10th World Tamil Conference
10-வது உலகத் தமிழ் மாநாடு, அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவையின் 32-வது தமிழ் விழா, சிகாேகா தமிழ்ச்சங்கத்தின் வெள்ளி விழா ஆகிய முப்பெரும் விழா அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஜூலை 4 முதல் 7-ஆம் தேதி வரை நடைபெற்றது.
தமிழர், தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றின் தொன்மை, புதுவரலாற்றியல், அறிவியல் சார்ந்த ஒப்பீட்டு ஆய்வுகள் என்பது இந்த மாநாட்டின் மையப் பொருளாக எடுத்துக் கொள்ளப்பட்டது,
உலகின் பல நாட்டு அறிஞர்களிடம் இருந்து 2 ஆயிரத்துக்கும் அதிகமான ஆய்வுச் சுருக்கங்கள் வந்துள்ளன.
அதில் கீழடி அகழாய்வு உட்பட 200 ஆய்வுச் சுருக்ககங்கள் மட்டும் தேர்வு செய்யப்பட்டன.
இரண்டாவது, மூன்றாவது பரிசீலைனகள் மூலம் 80 கட்டுரைகள் கருத்தரங்கில் வாசிப்புக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு அதை எழுதிேயாருக்கு அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்பட்டது.
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பும், சிகாகோ தமிழ்ச் சங்கமும் மாநாட்டுக்கான ஏற்பாடுகளை செய்தன.
சிகாகோ உலகத் தமிழராய்ச்சி மாநாட்டில் ‘சொற்குவைத் திட்டம்’
தமிழில் உள்ள சொற்கள் அனைத்தையும் தொகுத்து நிரல்படுத்துதல், சொற்களின் இலக்கண வகைப்பாடுகைளப் பதிவு செய்தல், நிகரான சொற்கைளப் பதிவு செய்தல், அடிக்கடி தேடப்படும் சொற்களுக்கு வண்ண அடையாளம் கொடுத்தல், புதிய சொற்களை பதிவு செய்தல் போன்ற வசதிகள் உருவாக்கப்பட்டு,
சொற்குவைத் திட்டம் என்ற பெயரில் இணையதளப் பொதுவெளியில் உலகெங்கும் உள்ள தமிழறிஞர்களும், தமிழ் ஆர்வலர்களும் பயன்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டது,
மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம், விளையாட்டு என பலதுறை சார்ந்த சொற்களை தமிழில் அறிவதற்கும், தமிழ்ச் சொற்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் உலகத் தமிழர்கள் அனைவரும் இந்தத் திட்டத்துக்கு பங்களிப்புச் செய்ய வேண்டும்,
இதைக் கருத்தில் கொண்டே சிகாகோ நடைபெற்ற மாநாட்டில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது, மேலும் இம்மாநாட்டில் தமிழியக்கம் புதிப்பித்த 46 ஆயிரம் தனித் தமிழ் பெயர்கள் கொண்ட ‘சூட்டி மகிழ்வோம் தமிழ் பெயர்கள்‘ என்னும் நூலை தமிழக தமிழ் வளர்ச்சி, தொல்லியல் துறை அமைச்சர் K.பாண்டியராஜன் வெளியிட்டார்.
Note: You can expect one question from the above topic in the upcoming TNPSC Group Exams. All the Best!!!