Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 21st to 25th June 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.
1. “தமிழக சிறைத்துறை” – யின் பெயர் எவ்வேறாக மாற்ற சமீபத்தில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது?
சிறை-சீர்திருத்தத்துறை
சிறைத்துறை
காவல் சீர்திருத்தத்துறை
Answer & Explanation
Answer:– சிறை-சீர்திருத்தத்துறை
Explanation:
தமிழக சிறைத்துறை (Tamil Nadu Prison Department) சிறை-சீர்திருத்தத்துறை (Department of Prisons and Correctional Services ) என்று பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியீட்டுள்ளது.
மேலும் இதன் தலைமை அதிகாரியும் இனிமேல் சிறை மற்றும் சீர்திருத்தத்துறை டைரக்டர் ஜெனரல் என்றே (டி.ஜி.பி) அழைக்கப்படுவார் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. சமீபத்தில் eBloodServices என்ற மொபைல் செயலி எந்த நகரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது?
புதுடெல்லி
மும்பை
காந்திநகர்
கொல்கத்தா
Answer & Explanation
Answer:– புதுடெல்லி
Explanation:
மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஜூன் 25 அன்று இந்திய செஞ்சிலுவை சங்கம் (Indian Red Cross Society – IRCS) உடன் இணைந்து ‘eBloodServices’ எனும் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார்.
இந்த செயலியின் மூலம் தொலைபேசியில் இரத்தம் கிடைக்கும் நிலவரம் எளிதில் தெரியும். ஒரு ஆர்டர் வழங்கப்பட்டவுடன், இரத்த வங்கி கோரிக்கையை 12 மணி நேரம் செயலில் வைத்திருக்கும். ஒரே நேரத்தில் நான்கு யூனிட் ரத்தம் வரை ஆர்டர் செய்யும் வசதி இந்த செயலியில் உள்ளது.
3. புலம் பெயர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு தளத்தை ஏற்படுத்த, நிதி அயோக் அமைத்துள்ள குழுவின் தலைவர்?
அமிதாப் காந்த்
ராஜீவ் குமார்
என்.கே.சிங்
அசோக் லஹிரி
Answer & Explanation
Answer:– அமிதாப் காந்த்
Explanation:
புலம் பெயர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு தளத்தை ஏற்படுத்துவதற்கான அமிதாப் காந்த் தலைமையில் உயர்மட்ட குழுவை நிதி அயோக் அமைத்துள்ளது.
இந்த வேலைவாய்ப்பு தளத்தின் மூலம் புலம் பெயர் தொழிலாளர்கள் மற்றும் கோவிட்-19 ஊரடங்கினால் வேலையிழந்தவர்கள் தங்கள் தகுதிக்கேற்க தங்களது அருகாமையிலேயே வேலைவாய்ப்பை வழிவகை செய்து தரப்படும்.
4. சமீபத்தில் இந்திரா ரசோய் யோஜ்னா என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ள மாநிலம்?
திரிபுரா
ராஜஸ்தான்
தெலுங்கானா
பஞ்சாப்
Answer & Explanation
Answer:– ராஜஸ்தான்
Explanation:
Indira Rasoi Yojana
மலிவு விலையில் ஏழைகளுக்கு உணவு வழங்கும் வகையில் ராஜஸ்தான் அரசு இந்திரா ரசோய் யோஜ்னா (Indira Rasoi Yojana)” என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது.
5. சமீபத்தில் முக்யமந்திரி மாத்ரு புஷ்டி உபார் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள மாநிலம்?
திரிபுரா
ராஜஸ்தான்
தெலுங்கானா
பஞ்சாப்
Answer & Explanation
Answer:– திரிபுரா
Explanation:
கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருட்களை வழங்குவதற்காக திரிபுரா அரசு முக்யமந்திரி மாத்ரு புஷ்டி உபார் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
6. சமீபத்தில் முக்யமந்திரி ஷ்ராமிக் யோஜனா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள மாநிலம்?
திரிபுரா
உத்திரப் பிரதேஷ்
ஜார்க்கண்ட்
பஞ்சாப்
Answer & Explanation
Answer:– ஜார்க்கண்ட்
Explanation:
Mukhyamantri SHRAMIK Yojna
ஜார்க்கண்ட் மாநில அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் ஒருபகுதியாக, நகரத்தில் வசிக்கும் ஏழை மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் நோக்கில் முக்யமந்திரி ஷ்ராமிக் யோஜனா எனும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
[SHRAMIK – Shahri Rozgar Manjuri For Kamgar]
மேலும், கடந்த மாதம் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களின் சொந்த ஊர்களுக்கு திரும்ப அழைத்து செல்ல, இந்திய ரயில்வே “ஷ்ராமிக் சிறப்பு” (shramik special) என்ற பெயரில் ரயில்களை இயங்கியது குறிப்பிடத்தக்கது.
7. “விவேகானந்தா யோகா பல்கலைக்கழகம்” எந்த நாட்டில் தொடங்கப்பட்டுள்ளது?
அமெரிக்கா
ரஷ்யா
சீனா
மியான்மர்
Answer & Explanation
Answer:– அமெரிக்கா
Explanation:
6வது சர்வதேச யோகா தினதை முன்னிட்டு, நாக்கோவிலில் செயல்பட்டு வரும் ‘விவேகானந்தா யோகா அனுசந்தனா சமஸ்தானா’ நிறுவனதின் சார்பில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலில் விவேகானந்தா யோகா பல்கலைக்கழகம் துவக்கப்பட்டடுள்ளது.
இதனை இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளீதரன், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக திறந்து வைத்தார்.
இந்தியாவுக்கு வெளியேயான, உலகின் முதலாவது யோகா பல்கலைக்கழகம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
8. 4-வது ஆசிய இளையோர் பாரா விளையாட்டுப் போட்டிகள் எங்கு நடைபெற உள்ளது?
ஓமன்
குவைத்
கத்தார்
பஹ்ரைன்
Answer & Explanation
Answer:– பஹ்ரைன்
Explanation:
4th Asian Youth Para Games
4 வது ஆசிய இளையோர் பாரா விளையாட்டுப் போட்டிகள் அடுத்த ஆண்டு டிசம்பர் 1 லிருந்து 10 வரை பஹரைன் (Bahrain) நாட்டில் நடைபெறவுள்ளது.
3வது ஆசிய இளையோர் பாரா விளையாட்டுப் போட்டிகள் கடந்த 2017ஆம் ஆண்டு துபாயில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
9. சமீபத்தில் மெல்போர்ன் கிரிக்கெட் கிளப்பின் (MCC) தலைவராக தேர்வுசெய்யப்பட்டுள்ளவர்?
சாரா டெய்லர்
மேரி டுக்கன்
கிளேர் கோனர்
கரேன் ஸ்மிதீஸ்
Answer & Explanation
Answer:– கிளேர் கோனர் (Clare Connor)
Explanation:
மெல்போர்ன் கிரிக்கெட் கிளப்பின் தலைவராக இருந்து வரும் குமார் சங்ககாரா பதவிக்காலம் செப்டம்பர் மாதத்துடன் முடியடைவதை தொடர்ந்து அடுத்த தலைவராக இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கிளேர் கோனரின் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், மெல்போர்ன் கிரிக்கெட் கிளப்பின் 233 ஆண்டுகால வரலாற்றில், முதலாவது பெண் தலைவராக கிளேர் கோனர் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
10. சர்வதேச யோகா தினதிற்கான ஐ.நா -வின் கருப்பொருள்?
Yoga for Health – Yoga at Home
Yoga at Home – Yoga with Family
Yoga with Gurus
Yoga For Harmony And Peace
Answer & Explanation
Answer:– Yoga for Health – Yoga at Home
Explanation:
6வது சர்வதேச யோகா தினம் ஜூன் 21 அன்று அனுசரிக்கப்பட்டது.
சர்வதேச யோகா தினதிற்கான ஐநாவின் கருப்பொருள் “Yoga for Health – Yoga at Home”. மேலும் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கருப்பொருள் “Yoga at Home – Yoga with Family”.
மேலும் இதே நாளில்.,
உலக நீர்நிலையியல் தினமும், தந்தையர் தினமும் (ஜீன் மூன்றாவது ஞாயிறு) ஜூன் 21-இல் அனுசரிக்கப்படுகிறது