வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான பண உதவி தொகை திட்டம்

TN Unemployment Scholarship

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசு “Unemployment Assistance” என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் பண உதவி பெற சில வரைமுறைகளையும் வகுத்துள்ளது. அதனை பற்றிய முழு விவரங்களை இங்கு பார்க்கலாம்.

TN Unemployment Scholarship 2021

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்க்கான உதவித்தொகையை பெறுவது எப்படி?

இத்திட்டத்தின் மூலம் பயன்பெற, தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மூடித்தவராக இருக்க வேண்டும் அல்லது விண்ணப்பதாரின் பெற்றோர் தமிழ்நாட்டில் குறைந்த பட்சம் 15 ஆண்டுகள் வசிப்பவராக இருக்க வேண்டும்.

உதவித்தொகையை பெறுவதற்கான தகுதிகள்?

கல்வித்தகுதிகள்

10 ஆம் வகுப்பு தோல்வி / தேர்ச்சி பெற்றவர்கள்

12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்

பட்டம் மற்றும் முதுகலைப் பட்டம் படித்தவர்கள்

பொறியியல், மருத்துவம், சட்டம், மருத்துவம், விவசாயம் போன்ற தொழிற்கல்வி படித்த பட்டதாரிகள் இந்த உதவித்தொகையை  பெற முடியாது

வயது வரம்பு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும் மற்ற வகுப்பினர் 40 வயது மிகாமலும் இருக்க வேண்டும்.

பிற தகுதிகள்

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தொடர்ச்சியாக பதிவினை புதுப்பித்து வருபவர்கள்.

30.06.2021-ம் தேதியின் நிலவரப்படி ஐந்தாண்டுகளுக்கு மேல் காத்திருப்பவராக இருத்தல் வேண்டும்.

மாற்றுத்திறனாளி பதிவுதாரர்களாக இருப்பின் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடிந்திருக்க வேண்டும்.

குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72000-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.மாற்றுத்திறாளிகளுக்கு வருமான உச்சவரம்பு இல்லை.

எவ்வளவு உதவித்தொகை வழங்கப்படும்?

10 ஆம் வகுப்பு தோல்வி அடைந்தவர் ரூ.200 / மாதம்
10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் ரூ.400 / மாதம்
12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் ரூ.400 / மாதம்
பட்டம் மற்றும் முதுகலைப் பட்டம் தேர்ச்சி பெற்றவர் ரூ.400 / மாதம்
மாற்றுத்திறனாளிகள் ரூ.600 முதல் 1000 வரை

குறிப்பு: 3 ஆண்டுகளுக்கு இவ்உதவித்தொகை வழங்கப்படுகிறது.

விண்ணப்படிவம்

மேற்குறிப்பிட்ட தகுதிகள் உள்ளவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலோ அல்லது www.tnvelaivaaippu.gov.in என்ற வேலைவாய்ப்புத்துறை இணையதளத்திலோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மாவட்ட வாரியான அறிவிப்பு

மாவட்டம்  விண்ணப்பிக்க கடைசி தேதி  பத்திரிகை செய்தி
நாமக்கல் 31-8-2021 Download

Related Links

Leave a Comment