நாணான் ஆயின் …… நாணத் தக்கது.
விடை : அறம்
ஈ. ஆழி என்பதன் பொருள்……
விடை : கடல்
உ. மாற்றாரை மாற்றும் ………
விடை : படை
ஊ. ஒழுக்கமான குடியில் பிறந்தவர் …… செய்வதில்லை.
விடை : தவறு
கலை பல வளர்த்தல்
சொல்லும் பொருளும்
- மைவனம் – மலைநெல்
- முருகியம் – குறிஞ்சிப்பறை
- பூஞ்சினை-பூக்களை
- உடைய கிளை
- சிறை – இறகு
- சாந்தம் – சந்தனம்
- பூவை- நாகணவாய்ப் பறவை
- பொலம்- அழகு
- கடறு – காடு
- முக்குழல்-கொன்றை, ஆம்பல், மூங்கில் ஆகியவற்றால் ஆன குழல்கள்;
- பொலி – தானியக்குவியல்
- உழை – ஒரு வகை மான்.
- கல் -மலை
- முருகு – தேன், மணம், அழகு
- மல்லல்- வளம்
- செறு- வயல்
- கரிக்குருத்து – யானைத்தந்தம்
- போர்- வைக்கோற்போர்
- புரைதப- குற்றமின்றி
- தும்பி- ஒருவகை வண்டு
- துவரை-பவளம்
- மரை – தாமரை மலர்
- விசும்பு- வானம்
- மதியம்-நிலவு
- தீபம் – விளக்கு
- சதிர் – நடனம்
- தாமம் – மாலை
I. எழுத்துவகை அறிந்து பொருத்துக.
- இயல் – உயிர் முதல் உயிரீறு
- புதிது – உயிர் முதல் மெய்யீறு
- ஆணி – மெய்ம்முதல் மெய்யீறு
- வரம் – மெய்ம்முதல் உயிரீறு
விடை : 1 – ஆ, 2 – ஈ, 3 – அ, 4 – இ
II. புணர்ச்சிகளை ’முதல், ஈற்றுச்’ சொல்வகையால் பொருத்துக.
- செல்வி + ஆடினாள் – மெய்யீறு + மெய்ம்முதல்
- பாலை + திணை – மெய்யீறு + உயிர்முதல்
- கோல் + ஆட்டம் – உயிரீறு + உயிர்முதல்
- மண் + சரிந்தது – உயிரீறு + மெய்ம்முதல்
விடை : 1 – இ, 2 – ஈ, 3 – ஆ, 4 – அ
III. சேர்த்து எழுதுக.
- தமிழ் + பேசு = தமிழ் பேசு
- தமிழ் + பேச்சு = தமிழ்பேச்சு
- கை + கள் = கைகள்
- பூ + கள் = பூக்கள்
IV. பொருத்தமான உடம்படுமெய்யுடன் இணைக்க.
- பூ + இனம் = பூவினம் (வகர உடம்படு மெய்)
- இசை + இனிக்கிறது = இசையினிக்கிறது (யகர உடம்படுமெய்)
- திரு + அருட்பா = திருவருட்பா (வகர உடம்படு மெய்)
- சே + அடி = சேவடி (வகர உடம்படு மெய்)
V. சொற்களைச் சேர்த்து எழுதுக.
- தொன்மை + ஆன = தொன்மையான
- நூல் + ஆகிய = நூலாகிய
- தொல்காப்பியம் + இல் = தொல்காப்பியத்தில்
- சிற்பம் + கலை = சிற்பக்கலை
- அ + கல்லில் = அக்கல்லில்
- தமிழக + சிற்பம் + கலை = தமிழகச் சிற்பக்கலை
- இதனை + கொள்ளலாம் = இதனைக் கொள்ளலாம்
- கண்ணகிக்கு + சிலை = கண்ணகிக்குச் சிலை
- சுதை + சிற்பங்கள் = சுதைச் சிற்பங்கள்
- அறிய + முடிகிறது = அறிய முடிகிறது
VI. படக்காட்சியிலிருந்து இருசொல் தொடர்களை அமைத்து, அவற்றின் புணர்ச்சி வகையினைக் கண்டறிக.
- மரக்கிளை – விகாரப் புணர்ச்சி,
- மூன்று பெண்கள் – இயல்புப் புணர்ச்சி
- நிறைகுடம் – இயல்புப் புணர்ச்சி
- உழவுத் தொழில் – தோன்றல்விகாரப் புணர்ச்சி
பலவுள் தெரிக.
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. பல்லவர் காலச் சிற்பக்கலைக்குச் சிறந்த சான்று ___________
- மாமல்லபுரம்
- பிள்ளையார்பட்டி
- திரிபுவனவீரேசுவரம்
- தாடிக்கொம்பு
விடை : மாமல்லபுரம்
2. ’பொதுவர்கள் பொலிஉறப் போர்அடித்திடும்’ நிலப் பகுதி _______
- குறிஞ்சி
- நெய்தல்
- முல்லை
- பாலை
விடை : முல்லை
3. மரவேர் என்பது ________ புணர்ச்சி
- இயல்பு
- திரிதல்
- தோன்றல்
- கெடுதல்
விடை : கெடுதல்
4. ’அதிரப் புகுதக் கனாக் கண்டேன்’ – யார் கனவில் யார் அதிரப் புகுந்தார்?
- கண்ணனின் கனவில் ஆண்டாள் புகுந்தாள்
- தோழியின் கனவில் ஆண்டாள் புகுந்தாள்
- ஆண்டாளின் கனவில் தோ ழி புகுந்தாள்
- ஆண்டாளின் கனவில் கண்ணன் புகுந்தான்
விடை : ஆண்டாளின் கனவில் கண்ணன் புகுந்தான்
II. மொழிபெயர்க்க.
- Strengthen the body – உடலினை உறுதி செய்
- Love your Food – உணவை நேசி
- Thinking is great – நல்லதே நினை
- Walk like a bull – ஏறு போல் நட
- Union is Strength – ஒற்றுமையே பலம்
- Practice what you have learnt – படித்ததைப் பழகிக் கொள்
III. மரபுத் தொடர்களைக் கொண்டு தொடர் அமைக்க.
(எட்டாக்கனி, உடும்புப்பிடி, கிணற்றுத்தவளை , ஆகாயத் தாமரை, எடுப்பார் கைப்பிள்ளை, மேளதாளத்துடன்)
- எட்டாக்கனி : முயன்றால் எந்தச் செயலிலும் வெற்றி என்பது எட்டாக்கனி இல்லை.
- உடும்புப்பிடி – நட்பில் அன்பு உடும்புப்பிடி போன்றது
- கிணற்றுத்தவளை – வெறும் படிப்பறிவு மட்டும் இருப்பது கிணற்றுத்தவளை போலத்தான்.
- ஆகாயத்தாமரை – பாலைவனத்தில் நீர் கிடைப்பது ஆகாயத்தாமரை பூப்பது போலத்தான்
- எடுப்பார் கைப்பிள்ளை – பிறரின் பேச்சைக் கேட்டு எடுப்பார் கைப்பிள்ளை போல இருக்கக் கூடாது.
- மேளதாளத்துடன் – நண்பனின் திருமணம் மேளதாளத்துடன் நடைபெற்றது
IV. மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக.
1. இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை போட்டனர்.
விடை : இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை வேய்ந்தனர்.
2. கயல் பானை செய்யக் கற்றுக் கொண்டான்.
விடை : கயல் பானை வனையக் கற்றுக் கொண்டாள்
3. நேற்று தென்றல் காற்று அடித்தது.
விடை : நேற்று தென்றல் காற்று வீசியது.
4. தென்னை மட்டையிலிருந்து நார் எடுத்தார்.
விடை : தென்னை மட்டையிலிருந்து நார் உரித்தனர்.
5. அணில் பழம் சாப்பிட்டது.
விடை : அணில் பழம் கொறித்தது.
6. கொடியிலுள்ள மலரை எடுத்து வா .
விடை : கொடியிலுள்ள மலரைப் பறித்து வா .
V. விடையைத் தமிழ் எண்களில் எழுதுக
- ௧௮
- ௧௩௩
- ௯௩
- ௧௨
- சா௩
- ௧௨
VI. கண்டுபிடிக்க.
1. எண்ணும் எழுத்தும் கண் – இந்தத் தொடரை ஒருவர் 1 2 3 4 1 5 6 7 4 8 2 என்று குறிப்பிடுகிறார். இதே முறையைப் பின்பற்றிக் கீழ்க் காணும் சொற்களை எப்படிக் குறிப்பிடுவார்?
- எழுது → 1, 5, 7
- கண்ணும் → 8, 2, 3, 4
- கழுத்து → 8, 5, 6, 7
- கத்து → 8, 6, 7
2. என் வகுப்பில் படிக்கும் அனைவரும் புதிய புத்தகம் வைத்திருந்தனர். இராமனும் புதிய புத்தகம் வைத்திருந்தான். எனவே, இராமன் என் வகுப்பு மாணவன் – இக்கூற்று
- உண்மை
- பொய்
- உறுதியாகக் கூறமுடியாது
விடை : உறுதியாகக் கூறமுடியாது
VII. அகராதியில் காண்க.
ஏங்கல் | அஞ்சல். அழுதல், இரங்கல், வாடல், வாய்விடல், கவலைப்படல் |
கிடுகு | வட்டவடிவப்பாறை, கேடகம், சட்டப்பலகை, தேரின் மரச்சுற்று, முடைந்த ஓலைக்கீற்று |
தாமம் | மாலை, இடம், உடல், ஒளி, பிறப்பு, பெருமை, யானை |
பான்மை | குணம், தகுதி, தன்மை, பங்கு, ஊழ், நல்வினைப்பயன் |
பொறி | அறிவு, எழுத்து, செல்வம், தீப்பொறி, தேர், வண்டு, முத்திரை, வரி, பதுமை |
VIII. உவமைத் தொடர்களை உருவகத் தொடர்களாக மாற்றுக.
1. மலர்விழி வீணை வாசித்தாள் ; கேட்டவர் வெள்ளம் போன்ற இன்பத்தில் நீந்தினர்.
விடை : விழிமலர் வீணை வாசித்தாள், கேட்டவர் இன்ப வெள்ளத்தில் நீந்தினர்
2. குழலியின் இசையைச் சுவைத்தவர், கடல் போன்ற கவலையிலிருந்து நீங்கினர்.
விடை : குழலியின் இசையைச் சுவைத்தவர் கவலை கடலிருந்து நீங்கினர்
3. தேன் போன்ற மொழியைப் பவளவாய் திறந்து படித்தாள் .
விடை : மொழித்தேனை வாய்பவளத்தால் திறந்து படித்தாள்
4. முத்துநகை தன் வில் போன்ற புருவத்தில் மை தீட்டினாள்.
விடை : நகைமுத்து தன் புருவவில்லில் மை தீட்டினாள்
IX. கலைச்சொல் அறிவோம்
- குடைவரைக் கோவில் – Cave temple,
- கருவூலம் – Treasury,
- மதிப்புறு முனைவர் – Honorary Doctorate,
- மெல்லிசை – Melody
- ஆவணக் குறும்படம் – Document short film ,
- புணர்ச்சி – Combination
Nice super so usefull for me thankyou 💫💫