Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 13th June to 15th June 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.
1. சமீபத்தில் STREE என்ற திட்டத்தை தொடங்கியுள்ள மாநிலம்?
தமிழ்நாடு
கேரளா
தெலுங்கானா
ஆந்திரப் பிரதேஷ்
Answer & Explanation
Answer:– தெலுங்கானா
Explanation:
தெலுங்கானாவில், ஹைதராபாத் நகர காவல்துறையினர், ஹைதராபாத் நகர பாதுகாப்பு கவுன்சிலுடன் இணைந்து, உள்நாட்டு வன்முறை மற்றும் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவளிப்பதற்கும் அதிகாரம் அளிப்பதற்கும் STREE (She Triumphs through Respect, Equality, and Empowerment) என்ற திட்டத்தை தொடங்கியுள்ளனர்.
2. 2020ஆம் ஆண்டுக்கான உலக உணவு விருது யாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது?
எம்.ஏ. லதீப்
ராபின் கே. தோவான்
ராஜானிஷ் கிரி
ரத்தன் லால்
Answer & Explanation
Answer:– ரத்தன் லால்
Explanation:
சிறு விவசாயிகளுக்கு விளைச்சலை பெருக்க உதவியதற்காக அமெரிக்க வாழ் இந்தியரான பேராசிரியர் ரத்தன் லாலுக்கு 2020 ஆம் ஆண்டுக்கான உலக உணவு விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
உலக உணவு விருதானது வேளாண் துறையில் நோபல் பரிசுக்கு இணையாக கருதப்படுகின்றது.
மேலும் இவருக்கு 2018 ஆம் ஆண்டுக்கான கலிங்கா உலக மண் விருது (Glinka world soil Prize) வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
3. பழங்குடி மாணவர்களுக்கான விடுதிகளுக்கு ISO 9001:2015 சான்றிதழ் பெற்ற நாட்டின் முதல் மாநிலம்?
கேரளா
தமிழ்நாடு
ஒடிசா
பீகார்
Answer & Explanation
Answer:– ஒடிசா
Explanation:
பழங்குடி மாணவர்களுக்கான விடுதிகளுக்கு ISO 9001:2015 சான்றிதழ் பெற்ற நாட்டின் முதல் மாநிலம் எனும் பெருமையை ஒடிசா பெற்றுள்ளது.
4. I-FLOWS (Integrated Flood Warning System) என்ற ஒருங்கிணைந்த வெள்ள அபாய முறை எங்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது?
குஜராத்
மஹாராஷ்டிரா
கேரளா
பீகார்
Answer & Explanation
Answer:– மஹாராஷ்டிரா
Explanation:
IFLOWS-Mumbai என்ற பெயரில் மும்பைக்கான அதிநவீன ஒருங்கிணைந்த வெள்ள எச்சரிக்கை முறையை சமீபத்தில் மத்திய புவி அறிவியல் அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் மற்றும் மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே இணைந்து தொடங்கி வைத்துள்ளனர்.
5. சமீபத்தில் Karmo Bhumi எனும் வலைதளத்தை துவங்கியுள்ள மாநிலம்?
குஜராத்
மேற்குவங்கம்
கர்நாடகா
உத்திர பிரதேஷ்
Answer & Explanation
Answer:– மேற்குவங்கம்
Explanation:
கொரோனாவால் பாதிக்கப்பட்டு வேலையிழந்த ஐடி பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் வகையில் மேற்குவங்க அரசு Karmo Bhumi எனும் வலைதளத்தை தொடங்கியுள்ளது.
இணையதள முகவரி: karmabhumi.nltr.org
6. சமீபத்தில் பால ஷ்ராமிக் வித்யா யோஜனா என்ற திட்டத்தை தொடங்கியுள்ள மாநிலம்?
குஜராத்
மேற்குவங்கம்
கர்நாடகா
உத்திர பிரதேஷ்
Answer & Explanation
Answer:– உத்திர பிரதேஷ்
Explanation:
8 முதல் 18 வயது வரையிலான குழந்தைத் தொழிலாளர்கள் மற்றும் அனாதைக் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் நிதியுதவி வழங்க பால ஷ்ராமிக் வித்யா யோஜனா என்ற திட்டத்தை உத்தரப்பிரதேச மாநில அரசு சமீபத்தில் தொடங்கியுள்ளது.
7. சமீபத்தில் ஷகர் மித்ரா (Shakar Mitra) என்ற தொழிற்பயிற்சி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தவர்?
நரேந்திர மோடி
பியூஷ் கோயல்
நரேந்திர சிங் தோமர்
ரமேஷ் போக்ரியால்
Answer & Explanation
Answer:– நரேந்திர சிங் தோமர்
Explanation:
Shakar Mitra (இனிய நண்பர்)
ஷகர் மித்ரா என்ற பெயரில் இளைஞர்களுக்கு ஊதியத்துடன் கூடிய கூட்டுறவு துறையின் நடைமுறை அனுபவத்தை வழங்கும் தொழிற்பயிற்சி திட்டத்தை மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் சமீபத்தில் தொடங்கி வைத்துள்ளார்.
இந்த திட்டமானது தேசிய கூட்டுறவு மேம்பாட்டு நிறுவனத்தின் (National Cooperative Development Corporation – NCDC) மூலம் செயல்படுத்தப்படுகிறது.
8. சமீபத்தில் மரியானா ட்ரெஞ்சில் உள்ள சேலஞ்சர் முனைக்குச் சென்று திரும்பிய முதல் பெண்?
கேத்தி லூதர்ஸ்
கேத்ரின் சல்லிவன்
அவனி சதுர்வேதி
சல்வா ஈத் நாசர்
Answer & Explanation
Answer:– கேத்ரின் சல்லிவன்
Explanation:
விண்வெளியில் நடந்த முதல் அமெரிக்கப் பெண் என்ற சாதனையைப் படைத்தவரான கேத்ரின் சல்லிவன்.
தற்போது கடலின் மிக ஆழமான பகுதியான மரியானா ட்ரெஞ்சில் உள்ள சேலஞ்சர் முனைக்குச் சென்று திரும்பிய முதல் பெண் என்கிற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
9. நாசாவின், நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முதல் பெண்?
கேத்தி லூதர்ஸ்
கேத்ரின் சல்லிவன்
அவனி சதுர்வேதி
சல்வா ஈத் நாசர்
Answer & Explanation
Answer:– கேத்தி லூதர்ஸ்
Explanation:
நாசாவின் மனித ஆய்வு மற்றும் செயல்பாட்டு மிஷன் இயக்குநரகத்தை வழிநடத்த கேத்தி லூதர்ஸ் என்ற பெண் விஞ்ஞானி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நிலவில் முதல் பெண்ணை தரையிறக்கும் நாசாவின் புதிய திட்டத்திற்கு ‘ஆர்ட்டிமிஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
2024–ம் ஆண்டில் ‘ஆர்ட்டிமிஸ் 1’ விண்கலம் நாசாவின் ஓரியன் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டு, முதல் பெண் நிலவில் கால் பதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
10. சமீபத்தில் வெளியிடப்பட்ட ஃபிஃபா தரவரிசையில் இந்தியா கால்பந்து அணி வகிக்கும் இடம்?
93
103
108
116
Answer & Explanation
Answer:– 108
Explanation:
சமீபத்திய ஃபிஃபா தரவரிசையில் இந்தியா கால்பந்து அணி தனது 108 வது இடத்தைத் பிடித்துள்ளது.
இந்த பட்டியலில் முதல் ஐந்து இடங்களை முறையே பெலிஜியம், பிரான்ஸ், பிரேசில், இங்கிலாந்து மற்றும் உருகுவே நாடுகள் பெற்றுள்ளன.
11. “Naoroji: Pioneer of Indian Nationalism” என்ற புத்தகத்தின் ஆசிரியர்?
தின்யார் பட்டேல்
சுதா மூர்த்தி
அருந்ததி ராய்
மார்க் ஆல்ஷாகர்
Answer & Explanation
Answer:– தின்யார் பட்டேல்
Explanation:
சுகந்திர போராட்ட வீரர் தாதாபாய் நெளரோஜி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை “Naoroji: Pioneer of Indian Nationalism” என்ற பெயரில் வரலாற்று ஆசிரியர் தின்யார் பட்டேல் எழுதியுள்ளார்.
12. குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தின் கருப்பொருள்?
Generation Safe and Healthy
In conflicts and disasters, protect children from child labor
Children shouldn’t work in fields, but on dreams
Protect children from child labor, now more than ever
Answer & Explanation
Answer:– Protect children from child labor, now more than ever
Explanation:
குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வை சமுதாயத்தில் ஏற்படுத்திட உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ம் நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
ஐக்கிய நாடுகளின் ஓர் அங்கமான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பினால் (International Labour Organisation) 2002 ஆம் ஆண்டுமுதல் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
2006 அக்டோபர் 10 ம் தேதி முதல் வீடு, சாலையோர கடைகள், ஓட்டல்கள் போன்ற இடங்களில் 14 வயதிற்கு உட்பட்ட சிறுவர், சிறுமியரை வேலைக்கு அமர்த்த மத்திய அரசு தடைவிதித்துள்ளது.
13. உலக இரத்த தானம் வழங்குவோர் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
ஜூன்-11
ஜூன்-12
ஜூன்-13
ஜூன்-14
Answer & Explanation
Answer:– ஜூன்-14
Explanation:
இரத்தத்தில் உள்ள வகைகளை கண்டுபிடித்த கார்ல் லான்ட்ஸ்டைனர் பிறந்த தினமான ஜூன்-14, உலக இரத்த தானம் வழங்குவோர் தினமாக 2005 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான கருப்பொருள்: பாதுகாப்பான இரத்தம் உயிர்களைப் பாதுகாக்கிறது (Safe Blood Saves Lives)