Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 9th June to 12th June 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.
1. FSSAI மாநிலங்களுக்கான உணவு பாதுகாப்பு குறியீடு 2019 – 2020-இல் தமிழ்நாடு வகிக்கும் இடம்?
1
2
3
4
Answer & Explanation
Answer:– 2வது இடம்
Explanation:
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தின் (Food Safety and Standards Authority of India (FSSAI)) 2019-2020 ஆம் ஆண்டிற்கான மாநிலங்களுக்கான உணவு பாதுகாப்பு குறியீடு (State Food Safety Index (SFSI)) சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில்,
பெரிய மாநிலங்களில் முதல் மூன்று இடங்களை முறையே குஜராத், தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களும்,
சிறிய மாநிலங்களில் முதல் மூன்று இடங்களை முறையே கோவா, மணிப்பூர் மற்றும் மேகாலயா
யூனியன் பிரதேசங்களில் முதல் மூன்று இடங்களை முறையே சண்டிகர், டெல்கி மற்றும் அந்தமான் தீவுகள் ஆகியவையும் பெற்றுள்ளன.
2. சமீபத்தில் அகழ்வாய்வில் மனித எலும்பு கண்டெடுக்கப்பட்ட கொந்தகை கிராமம் அமைந்துள்ள மாவட்டம்?
சிவகங்கை
தூத்துக்குடி
மதுரை
ராமநாதபுரம்
Answer & Explanation
Answer:– சிவகங்கை
Explanation:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கொந்தகையில் நடந்து வரும் அகழாய்வில் மனித எலும்பும், குழந்தை எலும்பும்,
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணியில், பழைமை வாய்ந்த 2 முதுமக்கள் தாழிகளும் சிவகளையில் ஒரு முதுமக்கள் தாழியும் 8-6-2020 அன்று கண்டெடுக்கப்பட்டன.
3. சமீபத்தில் கிழக்குப் பிராந்திய கடலோரக் காவல்படை சென்னை மண்டலத்தில் இணைக்கப்பட்டுள்ள ரோந்துக்கப்பல்?
ICGS சுஜய்
ICGS சுகோய்
ICGS_சாம்ராட்
ICGS வாராகா
Answer & Explanation
Answer:– ICGS சுஜய்
Explanation:
ஐ.சி.சி.எஸ் சுஜய் (Indian Coast Guard Ship ‘Sujay’ (ICGS-Sujay)) என்ற ரோந்துக் கப்பல், கிழக்குப் பிராந்திய கடலோரக் காவல்படை சென்னை மண்டலத்தில் 8-6-2020 அன்று இணைக்கப்பட்டது.
இந்த ரோந்துக் கப்பல் , இதற்கு முன்னர் இந்திய கடலோரக் காவல்படை வடகிழக்கு பிராந்தியத்திற்கு உட்பட்ட ஒடிஸா மாநிலம், பாராதீப் பகுதியில் பணியில் ஈடுபட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
4. சமீபத்தில் ஸ்விட்சர்லாந்து நாட்டுக்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளவர்?
அஜய் யாதவ்
ஷர்மிளா தாகூர்
மோனிகா கபில் மோஹ்தா
ராஜீவ் டோப்னோ
Answer & Explanation
Answer:– மோனிகா கபில் மோஹ்தா
Explanation:
ஸ்வீடன் மற்றும் லத்வியா ஆகிய நாடுகளுக்கான இந்திய தூதராக பணியாற்றி வரும் மோனிகா கபில் மோஹ்தா ஸ்விட்சர்லாந்து நாட்டுக்கான புதிய இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
5. சமீபத்தில் ரிச்சர்ட் டாக்கின்ஸ் விருதுக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ள இந்தியர்?
சலீம் கான்
ஜாவேத் அக்தர்
அனு மாலிக்
அனுபம் கெர்
Answer & Explanation
Answer:– ஜாவேத் அக்தர்
Explanation:
இந்திய எழுத்தாளரும் கவிஞருமான ஜாவத் அக்தருக்கு 2020 ஆம் ஆண்டுக்கான ரிச்சர்ட் டாக்கின்ஸ் விருது வழங்கப்பட உள்ளது.
இந்த விருதை பெறும் முதல் இந்தியர் ஜாவத் அக்தர் என்பது குறிப்பிடத்தக்கது.
6. யேல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள, சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு 2020 -ல் இந்தியா வகிக்கும் இடம்?
123
155
168
177
Answer & Explanation
Answer:– 168
Explanation:
Environmental Performance Index
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை யேல் பல்கலைக்கழகம் (Yale University) வெளியிட்டு வரும் சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டு தரவரிசை பட்டியலில், இந்தியா 27.6 மதிப்பெண்கள் பெற்று இந்த ஆண்டு 168-வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த முறை(2018) 177வது இடத்தை வகித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் மூன்று இடங்களை முறையே, டென்மார்க், லக்ஷம்பர்க் மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகள் பெற்றுள்ளன.
மேலும், இந்தப் பட்டியலில் பருவநிலை மாற்ற பிரிவில் (Climate Change Mitigation) இந்தியா உலகளவில் 106 ஆவது இடத்தையும் தெற்காசிய அளவில் இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளது.
மேலும் இந்த பட்டியலின் சில பிரிவுகளில் இந்தியா வகிக்கும் இடம்.,
Rank
Category
35
Fisheries
93
Eco-System Service
94
Water Resources
103
Waste Management
108
Agriculture
139
Sanitation & Drinking water
145
Pollution Emissions
148
Biodiversity and Habitat
174
Heavy Metals
179
Air Quality
7. சமீபத்தில் நாசா சிறந்த பொது சேவைக்கான பதக்கம் யாருக்கு வழங்கப்பட்டது?
ரவிஷ்குமார்
ரெஞ்சித் குமார்
ஜெய் பிரசாத் முகர்ஜி
சுமன் கவான்
Answer & Explanation
Answer:– ரெஞ்சித் குமார்(Renjith Kumar)
Explanation:
NASA Distinguished Public Service Medal
நிர்வாகத் தலைமை, பொறியியல் பங்களிப்பு, தொழில்நுட்ப சிறப்பம்சம் மற்றும் வாடிக்கையாளர் திருப்தி ஆகியவற்றின் மூலம் நாசாவிற்கு செய்த சேவையை பாராட்டி இந்திய வம்சாவளி (கேரளத்தைச் சேர்ந்த) அமெரிக்க தொழிலதிபர் ரஞ்சித் குமாருக்கு ‘நாசா’ வின் உயரிய விருதான நாசா சிறந்த பொது சேவைக்கான பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.
8. சமீபத்தில் எந்த வீரருக்கு, ஊக்க மருந்து பயன்படுத்தியதற்காக 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது?
கோமதி மாரிமுத்து
பிரித்வி ஷா
குசல் பெரேரா
மன்பிரீத் கவுர்
Answer & Explanation
Answer:– கோமதி மாரிமுத்து
Explanation:
ஊக்க மருந்து எடுத்துக் கொண்டது உறுதியான நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த ஓட்டப்பந்தய வீராங்கனை கோமதியின் ஆசியப் போட்டி தங்கப் பதக்கம் பறிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு தோஹாவில் நடந்த ஆசியப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அவர் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். அவர் ஊக்க மருந்து பயன்படுத்தியது முதற்கட்ட சோதனையில் உறுதியான நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் அவர் போட்டிகளில் பங்கேற்க தற்காலிக தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் இரண்டாம் கட்ட சோதனையிலும் ஊக்க மருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்ட நிலையில் 4 ஆண்டுகளுக்கு அவர் போட்டியில் பங்கேற்க அத்லெடிக் இன்டெக்ரிடி யூனிட் அமைப்பு தடை விதித்துள்ளது.
9. சமீபத்தில் காலமான பியொ் குரூன்ஸிஸா பின்வரும் எந்தநாட்டின் அதிபர் ஆவார்?
உகாண்டா
புரூண்டி
ரூவாண்டா
தெற்கு சூடான்
Answer & Explanation
Answer:– புரூண்டி
Explanation:
கிழக்கு மத்திய ஆப்பிரிக்க நாடான புரூண்டியின் அதிபா் பியொ் குரூன்ஸிஸா மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.
56 வயதான அவா், 2005-ஆம் ஆண்டு முதல் புரூண்டியில் ஆட்சி செலுத்தி வந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.
10. உலகப் பெருங்கடல் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
ஜூன்-6
ஜூன்-7
ஜூன்-8
ஜூன்-9
Answer & Explanation
Answer:– ஜூன்-8
Explanation:
ஜூன்-8, 1992 அன்று ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகளின் மாநாட்டில் பூமியைப் பாதுகாப்போம் என்கின்ற உடன்படிக்கை உருவானது.
அதனை தொடர்ந்து ஆண்டுதோறும் ஜூன்-8 உலகப் பெருங்கடல் தினமாக அனுசரிக்கப்படுகிறது.