TNPSC Current Affairs in Tamil – 15th December 2020 | Tamil Hindu, Dinamani News

Tamil Current Affairs – 15th December 2020

 

தமிழக முழுவதும் மக்களை தேடிச் சென்று மருத்துவ சேவை அளிக்க 2,000 அம்மா மினிகிளினிக் திட்டத்தை தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்.
டிசம்14-ல் தமிழகத்தில் தொழில் தொடங்க தேவையான நிலங்களை கண்டுபிடிக்க சிப்காட் சார்பாக உருவாக்கப்பட்ட தனி இணையதள வசதியை முதல்வர் தொடங்கி வைத்தார்.
குஜராத்தில் 30,000 மெகாவாட் மின்உற்பத்திக்கான கட்டமைப்பு உள்ள உலகின் மிகப்பெரிய புதுபிக்கக்தக்க எரிசக்தி பூங்காவிற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.
டிசம்.17-ல் தகவல் தொடர்பு செயற்கைக்கோள் சுமந்து செல்லும் பிஎஸ்எல்விசி-50 ராக்கெடின் கவுண்ட்டவுன் நாளை தொடங்க உள்ளதென இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளன.
இந்தியா மொபைல் போன் உற்பத்தியில் சீனாவினை முந்த தீவிரமாக உள்ளதென மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தகவல்.
இந்திய படைகள் தரை, வான், கடலென எந்தவொரு இடத்திலும் எதையும் சந்திக்க தயாராக உள்ளதென முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
தேசிய விருதுகள் பெற்ற திரைப்படக்கலை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி காலமானார்.
இன்று (டிசடிசம்.15) புதுச்சேரியில் தொடங்க உள்ள இந்திய திரைப்பட விழாவில் பார்த்திபனின் ஒத்த செருப்பு திரைப்படம் சங்கரதாஸ் சுவாமி விருதினை பெறுகிறது.
டிசம்.21-ல் இணைய வழியில் தமிழ் இசைசங்கத்தின் சார்பில் 78-ம் ஆண்டு இசை விழா தொடங்க உள்ளது.
குவாஹாட்டியை தென்கிழக்கு ஆசியாவின் நுழைவாயிலாக மாற்ற முழுமுயற்சியுடன் செயல்படுகிறது என அஸ்ஸாம் முதல்வர் சரவானந்த சோனோவால் தெரிவித்துள்ளார்.
டிசம்.17-ல் பிரதமர் மோடி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் பல்வேறு துறை சார்ந்த இரு நாட்டு உறவுகளை பற்றி ஆலாசனை நடத்த உள்ளார்.
2021 ஜனவரி 1 முதல் பொம்மைகள் தரக்கட்டுப்பாட்டு ஆணை அமலுக்கு வர உள்ளது.
அவசர மருத்துவ குழு (Emergency Medical Team (EMT)) முன் முயற்சியை செயல்படுத்த உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் செம்பிறை சங்கங்களின் கூட்டமைப்பு (Itnernational Federation of Red Crescent Socieites (IFRC)) “சிவப்பு சேனல் ஒப்பந்தம் (Red Channel Agreement)” என்ற புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது
சிங்கப்பூரில் 2021 மே 13 முதல் 16 வரை உலக பொருளாதார மன்றத்தின் (World Economic Forum (WEF)) 2021-ம் ஆண்டிற்கான சிறப்பு வருடாந்திர கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிஎஸ்இ (Bombay Stock exchange)ன் துணை நிறுவனமான பிஎஸ்இ இன்வெஸ்ட்மென்ட்ஸ் லிமிடெட் விவசாயிகளுக்கான மின் சந்தையை பீம் (BEAM – BSE E-Agricultural Ltd) என்ற பெயரில் தொடங்கியுள்ளது.
மணிப்பூரை சார்ந்த பாலாதேவி தொழில் முறை ஐரோப்பிய கால்பந்து போட்டிகளில் பங்கேற்கும் முதல் இந்திய வீராங்களை என்ற பெருமையை பெற்றுள்ளார்.
விவசாயிகளை முதலிடம் வைத்தல் (Putting Farmers First) என்ற சிறு புத்தகத்தினை தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

 

புரெஜெக்ட் 17ஏ (பி17ஏ) திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட முதல் போர்கப்பல் கடற்படையில் டிசம்.14-ல் இணைக்கப்பட்டது.
தேசிய குடும்ப நல ஆய்வு அமைப்பு நடத்திய ஆய்வில் நாடு முழுவதும் 20 மாநிலங்களில், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு உடல்பருமன் வெகுவாக அதிகரிக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Links

Leave a Comment