Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 2nd to 5th June 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.
1. சமீபத்தில் தமிழகத்தின் எப்பகுதியில் டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கான அடிக்கல்நாட்டப்பட்டது?
பட்டாபிராம்
தரமணி
தென்காசி
ஊரப்பாக்கம்
Answer & Explanation
Answer:– பட்டாபிராம்
Explanation:
திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராமில் தொழில் துறை சார்பில் ₹235 கோடி செலவில் புதிதாக கட்டப்படவுள்ள டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்காவிற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீடியோ கான்பரன்சிங் மூலம் 1-6-2020 அன்று அடிக்கல் நாட்டினார்.
2. சமீபத்தில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளவர்?
அஜய் யாதவ்
இரா.சந்திரசேகரன்
பாண்டியராஜன்
சிலம்பொலி செல்லப்பன்
Answer & Explanation
Answer:– இரா.சந்திரசேகரன்
Explanation:
Central Institute of Classical Tamil Research
சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு நிலையான இயக்குநரை நியமித்து, தமிழாய்வு பணிகளை விரைவுப்படுத்த, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கை எழுந்தன.
இந்நிலையில், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு முதல் இயக்குநராக பேராசிரியர் இரா.சந்திரசேகரனை நியமித்து, மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் உத்தரவிட்டுள்ளார்
3. சமீபத்தில் ஐநா-வின் ஏழைகளுக்கான நல்லெண்ண தூதராக நியமிக்கப்ட்டுள்ளவர்?
அசோக் அமிர்தராஜ்
சத்யா கோபாலன்
நேத்ரா
ஷர்மிளா தாகூர்
Answer & Explanation
Answer:– நேத்ரா
Explanation:
மதுரையைச் சேர்ந்த முடிதிருத்தும் தொழிலாளி மோகனின் மகள் நேத்ராவை ஏழைகளுக்கான நல்லெண்ண தூதராக அறிவித்தது ஐ.நா சபை வின் வளர்ச்சி மற்றும் அமைதிக்கான பிரிவு அறிவித்துள்ளது.
மேலும் ஊக்கத் தொகையாக ஒரு லட்சம் ரூபாயும் சிறுமி நேத்ராவுக்கு வழங்கப்பட்டது.
சமீபத்தில் பிரதமர் மோடி, மன் கீ பாத் நிகழ்ச்சியின்போது முடிதிருத்தும் தொழிலாளி மோகனுக்கு பாராட்டு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
4. தெருவோர வியாபாரிகளுக்கு ரூ.10,000 கடனுதவி வழங்கும் வகையில் மத்திய அரசு சமீபத்தில் துவங்கியுள்ள திட்டத்தின் பெயர்?
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா
பிரதான்_மந்திரி முத்ரா யோஜனா
பிரதான் மந்திரி ஸ்வாநிதி திட்டம்
பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா
Answer & Explanation
Answer:– பிரதான் மந்திரி ஸ்வாநிதி திட்டம்
Explanation:
Pradhan Mantri SVANidhi – PM Street Vendors Atmanirbhar Nidhi
பிரதான் மந்திரி ஸ்வாநிதி திட்டம் என்ற பெயரில் தெருவோர வியாபாரிகளுக்கான நலத்திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ரூ.10,000 கடனுதவி நகர்புற மற்றும் ஊர்ப்புற தெருவோர வியாபாரிகளுக்கு வழங்கப்படவுள்ளது.
5. சமீபத்தில் அரபிக்கடலில் உருவாகியுள்ள புயலுக்கு நிசர்கா(NISARGA) என்ற பெயரை சூட்டியுள்ள நாடு?
இந்தியா
இலங்கை
வங்காளதேசம்
பாகிஸ்தான்
Answer & Explanation
Answer:– வங்காளதேசம்
6. ஜூன்-1, 2020 அன்று நிலவரப்படி ஒரே தேசம் ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் இணைந்துள்ள மாநிலங்களின் எண்ணிக்கை?
15
17
19
21
Answer & Explanation
Answer:– 17
Explanation:
ஜூன்-1, 2020 அன்று சிக்கிம், ஒடிஷா மற்றும் மிஷோராம் மாநிலங்கள் ஒரே தேசம் ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் இணைந்துள்ளன, இதன்மூலம் இத்டதிட்டத்தில் இணைந்துள்ள மாநிலங்களின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது.
இத்திட்டம் அடுத்த ஆண்டுக்குள் (மார்ச் 2021) இந்திய மாநிலங்கள் அனைத்திலும் அமுல்படுத்தப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
7. 46வது G-7 உச்சி மாநாடு எங்கு நடைபெற உள்ளது?
அமெரிக்கா
பிரான்ஸ்
கனடா
இத்தாலி
Answer & Explanation
Answer:– அமெரிக்கா
Explanation:
அமெரிக்காவில் நடைபெற உள்ள 46வது ஜி-7 மாநாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடியை பங்கேற்குமாறு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
ஜீன் மாதத்தில் நடைபெறவிருந்த இந்தமாநாடு செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி ஏற்கெனவே கடந்த ஆண்டு பிரான்ஸ் அதிபர் மேக்ரானின் அழைப்பை ஏற்று மோடி ஜி-7 மாநாட்டில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
8. சமீபத்தில் ஆசியாவிற்கான காமன்வெல்த் சிறு கதை பரிசு யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?
ரியா மார்ட்டின்
கிருத்திகா பாண்டே
விவேக் சர்மா
கபில்மிஷ்ரா
Answer & Explanation
Answer:– கிருத்திகா பாண்டே (Kritika Pandey)
Explanation:
Asia in 2020 Commonwealth short story prize
ராஞ்சியைச் சேர்ந்த 29 வயதான இந்திய எழுத்தாளர் கிருத்திகா பாண்டே, “The Great Indian Tee and Snakes” எனும் சிறுகதைக்காக 2020-ஆம் ஆண்டின் ஆசிய பிராந்தியாத்தின் காமன்வெல்த் சிறுகதை பரிசினை வென்றுள்ளார்.
மேலும் சில பிராந்திய வெற்றியாளர்கள்.,
Africa – Innocent Chizaram Ilo
Canada and Europe – Reyah Martin
Caribbean – Brian S Heap
Pacific – Andrea E Macleod
9. சமீபத்தில் பின்லாந்து நாட்டிற்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளவர்?
ரவீஷ் குமாா்
ராஜீவ் டோப்னோ
உதய் கோட்டக்
ஸ்ரீலேகா
Answer & Explanation
Answer:– ரவீஷ் குமாா்
Explanation:
பின்லாந்து நாட்டிற்கான இந்திய தூதராக ரவீஷ் குமாா் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் சில நியமனங்கள்.,
இந்திய தொழிலக கூட்டமைப்பின் (CII) தலைவராக உதய் கோட்டக் பதவியேற்றுள்ளார்.
உலக வங்கியின் செயல் இயக்குநருக்கான மூத்த ஆலோசகராக ராஜீவ் டோப்னோ நியமிக்கப்பட்டுள்ளார்.
10. StartupBlink நிறுவனம் வெளியிட்டுள்ள, தொழில் துவங்க உகந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா வகிக்கும் இடம்?
12
19
23
31
Answer & Explanation
Answer:– 23
Explanation:
Countries Global Ranking of Startup Ecosystem 2020
சமீபத்தில் StartupBlink என்ற ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள, தொழில் துவங்க உகந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 23வது இடத்தை பிடித்துள்ளது. மேலும் இந்தப்பட்டியலில் முதல் மூன்று இடங்களை முறையே அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் பெற்றுள்ளன.
மேலும், இந்நிறுவனம் வெளியிட்டுள்ள, தொழில் துவங்க உகந்த நகரங்கள் பட்டியலில் பெங்களூரு (14), டெல்லி(15), மும்பை(22) இடத்தையும் பிடித்துள்ளன.
மேலும், கடந்த ஆண்டு உலக வங்கி வெளியிட்ட, தொழில் துவங்க உகந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 63வது இடத்தை பிடித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
11. சர்வதேச பாலியல் தொழிலாளர் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
ஜீன்-1
ஜீன்-2
ஜீன்-3
ஜீன்-4
Answer & Explanation
Answer:– ஜீன்-2
Explanation:
1976 ஆம் ஆண்டு ஜூன்-2ம் தேதி, பாலியல் தொழிலாளர்கள் பிரான்சு நாட்டில் போராட்டம் நடத்தி சில உரிமைகளை பெற்றனர்,
இந்த போராட்டம் மூலம் கிடைத்த வெற்றியை கொண்டாடும் விதத்தில் ஆண்டுதோறும் ஜீன்-2 சர்வதேச பாலியல் தொழிலாளர் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
பாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான சர்வதேச வன்முறை தடுப்பு தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 17ஆம் தேதி அனுசரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.