TNPSC Current Affairs in Tamil – 13th March 2023

Current Affairs One Liner 12th March 2023

 • தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் “புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் 5,28,000 பேர் படித்து வருகின்றன.
  • பள்ளிக் கல்வித் துறையின் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் மூலம் நாட்டிலேயே தமிழகத்தில் தான் இத்திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது
  • 15 வயதிற்கு மேல் எழுத மற்றும் படிக்கத் தெரியாதோருக்கு அடிப்படை எழத்தறிவு, எண்ணறிவு, வாழ்வியல் திறன் ஆகியவை இத் திட்டதின் கீழ் வழங்கப்பட்டு வருகிறது.
 • உழவன் செயலி” மூலம் வேளாண் நிதிநிலை அறிக்கை பற்றிய கருத்துக்களை இதுவரை ஆயிரத்தி இருநூறுக்கும் மேற்பேட்டோர் பதிவு செய்துள்ளன.
 • மார்ச் 12 முதல் 18-ம் தேதி வரை உலக கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்க உள்ள நிலையில் சென்னையில் டாக்டர் அகர்வால்ஸ் மருத்துவக் குழுமம் சார்பில் உலக கண் நீர் அழுத்த தின விழிப்புணர்வுக்காக மனித சங்கிலி மற்றும் பேரணி  நடைபெற்றது..
 • “நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் (நம்ம பள்ளி)” திட்டத்தின் கீழ் முன்னாள் மாணவர்கள் மற்றும் சமூக அக்கறை கொண்ட தன்னார்வல அமைப்புகள் என பல்வேறு தரப்பினர் வழங்கும் நிதியினால் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
 • மாண்டியா மாவட்டதில் பெங்களூர்-மைசூரு இடையேயான 118 கி.மீ. நீளமுள்ள அதிவிரைவுச் சாலையை மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்துள்ளார்.
 • இந்தியாவில் 1.12கோடி பேர் கண் நீர் அழுத்த நோயால் (க்ளக்கோமா) பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் 98%க்கும் மேற்பட்டவர்கள் தாங்கள் அந்நோயால் பாதிக்கப்பட்டிப்பது தெரியாமல் உள்ளனர்.
 • தில்லியில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) கூட்டத்தில் ஷாங்காய் நாடுகளின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளும் இந்தியாவின் உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதியான டி.ஒய்.சந்திர சூட்டும் கலந்து கொண்டார்.
 • நாடாளுமன்றத்தின் 2-ம் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (மார்ச் 13) தொடங்குகியது.
 • கர்நாடாக மாநிலத்தின் தார்வாட்டில் செயல்பட்டு வரும் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்துக்கான (ஐஐடி) நிரந்தர வளாகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
 • உலகின் மிக நீண்ட இரயில் மேடையான ஹூப்பள்ளி ரயில் நிலையத்தின் இரயி்ல் மேடையை (1,507 மீ) பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
 • தேர்தல் முடிவுகளில் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் என தலைமைத்தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார்  தெரிவித்துள்ளார்.
 • மார்ச் 12-ல் இந்திய-பிரான்ஸ் கடற்படைகளின் “கடற்சார் பாதுகாப்பு பயிற்சி” அரபிக் கடலில் நடைபெற்றுள்ளது. இப்பற்சியில் இந்தியாவின் போர்கப்பல் ஐஎன்எஸ் சஹ்யாத்ரி இடம் பெற்றுள்ளது.
 • மார்ச் 12-ல் முதன் முறையாக தலைநகர் தில்லிக்கு வெளியே மத்திய தொழிலக பாதுகாப்பு படையின் (சிஐஎஸ்எஃப்) “54வது நிறுவன தினம்” கொண்டாடப்பட்டது.
 • 1991-ல் அறிமுகப்படுத்தப்பட்ட “பொருளாதார சீர்திருத்த தாரமயமாக்கல் கொள்கை” அந்நிய முதலீடுகளுக்கு இந்தியாவின் வாசலை திறந்து வைத்தது. நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.

Leave a Comment