சென்னை யானைக்கவுனி காவல் நிலையமும், கோட்டூர்புரம் காவல் நிலையமும்தமிழ்நாடு முதலமைச்சர் விருதிற்கான சிறந்த காவல் நிலையங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.
4 மாதங்களுக்கு இலவச டேட்டா கார்டு அரசு கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் என முதல்வர் தெரித்துள்ளார்
எல்காட் நிறுவனம் மூலம் விலையில்லா டேட்டா கார்டுகள் வழங்கப்பட உள்ளது
ஸ்கூட்டி பெப் பிளஸ்(Scooty Pep Plus) வாகனத்தில் தமிழ் எழுத்துக்கள் இடம் பெறும் வடிவமைப்புடன் புதிய மாடலை TVS மோட்டார் நிறுவனம்அறிமுகம் செய்து உள்ளது.
நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் பங்கேற்ற“இளைஞர்கள் பராளுமன்ற கூட்டம்” டெல்லி நாடாளுமன்ற கட்டிடத்தில் நடத்தது.
இதில்
முதல் இடம் – முதிதா மிஸ்ரா (உத்திரபிரதேசம்)
இரண்டாம் இடம் – அயாதி மிஸ்ரா (மகாராஷ்டிரம்)
மூன்றாம் இடம் – அவினாம் மங்கர் (சிக்கிம்)
ஆகியோருக்கு கோப்பை வழங்கப்பட்டது.
கரோனா தடுப்பூசியும் அதனை கண்டுபிடித்த நாடுகளும்
தடுப்பூசி
கண்டுபிடித்த நாடு
பைசர்
அமெரிக்கா
மாடர்னா
அமெரிக்கா
கினோவாக்
சீனா
நோவா வாக்ஸ்
அமெரிக்கா
ஸ்பூட்னிக் வி
ரஷ்யா
கோவிஷீல்டு
இங்கிலாந்து
கோவாக்சின்
இந்தியா
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே தலைமையிலான பெஞ்ச் மத்திய அரசின் 3 விவசாய சட்டங்களுக்கு இடைகால தடை விதித்தது.
பிரச்சனைக்கு தீர்வு காண 4 பேர் கொண்ட வல்லுநர் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இதில்
விவசாயிகள் சங்கத் தலைவர் – புபீந்தர்சிங் மான்
இன்டர்நேஷனல் பாலிசி அமைப்பின் தலைவர் – டாக்டர் பிரமோத் குமார் ஜாேஷி
விவசாய பொருளாதார வல்லுநர் – அசோக் குலதாதி
மகாராஷ்டிர சிவ்கேரி சங்கத்னாவிலன் அனில் தன்வாட்
உள்ளனர்.
பாரதிய கிஷான் யூனியன் தலைவர் – பல்பிர் சிங் ரஜேவால்
இந்தியாவைச் சேர்ந்த 11 நிறுவனங்கள்உலகின் முதல் 500 மதிப்பு மிக்க தனியார் நிறுவனங்களின் பட்டியிலில் இடம் பெற்றுள்ளன.
இந்திய ஹுருன் குளோபல் 500 என்ற பட்டியலில் 10 இடத்தை வகிக்கிறது.
இந்தியாவில் முதல் 10கோடி கோவிஷீல்டு மருந்துகளுக்கு மடம் தலா ரூ.200 என விலை நிர்ண்யிக்கப்பட்டுள்ளது.
ஜன.12-ல் இந்திய, வங்கேதச காவல்துறை தலைவர்கள் இடையேயான பேச்சுவார்த்த்தை நடைபெற்றது.
பிரிட்டன் பிரதமரின் இந்தியா வருகை ரத்தானதால்இந்திய வம்சாவளியரான சுரிநாம் அதிபர் சந்திரிகா பிரசாத் சந்தோகி (Chandrika Prasad Chandoki)குடியரசு தின விழாவில் பங்கேற்கிறார்.
அன்டோனியோ குட்டெரெஸ் (Antonio Guterres) ஐ.நா. அமைப்பின் பொதுச்செயலர் பதவிக்கு இரண்டாவது போட்டியிட உள்ளதாக அவரின் செய்தித் தொடர்பாளர் ஸ்டெஃபானி துஜாரிக் கூறியுள்ளார்.
கியூபாவை பயங்கரவாத்தை ஆதரவளிக்கும் நாடாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இந்திய வம்சாவளியரான விஜயா காட்டேடிரம்பின் டிவிட்டர் கணக்கை நிரந்தரமாக முடிக்கும் நடவடிக்கை பின்னனியில் இருந்துள்ளார்.
2021 ஆண்டின் சக்தி வாய்ந்த ஹென்லே பாஸ்போர்ட் குறியீட்டு வரிசையில் (Henley Passport Code Series) ஜப்பான் நாட்டுக்கான் பாஸ்போர்ட் முதல் இடம் பிடித்துள்ளது.