மேற்கு மண்டலத்தில் புதிய ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என்றும் மேலும் சில நலத்திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
“காலா பாணி” நாவலுக்காக சாகித்திய அகாதெமி விருது மு.ராஜேந்திரன்-க்கு வழங்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையில் மகளிர் நிலை குறித்த 67-ஆவது அமர்வு நியூயார்க்கில் நடைபெறுகிறது.
கரோனா தொற்று காலத்திலும் வழக்குகளுக்கு தீர்வு கண்டதில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் இருந்தது – சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொ) டி.ராஜா
“இயற்கையை பேணுவோம்” என்ற தலைப்பில் சென்னை ராணி மேரி கல்லூரியில் “சிற்பி” திட்டத்தின் கீழ் ஒரே நேரத்தில் 5லட்சம் விதை பந்துகளை தயாரித்து அரசுபள்ளி மாணவ மாணவிகள் சாதனை படைத்துள்ளன.
சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா நியமனம்.
கைவினைஞர்களுக்கு “பிஎம் விகாஸ்” (பிரதமரின் விஸ்வகர்மா கெளஷல் சம்மான்) திட்டம் அதிகாரமளிக்கும் என்ற பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஒரே பூமி, ஒரே சூரியன், ஒரே மின்சார விநியோகக் கட்டமைப்பு என்ற கொள்கை மூலம் மிகை மின்சார உற்பத்தியை நாடுகள் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள முடியும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு” என்ற திட்டத்தின் கீழ் தெற்கு ரயில்வேயில் 483 ரயில் நிலையங்களில் நெசவாளர்கள் கைவினைஞர்களின் படைப்புகள் உற்பத்தி பொருள்களின் விற்பனை அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.