TNPSC Group 2 Preparation Tips
அனைவருக்கும் வணக்கம்…
குரூப்2 தேர்வுக்கு படித்துக்கொண்டு இருப்பவர்கள் கவனத்திற்கு…
இன்னும் நிறைய தேர்வர்கள் புத்தகத்தை வாசிக்காமலே வெறும் குறிப்புகளை மட்டுமே வைத்து படிக்கின்றனர். இது குரூப்4 தேர்வுக்கு வேண்டுமானால் பயன்படலாம். ஆனால் வெறும் குறிப்புகள் மட்டும் டிஎன்பிஎஸ்சி குரூப்2 மற்றும் குரூப்1 தேர்வில் வெற்றியை தருவதில்லை.
உதாரணமாக, சமீபத்தில் டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட குரூப்2 மாதிரி தேர்வில் இடம்பெற்ற ஒரு கேள்வியை கீழே படத்தில் இணைத்துள்ளேன். நீங்கள் எத்தனை குறிப்புகள் எடுத்து படித்தாலும் இது மாதிரியான Analytical வகை கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது அல்லது கடினம் என கூறலாம்.
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
பள்ளி பாடப்புத்தகங்களை (பாடத்திட்டத்திலுள்ள பகுதிகள் மட்டும்) குறைந்தபட்சம் 10 முறையேனும் வாசித்துவிடுங்கள். அதன்பின்னர் நன்றாக படியுங்கள். அடுத்ததாக, உங்களுக்கு தெரியாத அல்லது நினைவில் வைத்துக்கொள்ள முடியாத பகுதிகளை குறிப்பெடுங்கள் (சொந்தமாக). மீண்டும் புத்தகத்தை இரண்டு முறை வாசியுங்கள். இப்படி படித்தால் டிஎன்பிஎஸ்சி தேர்வில் எளிதாக வெற்றி பெறலாம்
(குறிப்பு: படிக்க சிறிது கஷ்டப்படுபவர்கள் 10 முறைக்கு மேல் வாசியுங்கள்)
கடைசியாக…
இந்த ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். டிஎன்பிஎஸ்சி தேர்வில் கேட்கப்படும் கேள்விகளில் 90% கேள்விகள் (நடப்பு நிகழ்வுகள் தவிர) பள்ளி பாடப்புத்தகத்திலிருந்து தான் கேட்கப்படுகின்றன. இவற்றை தெளிவாக படித்தால் மட்டும் போதுமானது.
நன்றி
ந.மகேஷ் ராஜா