Tamil Current Affairs – 13th & 14th December 2020
திருவண்ணாமலை மாவட்டத்தின் கீழராவந்தவாடியில் உள்ள சிற்பக்குளம், அரியலூர் மாவடத்தின் அழகர்மலை கிராமத்தில் உள்ள யானை சிற்பம் ஆகியவற்றை பாதுகாக்கப்பட்ட புராதன சின்னங்களாக தமிழக அரசு அறிவித்துள்ளது. |
டிசம்.14-ல் தமிழக முதல்வர் சென்னையில் முதற்கட்டமாக “47 மினி கிளினிக்” (Mini Clinic) தொடங்கி வைக்ககிறார். |
ரூ.24,500 கோடி மதிப்பீட்டலான 24 தொழில் திட்டங்களை தொடங்க 18 தொழில் நிறுவனங்களுடன் முதல்வர் முன்னிலனையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. |
சைக்கிள் ஓட்டுவதும் ஒருவித விளையாட்டு என்ற விழிப்புணர்வை இளைஞர்களிடையே ஏற்படுத்த சென்னை-ராமேசுவரம் இடையே ரயில்வே டி.ஜி.பி. சைலேந்திரபாபு சைக்கிள் பயணம் மேற்கொண்டார் |
டிசம்.10 அன்று ரூ.266 கோடி மதிப்பில் 1.5 கி.மீ நீளத்தில் பீகாரின் சோன் ஆற்றுக்கு குறுக்கே கட்டப்பட்ட மூன்று வழி கோயில்வார் பாலத்தை மத்திய அமைச்சர் நிதின்கட்ரி திறந்து வைத்தார். |
உடற்பயிற்சியை ஊக்கப்படுத்தும் இந்தியாவின் முன்னெடுப்பான பிட்னஸ் கா டோஸ், ஆதா கன்டா ரோஜ் (Fitness Ka Dose Aadha Ghanta Roz) என்னும் பிரச்சாரத்தை உலக சுகாதார நிறுவனம் பாராட்டியுள்ளது. |
இந்தியர்கள் 2020-ம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடிய வார்த்தையில் “ஐ.பி.எல்” முதல் இடத்தையும், “கரோனா தொற்று” இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளது. |
அதிக மதிப்பிலான பரிவர்ததனைக்கு பயன்படுத்தும் “ரியல் டைம் கிராஸ் செட்டில்மெண்ட் சிஸ்டம் (RDGS)” என்ற 24 மணி நேர சேவை டிசம்.14 முதல் அமலுக்கு வந்தது |
ஐ.ஐ..டி மும்பை வெளியிட்டுள்ள “நகர்ப்புற வாழ்க்கை தர அட்டவணை 2020” (Urban Quality of Life (UQoL) Index 2020)-ல் முதல் நான்கு இடங்களை மும்பை, டெல்லி, கொல்கத்தா, சென்னை ஆகியவை பெற்றுள்ளன. |
ஸ்டேட் பாங் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள இந்திய அளவில் கோவிட்-19 தொற்று நோயை நிர்வகிக்கும் மாநிலங்களில் 7வது மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. |
நாடு முழுவதும் 2927 நீதி மன்ற வளாகங்கள், இ-நீதிமன்றங்கள் திட்டத்தின் கீழ் (eCoruts Mission Mode Project) “அதிவேக பெரும் வலையமைப்பு” (Wide Area Network (WAN)) மூலம் இணைக்கப்பட்டுள்ளன. |
தெற்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் மருத்துவமனை மேலாண்மை தகவல் அமைப்பு சோதனைத் திட்டத்தினை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. |
பிரேசில் நாட்டினைச் சார்ந்த டாக்டர் கரோலினா அராஜோவுக்கு “2020 இளம் கணித மேதைக்கான ராமானுஜன் பரிசு” (Ramanujan Prize for Young Mathematicians 2020) வழங்கப்பட்டது. |
இந்தியன் எக்ஸ்பிரஸ் தலைமை ஆசிரியரும், எழுத்தாளருமான ராஜ் கமல் ஜா எழுதிய “தி சிட்டி அண்ட் தி சி (The City and the Sea)”-க்கு ரவீந்திரநாத் தாகூர் இலக்கிய பரிசு 2020 வழங்கப்பட்டுள்ளது |
டிசம்.8 முதல் 10 வரை சிந்து தொழில் முனைவோர் The Indus Entrepreneurs (TiE)) உலகளாவிய உச்சி மாநாடு – 2020 (Global Summit Summit – 2020) நடைபெற்றது
கருப்பொருள் – தொழில் முனைவோர் 360 (Entrepreneurship 360) |
இந்திய வம்சாவளியரான பிரமிளா ஜெயபால் அமெரிக்க ஜனநாயக கட்சியின் சக்தி வாய்ந்த பிரிவான காங்கிரஸின் முற்போக்கு காகஸின் (U.S. Congressional Progressive Caucus) தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். |
“உலக கார்பன் திட்டம்” அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் 2020ம் ஆண்டில் உலகளாவிய கார்பன்-டை-ஆக்ஸைடு உமிழ்வு (Carbon Dioxide Emissions) 7% குறைந்துள்ளது என அறிவித்துள்ளது |
கானா அதிபராக நானா அகுபோ மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். |
டிசம்.11-ல் இந்தியா-உஸ்பெகிஸ்தான் நாடுகளுக்கிடையேயான இருதரப்பு உறவுகள் “மெய்நிகர் உச்சிமாநாடு” குறித்து விவாதிக்க நடந்தது. |
2020 இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு விளையாட்டுத் துறையில் 2020-ம் ஆண்டிற்கான சிறந்த ஆண், பெண் விளையாட்டு வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
|
செயற்கைகோள் அடிப்படையிலான நாரோபேண்ட் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் நெட்வெர்க் (NB-Io (Narrow Band-Internet of Things)) சேவையை துவக்க பிஎஸ்என்எல் நிறுவனம். ஸ்கைலோடெக் இந்திய (Skylotech India) நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. |
பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு மையம் (Defence Research and Development Organsiation (DRDO)) கார்பைன் ரக தானியங்கி துப்பாக்கி பரிசோதனை முழு வெற்றி பெற்றுள்ளது. புனேவில் உள்ள டிஆர்டிஓ மையம் வடிவமைத்துள்ளது. |
டிசம்.10 அன்று இந்திய எரிசக்தி சேமிப்பு கூட்டணி மற்றும் ஐக்கிய நாடுகளின் தொழில்துறை மேம்பாட்டு அமைப்பு ஆகியவை இந்தியாவில் எரிசக்தி சேமிப்பில் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. |
இந்தியாவின் அங்கிதா ரெய்னா, ஜார்ஜியாவின் இகாடாரின் கோர்கோட்ஸ் இணை துபாயில் நடைபெற்ற ஐடிஎஃப் மகளிர் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றது. |
ஜே.கே. டயர் எஃப்.எம்.எஸ்.சி.ஐ 23-வது தேசிய கார் பந்தயத்தின் எல்ஜிபி 4 பிரிவில் அஸ்வின் தத்தா பட்டம் வென்றார் |