Tamil Current Affairs – 10th December 2020
டிசம்.9 அன்று சுகாதாரம், மருத்துவம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்புக்காக இந்தியா, சுரினாம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. |
ரூ.971 கோடி செலவில் கட்டப்பட இருக்கும் புதிய நாடாளுமன்றத்திற்கு பிரமர் இன்று (டிசம்.10) அடிக்கல் நாட்டுகிறார். |
2020-21 நிதியாண்டில் 14 மாநிலங்களுக்கு வழங்குவதற்கு 15-வது நிதி ஆணையம் பரிந்துரைத்த வருவாய் பற்றாக்குறை மானியத்தின் 9வது தவணையில் தமிழகத்திற்கு ரூ335.41 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. |
ரூ.23,523 கோடியை “ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை” சீர்திருத்த நடவடிக்கையை சிறப்பாக செயல்படுத்திய 9 மாநிலங்களுக்கு சிறப்பு கடனாக வழங்க மத்திய அரசு அனுமதித்துள்ளது. |
ரூ.74கோடியே 24 லட்சம் நிதியை நிவர் புயல் நிவாரண பணிக்காக ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது |
சர்வதேச ஊழல் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு 34 சிபிஐ அதிகாரிகளுக்கு குடியரசுத்தலைவர் காவல் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. |
வானவில் பண்பாட்டு மையம் சார்பில் டிசம்.11-20 வரை நடைபெற உள்ள பன்னாட்டு பாரதி திருவிழா-2020-ல் மோடி பங்கேற்கிறார். |
டிசம்.8-ல் உத்திரகண்ட் தானக்பூர் எரிசக்தி நிலையத்தில் இந்திய-நேபாளம் கால்வாயின் குறுக்கணையில் நீர்வரத்தினை சரிபடுத்தும் பணிக்கு தேசிய நீர் மின்சாரகழக தலைவரும், மேலாண் இயக்குநருமான ஏ.கே.சிங் அடிக்கல் நாட்டினார் |
குவைத்தின் பிரதமராக ஷேக் சபா அல்-கலீத் அல்-ஹமாத் அல்-சபாஹ் மீண்டும் நியமனம் செய்யப்பட்டார் |
இந்திய வம்சாவளியை சார்ந்த விவேக் மூர்த்தி ஜோபைடன் மருத்துவ குழுவில் சர்ஜன் ஜெனரலாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளார். |
இந்திய வம்சாவளியரான அனில் சோனி உலக சுகாதார அமைப்பு தொண்டு நிறுவனத்தின் (WHO Foundation) முதல் தலைமை நிர்வாக அதிகாரியாக (Cheilf Executive Officer (CEO)) 2021 ஜனவரி 01 அன்று பதவியேற்க உள்ளார். |
ட்விட்டரில் உலக அளவில் அதிக மக்களால் அதிகம் பேசப்பட்டோர் பட்டியலில் பிரதமர் மோடி 7வது இடத்தில் உள்ளார்
|
2014-ல் விண்ணுக்கு அனுப்பபப்ட்ட ஜப்பான் நாட்டு ஹயாபுசா-2 விண்கலம் (Hayabusa 2 Space craft) 30கோடி கி.மீ தூரம் பயணித்து ரியகு குறுங்கோளிலிருந்து (Aseroid Ryugu) மண் & பாறைத்துகளைகளை எடுத்துக்கொண்டு டிசம்.6-ல் பூமியை வந்தடைந்தது. |
பசுவதை தடைச்சட்ட மசோதா கர்நாடக சட்டபேரவையில் நிறைவேற்றம். |
இந்திய ரயில்வேயானது டெல்லி வாரணாசி அதிவேக ரயில்பாதையில் தரைவழி கணக்கெடுப்பு நடத்த லிடார் (LiDAR – Light Detection and Ranging Technique) நுட்பத்தைப் பயன்படுத்த உள்ளது. |
மஹிந்திரா நிறுவனம் எஸ்.பி.ஐ இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் 2-ம் நிலை, 3-ம் நிலை நகரங்களை காப்பீடு திட்டங்களை விரிவுபடுத்துவதற்காக இனணந்துள்ளது. |
கடல் வெப்பநிலை அதிகரித்தன் காரணமாக செங்கடலிலுள்ள ஆண் ஆமைகள் பெண் தன்மையுடையனவாக மாறி வருகிறது என சவூதி அரேபியா மன்னர் அப்துல்லா அறிவியல் மற்றம் தொழில் நுட்ப பல்கலைக் கழக ஆராய்சியாள்கள் குழுவின் ஆய்வு தெரிவிக்கிறது |
என்.டி.பி.சி லிமிடெட் (National Thermal Power Corporation) போபாலின் இந்திய வன மேலாண்மை நிறுவனத்துடன் (Bhopal for the implementaion of Narmada Lanscape Restoration Project (NLRP)) நர்மதா இயற்கை மறுசீரமைப்பு திட்டத்தை செயல்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. |
அமெரிக்காவில் முதன் முறையாக கருப்பினத்தைச் சார்ந்த லாய்ட் ஆஸ்டின் அந்நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். |
உலக மலேரியா அறிக்கை 2020-ன் படி மலேரியா நோயை கட்டுப்படுதிய தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இந்தியவில் முதலிடம் பிடித்துள்ளது |
2024-ல் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெறவுள்ள 32வது ஒலிம்பிக் போட்டியில் “பிரேக் டான்ஸ்” புதிய பிரிவாக “பிரேக்கிங்” என்ற பெயரில் சேர்க்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது. |
ஸ்கேடட்போர்டிங், ஸ்போர்ட் கிளைம்பிங், சாஃபிங் போன்ற புதிய விளையாட்டுகள் 2021-ல் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் சேர்க்கப்பட்டுள்ளன. |
இந்திய கிரிக்கெட் வீரர் பார்த்திவ் படேல் அனைத்துவித கிரிக்கெட் பாேட்டியிலிருந்து ஓய்வு பெற்றார். |
மனித உரிமைகள் தினம் (டிசம்.10)
Theme : Recover Better – Stand up for Human Rights |
சார்க் சாசன தினம் (டிசம்.8) |