Current Affairs in Tamil 3rd & 4th July 2020
Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 3rd & 4th July 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.

Maths Video – Click Here
1. தமிழ்நாடு தனியார் பள்ளிகளுக்கான, கல்வி கட்டண நிர்ணய குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்?
- மனோஜ் அஹுஜா
- பாலசுப்ரமணியன்
- ரேகா சர்மா
- மாசிலாமணி
Answer & Explanation
Answer:– பாலசுப்ரமணியன்
Explanation:
தமிழ்நாடு தனியார் பள்ளிகளுக்கான, கல்வி கட்டண நிர்ணய குழுவின் தலைவராக இருந்த மாசிலாமணியின் பதவிக்காலம் முடிந்ததை தொடர்ந்து புதிய தலைவராக பாலசுப்ரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
2. தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் ?
- தமிழ்செல்வன்
- சுனில்குமாா்
- எஸ்.கே.பிரபாகா்
- திரிபாதி
Answer & Explanation
Answer:– தமிழ்செல்வன்
Explanation:
தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியத்தின் தலைவராக இருந்த டிஜிபி சுனில்குமாா் கடந்த செவ்வாய்க்கிழமை மாநில மனித உரிமை ஆணையத்துக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து புதிய தலைவராக டிஜிபி என்.தமிழ்செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார்.
3. வெள்ளியின் (Venus ) தரைப் பகுதி மற்றும் அதன் உள்ளார்ந்த பகுதிகளை ஆராய்ச்சி செய்வதற்கான இஸ்ரோவின் திட்டம்?
- ஆதித்யா – எல்1
- சுக்ரயான் – 1
- ஷுக்கர் -1
- ககன்யான் -IV
Answer & Explanation
Answer:– சுக்ரயான் – 1
Explanation:
Shukrayaan-1
”வெள்ளி கிரகத்தின் தரைப் பகுதி மற்றும் அதன் உள்ளார்ந்த பகுதிகளை ஆராய்ச்சி செய்வதற்கவும், சூரியனிடமிருந்து வரக்கூடிய சூரியக் கதிர்வீச்சு மற்றும் சூரியக் காற்று போன்றவற்றையும் கவனிக்கவும் ”சுக்ரயான் – 1 “ எனும் திட்டத்த்தை 2023 – 2025ம் ஆண்டுவாக்கில் செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
TNPSC Group 1 Model Papers – Download
4. சமீபத்தில் எந்த மாநில அரசு மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க முடிவு செய்துள்ளது?
- மத்திய பிரதேசம்
- சத்தீஸ்கர்
- பாட்னா
- ஒடிசா
Answer & Explanation
Answer:– ஒடிசா
5. பசுஞ் சாணத்தை விவசாயிகளிடமிருந்து வாங்க முடிவுசெய்துள்ள மாநிலம்?
- மத்திய பிரதேசம்
- சத்தீஸ்கர்
- உத்திர பிரதேசம்
- ஒடிசா
Answer & Explanation
Answer:– சத்தீஸ்கர்
Explanation:
சத்தீஸ்கரில் கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டத்தின் கீழ், ஒரு கிலோ பசுஞ் சாணத்தை, விவசாயிகளிடமிருந்து, 1.50 ரூபாய்க்கு வாங்க, மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இந்த திட்டம், வரும், 20ல் துவக்கப்பட உள்ளது. சத்தீஸ்கரில், முதல்வர் பூபேஷ் பாகெல் தலைமையிலான, காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. மண்புழு உரம்இங்கு, கால்நடை வளர்ப்பை லாபகரமான தொழிலாக்கும் வகையிலும், கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும், ‘கோதான் நியாய் யோஜனா’ என்ற திட்டம், சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், விவசாயிகளிடமிருந்து பசுஞ் சாணத்தை விலைக்கு வாங்கி, அவற்றின் வாயிலாக மண்புழு உரம் தயாரித்து, அவற்றை கூட்டுறவு சங்கம் மூலம் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகளிடமிருந்து, பசுஞ் சாணத்தை என்ன விலைக்கு வாங்குவது என்பது குறித்து, சத்தீஸ்கர் மாநில விவசாய துறை அமைச்சர் ரவீந்திர சவுபே தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த குழு, தன் முடிவை நேற்று அறிவித்தது. இதன்படி, 1 கிலோ பசுஞ்சாணம், 1.50 ரூபாய்க்கு வாங்கப்படும். கால்நடை வளர்ப்போர், விவசாயிகளிடமிருந்து பெறப்படும் இந்த சாணத்துக்கு, மாதத்துக்கு இரு முறை பணம் வழங்கப்படும்.
6. பிளாஸ்மா கொடை செய்வோருக்காக ”கோபால் – 19” என்ற பெயரில் மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ளவர்கள்?
- IIT ரூர்கி & AIMS ரிஷிகேஷ்
- IIT சென்னை & அப்போலோ சென்னை
- AIMS டெல்லி & IIT டெல்லி
- SRM சென்னை & VIT வேலூர்
Answer & Explanation
Answer:– AIMS டெல்லி & IIT டெல்லி
Explanation:
எய்ம்ஸ் மருத்துவர்கள் மற்றும் ஐ.ஐ.டி-டெல்லி மாணவர்களின் குழுவுடன் இணைந்து “கோபால் -19” என்ற மொபைல் செயலியை உருவாக்கியுள்ளனர். இது கொரோனா தொற்று நோய் தாக்கப்பட்டு மீண்டவர்கள், பிளாஸ்மா நன்கொடை வழங்க விருப்பமுள்ளவர்களை தொடர்புகொள்ள உதவுகிறது.
7. 2020 ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் சிறு கதை பரிசு யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?
- ரியா மார்ட்டின்
- கிருத்திகா பாண்டே
- விவேக் சர்மா
- கபில்மிஷ்ரா
Answer & Explanation
Answer:– கிருத்திகா பாண்டே
Explanation:
ராஞ்சியைச் சேர்ந்த 29 வயதான இந்திய எழுத்தாளர் கிருத்திகா பாண்டே, “The Great Indian Tee and Snakes” எனும் சிறுகதைக்காக 2020-ஆம் ஆண்டின் காமன்வெல்த் சிறுகதை பரிசினை வென்றுள்ளார்.
கடந்த மாதம் ஆசிய பிராந்திய அளவில் வெற்றிபெற்ற கிருத்திகா பாண்டே தற்போது ஒட்டுமொத்த அளவிற்கான விருதை வென்றுள்ளார்.
8. பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர்?
- எட்வர்ட் பிலிப்
- இமானுவேல் மெக்ரன்
- ஜீன் கேஸ்டெக்ஸ்
- பெர்னார்ட் காசெனுவே
Answer & Explanation
Answer:– ஜீன் கேஸ்டெக்ஸ் (Jean Castex)
Explanation:
பிரான்ஸ் பிரதமர் பதவியில் இருந்து எட்வர்ட் பிலிப் ராஜினாமா செய்ததை தொடர்ந்து புதிய பிரதமராக ஜீன் கேஸ்டெக்ஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
9. சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தற்காலிகத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர்?
- இம்ரான் கவாஜா
- சஷாங்க் மனோகர்
- அனுராக் தாக்கூர்
- லலித் மோடி
Answer & Explanation
Answer:– இம்ரான் கவாஜா
Explanation:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் பதவியிலிருந்து இந்தியாவை சேர்ந்த சஷாங் மனோகர் ராஜினாமா செய்துள்ளார். புதிய தலைவர்தேர்ந்தெடுக்கப்படும் வரை துணைத் தலைவரான சிங்கப்பூரை சேர்ந்த இம்ரான் கவாஜா பொறுப்புத் தலைவராகச் நியமிக்கப்பட்டுள்ளார்.
10. தேசிய பட்டய கணக்காளர்கள் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
- ஜூன் 30
- ஜீலை 1
- ஜீலை 2
- ஜீலை 3
Answer & Explanation
Answer:– ஜீலை 1
Explanation:
மேலும் இதே நாளில் சரக்கு மற்றும் சேவை வரி தினமும் அனுசரிக்கப்படுகிறது.
26th to 30th June 2020 – Click
More TNPSC Current Affairs
Related