TNPSC Current Affairs in Tamil – 16th March 2023

Current Affairs One Liner 16th March 2023

 • மார்ச் 15-ல் சென்னையில் அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனையில் கிரேக்க-அரேபிய வைத்திய முறையான உலக யுனானி தின விழா நடைபெற்றது.
 • மார்ச் 16-ல் “எண்ணும் எழுத்தும்” திட்டத்தால் குழந்தைகளை, ஆசிரியர்களிடம் ஏற்பட்டுள்ள தாக்கத்தை பொதுமக்கள் பெற்றோரிடையே எடுத்துச் செல்லும் வகையில் “எண்ணும் எழுத்தும் கற்றலைக் கொண்டாடுவோம்” என்ற தலைப்பிலான சிறப்பு நிகழ்ச்சிகள் தொடங்கவுள்ளது.
  • 2022-ல் “எண்ணும் எழுத்தும்” திட்டம் தமிழகத்தில் குழந்தைகளுக்கிடையே ஏற்பட்ட கற்றல் இடைவெளிக்கு தீர்வு காணும் விதமாக தொடங்கப்பட்டது.
  • இத்திட்டத்தின் நோக்கம் 8 வயதுக்கு உள்பட்ட அனைத்து குழந்தைகளும் 2025-ஆம் ஆண்டுக்குள் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவை  பெற வேண்டும் என்பதாகும்.
 • மார்ச் 16-21ம் தேதி வரை அனைத்து மாவட்டங்களிலும் “எண்ணும் எழுத்தும் கற்றலைக் கொண்டாடுவோம்” என்ற தலைப்பிலான நிகழ்வுகளை நடத்த பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
 • சென்னையில் போக்குவரத்து நெரிசல்களைக் கண்காணிக்க “ட்ரோன்” பயன்படுத்துகிறது
 • சென்னையில் உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தை (மார்ச் 15) முன்னிட்டு தங்கம், வெள்ளி பொருள்களுக்கான ஹால்மார்க் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
 • சென்னையில் ரூ.69,180 கோடி செலவில் 118.9 கி.மீ. நீளத்திற்கு 2வது கட்ட மெட்ரோ ரயில் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன.
 • வண்டலூர் கிரசன்ட் உயர் தொழில் நுட்பக் கல்வி வளாகத்தில் மத்திய அரசின் தகவல் தொழில் நுட்பத்துறை சார்பில் “ஜி20 டிஜிட்டல் இந்தியா கூட்டமைப்பு கருத்தரங்கு” நடைபெற்றுள்ளது.
 • மார்ச் 15 இஸ்லாமியர்கள் மீதான வெறுப்புணர்வை எதிர்த்துப் போராடுவதற்கான உலக நாளாக கடைபிடிக்கப்படுகிறது.
 • தமிழகத்தில் 17,000 சாலை விபத்துகளும், 19,000 தற்கொலைகளும் பதிவாகியுள்ளன.
  • “இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48” (2021) திட்டத்தின் கீழ் அதிக விபத்துக்கள் நிகழும் 500-க்கும் மேற்பட்ட இடங்கள் கண்டறியப்பட்டு அதனருகில் இருக்கும் 679 மருத்துவமனைகளில் உடனடியாக விபத்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  • முதல் 48 மணி நேரத்தில் அளிக்கப்படும் சிகிச்சைகளுக்கு அரசே ரூ.1லட்சம் வரை வழங்கும் வகையில் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
  • 22 டிசம்பர் 2022-ல் தொடங்கிய “மனம்” எனும் திட்டத்தின் கீழ் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
 • 2019-ல் வெளியான “சூரிய வம்சம் – நினைவலைகள்” என்ற நூலுக்காக எழுத்தாளர் சிவசங்கரிக்கு 2022-ம் ஆண்டுக்கான “சரஸ்வதி சம்மான்” விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
  • தமிழில் ஏற்கனவே இந்திரா பார்த்தசாரதி, அ.அ. மணவாளன் ஆகியோர் இவ்விருதினை பெற்றுள்ளனர்
  • 1991-ஆம் ஆண்டு முதல் கே.கே.பிர்லா அறக்கட்டளை சார்பில்  சரஸ்வதி சம்மான் விருது வழங்கப்பட்டு வருகிறது.
 • பசுமை நெடுஞ்சாலை கொள்கையின் (2015) கீழ் கடந்த 2016 முதல் 2023 பிப்ரவரி வரையில் 3.44 கோடி மரங்கள், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் நடப்பட்டுள்ளன என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
  • இக்கொள்கையில் மரக்கன்றுகள் நடுதல், மரங்களை இடம் மாற்றி நடுதல், அழகுபடுத்துதல் மற்றும் பராமரிப்பு ஆகியவை அடங்கும்.
 • மார்ச் 15ல் தில்லியில் நடைபெற்ற இந்திய தொழிலக கூட்டமைப்பின் (சிஐஐ) கூட்டுறவு உச்சி மாநாட்டில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கலந்து கொண்டார்.
  • “ஒரே பூமி, ஓரே ஆரோக்கியம்” என்ற தொலை நோக்கு பார்வையுடன், ஒட்டு மொத்த உலகின் ஆரோக்கியதுக்காக ஒருங்கிணைந்த அணுகுமுறை அவசியம். இந்த விஷயத்தில் “வசுதைவ குடும்பகம்” என்ற தத்துவத்துடன் இந்தியா முன்னிலையில் வகிக்கும் நேரமிது என்று தெரிவித்துள்ளார்.
 • பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸில் ஜி20 நாடுகள் பங்கேற்கும் கல்வித்துறை தொடர்பான கூட்டம் நடைபெறுகிறது.
 • சீனா, இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷியா, பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் கலந்துரையாடும் கூட்டம் தில்லியில் ஏப்ரல் 28-ல்நடத்தப்பட உள்ளது.
  • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைமையை இந்தியா 2022 செப்டம்பரில் ஏற்றது.
 • இந்தியா, ஜப்பான், அமெரிக்கா இணைந்து நடத்தும் மலபார் கடற்படைப் பயிற்சியை ஆஸ்திரேலியாவும் இணைந்து நடத்த உள்ளதாக ஆஸ்திரேலிய பிரதமர் ஆல்பேனசின் தெரிவித்துள்ளார்.
 • 52 வயதான எரிக்கார்செட்டி இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக நியமனம் செய்யப்பட உள்ளார்.
  • இந்தியாவுக்கான தூதராக இருந்த கென்னத் ஜஸ்டர் 2021-ல் பதவி விலகினார்
 • இந்தியா 3-வது முறையாக நடத்தும் உள்ள மகளிருக்கான 13வது உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் மார்ச் 16-ல் தில்லியில் தொடங்குகிறது.
 • நோய் தடுப்பூசி தினம் 

Leave a Comment