TNPSC Current Affairs Question and Answer in Tamil 6th to 8th June 2020

Current Affairs in Tamil 6th to 8th June 2020

Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 6th to 8th June 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.



TNPSC Current Affairs in Tamil 6th June to 8th June 2020

Maths Video  – Click Here

1. சமீபத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் புதிய தலைவராக  நியமிக்கப்பட்டுள்ளவர்?

  1. .தேவராஜன்
  2. பிரதீப் யாதவ்
  3. விக்ரம் கபூர்
  4. எம்.ஏ.ஹெலன்
Answer & Explanation
Answer:– பிரதீப் யாதவ்

Explanation:

மின்சார வாரியத் தலைவராக பதவிவகித்து வந்த விக்ரம் கபூர் சுற்றுலா, கலாசாரம் மற்றும் இந்து சமய அறநிலையத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் பதவிக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து  தமிழ்நாடு மின்சார வாரியத்தின் புதிய தலைவராக பிரதீப் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளாா்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக உள்ள அவருக்கு, மின் வாரியத்தின் தலைவா் பதவி முழுக் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது

2. சமீபத்தில் இந்தியாவின் முதல் ஆன்லைன் கழிவு மாற்று திட்டத்தை துவங்கியுள்ள மாநிலம்?

  1. தமிழ்நாடு
  2. தெலுங்கானா
  3. ஆந்திர பிரதேசம்
  4. கேரளா
Answer & Explanation
Answer:– ஆந்திர பிரதேசம்

Explanation:

Online Waste Exchange Programme

இந்தியாவின் முதல் ஆன்லைன் கழிவு மாற்று திட்டம் ஆந்திர மாநில அரசினால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

விஷத்தன்மை உடைய மற்றும் மட்கா கழிவுகளை பாதுகாப்பான முறையில் மறுசுழற்சி செய்வது அல்லது அழிப்பதற்கான இந்தத் திட்டத்தை ஆந்திர பிரதேச சுற்றுச்சூழல் மேலாண்மை நிறுவனம் (APEMC )செயல்படுத்துகிறது.

TNPSC Group 1 Model Papers – Download

3. சமீபத்தில் ’நன்றி அம்மா’ (Thank Mom) என்ற பெயரில் மரம் நடும் இயக்கத்தை தொடங்கியுள்ள மாநிலம்?

  1. தமிழ்நாடு
  2. தெலுங்கானா
  3. மத்திய பிரதேசம்
  4. குஜராத்
Answer & Explanation
Answer:– மத்திய பிரதேசம்

4. சுமேரு பாக்ஸ் என்ற வியர்வையை கட்டுப்படுத்தும் கருவியை தயாரித்துள்ள நிறுவனம்?

  1. IIT ரூர்கி
  2. AIMS ரிஷிகேஷ்
  3. CSIR
  4. DRDO
Answer & Explanation
Answer:– DRDO

Explanation:

SUMERU-PACS (Personal Protective Equipment (PPE))

சுமேரு பாக்ஸ் என்ற பெயரில் தனிநபர் பாதுகாப்பு உபகரண உடை அணிவோர் வியர்வை பிரச்சனை இன்றி இலகுவாக உணர்வதற்கான கருவியை மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் (DRDO) கண்டுபிடித்துள்ளது.

குறிப்பு: இந்த கருவியானது சிவாஜி படத்தில் ரஜினி அணிந்துவரும் AC- Dress போன்ற ஒரு அமைப்பு ஆகும்.

5. சமீபத்தில் மேரா விதான் (MeraVetan) என்ற மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ள மாநிலம்?

  1. லடாக்
  2. குஜராத்
  3. மணிப்பூர்
  4. ஜம்மு-காஷ்மீர்
Answer & Explanation
Answer:– ஜம்மு-காஷ்மீர்

Explanation:

அரசு ஊழியர்கள் தங்களது சம்பளம் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்காக MeraVetan என்ற மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் ஆளுநர்: கிரீஸ் மர்மு (Girish Chandra Murmu)




6. திரைப்பட கல்லூரிகள் மற்றும் தன்னாட்சி நிறுவனங்களின் செயல்பாடுகளை மறு ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவின் தலைவர்?

  1. விமல் ஜீல்கா
  2. விஜய் சர்மா
  3. சுதிர் பார்கவா
  4. வெங்கட்ராமன்
Answer & Explanation
Answer:– விமல் ஜீல்கா

Explanation:

Bimal Julka Committee

திரைப்பட கல்லூரிகள் மற்றும் தன்னாட்சி நிறுவனங்களின் செயல்பாடுகளை மறு ஆய்வு செய்வதற்காக விமல் ஜீல்கா தலைமையில் அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையை சமீபத்தில்  மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளது.

விமல் ஜீல்கா மத்திய தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையராக கடந்த மார்ச் மாதம் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

7. சமீபத்தில் உத்தர்காண்ட் மாநிலத்தின் கோடைகால தலைநகராக அறிவிக்கப்பட்டுள்ள நகரம் ?

  1. ஜோஷிமத்
  2. ஹரித்வார்
  3. பத்ரிநாத்
  4. காயிர்செயின்
Answer & Explanation
Answer:– காயிர்செயின்

Explanation:

உத்தர்காண்ட் மாநிலத்தின் கோடைகால தலைநகராக காயிர்செயின் (Gairsain) நகரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நகரத்திற்கு ’ஃபராரிசென்’ (Bhararisen) என்ற பெயரும் உண்டு.

ஏற்கனவே அம்மாநிலத்திற்கு தலைநகராயிருந்த டேராடூன் (Dehradun) அம்மாநிலத்தின் குளிர்கால தலைநகராக தொடர்ந்து செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

8. சமீபத்தில் சோடார் (Sodar) என்ற மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ள தொழில்நுட்ப நிறுவனம்?

  1. Google
  2. FaceBook
  3. WatsApp
  4. TCS
Answer & Explanation
Answer:– Google

Explanation:

பொதுவெளியில் சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்காக சோடார்( ‘Sodar’) என்ற மொபைல் செயலியை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

9. 20வது ஆசிய பெண்கள் கால்பந்து கோப்பை போட்டியை நடத்த உள்ள நாடு?

  1. ஜோர்டான்
  2. வியட்நாம்
  3. இந்தியா
  4. சீனா
Answer & Explanation
Answer:– இந்தியா

Explanation:

20வது ஆசிய பெண்கள் கால்பந்து கோப்பை போட்டி வரும் 2022 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ளது.

கடைசியாக ஜோர்டானில் நடைபெற்ற 19வது ஆசிய பெண்கள் கால்பந்து கோப்பை போட்டியில் ஜப்பான் அணி முதல் இடத்தையும் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இடத்தையும் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக 1980 ஆம் ஆண்டில் இந்தியாவில் (கோழிக்கோட்டில்) இந்த போட்டி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இதுவரை இந்திய மகளிர் அணி இந்த கோப்பையை பெற்றதில்லை, இரண்டு முறை (1980 & 1983) இரண்டாம் இடத்தை மட்டும் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

10. உலக உணவு பாதுகாப்பு தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

  1. ஜூன்-5
  2. ஜூன்-6
  3. ஜூன்-7
  4. ஜூன்-8
Answer & Explanation
Answer:– ஜூன்-7

Explanation:

World Food Safety Day

ஐக்கிய நாடுகள் சபை (WHO)  மற்றும் அதன் துணை அமைப்பான உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் (FAO) இணைந்து கடந்த ஆண்டு ஜூன்-7 – ஐ உலக உணவு பாதுகாப்பு தினமாக அறிவித்தது.

இந்த ஆண்டுக்கான கருப்பொருள் – உணவு பாதுகாப்பு, அனைவரின் கடமை (Food Safety, Everyone’s Business)

World Food Day

உலக உணவு தினம் அக்டோபர்-16 இல் அனுசரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

11. உலக சுற்றுச்சூழல் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

  1. ஜூன்-2
  2. ஜூன்-3
  3. ஜூன்-4
  4. ஜூன்-5
Answer & Explanation
Answer:– ஜூன்-5

Explanation:

1974-ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதம் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாக கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு, அதாவது 47வது உலக சுற்றுச்சூழல் தினத்தை கொலம்பியா நடத்துகிறது.

இந்த ஆண்டுக்கான கருப்பொருள் – இயற்கைக்கான நேரம் (Time for Nature) பல்லுயிர்ப் பெருக்கம் / Biodiversity

குறிப்பு: சில நாளிதழ்களில் கருப்பொருள் இயற்கைக்கான நேரம் என்றும் சில நாளிதழ்களில் பல்லுயிர்ப் பெருக்கம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது, எனவே இரண்டையும் படித்து வைத்துக்கொள்ளுங்கள்

மேலும் கடந்த 2018ஆம் ஆண்டு 45வது உலக சுற்றுச்சூழல் தினத்தை இந்தியா Beat Plastic Pollution என்ற கருப்பொருளுடன் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

2nd June to 5th June Current Affairs – Click

More TNPSC Current Affairs



1 thought on “TNPSC Current Affairs Question and Answer in Tamil 6th to 8th June 2020”

Leave a Comment