1st & 2nd July Current Affairs in Tamil | TNPSC | TET | TNUSRB

Current Affairs in Tamil 1st & 2nd July 2020

Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 1st & 2nd July 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.



TNPSC Current Affairs in Tamil 1st and 2nd July 2020

Maths Video  – Click Here

1. சமீபத்தில் எங்கு நடைபெற்ற அகழ்வாய்வில் குஜராத் கல் பவளமணி கண்டுபிடிக்கப்பட்டது?

  1. கொந்தகை
  2. ஆதிச்சநல்லூர்
  3. சிவகளை
  4. கொடுமணல்
Answer & Explanation
Answer:– கொடுமணல்

Explanation:

திருப்பூர் – ஈரோடு மாவட்ட எல்லையில், நொய்யல் கரையில் அமைந்துள்ள கொடுமணல் அகழாய்வில் குஜராத் கல் பவளமணி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில நாட்களுக்கு முன்னர் 2,300 ஆண்டு பழமையான ஊது உலை கட்டமைப்பு, தமிழ் பிராமி எழுத்துக்களுடன் கூடிய ஓடு என, பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

2. சமீபத்தில் இணைய வழி  புரோகிராமிங் மற்றும் டேட்டா சயின்ஸ் அறிவியல் இளநிலைப் (B.Sc) பட்டப்படிப்பை தொடங்கியுள்ள கல்வி நிறுவனம்?

  1. IIT மெட்ராஸ்
  2. IITமும்பை
  3. ஐ.ஐ.எஸ்.சி பெங்களூரு
  4. IIT கரக்பூர்
Answer & Explanation
Answer:– IIT மெட்ராஸ்

Explanation:

உலகின் முதல் இணைய வழி  புரோகிராமிங் மற்றும் டேட்டா சயின்ஸ் அறிவியல் இளநிலைப் பட்டப்படிப்பை (Online B.Sc. Degree in Programming and Data Science) மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.

இதனை இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை (IIT மெட்ராஸ்) தயாரித்து வழங்கியுள்ளது.

3. சமீபத்தில் இந்தியா எந்த நாட்டுடன் இணைந்து PASSEX என்ற கடற்பயிற்சியை மேற்கொண்டது?

  1. அமெரிக்கா
  2. ஜப்பான்
  3. இலங்கை
  4. தென்கொரியா
Answer & Explanation
Answer:– ஜப்பான்

Explanation:

Passing Exercise

இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் இரு நாடுகளும் இணைந்து PASSEX கடற்படை போர்ப்பயிற்சியை மேற்கொண்டுள்ளன.

இந்தியப் பெருங்கடலில் இந்தியா கடற்படையை சேர்ந்த ஐ.என்.எஸ் ராணா மற்றும் ஐ.என்.எஸ் குலிஷ் ஆகிய போர்க் கப்பல்கள் ஜப்பான் கடற்படையின் ஜே.எஸ் காஷ்மீர் மற்றும் ஜே.எஸ் ஷிமாயுகி கப்பல்களுடன் போர் ஒத்திகையில் ஈடுபட்டன

TNPSC Group 1 Model Papers – Download

4. இந்தியாவின் முதல் பிளாஸ்மா வங்கி எங்கு தொடங்கப்பட்டுள்ளது?

  1. மகாராஷ்டிரா
  2. புது தில்லி
  3. தமிழ்நாடு
  4. தெலுங்கானா
Answer & Explanation
Answer:– புது தில்லி

Explanation:

டெல்லியில் இந்தியாவின் முதலாவது பிளாஸ்மா வங்கியை ஐ.எல்.பி.எஸ் மருத்துவமனையில் முதல்வர் கெஜ்ரிவால் ஜூலை 2 அன்று தொடங்கி வைத்தார்.

கொரோனா நோயில் இருந்து மீண்டு வந்தவர்களின் பிளாஸ்மாவை சேகரித்து அதை கொரோனா நோயாளிகளுக்குச் செலுத்தி சிகிச்சை அளிப்பது பிளாஸ்மா தெரபி என அழைக்கப்படுகிறது.

5. இந்தியாவின் அட்டர்னி ஜெனரலாக பதவி வகித்து வருபவர்?

  1. KK வேணுகோபால்
  2. தூஷர் மேத்தா
  3. முகுல் ரோஹத்கி
  4. விக்ரமாஜித் பானர்ஜி
Answer & Explanation
Answer:– KK வேணுகோபால்

Explanation:

இந்தியாவின் அட்டர்னி ஜெனரலாக (Attorney General of India) பதவிவகித்து வரும் KK வேணுகோபால் அவர்களின் பதவிக்காலம் மேலும் ஓர் ஆண்டுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

மேலும்., இந்தியாவின் சொலிசிட்டர் ஜெனரலாக (Solicitor General of India) பதவிவகித்து வரும் தூஷர் மேத்தா அவர்களின் பதவிக்காலம் மேலும் மூன்று ஆண்டுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

6. சமீபத்தில் பிளாட்டினா என்ற திட்டத்தை தொடங்கியுள்ள மாநிலம்?

  1. மகாராஷ்டிரா
  2. புது தில்லி
  3. தமிழ்நாடு
  4. தெலுங்கானா
Answer & Explanation
Answer:– மகாராஷ்டிரா

Explanation:

பிளாட்டினா என்ற பிளாஸ்மா தெரபி திட்டத்தை மகாராஷ்டிர அரசு தொடங்கியுள்ளது. இந்த திட்டம் உலகின் மிகப்பெரிய பிளாஸ்மா தெரபி மற்றும் சோதனை திட்டமாகும்.




7. ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மற்றும் பிற சர்வதேச அமைப்புகளுக்கு, இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி மற்றும் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளவர்?

  1. இம்ரான் கவாஜா
  2. இந்திர மணி பாண்டே
  3. டி.எஸ்.திருமூர்த்தி
  4. புனீத் அகர்வால்
Answer & Explanation
Answer:– இந்திர மணி பாண்டே

Explanation:

ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மற்றும் பிற சர்வதேச அமைப்புகளுக்கு, இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி மற்றும் தூதுவராக இந்திர மணி பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும்., நியூயார்க்கிலுள்ள ஐ.நா அலுவலத்திற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி மற்றும் தூதுவராக தமிழகத்தைச் சேர்ந்த டி.எஸ்.திருமூர்த்தி (T.S. Tirumurti) கடந்த ஏப்ரல் மாதத்தில் நியமிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

8.  சமீபத்தில் மத்ஸ்யா சம்பதா என்ற காலாண்டு பத்திரிக்கை வெளியிட்டுள்ள அமைச்சகம்?

  1. மனிதவள அமைச்சகம்
  2. மீன்வளத்துறை அமைச்சகம்
  3. சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம்
  4. ஆயுஷ் அமைச்சகம்
Answer & Explanation
Answer:– மீன்வளத்துறை அமைச்சகம்

Explanation:

Fisheries and Aquaculture Newsletter

மீன்வளத்துறையின் புதிய கண்டுபிடிப்புகளை மீன் விவசாயிகளுக்கு தெரிவிக்கும் வகையில் மத்ஸ்யா சம்பதா என்ற காலாண்டு பத்திரிக்கையை மத்திய மீன்வளத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இதன் முதல் பதிப்பு ஜூன் 30 அன்று மத்திய மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் அவர்களால் வெளியிடப்பட்டது.

9. Future of Higher Education – Nine Mega Trends என்ற புத்தகத்தை எழுதியவர்?

  1. ரிஷாப் மராத்தே
  2. பட்டாபி ராம்
  3. ஹரி பிரசாத்
  4. வினோத் சுப்பிரமணியன்
Answer & Explanation
Answer:– V பட்டாபி ராம்

Explanation:

V பட்டாபி ராம் (CA V Pattabhi Ram) எழுதியுள்ள “Future of Higher Education – Nine Mega Trends” புத்தகத்தை இந்திய துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட்டுள்ளார்.

10. தேசிய மருத்துவர்கள் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

  1. ஜூன் 29
  2. ஜூன் 30
  3. ஜூலை 01
  4. ஜூலை 02
Answer & Explanation
Answer:– ஜூலை 01

Explanation:

மேற்கு வங்கத்தின் இரண்டாவது முதலமைச்சரும் புகழ்பெற்ற மருத்துவருமான டாக்டர் பிதன் சந்திர ராய் பிறந்த நாளான ஜூலை 1, தேசிய மருத்துவர்கள் தினமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான கருப்பொருள்: Lessen the mortality of COVID 19

26th to 30th June 2020 – Click

More TNPSC Current Affairs



1 thought on “1st & 2nd July Current Affairs in Tamil | TNPSC | TET | TNUSRB”

Leave a Comment