Final Semester and Arrear Exam Date Release
பல்வேறு விவாதங்களுக்கு இடேயே அண்ணா பல்கலைக்கழகம் தேர்வு தேதியை வெளியிட்டுள்ளது.
அதாவது தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு இறுதி ஆண்டு தேர்வு மற்றும் அரியர் தேர்வு தேதிகளை வெளியிட்டுள்ளது.
தேர்வுகளானது வரும் செப்டம்பர் 22 முதல் தொடங்க உள்ளது.
செமஸ்டர் தேர்வு ரத்து என்பது செல்லாது
COVID-19 காரணமாக அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது.
மேலும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. மேலும் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகள் மட்டும் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
அரியர் தேர்வுகள் ரத்து என்பது செல்லாது
விண்ணப்பக் கட்டணம் செலுத்தி இருந்தால் அரியர் தேர்வுகளிலும் மாணவர்கள் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் மற்ற மாணவர்களுக்கு போன்று பொறியியல் மாணவர்களுக்கு அரியர் தேர்ச்சி வழங்கியதற்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் மற்றும் அண்ணா பல்கலை ஆகியவை தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
புதிய தேர்வு தேதிகள்
இந்நிலையில், இறுதி ஆண்டு செமஸ்டர் அரியர் தேர்வுகள் வரும் செப்டம்பர் 22 தொடங்கி செப்டம்பர் 29 வரை நடைபெற உள்ளது.
Project Viva-Voce Examinations (UG& PG) | 22 – 09 – 2020 |
Theory Examinations commences from | 24 – 09 – 2020 |
தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் வரும் செப் 15 அன்று காலை 10 மணி முதல் செப் 17 மாலை 6 மணி வரை பதிவு செய்து கொள்ளலாம்.
பாடம் வாரியான தேர்வு தேதிகள் விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
Download Official Announcement