TNPSC Current Affairs in Tamil – 15th March 2023

Current Affairs One Liner 15th March 2023

  • தமிழகத்தில் ரூ12,178 கோடியில் 12 துறைமுகத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய துறைமுகம், நீர்வழிப் போக்குவரத்து துறை அமைச்சர் சர்வானந்த சோனோவால் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.
  • தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் “தமிழ்நாடு தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில் நுட்பவியல் நிறுவனம்” சார்பிலான “BRIDGE-23 (பிரிட்ஜ்-23)” மாநாட்டை  தொடங்கி வைத்தார்.
  • தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அச்சத்தால் ஏற்படும் காய்ச்சல் பாதிப்பு மற்றம் உளவியல் ரீதியான ஆலோசனைகளுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறையின் உதவி மைய எண்ணான 104-ஐ தொடர்பு கொள்ளலாம் என பொது சுகாதரத்துறை இயக்குநர் டாக்டர் செல்விநாயகம் தெரிவித்துள்ளார்.
  • மார்ச் 14-ல் முதன் முறையாக அங்கக வேளாண்மை நிதி நிலை அறிக்கையில் தமிழ்நாடு அங்கக வேளாண்மைக்கான தனிக்கொள்கையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இந்திய அளவில் அங்கக வேளாண்மையில் தமிழ்நாடு 14வது இடத்தில் உள்ளது.
  • மார்ச் 14-ல் தமிழகத்தில் ஒரு மெகா உணவுப் பூங்கா, 16 ஒருங்கிணைந்த குளிர்பதன கிடங்கு வசதி, 11 வேளாண் பதனத் தொகுப்பு, 32 வேளாண் உணவுப் பதன அலகுகள், 9 வேளாண் பொருள்களுக்கான உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதல் தொடர்புகள் 2 காய்கறி விற்பனை சந்தைகள் ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிக்கபட்டுள்ளதாக மத்திய உணவுப் பதப்படுத்துதல் தொழில்துறை இணையமைச்சர் பிரஹலாத் சிங் படேல் தெரிவித்தார்.
  • சர்வதேச புக்கர் விருதுக்கான இறுதி பரிந்துரைப் பட்டியலில் முதன்முறையாக தமிழக எழுத்தாளர் “பெருமாள் முருகன்” பெயர் இடம் பெற்றுள்ளது
  • இவர் எழுதிய “பூக்குழி” நாவலின் ஆங்கில மொழி பெயர்ப்பான “பயர்” என்ற நூலிற்காக பெயர் இடம் பெற்றுள்ளது.
    • இந் நாவலை தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு அனிருத்தன் வாசுதேவன் மொழிபெயர்த்துள்ளார்.
  • நாட்டில் எழுத்தறிவு பெற்ற மாநிலங்களில் முதலாவது இடத்தை கேரளாவும், கடைசி இடத்தை பீகாரும் பிடித்துள்ளது. 80.09%வுடன் தமிழகம் 14வது இடத்தை பிடித்துள்ளது.
    • .”முமுமையான கல்வித் திட்டம் (சமக்ர சிக்சா அபியான்)” என்ற திட்டத்தின் மூலம் பள்ளிக் கல்வியின் அனைத்து நிலைகளிலும் குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தவும், கல்வியல் பாலின மற்றும் சமூக இடைவெளிகளைப் போக்கவும்  மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
    • நாட்டின் ஒட்டு மொத்த எழுத்தறிவு விகிதத்தை 80% அளவிற்கு உயர்த்தவும், எழுத்தறிவு பாலின இடைவெளியை 10% அளவுக்கும் குறைக்கவும் 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தின் முடிவில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநரான “சுரேகா யாதவ்” புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட “வந்தே பாரத் ரயிலை இயக்கிய முதல் பெண் ஓட்டுநர்” என்ற பெருமையை பெற்றுள்ளார்.
    • இவரே இந்தியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர் (1988)
    • இவ் வந்தே பாரத் ரயிலை மகாராஷ்டிராவின் சோலாப்பூரிலிருந்து மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் வரையிலான வழித்தடத்தில் இயக்கியுள்ளார்.
  • நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2025-ல் 15.7 லட்சம் பேராக உயரும் என மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • 2022-ல் 14.6 லட்சம் பேராக இருந்தது.
    • 30வயதைக் கடந்தவர்களுக்கு தொண்டை புற்றுநோய், மார்பக புற்றுநோய் அல்லது கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்பட்டுள்ளதா என்பதை ஆயுஷ்மான் பாரத் ஹெல்த் சென்டர் நல மையங்களில் இப்பரிசோதனை மேற்கொள்ப்படுகிறது.
  • மத்திய சுகாதரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாட்டில் ஏற்படும் உயிரிழப்புகளில் 28.1% இருதய நோய்களால் ஏற்படுவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) நடத்திய “இந்தியா; தேசத்தின் ஆரோக்கியம்” என்ற ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது என தெரிவித்துள்ளா.
  • இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் சீனாவில் அச்சுறுத்தை எதிர்கொள்ளும் வகையில் ஆஸ்திரேலியாவுக்கு அணுசக்தியில் இயங்கும் அமெரிக்க நீர்மூழ்கி கப்பல்களை வழங்குவதற்கான திட்டத்திற்கு அமெரிக்கா-பிரிட்டன்-ஆஸ்திரேலியா இடையிலான “ஆக்கஸ்” கூட்டணி ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • “உலக அளவில் பெண்களுக்கு சம சட்ட உரிமைகள் வழங்கும் நாடு”-களில் “பெல்ஜியம் முதலிடத்தை பெற்றுள்ளது என உலக வங்கி அறிக்கை தெரிவித்துள்ளது.
    • 2வது இடம் – கனடா
    • 3வது இடம் – டென்மார்க்
    • சர்வதேச சராசரி புள்ளி – 71.7 பெற்றுள்ள நிலையல் இப்பட்டியலில் இந்தியா 74.4 புள்ளிகளை  பெற்றுள்ளது.
  • உலக நுகர்வோர் உரிமைகள் தினம்

Leave a Comment