Tamil Current Affairs – 11th & 12th December 2020
ரூ.119 கோடி மதிப்பில் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும், ரூ.162.26 கோடி மதிப்பில் கோயம்புத்தூர், திருச்சியில் தகவல் தொழில்நுட்ப கட்டிடங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். |
உலக நாடுகளில் யோக பயிற்சி முறையை ஊக்குவிக்கும் கூட்டு நடவடிக்கைகளை தீவிரமாக செயல்படுத்த ஆயுஷ் அமைச்சகமும், இந்திய இந்திய கலாச்சார தொடர்பு கவுன்சிலும் (Indian Council for Cultural Relation (ICCRI)) இணைந்து திட்டமிட்டுள்ளன. |
டிசம்.8 அன்று நீதியரசர் திரு. ராஜேஷ் பிண்டால் ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களின் பொது உயர்நீதிமன்றத்தின் செயல் தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். |
தேசிய பிற்படுத்தப்பட்டோருக்கான நிதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (National Backward Classes Finance & Development Corporation (NBCFDC)) மற்றும் தேசிய பட்டியல் இனத்தவருக்கான நிதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (National Scheduled Castes Finance and Development Corporation (NSFDC)) விஸ்வாஸ் யோஜனா (Vanchit Ikai samooh our Vargon ki Aarthi Sahayta (VISVAS Yojana)) என்ற பெயரிலான பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியல் இனத்தவரின் நிதி மேம்பாட்டிற்கான திட்டத்தினை சிறந்த முறையில் அமல்படுத்துவதற்காக சென்ட்ரல் ஃபாங்க் ஆஃப் இந்தியா வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. |
அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் 300 மில்லியன் இளைஞர்களுக்கு, டிஜிட்டல் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க அமெரிக்காவினை மையமாகக் கொண்ட சர்வதேச ஆலோசனை நிறுவனமான PwC (Price Waterhouse Coopers), ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (United Nations Children’s Fund) மற்றும் யுவா (YuWaah (Generation Unlimited in India)) ஆகியவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. |
டிசம்.9 அன்று கொச்சியிலிருந்து லட்சத்தீவுகள் வரை கடலுக்கடியில் கண்ணாடி இழை வடத்தை பொருத்தும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. |
மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகம் லட்சத்தீவை 100% கரிம வேளாண் பகுதி (Organic Agricultural) என்று அறிவித்துள்ளது. |
பொது இடங்களில் பொது மக்களுக்கு இலவச வைஃபை இணையதள வசதி வழங்கும் திட்டமான பி.எம்.வாணி (PM-WANI – Prime Minister’s Wi-Fi Access Network Initiative) என்ற திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. |
இந்தியாவிற்கும் உஸ்பெகிஸ்தானிற்கும் இடைேய 9 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது |
இந்திய வம்சாவளி விண்வெளி வீரரான ராஜா ஜான் உர்புதூர் சாரி நிலவுக்கு செல்லும் குழுவில் நாசா தேர்வு செய்துள்ளது. |
டிசம்.17-ல் தகவல் தொடர்புக்கான சிஎம்எஸ்-01 செற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி-50 விண்ணில் ஏவப்படுகிறது. |
கரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதற்காக ஆசிய வளர்ச்சி வங்கி தன் உறுப்பு நாடுகளுக்கு 9 பில்லியன் அமெரிக்கா டாலர் (சுமார் ரூ.66,392 கோடி) நிதியை ஒதுக்கியுள்ளது. |
டைம் இதழ் இந்த ஆண்டின் சிறந்த நபராக ஜோபைடன், கமலா ஹாரில் இருவரையும் தேர்வு செய்துள்ளது. |
ய.மணிகண்டனுக்கு கோவை பாரதி பாசறை வழங்கும் “பாரதி விருது” வழங்கப்படுகிறது. |
கருப்பினத்தவர்களை வீட்டில் அடைக்கலம் தந்து காப்பற்றிய இந்திய வம்சாவளியரான ராகுல் துபே டைம் இதழின் ஹீரோக்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். |
கியர்மேன் என அழைக்கப்பட்ட சாந்தி சோஷியல் சர்வீஸ் அறங்காவலர் பி.சுப்பிரமணியன் காலமானார். |
விம்பிள்டன் முன்னாள் சாம்பியன் அலெக்ஸ் அல்மிடோ காலமானார். |