அரசு பள்ளி சத்துணவு மையங்களில் வேலை
கரூர், அரியலூர் மாவட்டத்தை தொடர்ந்து சேலம் மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளி சத்துணவு மையங்களுக்கு புதிய நபர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியானது.
தகுதியான நபர்கள் செப்டம்பர் 24 லிருந்து செப்டம்பர் 30 க்குள் விண்ணப்பிக்கலாம்.
சேலம் அரசு பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்புவற்கான அறிவிப்பு வெளியானது.
அதாவது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது அறிவிக்கப்பட்டுள்ளது.
Noon Meal Organisers & Cooker & Cooking Assistants
தேர்வு செய்யும் அமைப்பு | PT MGR NMP சேலம் |
வேலை இடம் | சேலம் மாவட்டம் முழுவதும் |
மொத்த பணியிடங்கள் | 1570 |
கல்வி தகுதி | 5 ஆம் வகுப்பு / 8 ஆம் வகுப்பு / 10 ஆம் வகுப்பு |
காலிப்பணியிட விவரங்கள்
சத்துணவு அமைப்பாளர் | 451 |
சமையலர் | 138 |
சமையல் உதவியாளர் | 981 |
வயது வரம்பு
வயது வரம்பானது 01-9-2020 ஆம் தேதியை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படும்.
சத்துணவு அமைப்பாளர் பதவிக்கான குறைந்தபட்ச வயது மற்றும் அதிகபட்ச வயது கீழே கொடுக்கப்பட்டுள்ளது
பொது பிரிவினர் / தாழ்த்தப்பட்டோர் | 21 வயது பூர்த்தி அடைந்தும் 40 வயது மிகாதவராக இருக்க வேண்டும். |
பழங்குடியினர் | 18 வயது பூர்த்தி அடைந்தும் 40 வயது மிகாதவராக இருக்க வேண்டும். |
விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர் | 20 வயது பூர்த்தி அடைந்தும் 40 வயது மிகாதவராக இருக்க வேண்டும். |
மாற்று திறனாளிகள் | 43 வயதுக்கு மிகாதவராக இருக்க வேண்டும். |
சமையல்காரர் பதவிக்கான குறைந்தபட்ச வயது மற்றும் அதிகபட்ச வயது கீழே கொடுக்கப்பட்டுள்ளது
பொது பிரிவினர் / தாழ்த்தப்பட்டோர் | 21 வயது பூர்த்தி அடைந்தும் 40 வயது மிகாதவராக இருக்க வேண்டும். |
பழங்குடியினர் | 18 வயது பூர்த்தி அடைந்தும் 40 வயது மிகாதவராக இருக்க வேண்டும். |
விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர் | 20 வயது பூர்த்தி அடைந்தும் 40 வயது மிகாதவராக இருக்க வேண்டும். |
சமையல் உதவியாளர் பதவிக்கான குறைந்தபட்ச வயது மற்றும் அதிகபட்ச வயது கீழே கொடுக்கப்பட்டுள்ளது
பொது பிரிவினர் / தாழ்த்தப்பட்டோர் | 21 வயது பூர்த்தி அடைந்தும் 40 வயது மிகாதவராக இருக்க வேண்டும். |
பழங்குடியினர் | 18 வயது பூர்த்தி அடைந்தும் 40 வயது மிகாதவராக இருக்க வேண்டும். |
விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர் | 20 வயது பூர்த்தி அடைந்தும் 40 வயது மிகாதவராக இருக்க வேண்டும். |
கல்வி தகுதிகள்
சத்துணவு அமைப்பாளர் பதவிக்கான கல்வி தகுதி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பொது பிரிவினர் / தாழ்த்தப்பட்டோர் | 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
பழங்குடியினர் | எட்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி |
சமையல்காரர் பதவிக்கான கல்வி தகுதி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பொது பிரிவினர் / தாழ்த்தப்பட்டோர் | 8 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி |
பழங்குடியினர் | எழுது படிக்க தெரிந்திருந்தால் போதுமானது. |
சமையல் உதவியாளர் பதவிக்கான கல்வி தகுதி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பொது பிரிவினர் / தாழ்த்தப்பட்டோர் | 5 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி |
பழங்குடியினர் | எழுது படிக்க தெரிந்திருந்தால் போதுமானது. |
முக்கிய நாட்கள்
விண்ணப்பிக்க ஆரம்ப நாள் | 24-9-2020 |
விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடேசி நாள் | 30-9-2020 மாலை 5-மணி |
விண்ணப்பிக்கும் முறை
தகுதியான நபர்கள், கீழே இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து உரிய நகல்களுடன்,
தங்களுக்கு தொடர்புடைய வட்டார வளர்ச்சி அலுவலகம் / நகராட்சி / மாநகராட்சி அலுவலங்களில் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டியவை
விண்ணப்பத்துடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள நகல்களை இணைக்க வேண்டும்.
- பள்ளி மாற்று சான்றிதழ்
- கல்விதகுதிச் சான்று நகல்
- மதிப்பெண் சான்று நகல்
- சாதி சான்று நகல்
- விதைவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டவராக இருந்தால் அதற்கான சான்று
முக்கிய இணைப்புகள்
அதிகாரபூர்வ இணையத்தளம் | Click Here |
விண்ணப்ப படிவம் | Download |
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | முழு விவரம் |