14th November 2023 – Current Affairs in Tamil | நடப்பு நிகழ்வுகள்

TNPSC Current Affairs 14th November 2023

Here are the one-liner current affairs for November 14th, 2023. The topics covered include Tamil Nadu current affairs, National news, International news, and Sports news.

Tamilnadu Current Affairs

இ-லியர்னிங் (e-learning)

TNPSC Current Affairs - e-learning

  • தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகம், பொது நூலகத் துறை, அண்ணா நூலகம் இணைந்து e-learning என்னும் திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது.
  • தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு (TNPSC), ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வு (TRB), மத்திய அரசுப் பணியாளர் தேர்வு (UPSC), வங்கி, ரயில்வே போன்ற பணிகளுக்கான போட்டி தேர்வுகளுக்கு மாதிரி வினாத்தாள்களை மாணவர்கள் இலவசமாக பயன்படுத்த அறிமுகம் செய்யப்பட்ட திட்டமாகும்
  • இணைய தள முகவரி – https://elms.annacentenarylibrary.org/

நீர் வளத்துறை – ஆய்வு

TNPSC Current Affairs - Groundwater

  • தமிழ் நாட்டில் பரவலாக பெய்துவரும் வடகிழக்கு பருவமழையால் நிலத்தடி நீரானது சென்னை மாவட்டத்தை தவிற பிற மாவட்டங்களில் உயர்ந்துள்ளதாக நீர் வளத்துறை மேற்கொண்டுள்ள ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்ட்ரூட் (OptRoute) செயலி

TNPSC Current Affairs - OptRoute

  • இடைத்தரகர் யாரும் இல்லாமல் ஓட்டுநரையும், நுகர்வோரையும் நேரடியாக இணைக்க சென்னை ஐஐடி-யின் ஆசிரியர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் இணைந்து ஆப்ட்ரூட் (OptRoute) என்ற செயலியை வடிவமைத்துள்ளனர்.
  • இச்செயலியானது நகரங்களுக்கிடையே சரக்குகளை எளிதாகவும், திறமையாகவும் கொண்டு செல்லும் வகையில் வடிவமைத்துள்ளனர்.

நீதிபதிகள் பணி இடமாற்றம்

TNPSC Current Affairs - Madras High Court

  • சென்னை உயர்நீதி மன்றத்திற்கு அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி விவேக்குமார் சிங் மற்றும் தெலுங்கானா உயர்நீதிமன்ற நீதிபதி எம்.சுதிர் குமார் ஆகியோரை மத்திய சடத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
  • இதனால் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது.

ஊரகப்பகுதி – நிதி ஒதுக்கீடு

  • தமிழகத்தின் ஊரகப்பகுதிகளுக்கு 15-வது மத்திய நிதி ஆணையம் வழியாக ரூ.836.97 கோடி நிதியானது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • 15வது நிதி ஆணைய தலைவராக ஸ்ரீ என்.கே சிங் செயல்படுகிறார்.
  • அரசமைப்பு சட்டம் 280-வது பிரிவின் படி ஒவ்வொரு 5 ஆண்டுக்கு ஒருமுறையும் நிதிக்குழுவானது அமைக்கப்படுகிறது.
  • இக்குழுவானது மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான நிதிப்பகிர்வு, மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியுதவிகள் குறித்த பரிந்துரையை மத்திய அரசுக்கு காட்டுகிறது.

National Current Affairs

எக்பால் ஹுசைன்

TNPSC Current Affairs - Eqbal Hussain

  • ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைகழக புதிய துணை வேந்தராக எக்பால் ஹுசைன்  பதவியேற்றுள்ளார்.

கடன் ஒப்பந்தம்

TNPSC Current Affairs - Asian Development Bank

  • ஆசிய வளர்ச்சி வங்கியுடன் மத்திய அரசானது புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  • உயர்தர நகர்ப்புற உள்கட்டமைப்பை உருவாக்க ரூ.3,300 கோடி (400 மில்லியன் டாலர்) கடன்பெற இந்த ஒப்பந்தத்தை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

கங்கா தேவி

  • இமாச்சலபிரதேச மாநிலத்தின் மூத்த வாக்களாராக கருதப்படும் கங்கா தேவி (104) காலமானார்.

குழுக்களுக்கு தடை

  • மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கு ஆதரவான ஆயுத குழுக்கள் உள்பட 9 அமைப்புகளுக்கு சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு தடை விதித்துள்ளது.

பழங்குடியினர் வளர்ச்சித் திட்டம்

TNPSC Current Affairs - Tribal Development Programme

  • நவம்பர் 15-ல் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிர்சா முண்டா பிறந்த தினமான பழங்குடியினர் தினத்தினை முன்னிட்டு பழங்குடி சமூகத்தினரின் மேம்பாட்டுக்காக ரூ.24,000 கோடி அளவிலான பழங்குடியினர் வளரச்சித்திட்டமானது துவங்கப்பட உள்ளது.

Sports Current Affairs

ஹால் ஆஃப் ஃபேம் விருது (Hall of Fame Award)

TNPSC Current Affairs - ICC Hall of fame

  • சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC)  கெளரவமிக்க விருதான ஹால் ஆஃப் ஃபேம் விருதிற்கு இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்கரார் வீரேந்திர சேவாக், இந்திய மகளிர் அணி முன்னாள் கேப்டன் டயானா எல்டுல்ஜி, இலங்கை அணியின் முன்னாள் வீரரான அரவிந்தா டி சில்வா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளன.
  • விருது பெறும் முதல் இந்திய வீராங்கனையாக டயானா எல்டுல்ஜி திகழ்கிறார்

ஜோகோவிச் 

Vetri Study Center Current Affairs - ATP Tour Finals match

  • இத்தாலியின் டூர் நகரத்தில் நடைபெற்ற ஏடிபி டூர் ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டியில் செர்பியாவின் ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தை வென்று உலகின் நம்பர் 1 வீரர் என்ற அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டார்.
  • மேலும் 6 ஆண்டுகளாக நம்பர் 1 சாம்பியனாக நீடித்த பீட் சாம்பிராஸின் சாதனை முறியடித்துள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை 2025

TNPSC Current Affairs - ICC Champions Trophy 2025

  • பாகிஸ்தானில் வைத்து நடைபெறும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை 2025-க்கு இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.
  • 8 ஆண்டுகளுக்கு பிறகு 2025-ல் பாகிஸ்தான் இப்போட்டியை நடத்த உள்ளது.

கனடா அணி

  • செவில்லேவில் நடைபெற்ற பில்லி ஜீன் கிங் டென்னிஸ் போட்டியில் கனடா அணி முதன் முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

Important Days and Dates –14th November 2023

தேசிய குழந்தைகள் தினம் (National Children’s Day) Nov 14

உலக சர்க்கரை நோய் தினம் (World Diabetes Day) Nov 14 

TNPSC Current Affairs - World Diabetes Day

 

–> More Days

Daily Current Affairs

Leave a Comment