TNPSC Current Affairs in Tamil – 11th March 2023

Current Affairs One Liner 11th March 2023

  • மார்ச் 18-20 வரை துபையில் ஒன்பதாவது உலகத் தமிழர் பொருளாதர மாநாடு நடைபெற உள்ளது.
  • அசோக் லேலண்ட் நிறுவனம் பெண்கள் மட்டும் பணியாற்றும் பிரத்யேக உற்பத்தியகத்தை முதல் முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது.
  • பேறுகால சர்க்கரை நோய் விழிப்புணர்வு அமைப்பு சார்பில் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் சர்க்கரை நோய் பாதிப்பு குறித்த 17-வது தேசிய கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது.
  • “இன்ஃப்ளூயன்ஸா-ஏ வகை வைரஸ்”-ல் ஏற்படும் “ஹெச்3என்2 பருவ காய்ச்சலுக்கு” இருவர் பலி
  • பேரிடர் மீட்புப் பணிகளில் சிறந்து பணியாற்றிய வீரர்களுக்கு “சுபாஷ் சந்திர போஸ் ஆப்தபிரபந்தன்” விருதுகளை பிரதமர் வழங்கியுள்ளார்.
  • இந்தியா, அமெரிக்கா இடையே செமி கண்டக்டர் (குறை மின்கடத்தி) விநியோக முறை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • அரசியல் ரீதியில் நிதி முறைகேடு புகார்களில் சிக்கும் நபர்களையும் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்ட (பிஎம்எல்ஏ) கண்காணிப்பில் கொண்டு வரும் வகையில் திருத்தங்களை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
  • இந்திய விமானப் படையில் பயன்பாட்டுக்காக 6 டோர்னியா விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் (ஹெச்ஏஎல்) மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • இந்திய கடற்படையின் பிரம்மாண்ட கூட்டுப் போர் பயிற்சியான டிரோபெக்ஸ் 2003 இந்தியப் பெருங்கடலில் தொடங்கியது.
  • இந்தியாவில் பட்டம் பெற்றிருந்தால் ஆஸ்திரேலியாவில் அங்கீகரிக்கபடும் என அந்நாட்டின் பிரதமர் அறிவித்துள்ளார்.
  • இந்தியாவின் 17வது மிகப் பெரும் வர்த்தக கூட்டமைப்பாக ஆஸ்திரேலியா திகழ்கிறது.
  • யாவ்ஷாங் திருவிழா மணிப்பூரில் நடைபெறுகிறது.
  • நியூயார்ககின் மன்ஹாட்டன் ஃபெடரல் மாவட்ட நீதிமன்றத்தின் முதல் இந்திய-அமெரிக்க நீதிபயாக அருண் சுப்ரமணியன் தேர்ந்தெடுக்கப்ட்டுள்ளார்.
  • சீன அதிபராக 3வது முறையாக ஷி ஜிபின்பிங்கும், துணை அதிபராக ஹான் ஷெங் தேர்வானார்கள்.
  • 2024-ம் ஆண்டிற்கான 6வது பிம்ஸ்டெக் உச்சி மாநாடு (BIMSTEC) தாய்லாந்தில் நடைபெற உள்ளது
  • 5வது ஆசியான்-இந்தியா வணிக உச்சி மாநாடு 2023 கோலாம்பூரில் நடைபெற்றுள்ளது

Leave a Comment