Tamil Current Affairs – 10th & 11th January 2021

ஜன.9-ல் தமிழக முதல்வரால் புனரமைக்கப்பட்ட 8 வரலாற்று சின்னங்கள் திறந்து வைக்கப்பபட்டுள்ளது. சுற்றுலாத்துறையினரால் 12 நினைவுச் சின்னங்கள் புனரமைப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.
- கட்டபொம்மன் கோட்டை – தூத்துக்குடி மாவட்டம்
- உதயகிரி கோட்டை – கன்னியாகுமரி மாவட்டம்
- திருமலை நாயக்ககர் அரண்மை – மதுரை மாவட்டம்
- டச்சுக் கல்லறை – நாகப்பட்டினம் மாவட்டம்
- மனோரா நினைவுச்சின்னம் – தஞ்சாவூர் மாவட்டம்
- மருதுபாண்டியன் கோட்டை – சிவகங்கை மாவட்டம்
- தியாகதுருகம் மலைக்கோட்டை – கள்ளக்குறிச்சி மாவட்டம்
- சின்னையன்குளம் – திருவண்ணாமலை மாவட்டம்
- பூண்டி அருகர் கோவில் – திருவண்ணாமலை மாவட்டம்
- தடாகபுரீஸ்வரர் – திருவண்ணாமலை மாவட்டம்
- கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோவில் – திருவண்ணாமலை மாவட்டம்
|
மதுரை மாவட்டம், திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட டி.குன்னத்தூரில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோவில் கட்டப்பட்பட்டுள்ளது. |
மாதத்திற்கு 60ஜிபி டேட்டா அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் படிக்கும் 9.69 லட்சம் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என தமிழக முதல் அறிவித்துள்ளார். |
“ஆத்மநிர்பர் பாரத் ரோஜ்கார்” (Atmanirbar Bharat Rojkar) என்ற திட்டத்தின் மூலம் கரோனா காலத்தின் வேலை இழப்பை ஈடு செய்யவதற்காக புதிகாக வேலையில் சேரும் தொழிலாளர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு அரசே பி.எப். செலுத்தும் என அறிவித்துள்ளது. |
மத்திய அரசின் தகவல் ஒளிபரப்பு துறையின் கீழ் செயல்பட்டுவரும் தேசிய திரைப்பட ஆவண காப்பகம் வெளியட்டுள்ள 2021 காலண்டரில் எம்.ஜி.ஆர் (ரிக்சாகாரன்) படம் இடம் பெற்றுள்ளது.
மேலும் அர்ச்சனா (தாசி-தெலுங்கு) லட்சுமி (சில நேரங்களில் சில மனிதர்கள்) ஆகியோர்களின் படமும் இடம் பெற்றுள்ளன. |
ஜன.9-ல் பிரதமரின் சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் கட்டப்பட காலநிலை மாற்றம், கடல் நீரோட்டம் ஆகியவற்றை முன்னரே கண்டுபிடிக்கும் கடலோர ஆராய்ச்சி கப்பலான “சாகர் அனிவேஷிக்கா” (Sagar Aniveshika) என்ற கப்பலை சென்னை துறைமுக விழாவில் மத்திய மந்திரி டாக்டர் ஹர்ஷவர்தன் நாட்டுக்கு அர்பணித்தார். |
இந்திய விமான வரலாற்றில் சாதனையாக பெண் விமானிகளை கொண்டு ஏர் இந்தியா விமானம் (ஏஐ176) அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் இருந்து பெங்களூருக்கு இயக்கப்படுகிறது.
- பெண் விமானிகள் குழுவில் இடம் பெற்ற சோயா அகர்வால் 2013-ம் ஆண்டு போயிங் 777 விமானத்தை உலகின் முதல் பெண்ணாக இயக்கி சாதனை படைத்தார்
|
ஜன.7-ல் தில்லி அமைச்சரவை கொங்கணி அகாதெமிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. |
ஐ.நா.வின் பேரிடர் மீட்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்தியாவும் இடம் பெற உள்ளதாக தேசிய பேரிடர் மீட்புப் படையின் இயக்குநர் எஸ்.என்.பிரதான் அறிவித்துள்ளார். |
ஜன.8-ல் மகாராஷ்டிர மாநிலம் பண்டார அரசு பொது மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் புதிதாக பிறந்த 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தனர். |
மத்திய அரசானது தெர்மோமீட்டர், குளுக்கோமீட்டர், ரத்த அழுத்தத்தை கண்டறியும் கருவி உள்பட நான்கு வகையான மருத்துவ உபகரணங்களை மருந்துகளின் வரையறை பட்டியலில் கொண்டு வந்துள்ளது.
இந்த பட்டியல் 2021 ஜன.1 முதல் அமலுக்கு வந்துள்ளது. |
இந்தோனிசியாவின் ஸ்ரீவிஜயா ஏர் நிறுவன பயணிகள் விமானம் 62 பயணிகளுடன் கடலுக்குள் விழந்து நொறுங்கியது. |
பிரவாசி பாரதிய சம்மான் விருது அமெரிக்க – இந்திய கூட்டாளர் மன்றத்தின் தலைவர் முகேஷ் ஆகி, இந்திய சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் மூன்றுபேருக்கு வழங்கப்பட்டுள்ளது. |
இலங்கையில் நடைபெற்ற போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக 2019-ல் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாத்தில் கட்டபட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் இலங்கை அரசால் இடிக்கப்பட்டது. |
இந்திய வம்சாவளியரான சபரீனா சிங் கமலா ஹாரிஸின் துணை செய்தித் தொடர்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். |
பிரிட்டன் அரசு மாடர்னா நிறுவன தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியுள்ளது. |
ஜோபைடன் புதிய ஜனாதிபதியாக பதவியேற்கும் விழாவில் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் கலந்து கொள்ளமாட்டேன் என கூறியதால் 150 ஆண்டு கால வரலாற்றில் புதிய ஜனாதிபதியின் பதவியை புறக்கணிக்கும் முதல் ஜனாதிபதியாக டிரம்ப் கருதப்படவுள்ளார். |
பாகிஸ்தான் ஜன.7-ல் பாதா-1 என்ற பெயரால் பலமுறைப் பயன்படுதப்படக் கூடிய ராக்கெட்டை வெற்றிகராமாக சோதனை செய்துள்ளது. |
9th January Current Affairs – Read Here
Related Links
Related