13th September 2023 – Current Affairs in Tamil | நடப்பு நிகழ்வுகள்

TNPSC Current Affairs 13th September 2023

Here are the one-liner current affairs for September 13th, 2023. The topics covered include Tamil Nadu current affairs, National news, International news, and Sports news.

Tamilnadu Current Affairs

எண்டோபாட் ரோபோ

TNPSC Current Affairs - Chennai IIT

  • சென்னை ஐஐடி மாணவர்களால் கழிவு நீர் குழாய்கள் மற்றும் குடிநீர் குழாய்களில் ஏற்படும் விரிசல்கள், உடைப்புகளை சரிசெய்ய AI தொழில்நுட்பத்துடன் இயங்கக்கூடிய எண்டோபாட் என்ற ரோபோவை உருவாக்கப்பட்டள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • சென்னை ஐஐடி முன்னாள் மாணவர்களும், மியூஸ் வியரபிள் ஸடார் அப் நிறுவனமும்
    இணைந்து இரத்த அழுத்தம், இதயத்துடிப்பு, உடல் வெப்பநிலை மற்றும் பணம் செலுத்தும் வசதியுடைய மோதிர வடிவ தொழில் நுட்ப ஸ்மார்ட் ரிங் கண்டுபிடித்துள்ளன.
  • ஒரே நேரத்தில் இரு புயல்களை கணிக்கின்ற புஜிவாரா தொடர்பினை சென்னை ஐஐடி கண்டுபிடித்துள்ளது

பழங்குடியினர் நல வாரியத்தலைவர்

TNPSC Current Affairs - kayalvizhi selvaraj

  • ஆதிராவிட நலத்துறை அமைச்சரான கயல்விழி செல்வராஜ் பழங்குடியினர் நல வாரியத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • மேலும் 8 அலுவல் சார்ந்த உறுப்பினர்களும், 14 அலுவல் சாரா உறுப்பினர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
  • 14 அலுவல் சாரா உறுப்பினர்களில் 3 பேர் பழங்குடியினத்தை சார்ந்தவர் ஆவர்.

விஷ்ணுபுரம் இலக்கிய விருது

TNPSC Current Affairs - Yuvan Chandrasekar

  • கவிஞரும், எழுத்தாளருமான யுவன் சந்திர சேகருக்கு விஷ்ணுபுரம் இலக்கிய விருதினை கோவை விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமைப்பானது வழங்கியுள்ளது.
  • 2010 முதல் இவ்விருதானது கோவை விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமைப்பு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
  • யுவன் சந்திரசேகரால் கானல் நதி, பகடை ஆட்டம், ஒளிவிலகல், ஏமாறும் கலை, ஒற்றை உலகம் முதலிய நூல்கள் படைக்கப்பட்டுள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தம்

  • தமிழக அரசு மற்றும் மேக்ஸ் விஷன் தனியார் மருத்துவமனை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கையெழுத்தாகியுள்ளது.
  • இவ்வொப்பந்தத்தின்படி தமிழ் நாட்டில் ரூ.400 கோடி மதீப்பீட்டில் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களில் 100 கண் சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட உள்ளது.

National Current Affairs

திரெளபதி முர்மு

  • செப்டம்பர் 13-ல் குடியரசுத்தலைவர் திரெளபதி முர்முவால் ஆயுஷ்மான் பவ திட்டமானது துவங்கி வைக்கப்பட உள்ளது.
  • அனைவருக்கும் ஆரோக்கிய சேவைகளை அளிக்கும் இத்திட்டமானது செப்டம்பர் 17 முதல் அமலுக்கு வர உள்ளது.
  • மேலும் உடல் உறுப்பு தான இலவச தொலைபேசி எண்ணான 1800114770-யையும் குடியரசுத்தலைவர் அறிமுகம் செய்து வைக்கிறார்.

கார ஜீரா அரிசி

TNPSC Current Affairs - geographical indication

  • அரிசியின் இளவரசனாக கருதப்படும் கால ஜீரா அரிசிக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது
  • ஒடிசாவின் கோபுரட் மாவட்டத்தின் கால ஜீரா அரிசி பழங்குடியின மக்களால் பயிரிடப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

  • புவிசார் குறியீடு பட்டியலில் தமிழகமானது 56 பொருள்களுடன் முதலிடம் பிடித்துள்ளது.
  • 2வது இடத்தை உத்திரபிரதேசம், 2வது இடத்தை கர்நாடகா பிடித்துள்ளன.

90 எல்லை உள்கட்டமைப்பு திட்டங்கள்

TNPSC Current Affairs - 90 new border infrastructure

  • எல்லை சாலைகள் ஆணையத்தால் இந்தியாவின் வடக்கு, வடமேற்கு உருவாக்கப்பட்ட 90 எல்லை உட்கட்டமைப்பு திட்டங்களையும், அருணாச்சலப்பிரதேச மாநிலம் கமேங் மாவட்டத்தில் 500மீ தொலைவில் அமைக்கபட்டுள்ள மாலிபரா – சார்துவார் – நவாங் சுங்கப்பாதை சாலையையும் மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்துள்ளார்.
  • 1960-ஆம் ஆண்டு எல்லை சாலைகள் ஆணையமானது உருவாக்கப்பட்டது.

International Current Affairs

நிலநடுக்க பாதிப்பு

  • மொராக்காவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 2,900 பேர் இறந்துள்ளன.
  • 6.8 ரிக்டர் அளவுகளாக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

டேனியல் புயல் பாதிப்பு

TNPSC Current Affairs - Libya Daniel strom

  • டேனியல் புயல் பாதிப்பு காரணமாக லிபியாவிலுள்ள வாடி டெர்ணா நதி அணை உடைந்ததில் 2300 பேர் இறந்துள்ளனர்.

இயன் வில்முட்

TNPSC Current Affairs - Ian Wilmut (1)

  • குளோனிங் முறையில் டோலி என்ற செம்மறி ஆட்டினை உருவாக்கிய பிரிட்டிஷ் விஞ்ஞானியான இயன் வில்முட் காலமானார்.
  • குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட முதல் உயிரினமான டோலி 1996-ல் பிரிட்டனின் எடின்பார்க் பல்கலைக்கழத்தில் உருவாக்கப்பட்டது.

Sports Current Affairs

2023 ஐசிசி விருது – ஆகஸ்ட்

TNPSC Current Affairs - Ian Wilmut (2)

  • ICC-யின் ஆகஸ்ட் மாத விருதிற்கான சிறந்த வீராக பாகிஸ்தானின் பாபர் ஆசம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • பாபர் ஆசம் 3வது முறையாக இவ்விருதினை பெறுகிறார்.
  • சிறந்த வீராங்கனையாக அயர்லாந்து நாட்டின் அர்லினி கெல்லி தேர்வு செய்யபட்டுள்ளார்.
  • ICC – International Cricket Council

–> More Days

Daily Current Affairs

Leave a Comment