15th September 2023 – Current Affairs in Tamil | நடப்பு நிகழ்வுகள்

TNPSC Current Affairs 15th September 2023

Here are the one-liner current affairs for September 15th, 2023. The topics covered include Tamil Nadu current affairs, National news, International news, and Sports news.

Tamilnadu Current Affairs

அண்ணா பிறந்த நாள் விழா

TNPSC Current Affairs - Perarignar Anna

 • செப்டம்பர் 15-ல் காஞ்சிபுரத்தில் பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டமானது முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட உள்ளது.
 • 2022 செப்டம்பர் 15-ல் காலை உணவுத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

 • மெட்ராஸ் மாகாணம் என்ற பெயரை 14 ஏப்ரல் 1969-ல் பேரறிஞர் அண்ணா தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்து வைத்தார்.
 • தமிழ்நாட்டின் தலைமை செயலகத்தின் பெயரான செக்ரேடரியட் என்பதனை தலைமை செயலகம் என பெயர் மாற்றம் செய்து வைத்துள்ளார்
 • சத்யமேவ ஜெயதே என்ற சொல்லுக்கு பதிலாக வாய்மையே வெல்லும் என மாற்றம் செய்து வைத்தார்.
 • ஸ்ரீ, ஸ்ரீமதி, குமாரி என்ற சொற்களுக்கு பதிலாக திரு, திருமதி, செல்வி எனவும் மாற்றம் கொண்டு வந்துள்ளார்.
 • 18.07.1967-ல் மெட்ராஸ் மாகாணத்திற்கு தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யும் தீர்மானத்தை சட்டபேரவையில் கொண்டு வந்த நாளான ஜூலை 18 தமிழ்நாடு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

எஸ்.வி. ராஜதுரை 

TNPSC Current Affairs - Ki.Ra. Award

 • கி.ரா.விருது (Ki.Ra. Award – 2023)-ஆனது எழுத்தாளர் எஸ்.வி. ராஜதுரைக்கு வழங்கப்பட உள்ளது.
 • இவ்விருதானது கோவை விஜயா பதிப்பகத்தின் விஜயா வாசகர் வட்டம் சார்பில் நடைபெற உள்ள கி.ரா. நூற்றாண்டு நிறைவு விழாவில் வழங்கப்பட இருக்கிறது.

ஜெயரஞ்சன் குழு (Jeyaranjan Committee)

 • தமிழக அரசு சார்பில் மாநில திட்டக் குழுவின் துணைத் தலைவரான ஜெயரஞ்சன் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவானது மத்திய அரசின் பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை ஆராய நியமனம் செய்யப்பட்டுள்ளது.
 • ஜெயரஞ்சன் உள்ளார்.

National Current Affairs

அமித்தவா ராய் குழு (Amitava Roy Committee)

TNPSC Current Affairs - Amitava Roy Committee

 • 2018-ல் அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி அமித்தவா ராய் தலைமையிலான குழுவானது சிறைச்சாலை பிரச்சனைகளையும், மேற்கொள்ள வேண்டிய சீர்த்திருத்தங்கள் பற்றிய அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள் 

 • முன்னாள் இந்தியாவின் முதன்மை அறிவியல் ஆலோசகர் கே.விஜய் ராகவன் தலைமையிலான குழுவானது DRDO சரியாக செயல்படுகிறதா என ஆராய  உருவாக்கப்பட்டுள்ளது.
 • அரவிந்த் சுப்ரமணியன் தலைமையில் 5 பேர் குழுவானத தமிழ்நாட்டிற்கான ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரிகள் (GST) பங்கீட்டிற்கான தீர்வினை ஆராய உருவாக்கப்பட்டுள்ளது
 • திலகவதி தலையிலான குழுவானது சென்னை ஐஐடியில் மாணவர்கள் தற்கொலைகளை களைய உருவாக்கப்பட்டுள்ளது.
 • இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரான ராம்நாத் கோவிந் தலையிலான குழுவானது ஓரே நாடு, ஓரே தேர்தல் சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக மத்திய அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.

ஹனுமன் பீரித் கவுர்

TNPSC Current Affairs - Emerging Leaders List

 • டைம் பத்திரிக்கை வெளியிட்டுள்ள வளர்ந்து வரும் தலைவர்கள் (Emerging Leaders List)  பட்டியலில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி தலைவர் ஹனுமன் பீரித் கவுர், பத்திரிக்கையாளரான நந்திதா வெங்கடேசன், கட்டக்கலையில் சிறந்து விளங்கும் வினு டேனியல் ஆகியோர் இடம் பிடித்துள்ளன.

International Current Affairs

சிங்கப்பூர் – அதிபர்

TNPSC Current Affairs - Tharman Shanmugaratnam

 • சிங்கப்பூரின் அதிபராக இந்திய வம்சாவளியை சார்ந்த தர்மன் சண்முக ரத்னம் பதவி ஏற்றுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

 • அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையமானது இந்திய வம்சாவளியை சார்ந்த ஷாக்ட்ரியாவை நிலவு மற்றும் செவ்வாய் கிரங்களை ஆராயும் திட்டத்தின் தலைவராக நியமனம் செய்துள்ளது.
 • டெல்லாவின் தலைமை நிதி அதிகாரியாக (Tesla CFO) இந்திய வம்சாவளி சார்ந்த வைபவ் தனோஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

Important Days and Dates – 15th September 2023

தேசிய பொறியாளர்கள் தினம் (Engineer’s Day) – Sep 15

TNPSC Current Affairs - Engineer's Day

 • கருப்பொருள்: “Engineering for a Sustainable Future”
 • நவீன மைசூரின் தந்தை என்றழைக்கப்படும் விஸ்வேஸ்வராய் அவர்களின் பிறந்த நாளை நினைவாக ஆண்டுதோறும் செப்டம்பர் 15 தேசிய பொறியாளர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

சர்வதேச ஜனநாயக தினம் (International Day of Democracy) – Sep 15

TNPSC Current Affairs - International Day of Democracy

 • கருப்பொருள்: “Empowering the Next Generation”

 

–> More Days

Daily Current Affairs

Leave a Comment