How to Prepare for TNPSC Group 2 Examination 2022
It’s time for you to plan exactly how to prepare for TNPSC Group 2 exam. This article will give you preparation guidelines for both TNPSC Group 2 Preliminary and Main Examination 2022.
குரூப் – 2 தேர்வுக்கு தயாராவது எப்படி?
முதலில் Group 2 தேர்வுக்கான பாடத்திட்டத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளவும் (Download). பாடத்திட்டத்திலுள்ள பகுதிகளை மட்டும் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள சமச்சீர் புத்தகத்திலிருந்து தேர்ந்தெடுத்து படிக்கவும்.
நேர்முகத்தேர்வு அல்லது நேர்முகத்தேர்வு அல்லாத குரூப் 2 தேர்வு இரண்டும் சேர்ந்து வருவதால் அதற்கு நாம் தயார்தானா என நீங்களே உங்களை மதிப்பீடுங்கள்.
குரூப்-4 தேர்வு போல் அல்லாமல் நன்றாக புரிந்து படிக்கவேண்டும். அதாவது நீங்கள் படித்தவற்றை பிறருக்கு சொல்லிகொடுக்கிற அளவுக்கு தெரிந்திருக்க வேண்டும்.
நடப்பு நிகழ்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் அதற்காக முழு நேரமும் படிக்கவேண்டும் என்பது அவசியமில்லை. ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஒன்று முதல் இரண்டு மணி நேரம் நடப்பு நிகழ்வுகள் படித்தால் போதுமானது. (ஜூன் 2021 முதல்)
தேர்வுக்கான அறிவிப்பு வெளியாவதற்குள் பாடத்திட்டத்தை முடிக்கிற அளவுக்கு கால அட்டவணையை தயார்செய்து படியுங்கள். வேறு ஏதாவது வேலையில் இருந்துகொண்டே படிப்பர்களுக்கு இம்முறை மிகவும் பயன்படும்.
குரூப் 4-ல் செய்த தவறுகளை வரும் தேர்வில் துளி அளவும் செய்துவிடக்கூடாது. அதற்கு மிகச்சிறந்த வழி, வாரம் ஒருமுறை Mock Test பயிற்சி செய்தல் வேண்டும்.
How to study Current Affairs for Group 2 Exam 2022
குரூப் 2 மெயின் தேர்வு முறை (Descriptive Type)
30 * 3 = 90
15 * 8 = 120
2 * 15 = 30
2 * 30 = 60
மொத்த மதிப்பெண்கள் – 300
இதற்கான பாடத்திட்டம் இந்த இணைப்பில் (Download) கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றுள் நடப்பு நிகழ்வுகளும் அடங்கும். இதில் பெரும்பாலும் கீழ்க்கண்ட பிரிவுகளிலிருந்துதான் கேள்விகள் இடம்பெறும்
- வறுமை / poverty
- வேலைவாய்ப்பின்மை / unemployment
- கல்வி / Education
- சுகாதாரம் / Health
- பெண்கள் முன்னேற்றம் / Women’s Development
- பொருளாதாரம் / Economics
இவற்றை மேம்படுத்த மத்திய/மாநில அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் முக்கிய திட்டங்கள். திட்டங்களின் நோக்கம் பற்றி விரிவாக தெரிந்துகொள்ள வேண்டும்.
நடப்பு நிகழ்வுகள் படிக்கும்பொழுது தமிழகம் சார்ந்த செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உதாராணமாக காவிரி நதி நீர் பிரச்சினை. இதைப்போல தேசிய பிரச்சினைகள், உதாரணமாக வங்கி வாராக்கடன் பிரச்சினைகளும் தீர்வுகளும். இதை கட்டுரை வடிவில் எழுதும் அளவிற்கு பயிற்சி செய்தல் வேண்டும்.
ஜூன் 2021 முதல் முக்கிய நிகழ்வுகளை (திணமனி செய்தித்தாள்) குறிப்பெடுத்து வரவும். Group Discussion செய்து வந்தால் கூடுதல் தகவல்கள் கிடைக்கும்.
மெயின் தேர்வுக்கு படிக்கும்போது முதல்நிலைத் தேர்வுக்கான பாடத்திட்டத்தையும் படித்துவரவேண்டும்.
வாழ்த்துகளுடன் மகேஷ்.
நன்றி!!!
Important Dates of TNPSC Group 2 Exam 2022
- Prelims Exam Date: 21st May 2022
- Prelims Result Date: 8th November 2022
- Mains Exam Date: 25th February 2023
Some Important Links
Group 2a where to study syllabus full subject kum podunga sir plz…….edachum reply pannunga kandipa….
hi sir chemistry indian polity kum entha subject padikanumnu podunga sir
naan sundravel .kadandha 8 varusam velikku kuda pogama TNPS kku padichutu varen .tamil nadu all commpetitative exam yeludhiyum pass aagala.ore nalla visiyam 3 vaati main poi fail aanen.ippo naan padichaa (computer engneer) padame marandhu pochu .tnpsc full a padipen exam la marandhu pochu.my group 1 best mark 153/200.and g2 best mark -132/200 and g4 best mark 162/200.ippo innum 5 year try panna poren but swiggy la vela pathute.yenakku pass aaga tips please