TNPSC Current Affairs Question and Answer in Tamil 26th to 30th June 2020

Current Affairs in Tamil 26th -30th June 2020

Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 26th June to 30th June 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.



TNPSC Current Affairs in Tamil June 26 to June 30 2020

Maths Video  – Click Here

1. சமீபத்தில் எங்கு நடைபெற்ற அகழ்வாய்வில் ஊது உலை கண்டுபிடிக்கப்பட்டது?

  1. கொந்தகை
  2. ஆதிச்சநல்லூர்
  3. சிவகளை
  4. கொடுமணல்
Answer & Explanation
Answer:– கொடுமணல்

Explanation:

திருப்பூர் – ஈரோடு மாவட்ட எல்லையில், நொய்யல் கரையில் அமைந்துள்ள கொடுமணல் அகழாய்வில், கனிமங்கள் உருக்கு தொழிற்சாலைக்கான 2,300 ஆண்டு பழமையான ஊது உலை கட்டமைப்பு, தமிழ் பிராமி எழுத்துக்களுடன் கூடிய ஓடு என, பழங்கால பொருட்கள் கிடைத்துள்ளன.

மேலும், பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஐந்து நாணயங்கள், தங்கம், தாமிரம், கல்மணிகள், ஆபரண உற்பத்தி தொழிற்சாலை போன்றவற்றை பார்க்கையில், மேலை நாடுகளுடன் வணிக தொடர்பு உறுதியாகி உள்ளது.

இதுவரை கிடைக்காத பெயராக, ‘அகூரவன்‘ என்ற, தமிழ் பிராமி எழுத்து ஓடு கிடைத்துள்ளது. இது, ஒரு இனக்குழுவின் தலைவர் பெயராக இருக்கலாம்.

2. கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளை பரிசோதனை செய்ய திரங்கா (Tiranga) என்ற காரை அறிமுகம் செய்துள்ள மாநிலம்?

  1. தமிழ்நாடு
  2. கேரளா
  3. தெலுங்கானா
  4. ஆந்திரப்ரதேஷ்
Answer & Explanation
Answer:– கேரளா

Explanation:

கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளை பரிசோதனை செய்யும் சமயத்தில், சுகாதார பணியாளர்களையும் கோவிட்-19 தொற்றிக்கொள்ளும்‌ பிரச்னைக்கு முடிவு கட்டும் விதமாக, திரங்கா (Tiranga) என்ற காரை கேரளா பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. கேரள மாநிலத்தின் பத்தினம்திட்டா மாவட்ட நிர்வாகத்தால் இந்த புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோவிட்-19 வைரஸ் தாக்கிய நோயாளிகளை வேகமாக கண்டறியவும், நோயாளிகளை பாதுகாப்பாக பரிசோதிக்கவும் பயன்படுத்தப்படும் இந்த காரில் 3 சுகாதார பணியாளர்கள் இருப்பார்கள். இவர்கள், பொது அறிவிப்பின் மூலம் மக்களை பரிசோதனைக்கு அழைக்கிறார்கள்.

3. 2020ஆம் ஆண்டுக்கான இ-பஞ்சாயத்து புரஸ்கார் பரிசு எந்த மாநிலத்திற்கு வழங்கப்பட்டுள்ளது?

  1. உத்திரப் பிரதேசம்
  2. ஆந்திர பிரதேசம்
  3. ஹிமாச்சலப் பிரதேசம்
  4. மத்தியப் பிரதேசம்
Answer & Explanation
Answer:– ஹிமாச்சலப் பிரதேசம்

Explanation:

e-Panchayat Puraskars 2020

மத்திய பஞ்சாயத்துராஜ் அமைச்சகம் வெளியிட்டுள்ள 2020ஆம் ஆண்டுக்கான இ-பஞ்சாயத்து புரஸ்கார் விருதின் முதல் பரிசை ஹிமாச்சலப் பிரதேசம் பெற்றுள்ளது.

மேலும் இரண்டாம் பரிசை சட்டிஸ்கர் மாநிலமும், மூன்றாவது பரிசை மகாராஷ்டிரா மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களும் பெற்றுள்ளன.

TNPSC Group 1 Model Papers – Download

4. சமீபத்தில் Kill Corona எனும் விழிப்புணர்வை தொடங்கியுள்ள இந்திய மாநிலம்?

  1. உத்திரப் பிரதேசம்
  2. ஆந்திர பிரதேசம்
  3. ஹிமாச்சலப் பிரதேசம்
  4. மத்தியப் பிரதேசம்
Answer & Explanation
Answer:– மத்தியப் பிரதேசம்

Explanation:

கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக மத்திய பிரதேச மாநில அரசு Kill Corona எனும் விழிப்புணர்வை தொடங்கியுள்ளது

5. சமீபத்தில் வெளியிடப்பட்ட “இந்திய காசநோய் அறிக்கை 2020” -ன் படி காசநோயை முற்றிலுமாக ஒழிக்க சிறப்பாக செயல்பட்ட பெரிய மாநிலங்கள் பட்டியலில் முதலிடம் வகிக்கும் மாநிலம்?

  1. தமிழ்நாடு
  2. குஜராத்
  3. ஆந்திர பிரதேசம்
  4. ஹிமாச்சலப்பிரதேசம்
Answer & Explanation
Answer:– குஜராத்

Explanation:

காசநோயை முற்றிலுமாக ஒழிக்க சிறப்பாக செயல்பட்ட பெரிய மாநிலங்கள் பட்டியலில் முதல் மூன்று இடங்களை முறையே குஜராத், ஆந்திர பிரதேசம் மற்றும் ஹிமாச்சலப்பிரதேச மாநிலங்கள் பெற்றுள்ளன.

மேலும் சிறிய மாநிலங்கள் பட்டியலில் நாகாலாந்து மற்றும் திரிபுரா மாநிலங்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

6. சமீபத்தில், பி.சி. மஹாலனோபிஸ் விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?

  1. ஒய்.வேணுகோபால் ரெட்டி
  2. சி. ரங்கராஜன்
  3. சுரேஷ் டெண்டுல்கர்
  4. ரகுராம் ராஜன்
Answer & Explanation
Answer:– சி. ரங்கராஜன்

Explanation:

மத்திய அரசு, மாநில அரசு/யூனியன் பிரதேச அரசுகள் மற்றும் அமைப்புகளின் அதிகாரப்பூர்வப் புள்ளியியல் நிபுணர்களின், சிறந்த சாதனையை அங்கீகரிக்க, ‘அதிகாரப்பூர்வப் புள்ளியியலில் பேராசிரியர்.பி.சி.மகலனோபிஸ் தேசிய விருதை’ திட்ட அமலாக்கத்துறை(MoSPI) உருவாக்கியுள்ளது.

இந்தியாவில் தேசியப் புள்ளியியல் அமைப்பில், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் டாக்டர். சக்கரவர்த்தி ரங்கராஜனின் சிறப்பானப் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், அவருக்குப் பேராசிரியர் பி.சி.மகலனோபிஸ் தேசிய விருது வழங்கப்பட்டது.

புள்ளியியல் துறையில் தங்களின் வாழ்நாள் பங்களிப்பை அளித்தற்கு, தேசிய மருத்துவப் புள்ளியல் கழகத்தின் (NIMS) முன்னாள் இயக்குநர் டாக்டர்.அரவிந்த் பாண்டே, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில்(ICMR) மற்றும் மத்திய அரசின் திட்ட அமலாக்கத்துறையின் முன்னாள் கூடுதல் தலைமை இயக்குநர் டாக்டர். அகிலேஷ் சந்திரா குல்ஸ்ரேஷ்தா ஆகியோருக்குக் கூட்டாக, ‘புள்ளியியலில் பேராசிரியர் பி.வி. சுகாத்மே தேசிய விருது 2020’ வழங்கப்பட்டது.




7. வாங்கும் சக்தியை (PPP) அடிப்படையாகக் கொண்டு உலக வங்கி வெளியிட்டுள்ள மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் முதலிடம் வகிக்கும் நாடு?

  1. அமெரிக்கா
  2. சீனா
  3. இந்தியா
  4. ரஷ்யா
Answer & Explanation
Answer:– சீனா

Explanation:

வாங்கும் சக்தியை (PPP) அடிப்படையாகக் கொண்டு உலக வங்கி வெளியிட்டுள்ள மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் முதல் மூன்று இடங்களை முறையே சீனா, அமெரிக்கா, இந்தியா பிடித்துள்ளன.

2017ஆம் ஆண்டு தரவுகளின் படி இந்த பட்டியலை உலக வங்கி வெளியிட்டுள்ளது.

PPP = Purchasing Power Parity

8. சமீபத்தில் 2-ஆம் உலகப்போரின் 75-வது ஆண்டு வெற்றி விழாவை ரஷ்யா எப்போது கொண்டாடியது?

  1. மார்ச் 9
  2. ஜூன் 24
  3. ஜூன் 29
  4. ஜூலை 01
Answer & Explanation
Answer:– ஜூன் 24

Explanation:

இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியை ரஷியா வீழ்த்திய 75-வது ஆண்டு வெற்றி விழா மாஸ்கோ நகரில் ஜூன் 26 அன்று நடைபெற்றது.  இதனையொட்டி நடைபெற்ற அணிவகுப்பில் இந்திய ராணுவ வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.

ஆண்டுதோறும் மார்ச் 9 ஆம் தேதியை வெற்றி தின விழாவாக கொண்டாடி வந்தது ஆனால் இந்த ஆண்டு கொரோனா காரணமாக ஜூன் 26 ஆம் தேதிக்கு தள்ளிவைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

9. அயர்லாந்து நாட்டின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்?

  1. மைக்கேல் மார்டின்
  2. லியோ வராத்கர்
  3. சைமன் கோவ்னி
  4. ஈமான் ரியான்
Answer & Explanation
Answer:– மைக்கேல் மார்டின்

Explanation:

அயர்லாந்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஓட்டெடுப்பில் 160 ஓட்டுகளில் 93 ஓட்டுகள் பெற்று பியானா பெயில் கட்சியின் தலைவர்  மைக்கேல் மார்டின் அந்நாட்டின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

10. சஞ்சிதா சானு பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்பானவர்?

  1. பளுதூக்குதல்
  2. குத்துசண்டை
  3. ஓட்டப்பந்தயம்
  4. ஹாக்கி
Answer & Explanation
Answer:– பளுதூக்குதல்

Explanation:

தன் மீதான ஊக்கமருந்து குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டதையடுத்து, கடந்த 2018ம் ஆண்டிற்கான அர்ஜூனா விருதை இந்திய பளுதூக்கும் வீராங்கனை சஞ்சிதா சானு பெறவுள்ளார்.

11. 2023 ஃபிஃபா மகளிர் கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியை நடத்த உள்ள நாடுகள்?

  1. பிரேசில் & கொலம்பியா
  2. ஆஸ்திரேலியா & நியூசிலாந்து
  3. பிரான்ஸ் & ஜெர்மனி
  4. கனடா & மெக்ஸிகோ
Answer & Explanation
Answer:

Explanation:

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய இரு நாடுகளும் 2023 ஃபிஃபா மகளிர் கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியை நடத்தவுள்ளன.

2023 ஃபிஃபா மகளிர் கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியில் முதல்முறையாக 32 அணிகள் கலந்துகொள்ளவுள்ளன.

2019 உலகக் கோப்பைப் போட்டி பிரான்சில் நடைபெற்றது. 24 நாடுகள் கலந்துகொண்ட இப்போட்டியை அமெரிக்கா, 4-வது முறையாக வென்றது.

12. சமீபத்தில் ஐ.சி.சி. உயர்மட்ட நடுவர் குழுவிற்கு தேர்வுசெய்யப்பட்டுள்ள இந்தியர்?

  1. அனில் சவுத்ரி
  2. நிதின் மேனன்
  3. வினீத் குல்கர்னி
  4. சி.கே.நந்தன்
Answer & Explanation
Answer:– நிதின் மேனன்

Explanation:

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) உயர்மட்ட நடுவர் குழுவில் (எலைட் பேனல்) இந்தியாவை சேர்ந்த நடுவர் நிதின் மேனன் சேர்க்கப்பட்டுள்ளார்.

இக்குழுவில் இடம் பிடித்த 3-வது இந்தியர் நிதின் மேனன் ஆவார். ஏற்கனவே முன்னாள் கேப்டன் வெங்கட்ராகவன், சுந்தரம் ரவி ஆகியோர் இந்த நடுவர் குழுவில் இடம் பிடித்து இருக்கிறார்கள்.

இதில் இளம் வயது நடுவர் நிதின் மேனன் என்பது குறிப்பிடத்தக்கது.

13. தேசிய புள்ளியியல் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

  1. ஜீன் 29
  2. ஜூலை 01
  3. அக்டோபர் 20
  4. மே 10
Answer & Explanation
Answer:– ஜீன் 29

Explanation:

இந்திய புள்ளியியலின் தந்தை என்றழைக்கப்படும் பேராசிரியர் PC மஹலனோபிஸ் (PC Mahalanobis) அவர்களின் பிறந்த தினமான ஜீன் 29 தேசிய புள்ளியியல் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

கருப்பொருள்: நல்ல ஆரோக்கியம், நல்வாழ்வு மற்றும் பாலின சமத்துவம்

உலக புள்ளியியல் தினமானது அக்டோபர் 20 அன்று அனுசரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில…

  • ஜீன் 29 = சர்வதேச வெப்பமண்டல தினம்
  • ஜீலை 29 = புலிகள் தினம்
  • ஆகஸ்ட் 29 = தேசிய விளையாட்டு தினம்
  • செப் 29 = உலக இருதய தினம் மற்றும் தேசிய காப்பி தினம்
  • அக்டோபர் 29 = உலக பக்கவாத தினம்

21st to 25th June 2020 – Click

More TNPSC Current Affairs



Leave a Comment