Tamil Current Affairs – 12th January 2021

ஜன.11-ல் சுனில்குமார் தமிழக காவல் துறையின் பொது விநியோகப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். |
கன்னியாகுமரி மாவட்டத்தின் பழையாற்றின் குறுக்கே மேலமணக்குடி, கீழமணக்குடி கிராமங்களை இணைக்கும் பாலத்திற்கு லூர்தம்மாள் சைமன் பாலம் என பெயர் சூட்டி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. |
தேசிய தர மதீப்பீட்டு கவுன்சில் (National Quality Assessment Council (Knock) இந்திராகாந்தி திறந்த நிலை பல்கலைகழத்திற்கு (IGNOU) ஏ பிளஸ் பிளஸ் (A + +) அந்தஸ்து வழங்கியுள்ளது.
நாட்டிலே முதன் முறையாக தொலைதூரக்கல்வி நிறுவனத்திற்கு A + + அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. |
இன்று (ஜன.12) மத்திய அமைச்சர் நிதின் கட்ரி பசுவின் சாணத்தை அடிப்படையாக வைத்து மணமில்லா, சுற்றுசூழலுக்கு ஏற்ற, நச்சுத் தன்மையற்ற, புதிய இரண்டு வகை சுவர் வர்ணங்களை (பெயிண்ட்) அறிமுகப்படுத்துகிறார்.
- மத்திய குறு, சிறு, நடுத்தர தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள காதி கிராமத் தொழில் ஆணையம் இந்த பெயிண்டினை தயாரித்துள்ளது.
- இதற்கு “காதி இயற்கை வர்ணம்” (Khadi Prakriti Paint) என பெயரிடப்பட்டுள்ளது
|
பாரம்பரிய பாதுகாப்புக்குழு (Traditional Conservation Committee) சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் (central vista project) கீழ் கட்டப்பட உள்ள நாடாளுமன்ற கட்டுமான பணிகளுக்கு அனுமதி அளித்துள்ளது.
மேலும் இத்திட்டத்தின் கீழ் குடியரசுத்தலைவர் மாளிகையிலிருந்து இந்தியா கேட் வரையிலான 3 கி.மீ நீள ராஜ பாதையும் புதுப்பிக்கப்பட உள்ளது. |
ஜன.12 முதல் 13 வரை இந்திய கடற்படையின் மிகப்பெரிய கடல் கண்காணிப்பு பாதுகாப்பு பயிற்சி நடைபெற உள்ளது.
- 13 கடலோர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரேதசங்கள் உள்ளடக்கிய 7,516 கி.மீ நீள கடற்கரைப் பகுதிகள் & பிரத்யேக பொருளாதார மண்டலங்களில் இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்பட உள்ளன.
|
ஜன.16-ல் கரோனா தடுப்பூசிகளான கோவேக்ஸின், கோவிஷீலட் தடுப்பூசிகள் இந்திய மக்களுக்கு செலுத்தப்பட உள்ளது. |
ஜன.11-ல் மாநிலங்களுக்கு மத்திய அரசு 11வது தவணையாக ஐிஎஸ்டி இழப்பீடு ரூ.6,000 கோடியை விடுவித்தது. |
ஜன.15 & 16 தேதிகளில் புதிய தொழில்நிறுவனங்களைத் தொடங்குவதற்கு ஆவல் உள்ளவர்களுக்காக நடைபெற உள்ள “பிராரம்ப்” மாநாட்டில் இளைஞர்கள் கலந்து கொள்ள பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார். |
உலகம் முழுவதும் தயாரிக்கப்பட்ட 200-க்கும் மேற்பட்ட கரோனா தடுப்பூசிகளில் நம்பிக்கையூட்டும் சில தடுப்பூசிகளுக்கு இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன.
அவை
தடுப்பூசிகள் |
தயாரித்த நிறுவனங்கள் |
கோவேக்ஸின் |
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தேசிய தீநுண்மியியல் மையம் ஆகியவற்றுடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிப்பு |
கோவிஷீல்ட் |
பிரிட்டனின் அஸ்ட்ரா ஸெனகா நிறுவனத்துடன் இணைந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரிப்பு |
கரோனாவேக் |
சீனாவின் சைனோஃபார்ம் நிறுவனத்தின் தயாரிப்பு |
வெக்டார் இன்ஸ்டிடியூட் |
ரஷியாவின் வெக்டார் இன்ஸ்டியூட்டின் தயாரிப்பு |
நேவாவேக்ஸ் |
அமெரிக்காவின் நோவாவேக்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு |
ஃபைஸர் |
அமெரிக்காவின் ஃபைஸர் நிறுவனமும், ஜெர்மெனியின் பயேஎன்டெக் நிறுவனமும் இணைந்த தயாரிப்பு |
மாடர்னா |
அமெரிக்காவின் மாடர்னா நிறுவனத்தின் தயாரிப்பு |
கோன்விடெசியா |
சீனாவின் கேன்சைனோ பயலாஜிக்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு |
ஸ்புட்னிக்-வி |
ரஷ்யாவின் கமலீயா ஆராய்ச்சி மையத்தின் தயாரிப்பு |
ஜான்சன் & ஜான்சன் |
ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் தயாரிப்பு |
|
கரோனா பரவலை தடுக்க பிப்.1-ல் தாக்கல் செய்யப்படும் 2021-2022-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை காகிதமில்லா பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. |
10 பேர் அடங்கிய உலக சுகாதார அமைப்பு (World Health Organization (WHO)) நிபுணர் குழு கரோனா வைரஸ் தோற்றம் குறித்த ஆய்வினை நடத்த ஜன.14-ல் சீனாவிற்கு வருகை தருகிறது.. |
சவுதி அரேபியா செங்கடல் அருகே உள்ள பாலைவனப் பகுதியில் ரூ. 50 ஆயிரம் கோடி டாலர் செலவில் “நியோம்” என்ற பெயரில் கார்கள் மற்றும் கார்பன் வாயுக்கள் இல்லாத பசுமை நகரம் ஒன்றை உருவாக்க உள்ளது. |
டிரம்பின் ஆதரவாளர்கள் அமெரிக்க நாடாளுமன்ற கட்டித்தில் கலவரத்தில் ஈடுபட்டதால் நான்சி பெலோசி டிரம்ப்பை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை தாக்கல் செய்கிறார். |
கிரிசில் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் முந்தைய 2020-ம் ஆண்டில் பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.31 லட்சம் கோடியை கடந்துள்ளது என தெரிவித்துள்ளது. |
இந்திய-அமெரிக்க எழுத்தாளர் வேத் மேத்தா (86) காலமானார் |
தேசிய இளைஞர் தினம் (ஜனவரி.12) |
10 & 11th January Current Affairs – Read Here
Related Links
Related