12 ஆம் மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு கார் !!!

முதலிடம் பிடித்தால் கார் பரிசு 

பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்த 12 ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு பொது தேர்வில் முதலிடம் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு கார் பரிசாக வழங்கப்படும் என ஜார்க்கண்ட் கல்வி அமைச்சர் ஜகர்நாத் மஹ்தோ தெரிவித்திருந்தார்.

அதன்படி தற்போது பொது தேர்வில் முதலிடம் பிடித்த இரண்டு மாணவர்களுக்கு காரை பரிசாக வழங்கினார் அமைச்சர்.

மேலும் தனது தொகுதியில் உள்ள பள்ளிகளில் 75% மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற 340 பேருக்கு இருசக்கர வாகனத்தையும் வழங்கினார்.




Car Prize

கார் பரிசு பெற்றவர்கள் 

12 ஆம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்த அமித் குமார் என்பருக்கும், 10 ஆம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்த மனிஷ் குமார் கடியார் என்பருக்கும் கார் பரிசாக வழங்கப்பட்டது.

அமித் குமார் 457 மதிப்பெண்களும், மனிஷ் குமார் கடியார் 490 மதிப்பெண்களும் பெற்று தங்களது பிரிவில் முதலிடம் பிடித்தனர்.

தன்னை போல் யாரும் பள்ளி கல்வியை இடை நிறுத்தக்கூடாது என்ற நோக்கில் இந்த அறிவிப்பை அறிவித்திருந்தார் அமைச்சர்.

5-ஆம் வகுப்பு படித்திருந்தால் அரசு வேலை



Leave a Comment