TNPSC Current Affairs 15th November 2023
Here are the one-liner current affairs for November 15th, 2023. The topics covered include Tamil Nadu current affairs, National news, International news, and Sports news.
Tamilnadu Current Affairs
சங்கரய்யா
(1922-2023)
- தமிழக அரசின் தகைசால் தமிழர் விருது பெற்ற சுதந்திரப் போராட்ட தியாகி சங்கரய்யா (102) வயதில் காலமானார்.
- 1967, 1977, 1980 போன்ற ஆண்டுகளில் மதுரை கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ-வாக பதவி வகித்துள்ளார்.
ஒரு நபர் கமிட்டி அறிக்கைபரிந்துரை சமர்பிப்பு
- கூர்நோக்கு இல்லங்களை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு நபர் கமிட்டி தனது அறிக்கையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கையை சமர்பித்துள்ளது.
- ஒரு நபர் கமிட்டி தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதியான சந்துரு செயல்படுகிறார்.
புதுக்கோட்டை
- நவம்பர் 15-ல் தமிழகழ்தின் மூன்றாவது பல்மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையானது புதுக்கோட்டையில் திறக்கப்பட உள்ளது.
- முதல் இரு பல்மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை முறையே சென்னையிலும், சிதம்பரத்திலும் செயல்பட்டு வருகிறது.
குரூஸ் பெர்னாண்டஸ் சிலை (Cruz Fernandez)
- தூத்துக்குடியின் தந்தை என அழைக்கப்படும் ராவ்பகதூர் குரூஸ் பெர்னாண்டஸ் (Cruz Fernandez) சிலையானது தூத்துக்குடியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
- இவர் தாமிரபரணி ஆற்றிலிருந்து கடற்கரை நகரத்திற்கு குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய பாடுபட்டுள்ளார்.
டாக்டர் ஜெ.சங்குமணி
- விருதுநகர் மருத்துவ கல்லூரி முதல்வராக செயல்பட்டு வந்த தமிழ்நாடு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநராக டாக்டர் ஜெ.சங்குமணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்
மதுரை – தமிழ்நாடு
- ஸ்மார்ட் சிட்டி தரவரிசை (Smart City Ranking) பட்டியலில் மதுரை 8வது இடத்தினை பிடித்துள்ளது.
- முதல் மூன்று இடங்கள் முறையே சூரத் (குஜராத்), ஆக்ரா (உத்திரப்பிரதேசம்), அகமதாபாத் (குஜராத்) ஆகியன பிடித்துள்ளன.
National Current Affairs
தவணைத்தொகை விடுவிப்பு
- 8 கோடிக்கும் மேலான விவசாயிகள் பயன்பெறும் பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தின் கீழ் 15-வது தவணைத்தொகையாக ரூ.18,000 கோடியை பிரதமர் மோடி விடுவிக்கிறார்.
- பிர்சாமுண்டாவின் பிறந்த நாளை முன்னிட்டு இத்தொகையானது விடுவிக்கப்படுகிறது.
- 2019-ல் பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டமானது தொடங்கப்பட்டது.
புதுதில்லி – பிரகதி மைதானம்
- புதுதில்லியில் அமைந்துள்ள பிரகதி மைதானத்தில் 42வது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியானது (India International Trade Fair) வாசுதேவ குடும்பகம் என்ற கருப்பொருளுடன் தொடங்கப்பட்டுள்ளது.
- இக்கண்காட்சியாது 14 நாட்கள் நடைபெறுகிறது.
சம்பூர்ன் குறியீடு அறிமுகம்
- இந்திய MSME துறையின் செயல்திறன் பற்றிய நிகழ்நேர தகவலை வழங்கும் சம்பூரன் குறியீட்டை இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (SIDBI) மற்றும் ஜோக்காட்டா (Jocata) இணைந்து அறிமுகம் செய்துள்ளன.
உத்திரகாண்ட்
- பொதுசிவில் சட்டத்தினை உத்திரகாண்ட் மாநிலம் அமல்படுத்த உள்ளது.
- பொதுசிவில் சட்டமானது சுதந்திரத்திற்கு முன்பே போர்சுகீசியர்களால் கொண்டு வரப்பட்டு கோவாவாவில் நடைமுறையில் உள்ளது.
புரிந்துணர்வு ஒப்பந்தம்
- இந்தியா மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையே இக்லா-எஸ் ஏவுகணைகளை கொள்முதல் செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- போர் விமானங்களை தாக்கி அழிக்கும் தன்மையுடைதாகவும், 5 முதல் 6 கி.மீ தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் தன்மை கொண்டுள்ளதாக இக்லா-எஸ் ஏவுகணைகள் அமைந்துள்ளன.
International Current Affairs
இந்தோனேசியா – ஜகார்த்தா
- நவம்பர் 16, 17 ஆகிய தேதிகளில் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடைபெறும் 10-வது ஆசியான் (ASEAN) பாதுகாப்பு அமைச்சகர்கள் கூட்டத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொள்கிறார்.
- ASEAN – Association of Southeast Asian Nations
நேபாளம்
- டிக்டாக் செயலிக்கு நேபாளத்தை தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் அரசு – பரிந்துரை
- பிரிட்டன் அரசு சின்னம்மை தடுப்பூசிகளை (Smallpox vaccine) பொதுமருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு செலுத்த நோய்த் தடுப்புக்கான நிபுணர்கள் கூட்டுக் குழுவிற்கு பரிந்துரை அளித்துள்ளது.
Sports Current Affairs
ரச்சின் ரவீந்திரா
- ஐசிசி-யின் 2023 ஆண்டிற்கான அக்டோபர் மாத விருதிற்கு நியூசிலாந்தின் வீரரான ரச்சின் ரவீந்திரா-வும் மேற்கிந்திய தீவுகள் வீராங்கனையான ஹெய்லி மேத்யூஸ்-யும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
Important Days and Dates –15th November 2023
பழங்குடியினர் பெருமை தினம் (Janjatiya Gaurav Divas) – Nov 15
- 1875 நவம்பர் 15-ல் பிறந்த பிர்சாமுண்டா பிறந்த தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் பழங்குடியினர் பெருமை தினம் கொண்டாடப்படுகிறது.
ஜார்க்கண்ட் உருவாகிய தினம் (Jharkahand Foundation Day) – Nov 15
- 2000 நவம்பர் 15-ல் ஜார்க்கண்ட் மாநிலமானது பீகாரிலிருந்து பிரிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட தினத்தினை முன்னிட்டு ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
–> More Days