TNPSC Current Affairs Question and Answer in Tamil 1st June 2020

Current Affairs in Tamil 1st June 2020

Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 1st June 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.




TNPSC Current Affairs in Tamil 1st June 2020

Maths Video  – Click Here

1. சமீபத்தில் தமிழக அரசுப் பேருந்துகளில் எந்த நிறுவன உதவியால் பணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது?

  1. Paytm
  2. G-Pay
  3. Jio
  4. PhonePe
Answer & Explanation
Answer:– Paytm

Explanation:

தமிழக அரசுப் பேருந்துகளில் சோதனை முயற்சியாக Paytm மூலம் கட்டணம் செலுத்தும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

2. தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளவர்?

  1. எஸ்.நாகராஜன்
  2. சந்திரசேகர சகாமுரி
  3. அஜய் யாதவ்
  4. பி.முருகேஷ்
Answer & Explanation
Answer:– அஜய் யாதவ்

Explanation:

தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநராக பதவிவகித்து வந்த எஸ்.நாகராஜன் தொழில் முனைவோா் மேம்பாடு மற்றும் புதுமை முயற்சிகள் நிறுவனத்தின் இயக்குநராக மாற்றப்பட்டதை தொடர்ந்து, புதிய இயக்குனராக அஜய் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

அஜய் யாதவ் முன்னதாக சா்க்கரைத் துறை கூடுதல் இயக்குராக பதவிவகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Group 1 Model Papers – Download

3. மாணவர்களுக்காக கே-ஃபான் (K-FON) என்ற இலவச இணைய வசதி திட்டதை தொடங்கியுள்ள மாநிலம்?

  1. கர்நாடகா
  2. கேரளா
  3. ஜம்மு & காஷ்மீர்
  4. ஹரியாணா
Answer & Explanation
Answer:– கேரளா

Explanation:

கேரளத்தில் ஏழை மாணவா்களுக்கான இலவச இணைய வசதி (கே-ஃபான்) திட்டம் (Kerala Fibre Optic Network (K-FON)) , 2020 ஆம் ஆண்டு டிசம்பா் மாதத்துக்குள் செயல்படுத்தப்படும் என்று அந்த மாநில முதல்வா் பினராயி விஜயன் சமீபத்தில் அறிவித்துள்ளார்.

4. சமீபத்தில் ”எனது வாழ்க்கை எனது யோகா” (My Life My Yoga) என்ற பெயரில் வீடியோ போட்டியை தொடங்கி வைத்தவர்?

  1. நரேந்திர மோடி
  2. அமித் ஷா
  3. ஸ்ரீபாத் நாயக்
  4. ஹர்ஷ் வர்தன்
Answer & Explanation
Answer:– நரேந்திர மோடி

Explanation:

மத்திய ஆயுஷ் அமைச்சகம் மற்றும் இந்திய மருத்து ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) ஆகியவை இணைந்து நடத்தும் ”எனது வாழ்க்கை எனது யோகா” (My Life My Yoga) என்ற வீடியோ போட்டியை பிரதமர் நரேந்திர மோடி மே-31 அன்று தொடங்கி வைத்தார்.

வரும் ஜூன் 21ல், கொண்டாடப்பட உள்ள சர்வதேச யோகா தினதை முன்னிட்டு இப்போட்டி நடத்தப்படுகிறது.

5. இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தின்(FSSAI) தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளவர்?

  1. அருண் சிங்கால்
  2. ரீட்டா டியோடியா
  3. PR ஜெய்சங்கர்
  4. பவன் அகர்வால்
Answer & Explanation
Answer:– அருண் சிங்கால் (Arun Singhal)

Explanation:3

Food Safety and Standards Authority of India (FSSAI)

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தின் தலைமை  செயல் அதிகாரியாக (CEO) பதவிவகித்து வந்த பவன் அகர்வால் வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள logistics பிரிவுக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து

FSSAI-இன் புதிய தலைமை செயல் அதிகாரியாக அருண் சிங்கால் நியமிக்கப்பட்டுள்ளார்.

FSSAI-இன் தலைவர்(Chairperson) –  ரீட்டா டியோடியா(Rita teotia ) உள்ளார்.




6. சமீபத்தில் ஃபால்கன்-9 ரக ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு சென்றவர்கள்?

  1. டக் ஹா்லீ
  2. பாப் பேன்கென்
  3. ஜெப் வில்லியம்ஸ்
  4. அலெக்ஸி ஓவ்சினின்
Answer & Explanation
Answer:– டக் ஹா்லீ & பாப் பேன்கென்

Explanation:

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தைச் சோ்ந்த இரு வீரா்களை அந்த நாட்டின் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம் தனது ராக்கெட்டில் விண்வெளிக்கு அனுப்பி சாதனை படைத்துள்ளது.

தனியாா் நிறுவனத்தின் ராக்கெட்டில் விண்வெளி வீரா்கள் விண்வெளிக்குச் செல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், விண்வெளி ஆய்வுத் துறையில் ஒரு புதிய சகாப்தம் படைக்கப்பட்டுள்ளது.

ஸ்பெஸ் -எக்ஸ் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட ஃபால்கன்-9 ரக ராக்கெட், ஃபுளோரிடா மாகாணம், கேப் கனாவெரலில் உள்ள கென்னடி ஏவுதளத்திலிருந்து 30-5-2020 அன்று விண்ணில் செலுத்தப்பட்டது.

டக் ஹா்லீ, பாப் பேன்கென் ஆகிய இரு நாசா வீரா்களை ஏந்தி, சா்வேதச விண்வெளி ஆய்வு மையத்தை நோக்கி அந்த ராக்கெட் செலுத்தப்பட்டது.

7. கிரண்ஜீத் கவுர் பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்பானவர்?

  1. ஓட்டப்பந்தயம்
  2. மல்யுத்தம்
  3. ஈட்டி எறிதல்
  4. குண்டுஎறிதல்
Answer & Explanation
Answer:– ஓட்டப்பந்தயம்

Explanation:

இந்திய நீண்ட தூர ஓட்டப்பந்தய வீராங்கனை கிரண்ஜீத் கவுர் (Kiranjeet Kaur) Enobosarm (C19H14F3N3O3) என்ற ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டிற்காக நான்கு ஆண்டுகளுக்கு விளையாட்டு போட்டிகளில் பங்குபெற தடை செய்யப்பட்டுள்ளார்.

8. நரேந்திர மோடி-வளமையின் முன்னோடி மற்றும் உலக அமைதியின் தூதர் என்ற புத்தகத்தின் ஆசிரியர்?

  1. ஆதிஷ் சி.அகர்வாலா
  2. எலிசபெத் ஹோரன்
  3. பின்டேஸ்வர் பதக்
  4. அடப்பா பிரசாத்
Answer & Explanation
Answer:– ஆதிஷ் சி.அகர்வாலா & எலிசபெத் ஹோரன்

Explanation:

Narendra Modi – Harbinger of Prosperity & Apostle of World Peace என்ற பெயரிலான பிரதமர் மோடி பற்றிய புதிய வாழ்க்கை வரலாற்று நூல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த புத்தகத்தை அகில இந்திய பார் அசோசியேசன் தலைவர் ஆதிஷ் சி.அகர்வாலா, அமெரிக்க எழுத்தாளர் எலிசபெத் ஹோரன் ஆகியோர் இணைந்து எழுதி உள்ளனர்.

9. உலக பால் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

  1. ஜீன் 1
  2. ஜீன் 2
  3. மே 30
  4. மே 31
Answer & Explanation
Answer:– ஜீன் 1

Explanation:

பாலின் முக்கியத்துவத்தை உணர்த்த ஐநா சபையால், பால் ஓர் ’உலக உணவு’ என அங்கீகரிக்கப்பட்டு 2001ஆம் ஆண்டுமுதல் ஒவ்வொர் ஆண்டும் ஜூன் 1-ஆம் தேதி ‘உலக பால் தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது.

கருப்பொருள்: உலக பால் தினத்தின் இருபதாம் ஆண்டு (20th Anniversary of World Milk Day)

மேலும் இதேநாளில் உலக பெற்றோர்கள் தினமும் அனுசரிக்கப்படுகிறது.

28th to 31st May Current Affairs – Click

More TNPSC Current Affairs



Leave a Comment