Tamil Current Affairs – 15th & 16th January 2021

தமிழகம் ஒரே நாடு, ஒரே ரேசன் கார்டு சீர்திருத்தினை மேற்கொண்டதன் மூலம் வெளிச் சந்தையில் கூடுதலாக ரூ.4,813 கோடி கடன் பெற மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த சீர்திருத்த்தினை மேற்கொண்ட 11வது மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது. |
ஜன.16-ல் மதுரை இராஜாஜி அரசு மருத்துமனையில் தமிழகத்தில் கரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். |
திருவள்ளூவர் இருக்கை தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் துவங்கப்படும் என துணைவேந்தர் கோ.பார்த்தசாரி தெரிவித்துள்ளார். |
ஜன.15-ல் ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அம்மாநில புவனேஷ்வரில் இந்தியாவின் முதல் தீயணைப்பு பூங்காவை திறந்து வைத்தார்.
- மேலும் 16 சேவைகளை வழங்கும் அக்னிஷாம சேவா என்ற மெய்நிகர் தளத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளார்
|
2019-20 தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-5 (National Family Health Survey-5) இன் கண்டுபிடிப்புகளை ஆய்வு செய்ய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் ப்ரீத்தி பந்த தலைமையில் தொழில்நுட்ப நிபுணர் குழு “ப்ரீத்தி பந்த் குழு” (Preethi Pant Group) என்ற ஒன்றை அமைத்துள்ளது.
- மும்பையை தலைமையிடமாக கொண்ட சர்வதேச மக்கள் தொகை அறிவியல் நிறுவனத்தின் மூலம் 5வது தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
- இதன் முதல் கட்டம் 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 131 குறியீகளை அடிப்படையாக வைத்து நடத்தப்படுகிறது.
|
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திலுள்ள ரேஷி மாவட்ட மருத்துமனை (District Hospital Reasi) தூய்மை மற்றும் சுகாதாரத்திற்கான 5வது தேசிய கல்ப் விருதுகள் 2019-20 (5th National Kayakalp Awards 2019-20)-ல் முதல் பரிசினை வென்றது
- மத்திய அரசு மருத்துவமைனகளுக்கான குருப் ஏ பிரிவில் இரண்டாவது பரிசை பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையும் (Jawaharlal Institute of Postgraduate Medical Education & Research (JIPMER))
- குருப் பி பிரிவில் சிறந்த மருத்துவமனைக்கான பரிசை எய்ம்ஸ் மருத்துமனை (All India Institute of Medical Sciences (AIIMS)) வென்றுள்ளது.
|
ஸ்வச் ஸ்வஸ்த்சர்வத்ரா (Swach swasth Sarvatra Program) எனும் திட்டத்தை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் (Ministry of Health and Family Welfare) & குடிநீர் மற்றும் துப்புரவு அமைச்கத்துடன் (Ministry of Drinking Water and Sanitation) இணைந்து அறிமுகபப்படுத்தியுள்ளது.
- இத்திட்டத்தில் திறந்தவெளியில் தேசிய சுகாதார மிஷன் (National Health Mission (NHM)) மூலம் மலம் கழித்தல் இல்லாத தொகுதியினுள் அமைந்துள்ள சமூக சுகாதார மையத்திற்கு ஒரு முறை மானியமாக ரூ.10 லட்சம் வழங்கப்படும்.
|
பாரதிய கிஸான் யூனியனின் தேசியத் தலைவர் பூபேந்தர் சிங் மன் உச்சநீதிமன்றத்தால் வேளாண் சட்டங்கள் பற்றிய பேச்சுவாார்த்தை நடத்த அமைக்கப்பட்ட குழுவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். |
ஜன.16-ல் இந்தியா முழுவதும் 600 மாவட்டங்களில் பிரதமரின் மூன்றாம் கட்ட திறன் இந்தியா திட்டம் (Pradhan Mantri Kaushal Vikas Yojana (PMKVY 3.0)) தொடங்கப்படுகிறது. |
வெளிநாடுகளை சார்ந்த எந்தவொரு தலைவரும் 2021-ம் ஆண்டின் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்வில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
கடந்த 50 ஆண்டுகளில் முதன்முறையாக சிறப்பு விருந்தினர்கள் யாரும் அழைக்கபடாமல் குடியரசு தின விழா நடத்தப்பட உள்ளது. |
ஐன.15-ல மத்திய இரயில்வே, தொழில்கள், நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் பொது விநியோக அமைச்சர் பியுஸ்கோயல் பிராரம்ப் : ஸ்டார்ட் அப் இந்தியா சர்வதே உச்சி மாநாடு (Prarambh : Start-up India International Summit) என்ற பெயரில் “ஸ்டார்ட் அப்” எனப்படும் புது நிறுவனங்களுக்கான மாநாட்டை துவக்கி வைத்தார். |
ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையம் (Defence Research and Development) மற்றும் இந்திய ராணுவம் இணைந்து உள்நாட்டு தொழில் நுட்பத்தில், இந்தியாவின் முதல் 9எம்எம் துப்பாக்கியை (9mm Machine Pistol) அஸ்மி (ASMI) என்ற பெயரில் உருவாக்கியுள்ளது.
அலுமினியம் கார்பன் பைபர் மூலம் புனேவின் டிஆர்டிஓ-வின் ஆயுத ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்துள்ளது. |
ஜன.14-ல் மத்திய அமைசர் ஹர்ஷ்வர்தன் தில்லியல் அறிவியல் தொழில் ஆராய்ச்சி குழுவின் புதிய மையமான தேசிய அறிவியில் தகவல் தொடர்பு மற்றும் கொள்கை ஆய்வு மையத்தை (National Institute of Science Communication and Policy Research (CSIR-NISCAIR)) துவங்கி வைத்தார். |
ஜன.16-ல் இந்திய அளவிலான கோவிட்-19 கரோனா தடுப்பூசி திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.. |
ஜன.15-ல் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்நாட்டு தொழில் நுட்பத்தில் உருவான ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயிலை (India’s First Indigenously Designed & Developed Driverless Metro Car) அறிமுகம் செய்தார். |
நேபாள அரசு இந்தியாவின் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியுள்ளது. |
ஜன.15-ல் இந்தியா மற்றும் ஜப்பான் இடையே தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன. |
உலகின் நான்கு முன்னணி சுகாதார மற்றும் மனிதாபிமான அமைப்புகளான யுனிசெஃப் (UNICEF), உலக சுகாதார அமைப்பு (WHO), சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் செம்பிறை சங்களின் கூட்டமைப்பு (International Federation of Red Cross and Red Crescent Societies (IFRC)) மற்றும் மெடிசின்ஸ் சான்ஸ் ஃபிரான்டியர்ஸ் (Medecins Sans Frontieres (MSF)) ஆகியவை உலகளாவிய எபோலா (Ebola) தடுப்பூசியை சேமிப்பதற்காக கூட்டு முயற்சியை மேற்கொண்டுள்ளது. |
ஹுருன் குளோபல் 500 பட்டியல் 2020 எனப்படும் உலகெங்கிலும் உள்ள 500 மிகவும் மதிப்பு மிக்க நிறுவனங்களின் பட்டியிலில் மொத்தம் 11 நிறுவனங்களுடன் இந்தியா 10 இடத்தை பெற்றுள்ளது.
உலகளவில் முதல் நான்கு இடங்களை ஆப்பிள், மைக்ரோசாப், அமேசான் மற்றும் ஆல்பாபெட் நிறுவனங்கள் பெற்றுள்ளன.
இந்திய அளவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (54 வது இடம்), டாடா கன்சல்டிங் சர்வீசஸ் (73வது இடம்) எச்டிஃப்சி வங்கி (105 வது இடம்) பெற்றுள்ளன. |
சமந்தா பவர் என்பவரை USAID எனும் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகமையின் (United States Agency for International Development) தலைவராக ஜோபைடன் பிரிந்துரைத்துள்ளார் |
ஜன.13-ல் டிரம்ப் மீதான பதவி நீக்க தீர்மானம் அமெரிக்கா நாடாளுமன்ற கீழவை பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது. |
இந்திய ரிசர்வ் வங்கி டிசம்பர் 2020-க்கான நிதி ஸ்திரத்தன்மை அறிக்கையை வெளியிட்டது. நிதி ஸ்திரத்தன்மை அறிக்கையின் 22வது வெளியீடு ஆகும். |
ஆன்லைன் கடன் வழங்கல் தொடர்பான துன்புறுத்தல் சம்பவங்கள் அதிரித்தனால் டிஜிட்டல் கடன் வழங்க ஒழுங்கு முறைகளை பரிந்துரைக்க ரிசர்வ் வங்கி நிர்வாக இயக்குனர் ஜெயந்த்குமார் தாஸ் தலைமையிலான ஜெயந்த்குமார் தாஸ் பணிக்குழுவை (Jayant Kumar Dash Working Group) இந்திய ரிசர்வ் வங்கி அமைத்துள்ளது. |
சவாலான கோவிட் – 19 காலகட்டத்தில் ராணுவத்திற்கு சிறப்பான முறையில் சேவையாற்றியமைக்காக தலைமை கட்டுப்பாடாளரான அம்ரேஷ் குமார் செளத்ரிக்கு ராணுவ தலைமை தளபதி பாராட்டு பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. |
ஜன.16-ல் கோவாவில் நடைபெறும் 51-வது சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் (International Indian Film Festival of India (IFFI)) வாழ்நாள் சாதனையாளர் விருது (Lifetime Achievement Award) விட்டோரி ஸ்டோராராே (Vittori Storerao)-விற்கு வழங்கப்படுகிறது. |
பயனாளர்களிடம் எழுந்த எதிர்ப்பினால் வாட்ஸ்அப்பின் பிரைவசி அப்டேட் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது |
தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் ஒரே சமயத்தில் அறிமுகமாகிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெறுகிறார். |
பெலாரஸ் நாட்டின் நிகோலாய் ஸ்னேசரேவ் இந்திய தடகள அணியின் நடுத்தர மற்றும் நீண்ட தூர பயிற்சியாளராக நியமனம் செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. |
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, 1949-ம் ஆண்டு கடைசி பிரிட்டிஷ் கமாண்டரிடமிருந்து ராணுவ தளபதி பதவியை ஏற்ற மறைந்த பீல்டு மார்ஷல் ஜெனரல் கரியப்பா நினைவின் காரணமாக ஜனவரி 15-ம் தேதி ஆண்டு தோறும் ராணுவ தினமாக கொண்டாடப்படுகிறது
73வது தேசிய இராணுவ தினம் (ஜன-15) |
ஜன.18-ல் சாலை பாதுகாப்பு மாதத்தை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தொடங்கி வைக்கிறார் |
9th January Current Affairs – Read Here
Related Links
Related