TNPSC Current Affairs in Tamil – 12th November 2020 | Tamil Hindu, Dinamani News

Tamil Current Affairs – 12th November 2020

வேலூர் மாவட்டத்திற்கு நதிநீர் புனரமைப்பு, நீர் மேலாண்மைப் பணிகளை சிறப்பாக மேற்கொண்டதற்காக மத்திய அரசு விருது வழங்கப்பட்டது.
ரூ.2 லட்சம் கோடி மதிப்பில் உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகையை தொலைத்தொடர்பு, வாகன உற்பத்தி உள்ளிட்ட நாட்டின் முக்கிய 10 துறைக்கு வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது
பஹ்ரைன் பிரதமர் இளவரசர் காலிஃபா பின் சல்மான் அல் அல் காலிஃபா (84) காலமானார்.
உலகின் இளம் கணனி புரோகிராமார் பட்டத்தை அகமதாபாத்தை சேர்ந்த 6 வயது சிறுவன் அர்ஹாம் வென்று கின்னஸ் சாதனை படைப்பு.
ஹைதரபாத்தில் உள்ள தேசிய மருந்துகள் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தனது 14-வது நிறுவன தினத்தை நவம்பர் 10 அன்று கொண்டாடியது.
20 பயிற்சி பெற்ற குதிரைகள், கண்ணி வெடிகளை கண்டுபிடிக்கும் 10 மோப்பநாய்களை இருதரப்பு ராணுவ உறவினை மேம்படுத்துவதற்கான இந்திய இராணுவம் பரிசளித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள ரயில்வே மருத்துவமனைகளின் நிர்வாகத்தை திறம்பட நிர்வகிக்க ரயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து “மருத்துவமனை நிர்வாக தகவல் முறை” எனும் மென்பொருளை அமல்படுத்த இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.
பம்பாய் ஐஐடியின் ஆதரவுடன் கோவிட்-19 சிகிச்சையளிக்கும் மருத்துவர்களின் பாதுகாக்கும் வகையில் ஆயு சாதனங்கள் என்ற ஸ்டார் அப் நிறுவனம் ஒரு டிஜிட்டல் ஸ்டெதஸ்கோப்பை கண்டுபிடித்துள்ளது.
பேராசிரியர் கெஸ் இந்திய வானியலாளர்களுடன் 30 மீட்டர்  தொலைநேகாக்கி திட்டத்துக்காக இணைந்து பணியாற்றியுள்ளார்.
2019-ம் ஆண்டிற்கான 2வது தேசிய நதிநீர் விருதுகள் வழங்கும் விழா நவம் 11, 12 தேதிகளில் நடைபெறகிறது.
ரூ.60.44 கோடி மதிப்பிலான 36 திட்ட பணிகளுக்கு தமிழக முதல்வர் கன்னியாகுமரி மாவட்டத்தில் அடிக்கல் நாட்டினார்.
வருவாய் இழப்பைச் சந்தித்த தமிழகம் உள்பட 14 மாநிலத்திற்கு நிதி குழுவின் பரிந்துரையின்படி வழங்கவேண்டிய நிதியில் 8-வது தவணையாக ரூ6,195 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.
4நிமிடம் 23 வினாடிகளில் ஐ.நா.சபை அங்கரித்துள்ள 195 நாடுகளின் பெயர்களையும், தலைநகரங்களையும் மூச்சுவிடாமல் ஒப்புவித்த ஈராக்கில் வசிக்கும் 5வயது சிறுமி பிரானவி குப்தா சாதனை படைத்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் சிபிஐ அமைப்பிற்கு வழங்கப்பட்டு வந்த பொது ஒப்புதலை மாநில அரசு திரும்ப பெற்றது.
ஐந்தாவது முறையாக மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி அணியை வீழ்த்தி சாம்பியன்ஸ் பட்டம் வென்றது.
தேசிய கல்வி தினம் (நவம்.11)
உலக நிமோனியா தினம் (நவம்.12)

Related Links




Leave a Comment