Tamil Current Affairs – 14th January 2021

முதலாவது “தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் விருதுகள் 2020”
- தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் நாளிதழ் விருது 2020″ – தினமணி நாளிதழ்.
- சி.பா.ஆதித்தனார் வார இதழ் விருது – கல்கி வார இதழ்
- சி.பா.ஆதித்தனார் திங்களிதழ் விருது – செந்தமிழ் திங்களிதழ்
|
வீரமாமுனிவர் விருது – ஹாங்காங் நாட்டினைச் சார்ந்த முனைவர் கிரிகோரி ஜேம்ஸ் |
தேநேயப்பாவாணர் விருது – கு.சிவமணி. |
பத்து பேருக்கு சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது வழங்கப்படும்.
- முனைவர் பத்மாவதி விவேகானந்தன்
- ஜெ. ராம்கி (எ) இராமகிருஷ்ணன்
|
முதலமைச்சர் கணினித் தமிழ் விருது 2019 – சே. இராஜாராமன். |
2020-ம் ஆண்டிற்கான மதுரை, உலகத் தமிழ்ச் சங்க விருதுகளை பெறுவோர்கள்
- இலக்கிய விருது – முனைவர் அலெக்சிசு தேவராசு சேன்மார்க் (பிரான்ஸ்)
- இலக்கண விருது – பேராசிரியர் அருணாசலம் சண்முகதாசு (இலங்கை)
- மொழியியல் விருது – முனைவர் சுப. திண்ணப்பன் ( சிங்கப்பூர்)
|
ஜன-13-ல் தமிழக அரசின் திருவள்ளுவர் திருநாள் விருதுகள் மற்றும் சித்திரை தமிழ்ப்புத்தாண்டு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
விருதாளர்களுக்கு பரிசுத்தொகை ரூ.1 இலட்சமும், தமிழ்த்தாய் விருது பெறும் அமைப்புக்கு ரூ.5 இலட்சமும், தமிழ்ச்செம்மல் விருது பெறுவோருக்கு ரூ.25 ஆயிரமும் பாராட்டுசான்றுகளும் வழங்கப்படும்.
விருதினை பெறுவோர்களின் விவரம் பின்வருமாறு
- 2021-ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது – வைகைச்செல்வன்
- 2021-ம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது – அ. தமிழ்மககன் உசேன்
- அண்ணல் அம்பேத்கர் விருது – வரகூர் அ. அருணாச்சலம்
- பேரறிஞர் அண்ணா விருது – மறைந்த கடம்பூர் ஜனார்த்தனன்
- பெருந்ததலைவர் காமராஜர் விருது – ச. தேவராஜ்
- மகாகவி பாரதியார் விருது – கவிஞர் பூவை. செங்குட்டுவன்
- பாவேந்தர் பாரதிதாசன் விருது – பாடலாசிரியர் அறிவுமதி (எ) மதியழகன்
- தமிழ்தென்றல் திரு.வி.க. விருது – வி.என். சாமி
- முத்தமிழ்க் காவலர் விருது கி.ஆ.பெ. விசுவநாதம் விருது – வீ . சேதுராமலிங்கம்
|
தமிழ்ப் புத்தாண்டுகள் பெறும் விருதாளர்கள்
- 2020-ம் ஆண்டுக்கான தமிழ்தாய் விருது – விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம்
- கபிலர் விருது – பேராசிரியர் செ. ஏழுமலை
- உ.வே.சா. விருது – எழுத்தாளர் கி. ராஜநாராயணன்
- சொல்லின் செல்வர் விருது – ஆன்மீகச் சொற்பாழிவாரள் நாகை முகுந்தன்
- கம்பர் விருது – மருத்துவர் எச்.வி. ஹண்டே
- உமறுப்புலவர் விருது – எழுத்தாளர் ம.அ. சையத் அசன் (எ) பாரிதாசன்
- ஜி.யு.போப் விருது – தமிழ்ப்பேராசிரியர் உல்ரீகே நிகோலசு (ஜெர்மெனி)
- இளங்கோவடிகள் விருது – பேராசிரியர் மா. வயித்திய லிங்கன்
- அம்மா இலக்கிய விருது – பேராசிரியர் தி.மகாெலட்சுமி
- சிந்தனை சிற்பி சிங்கார வேலர் விருது- எழுத்தாளர் ஆ. அழகேசன்
- மறைமலையடிகாளர் விருது – மறை. தி. தாயுமானவன்
- அயோத்திதாசப் பண்டிதர் விருது – முனைவர் கோ.ப. செல்லம்மாள்
- அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது – முனைவர் ஊரன் அடிகள்
- காரைக்கால் அம்மையார் விருது – முனைவர் மோ. ஞானப்பூங்கோதை
|
2020-ம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருதுகள் பெறும் விருதாளர்கள்
விருதாளர்கள் |
மாவட்டம் |
ஜெ.வா. கருப்புசாமி |
சென்னை |
வேணு. புருஷோத்தம்மன் |
திருவள்ளூர் |
முனைவர் சு. சதாசிவம் |
காஞ்சிபுரம் |
மருத்துவர் சே. அக்பர் கவுஸர் |
வேலூர் |
மா. முருககுமரன் |
கிருஷ்ணகிரி |
முனைவர் இரா. வெங்கடேசன் |
திருவண்ணாமலை |
பரிக்கல் ந. சந்திரன் |
விழுப்புரம் |
முனைவர் ஜா. இராஜா |
கடலூர் |
முனைவர் அ. செந்தில்குமார் (எ) தமிழ்க்குமரன் |
பெரம்பலூர் |
முனைவர் சா. சிற்றரசு |
அரியலூர் |
கவிஞர் பொன். சந்திரன் |
சேலம் |
பாவலர் பெரு. முல்லையரசு |
தருமபுரி |
ப.முத்துசாமி |
நாமக்கல் |
முனைவர் கா. செங்கோட்டையன் |
ஈரோடு |
சி. கார்த்திகா |
கரூர் |
எம்.ஜி.அன்வர் பாட்சா |
கோயம்புத்தூர் |
முனைவர் துரை அங்குசாமி |
திருப்பூர் |
ம. பிரபு |
நீலகிரி |
சோம. வீரப்பன் |
திருச்சி |
ஜீ. வெங்கட்ராமன் (எ) ஜீவி |
புதுக்கோட்டை |
இரா. சேதுராமன் |
சிவகங்கை |
பழ. மாறவர்மன் |
தஞ்சாவூர் |
இராம. வேல்முருககன் |
திருவாரூர் |
மா.கோபால்சாமி |
நாகப்பட்டினம் |
ஆ. முனியராஜ் |
இராமநாதபுரம் |
முனைவர் போ. சத்திய மூர்த்தி |
மதுரை |
தா. தியாகராஜன் |
திண்டுக்கல் |
த. கருணைச்சாமி |
தேனி |
கவிஞர் சுரா (எ) சு. இராமச்சந்திரன் |
விருதுநகர் |
வீ. செந்தில்நாயகம் |
திருநெல்வேலி |
ச. காமராசு |
தூத்துக்குடி |
பா. இராசர் |
கன்னியாகுமரி |
முனைவர் ச. சரவணன் |
திருப்பத்தூர் |
நந்திவரம் பா.சம்பத்குமார் |
செங்கல்பட்டு |
கவிஞர் பனம்பாக்கம் கே. சுகுமார் |
இராணிப்பேட்டை |
மு. நாராயணன் |
தென்காசி |
சி. உதயன் |
கள்ளக்குறிச்சி |
துரை குணசேகரன் |
மயிலாடுதுறை |
|
தமிழகத்தில் மத்திய அரசு 7 தொல்லியல் அகழாய்வுகள் நடத்த அனுமதி அளித்துள்ளது.
- சிவகங்கை மாவட்டம் கீழடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்
- தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் அதை சுற்றியுள்ள பகுதிகள்,
- தூத்துக்குடி மாவட்டம் சிவகளை அதை சுற்றியுள்ள பகுதிகள்,
- தூத்துக்குடி மாவட்டம் கொற்கை, அதைச் சுற்றியுள்ள பகுதிகள்
- ஈரோடு மாவட்டம் கொடுமணல்
- கிருஷ்ணகரி மாவட்டம் மயிலாடும் பாறை
- அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரம், மளிகைமேடு
புதிய கற்காலங்களை கண்டறிய கிருஷ்ணகிரி, வேலூர், தர்மபுரி, திருவண்ணாமலை, சேலம் ஆகிய மாவட்டங்களில் முறையான தொல்லியல் கள ஆய்வும் மற்றும் தாமிரபரணி ஆற்றாங்கரை நாகரிகத்தை கண்டறிய திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தொல்லியில் கள ஆய்வு என இரு தொல்லியில் கள ஆய்வு மேற்கொள் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு தொல்லியில் ஆலோசைன வாரிய நிலைக்குழுவின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. |
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய்பிரதா சாஹு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தி முடிக்க ரூ.621 கோடி செலவாகும் என தெரிவித்துள்ளார். |
பெங்களூரிலுள்ள எச்ஏஎல் (Hindustan Aeronauticus Limited, HAL) நிறுவனத்திடமிருந்து ரூ.45,696 கோடிக்கு 73 தேஜஸ் எம்.கே.-1ஏ இலகு ரக போர் விமானங்களையும் (Light Combat Aircrafts (LCA) Tejas), 10 தேஜஸ் எம்.கே-1 இலகு ரகு விமானங்களையும் (10 LCA Tejas MK-1 Trainer Aircrafts) வாங்கவும், ரூ.1,2022 கோடி செலவில் வடிவமைப்பு மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. |
மணிப்பூர் மாநிலம் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புச் சீர்திருத்தங்களை (Urban Local Bodies Reforms) அமல்படுத்திய பட்டியிலில் நான்காவது மாநிலமாக இடம் பிடித்துள்ளது.
ஏற்கனவே ஆந்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், தெலுங்கனா ஆகிய மாநிலங்கள் இப்பட்டியலில் இடம் பிடித்துள்ளன |
மத்தியபிரேதசத்தில் வேலைக்கு செல்லும் பெண்கள் காவல் நிலையத்தில் பதிவு செய்யும் திட்டத்தினை அம்மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. |
பயங்கரவாதிகள் தோண்டிய 150 மீ நீள சுரங்க பாதையை ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டம் ஹிராநகர் செக்டாரில் எல்லைப் பாதுகாப்பு படையினர் (Border Security Force (BSF)) கண்டுபிடித்துள்ளனர். |
தனிநபர் பாதுகாப்பு உபரகரணங்கள், கிட்ஸ் (Personal Protective Equipment (PPE) Kits) மற்றும் சூட்களின் இரண்டாவது பெரிய உற்பத்தியாளராக இந்தியா மாறியுள்ளது. பெரிய உற்பத்தியாளராக சீனா முதலிடம் பெற்றுள்ளது |
2021 ஜன.23-ல் கொண்டாடப்படும் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் 125வது பிறந்த நாள் கொண்டாடங்களுக்காக பிரதமர் தலைமையில் உயர்மட்ட குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஓராண்டு கொண்டாட்டங்கள் ஜன.23 முதல் தொடங்கவுள்ளது. |
ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையம், இந்தியாவின் புவி அறிவியில் அமைச்சகம் ஆகியவை அறிவியல், தொழில் நுட்ப ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட பிரதமர் தலைமையிலான அமைச்சரவை குழு அனுமதி வழங்கியுள்ளது. |
குவைத் நாட்டின் பிரதமர் பதவியை ஷேக் சபா ராஜினாமா செய்துள்ளார். |
ஜபரோவ் சாடிர் நூர்கோஜேவிச் (Japarov Sadyr Nurgozhoevich) கிர்கிஸ்தான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் |
மத்திய நிதியமைச்சகத்தின், செலவீனத்துறை உருக்கிய எளிதில் தொழில் செய்வதற்கான சீர்திருத்தத்தை மேற்கொள்ளும் பட்டியிலில் 8வது மாநிலமாக கேரளா இணைந்துள்ளது. இதில் ஏற்கனவே தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடாக, மத்தியபிரதேசம், ஒடிசா, இராஜஸ்தான், தெலுங்கான ஆகிய மாநிலங்கள் இடம் பிடித்துள்ளன. |
சிவங்கை அரசு மருத்துவக் கல்லூரி மாணவி சி.வி. ரக்ஷனா அகில இந்திய துப்பாக்கி சுடும் போட்டியில் (பெண்கள் 10 மீ ஏர் ரைஃபிளில்) முதலிடம் பெற்றுள்ளார் |
பெலாரஸின் அரினா சபலென்கா அபுதாபி ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் இறுதிச்சுற்றில் சாம்பியன் பட்டம் வென்றார் |
1953, ஜன.14-ல் இந்தியாவின் முதல் ராணுவ தளபதி ஃபீல்ட் மார்ஷல் கே எம் கரியப்பா (Field Marshal K. M. Kariyappa) ஓய்வு பெற்றதை முன்னிட்டு
முன்னாள் படை வீரர்கள் தினம் (Veterans Day) கொண்டாடப்படுகிறது |
13th January Current Affairs – Read Here
Related Links
Related