Current Affairs in Tamil 16th to 20th June 2020
Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 16th to 20th June 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.
Maths Video – Click Here
1. சமீபத்தில் தமிழக அரசு, தனியார் துறை வேலைவாய்ப்புகளை வழங்க அறிமுகம் செய்துள்ள இணையதளம்?
- privatejobs.tn.gov.in
- tnprivatejobs.tn.gov.in
- tnjobs.tn.gov.in
- tnprivatejobs.co.in
Answer & Explanation
Answer:– tnprivatejobs.tn.gov.in
Explanation:
வேலை நாடும் இளைஞர்களையும் தனியார் துறை நிறுவனங்களையும் இணைக்கும் நோக்கில் தமிழக அரசின் சார்பில் tnprivatejobs.tn.gov.in என்ற வேலைவாய்ப்பு இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் 17-6-2020 அன்று தொடங்கி வைத்தார்.
2. சமீபத்தில் ஜீன் 18-ஐ முகக்கவச தினமாக (Mask Day) அனுசரித்த மாநிலம்?
- தமிழ்நாடு
- கேரளா
- கர்நாடகா
- தெலுங்கானா
Answer & Explanation
Answer:– கர்நாடகா
Explanation:
கொரோனா பரவலையொட்டி முகக்கவசம் அணிவதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் ஜீன் 18 கர்நாடக மாநிலம் முழுவதும் “முகக்கவச தினம்” கடைபிடிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
TNPSC Group 1 Model Papers – Download
3. 2020 ஆம் ஆண்டுக்கான IMD’s உலக போட்டி குறியீட்டில் இந்தியா வகிக்கும் இடம்?
- 77
- 63
- 38
- 43
Answer & Explanation
Answer:– 43
Explanation:
Institute for Management Development
மேலாண்மை வளர்ச்சி நிறுவனம் (IMD) வெளியிட்டுள்ள 2020 ஆம் ஆண்டுக்கான உலக போட்டி குறியீட்டில் (World Competitiveness Index) இந்தியா 43 வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டும் இந்தியா 43 இடத்தையே பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சுவிட்சர்லாந்தின் லஷானே (Lausanne) நகரில் செயல்படும் மேலாண்மை வளர்ச்சி நிறுவனம் 1989ஆம் ஆண்டுமுதல் இந்த பட்டியலை வெளியிட்டு வருகிறது.
63 நாடுகளை கொண்ட இந்த பட்டியலில் முதல் மூன்று இடங்களை முறையே சிங்கப்பூர், டென்மார்க் மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகள் பெற்றுள்ளன.
4. சமீபத்தில் கரிப் கல்யாண் ரோஜ்கார் திட்டத்தை தொடங்கி வைத்தவர் யார்? எப்போது?
- நரேந்திர மோடி & ஜூன் 20
- நரேந்திர மோடி & ஜூன் 21
- ரமேஷ் போக்ரியால் & ஜூன் 20
- ரமேஷ் போக்ரியால் & ஜூன் 21
Answer & Explanation
Answer:– நரேந்திர மோடி & ஜூன் 20
Explanation:
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் ரூ.5000 கோடி செலவில் “கரிப் கல்யாண் ரோஜ்கர் அபியான்” என்ற திட்டத்தை ஜூன் 20 அன்று காணொளி காட்சி மூலம்
பிரதமர் மோடி பீகாரின் காகாரியா மாவட்டத்திலுள்ள பெல்தாவுர் வட்டத்திலுல்ள தெலிகார் (Telihar) எனும் கிராமத்தில் தொடங்கி வைத்தார்.
புலம் பெயர் தொழிலாளர்களை அதிகமாகக் கொண்ட பீகார், உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஜார்க்கண்ட் மற்றும் ஒடிஷா ஆகிய ஆறு மாநிலங்களிலுள்ள மொத்தம் 116 மாவட்டங்களில் ரூ.50,000 கோடி செலவில் நிறைவேற்றப்பட உள்ளது.
5. சமீபத்தில் இந்தியா ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமல்லாத உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்டது, இது இந்தியாவிற்கு எத்தனையாவது முறை?
- 4 வது
- 6 வது
- 8 வது
- 10 வது
Answer & Explanation
Answer:– 8 வது
Explanation:
15 உறுப்பினர்களை கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிளுக்கு 8-வது முறையாக இந்தியா நிரந்தரமல்லாத உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்டுள்ளது.
மேலும், மெக்சிகோ, அயர்லாந்து மற்றும் நார்வே ஆகியநாடுகளும் தற்காலிக உறுப்பினர்களாக தேர்வுசெய்யப்பட்டுள்ளன. ஒரு இருக்கை இன்னும் தேர்ந்தெடுக்கப்படாமல் உள்ளது.
வரும் 2021, 2022 ஆகிய 2 ஆண்டுகளுக்கு இந்தியா உட்பட ஐந்து நாடுகள் நிரந்தரமல்லாத உறுப்பினராக செயல்படும்.
மேலும்., ஐநா பொதுச் சபையின் 75 வது அமர்வின் தலைவராக துருக்கிய இராஜதந்திரி வோல்கன் போஸ்கிரையும் தேர்ந்தெடுத்துள்ளார். இந்த பதவியை வகிக்கும் முதல் துருக்கியர் இவராவர்.
கூ.தக. : ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 5 நிரந்தர உறுப்பு நாடுகளும் (அமெரிக்கா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷியா ) , 10 நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளும் உள்ளன.
6. தேசிய பொது நிதி மற்றும் கொள்கை நிறுவனத்தின்(NIPFP) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்?
- விஜய் கேல்கர்
- உா்ஜித் படேல்
- ரகுராம் ராஜன்
- அரவிந்த் சுப்பிரமணியன்
Answer & Explanation
Answer:– உா்ஜித் படேல்
Explanation:
National Institute of Public Finance and Policy
தேசிய பொது நிதி மற்றும் கொள்கை நிறுவனத்தின்(NIPFP) புதிய தலைவராக முன்னாள் ரிசா்வ் வங்கி ஆளுநா் உா்ஜித் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு முன் விஜய் கேல்கர் இப்பதவியை வகித்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் ஜூன் 22 முதல் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு இப்பதவியில் நீடிப்பார்.
7. சமீபத்தில் காலமான வசந்த் ராய்ஜி பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்பானவர்?
- கால்பந்து
- ஹாக்கி
- கிரிக்கெட்
- தடகளம்
Answer & Explanation
Answer:– கிரிக்கெட்
Explanation:
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கியவர் முன்னாள் முதல் தர கிரிக்கெட் வீரர் வசந்த் ராய்ஜி 13-6-2020 அன்று மும்பையில் காலமானார்.
கிரிக்கெட்டர் மற்றும் வரலாற்றாசிரியர் என பன்முகம் கொண்டிருந்தவர் வசந்த் ரய்ஜி. இவர் தனது முதல் தர கிரிக்கெட் வாழ்க்கையை 1939ம் ஆண்டில் அப்போதைய கிரிக்கெட் கிளப் ஆஃப் இந்தியா (CCI) அணிக்காக களமிறங்கி தொடங்கினார்.
வசந்த் ராய்ஜி, கிரிக்கெட் வரலாறு தொடா்பாக 8 புத்தகங்களையும் எழுதியுள்ளாா்.
8. சமீபத்தில் 2020 ஆம் ஆண்டுக்கான German Book Trade-இன் அமைதி பரிசு யாருக்கு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது?
- அமர்த்தியா சென்
- நரேந்திர மோடி
- சாண்டி பிரசாத் பட்
- கே.ஜி.பாலகிருஷ்ணன்
Answer & Explanation
Answer:– அமர்த்தியா சென்
Explanation:
2020 Peace Prize of the German Book Trade
2020ஆம் ஆண்டுக்கான German Book Trade-இன் அமைதி பரிசானது நோபல் பரிசு வென்ற அமர்த்தியா சென்னுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வ்பள்ளி ராதாகிருஷ்ணனுக்கு (1961) பிறகு இந்த பரிசை பெறும் இரண்டாவது இந்தியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
9. Legend of Suheldev: The King Who Saved India என்ற புத்தகத்தை எழுதியுள்ளவர்?
- வீரேந்திர பிரதாப்
- அமிஷ் திரிபாதி
- அமர்த்தியா சென்
- ஸ்ரீ ஓம் பிர்லா
Answer & Explanation
Answer:– அமிஷ் திரிபாதி
10. உலக பாலைவனமாகுதல் மற்றும் வறட்சிக்கெதிரான தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
- ஜீன் 17
- ஜீன் 18
- மே 31
- மே 28
Answer & Explanation
Answer:– ஜீன் 17
Explanation:
World Day to Combat Desertification and Drought
மனிதனாலும், சீதோஷ்ண நிலை மாற்றத்தாலும் வறட்சி ஏற்பட்டு, நிலங்கள் பாலைவனமாக மாறுகிறது. மேலும் பூமியின் நிலப்பரப்பு படிப்படியாக பாதித்துக்கொண்டே செல்கிறது. இதனால் மக்கள் வறுமைக்குத் தள்ளப்படுகின்றனர். சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுப்பதன்மூலம் பாலைவனமாதல் மற்றும் வறட்சி ஏற்படுவதைத் தடுக்க முடியும்.
இதனை உணர்ந்த ஐ.நா. சபை 1994ஆம் ஆண்டில் இத்தினத்தை அறிவித்தது.
கருப்பொருள்: உணவு, உணவளி, நாரிழை – நுகர்விற்கும் நிலத்திற்குமிடையேயான தொடர்பு
13th to 15th June 2020 – Click
More TNPSC Current Affairs
Related