16th September 2023 – Current Affairs in Tamil | நடப்பு நிகழ்வுகள்

TNPSC Current Affairs 16th September 2023

Here are the one-liner current affairs for September 16th, 2023. The topics covered include Tamil Nadu current affairs, National news, International news, and Sports news.

National Current Affairs

காலை உணவுத் திட்டம் (CM breakfast scheme)

TNPSC Current Affairs - CM breakfast scheme

  • அக்டோபர் 24 முதல் 1 வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணக்கர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தினை  தெலுங்கானா அரசு செயல்படுத்த உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • 15.09.2022-ல் தமிழக அரசானது 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணக்கர்களுக்கு காலை உணவுத் திட்டத்தை செயல்படுதியுள்ளது.

பிரதான் மந்திரி விஸ்வகர்மா திட்டம் (PM Vishwakarma Yojana)

TNPSC Current Affairs - PM Vishwakarma Yojana

  • 17.09.2023-ல் விஸ்வகர்மா தினத்தினை முன்னிட்டு பிரதமர் மோடியால் நாட்டிலுள்ள கைவினைகலைஞர்களின் திறனை மேம்படுத்தும் பிரதான் மந்திரி விஸ்வகர்மா திட்டத்தினை துவங்கி வைக்கப்பட உள்ளது.
  • இத்திட்டத்திற்காக pmvishwakarma.gov.in என்ற இணையதளமானது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விண்வெளித்துறையில் அரசு சாரா நிறுவனம்

  • இந்திய அரசு சிறிய எடை குறைந்த விண்கலங்களை விண்ணில் செலுத்த  உதவும் எஸ்எஸ்எல்வி ராக்கெட் தொழில் நுட்பத்தை தனியார் நிறுவனத்திற்கு பரிமாற உள்ளது.

அமலாக்கத் துறையின் புதிய பொறுப்பு இயக்குநர்

TNPSC Current Affairs - Rahul Naveen

  • அமலாக்கத் துறையின் இயக்குநரான சஞ்சய் குமார் மிஸ்ரா ஓய்வினை முன்னிட்டு அமலாக்கத் துறையின் புதிய பொறுப்பு இயக்குநராக ராகுல் நவீன் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் 

  • 2030-ஆம் ஆண்டுக்குள் நாட்டின் ஒட்டுமொத்த எரிசக்தியை 50% புதுபிக்கத்தக்க எரிசக்தி மூலங்களில் இருந்து உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அடிக்கல் நாட்டல்

TNPSC Current Affairs - Petrochemical refinery

  • ரூ.49,000 கோடி மதீப்பிட்டில் மத்தியபிரதேசத்தின் சாகர் மாவட்டத்தின் பினா பகுதியில் பெட்ரோ கெமிக்கல் சுத்திகரிப்பு (Petrochemical refinery) ஆலைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

கேப்டன் துஷார் மகான்

TNPSC Current Affairs - Captain Tushar Mahan

  • 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த கேப்டன் துஷார் மகான் பெயரானது ஜம்மு காஷ்மீர் உதம்பூர் ரயில் நிலையத்திற்கு வைக்கப்பட்டுள்ளது.

அறிக்கை வெளியீடு

TNPSC Current Affairs - List of Most Popular Leaders

  • அமெரிக்கா மார்னிங் கன்சல்ட் அமைப்பால் வெளியிடப்பட்டுள்ள உலக மக்களால் அதிகமாக விரும்பப்படும் தலைவர்கள் பட்டியலில் முதலிடத்தை பிரதமர் நரேந்திர மோடியும் இரண்டாம் இடத்தை சுவிட்சர்லாந்து அதிபரான அலெய்ன் பெர்செட் பிடித்துள்ளன.

ஜி.எஸ்.டி. முறையீட்டு தீர்ப்பாய அமர்வுகள் (GST Appellate Tribunal Sessions)

TNPSC Current Affairs - GST Appellate Tribunal Sessions

  • மத்திய அமைச்சரவையானது நாடு முழுவதும் 31 ஜி.எஸ்.டி. முறையீட்டு தீர்ப்பாய அமர்வுகள் அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது.
  • ஜி.எஸ்.டி சார்ந்த மேல் முறையீடுகளை விரைந்து விசாரிக்கும் வகையில் இத்தீர்ப்பாய அமர்வுகள் அமைக்கப்பட உள்ளன.

இன்ஃபோசிஸ் நிறுவனம்

TNPSC Current Affairs - List of top 100 companies in the world - Infosys Company

  • டைம் இதழ் & ஸ்டேடிஸ்டா தரவு சேகரிப்பு நிறுவனமானது சுற்றுச்சூழல்,  சமூக, பொருளாதார தாக்கத்தின் அடிப்படையில் வெளியிட்டுள்ள உலகின் சிறந்த 100 நிறுவனங்கள் பட்டியலில் (List of top 100 companies in the world) இந்தியாவின் இன்ஃபோசிஸ் நிறுவனம் 64 வது இடத்தை பிடித்துள்ளது.
  • உலகளவில் முதலிடத்தை  மைக்ரோசாப்ட் நிறுவனமும், இரண்டாவது இடத்தை – ஆப்பிள் நிறுவனமும், மூன்றாம் இடத்தை கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனமும் பிடித்துள்ளது.

Important Days and Dates – 16th September 2023

உலக ஓசோன் தினம் (World Ozone Day) Sep 16

  • கருப்பொருள்: “Montreal Protocol: Fixing the Ozone layer and reducing Climate chage”

சர்வதேச சிவப்பு பாண்டா தினம் (International Red Panda Day) Sep 16

TNPSC Current Affairs - International Red Panda Day

  • ஆண்டு தோறும் செப்டம்பர் 3வது சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது.

 

–> More Days

Daily Current Affairs

Leave a Comment